அரபிகள் நபி(ஸல்)
அவர்களின் வருகைக்கு முன்பிருந்தே தென்கிழக்காசிய கடல் வணிகத்தின் மூலம்
இந்தியாவைப் பற்றி அறிந்திருந்ததுடன், அவர்களுடன் தொடர்புகளையும் பேணி வந்தனர்.
இதனால் நபியவர்களின் காலத்திலேயே இஸ்லாமானது அங்கு அறிமுகமாயிற்று. நபித் தோழர்களான உக்காஸா(ரழி)
மற்றும் தமீம் அல் அன்சாரி(ரழி)
ஆகியோரின் அடக்கஸ்தலங்கள் தென்னிந்தியாவின் பறங்கிப் பேட்டை மற்றும் கோவனத்தில் அமைந்துள்ளமை இதற்கு ஆதாரமாகும்.