.உங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக ------- Meesan Way ------- தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்
Showing posts with label Education. Show all posts
Showing posts with label Education. Show all posts

Saturday, August 10, 2024

கல்வியும் வேலை உலகும்

கல்வியானது பல்வேறு வகையான நோக்கங்களைக் அடிப்படையாகக் கொண்டே வழங்கப்பட்டு வருகின்றது. இதன்படி சமகால நவீன உலக முறைமையில் தனிமனித, சமூக மற்றும் நாடுகளின் வளர்ச்சியிலும் முன்னேற்றத்திலும் செல்வாக்குச் செலுத்துகின்ற மிக முக்கிய காரணியாக கல்வி காணப்படுகின்றது. இதனால் இன்றைய உலகில் கல்விக்கு மிக உயர்ந்த இடம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்தவகையில் கல்வியின் சமகால முக்கிய வகிபங்குகளாக பின்வரும் விடயங்களை குறிப்பிடலாம்.

Thursday, August 8, 2024

கல்வியும் மனித அபிவிருத்தியும்

கல்வி என்பது உண்மையைத் தேடுகின்ற, வாழ்க்கையில் நீடித்த ஒரு செயன்முறையாகும். இது சாந்தமான பண்புகளை வளர்க்கக் கூடியதாகவும், ஒழுக்கத்தை விருத்தி செய்யக் கூடியதாகவும், சமூகத்தினதும் சூழலினதும் தேவைகளுக்கு ஏற்ப வழங்கப்படக் கூடியதாகவும், சமூக வாழ்க்கைக்கு தேவையான பயிற்சிகளை வழங்கக் கூடியதாகவும் மற்றும் சகலருக்கும் சமமான வகையில் கிடைக்கக் கூடியதாகவும் அமைய வேண்டும். கல்வியானது  முன்பள்ளிக் கல்வி, பொதுக் கல்வி, உயர் கல்வி, தொழிற் கல்வி, வளர்ந்தோர் கல்வி, சமூகக் கல்வி, பாலியல் தொடர்பான கல்வி என பல்வேறு வகையான பிரிவுகளை உள்ளடக்கியதாகக் காணப்படுகிறது. 

பிள்ளைகளின் ஆளுமைச் சீராக்கத்தில் சமூகத்தினதும் ஆசிரியர்களினதும் வகிபங்கு

ஆளுமையைக் குறிக்கும் Personality எனும் ஆங்கிலச்சொல், மறைப்பு / முகமூடி எனும் கருத்தையுடைய persona எனும் இலத்தீன் மொழிச் சொல்லிருந்து வந்ததாகும். இதன்படி ஆளுமை என்பது ஒருவர் அணிந்திருக்கும் முகமூடி என்னும் கருத்தினை வெளிப்படுத்துகிறது. உளவியல் நோக்கில் ஆளுமை என்பது ஒருவரின் ஒழுங்கமைந்த இயங்கியல் பண்புகள், அவை தோற்றுவிக்கும் நடத்தைகள், உணர்வுகள் மற்றும் சிந்தனைகளைக் குறிக்கிறது. 

Saturday, June 1, 2024

க.பொ.த உயர் தரத்தில் கலைத்துறையை தெரிவு செய்வதால் கிடைக்கும் நன்மைகள்

க.பொ.த உயர் தரத்தில் கலைத்துறையை மாணவர்கள் தெரிவு செய்து கற்பதன் மூலம் அவர்களால் பல்வேறு நன்மைகளை அடைந்துகொள்ள முடியுமாக இருக்கின்றது. எனினும் அதிகமான மாணவர்கள், பெற்றார்கள் மற்றும் ஆசிரியர்கள் இது தொடர்பாக அறிந்திருப்பதில்லை. எனவேதான் இவ்வாக்கமானது அவர்களுக்கு இது தொடர்பான தெளிவினை வழங்கும் நோக்கில் தயாரிக்கப்பட்டு பதிவிடப்பட்டுள்ளது.

Friday, May 17, 2024

க.பொ.த உ/த பாடத்தெரிவும் சா/த பின்னரான கல்வி வாய்ப்புக்களும்

இன்று அதிமான மாணவர்கள் க.பொ.த சதாரண தரப் பரீட்சையினைத் தொடர்ந்து தமது உயர்தர மற்றும் தொடர் கல்வியை தெரிவு செய்வதில் சிக்கல் நிலையினை கொண்டிருப்பதை அவதானிக்க முடிகின்றது. இதற்கு அவர்களுக்கு இது தொடர்பான தெளிவுகள் வழங்கப்படாமை முக்கிய காரணமாகும். எனவேதான் இம்மாணவர்களுக்கும் அவர்களது பெற்றோர்களுக்கும் தெளிவினை வழங்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டுவரும் வழிகாட்டல் கருத்தரங்கின் குறிப்புகள் இங்கே பதிவிடப்படுகின்றது.

Wednesday, July 5, 2023

பாடசாலை நிருவாகச் செயற்பாடுகளுடன் தொடர்பான சுற்றுநிருபங்கள், ஆவணங்கள் மற்றும் படிவங்கள்


இங்கு பாடசாலை நிருவாகச் செயற்பாடுகளுக்கு தேவையான தகவல்களை உள்ளடக்கிய பல்வேறு சுற்றுநிருபங்கள், படிவங்கள் மற்றும் வழிகாட்டிகள் போன்ற பல்வேறு ஆவணங்கள் இணைக்கப்பட்டுள்ளது. உரிய தலைப்புக்களை Click செய்வதன் மூலம் அது தொடர்பான ஆக்கத்தினை தறவிறக்கம் செய்துகொள்ள அல்லது பார்வையிட முடியும்.

Tuesday, May 9, 2023

தரம் 01 தொடக்கம் 13 வரையான சகல பாடங்களுக்குமான பாடத்திட்டங்கள்

தரம் 01 தொடக்கம் 13 வரையான சகல பாடங்களுக்குமான பாடத்திட்டங்கள் இங்கு வழங்கப்பட்டுள்ளன. உரிய பாடத்தினை Click செய்வதன் மூலம் தேவையான பாடத்திட்டங்களை PDF வடிவில் தறவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ள முடியும்.

Monday, May 1, 2023

இலங்கையின் கல்விப்புலம் சார்ந்த புள்ளிவிபரத் தகவல்கள்

இலங்கையில் அரச துறைகளுக்கான ஆட்சேர்ப்புக்கள் மற்றும் பதவி உயர்வுகளை மேற்கொள்ள நடத்தப்படும் SLEAS, SLTES, SLPS, SLTS போன்ற பரீட்சைகளுக்கும், மேலும் பல்வேறு வகையான தகுதிகான் மற்றும் நுழைவுப் பரீட்சைகளுக்கும் உதவும் வகையில் கல்விப்புலத்துடன் தொடர்புடைய பல தகவல்கள் இங்கு தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

Monday, July 11, 2022

“புரட்டப்பட்ட வகுப்பறை (Flipped classroom)” தற்காலத்துக்கு மிகவும் பொருத்தமான ஒரு கற்றல்-கற்பித்தல் முறை

புரட்டப்பட்ட வகுப்பறை என்றால் என்ன?

சமகாலத்தில் முக்கியத்துவம் பெற்றுவரும் ஒரு மாற்று கற்பித்தல் முறையாக புரட்டப்பட்ட வகுப்பறை என்பது காணப்படுகின்றது. இக்கற்பித்தல் முறையானது பாரம்பரிய கற்றல் சூழலுக்கு மாற்றமான வகையில், பெரும்பாலும் பாடசாலை மற்றும் வகுப்பறைக்கு வெளியே YouTube, Dailymotion மற்றும் Google Drive போன்ற நிகழ்நிலை (Online) ஊடகங்களை அடிப்படையாகக் கொண்டதாகும். இது தலைகீழ் வகுப்பறை மற்றும் மறுபுறம் திருப்பப்பட்ட வகுப்பறை எனவும் அழைக்கப்படுகிறது.

Wednesday, May 12, 2021

க.பொ.த பத்திர உயர் தரப் பரீட்சை வினாக்கட்டமைப்பு மற்றும் பரீட்சை தொடர்பான வழிகாட்டல் (அரசியல் விஞ்ஞானம்)


.பொ. உயர் தர அரசியல் விஞ்ஞானப் பாடமானது வினாப்பத்திரம் I, வினாப்பத்திரம் II ஆகிய இரண்டு வினாப்பத்திரங்களைக் கொண்டது.


வினாப்பத்திரம் I

  •  நேரம் : 02 மணித்தியாலங்கள்
  •  வினாப்பத்திரம் I ஆனது, பகுதி A மற்றும் பகுதி B என இரு பகுதிகளைக் கொண்டது.

Wednesday, January 20, 2021

பதின் மூன்று வருட உத்தரவாதப்படுத்தப்பட்ட பாடசாலைக்கல்வி நிகழ்ச்சித்திட்டம்

பதின் மூன்று வருட உத்தரவாதப்படுத்தப்பட்ட பாடசாலைக்கல்வி நிகழ்ச்சித்திட்டம் எனப்படுவது இலங்கையின் அனைத்து மாணவர்களினதும் கல்வி உரிமையைப் பாதுகாத்தல் மற்றும் திறண்களை விருத்தி செய்யும் நோக்கில், கல்வி அமைச்சினால் முன்னெடுக்கப்படும் ஒரு நிகழ்ச்சித்திட்டமாகும்.

இது க.பொ.த சாதாரண தரப்பரீட்சையின் வெற்றி> தோல்வியைப் பொருற்படுத்தாது மாணவர்கள் உயர்தரத்திற்கு உள்வாங்கப்படக் கூடிய புதிய தொழில் முறைப் பாடத்துறையாகக் காணப்படுகின்றது. அந்தவகையில், கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சையில் தேர்ச்சி பெறாத மாணவர்களும் இவ்வேலைத்திட்டத்தின் கீழ் இரண்டு வருட காலத்திற்கு உயர்தர பாடசாலைக் கல்வியினை தொடரும் வாய்ப்பு இதன் மூலம் வழங்கப்படுகின்றது.

Saturday, January 16, 2021

கல்வி அமைச்சினால் அறிமுகம் செய்யப்பட்டுள்ள 'பாடசாலை பண்புசார் விருத்தி நிகழ்ச்சித்திட்டம்'

2001 ஆம் ஆண்டிலிருந்து பாடசாலைகளுக்கு அறிமுகஞ் செய்யப்பட்ட மதிப்பீட்டு முறை காலத்தின் தேவைக்கேற்ப பல்வேறு திருத்தங்களுக்கு உட்பட்டுள்ளது. இந்தவரிசையில் 2009 ஆம் ஆண்டில் புதிய மதிப்பீடு மற்றும், மேற்பார்வைப் படிமுறை (சுற்றுநிருப இல. 2008/06) மூலம் பாடசாலைகளில் சுயமதிப்பீட்டை பலப்படுத்துவதற்கு சில வசதிகள் வழங்கப்பட்டன. இம்முறைமை பாடசாலைகளில் பல வருடங்களாக நடைமுறைப்படுத்தப்பட்டதுடன், தற்கால தேவைகளுக்கு பொருந்தும் வகையில் பாடசாலைக் கல்விச் செயற்பாடுகளின் பண்புசார் விருத்தியை வளப்படுத்துவதில் புதிய மதிப்பீட்டுக் கலாச்சாரம் ஒன்றை நிறுவும் காலத்தின் தேவையெழுந்தது.

Saturday, January 9, 2021

இலங்கையின் கல்விப்புலம் சார்ந்த முக்கிய தகவல்கள் தொடர் 02

இலங்கையில் கல்வி சார்ந்த அரச துறைகளுக்கான ஆட்சேர்ப்புக்கள் மற்றும் பதவி உயர்வுகளை மேற்கொள்ள நடத்தப்படும் SLEAS, SLTES, SLPS, SLTS போன்ற பரீட்சைகளுக்கும், மேலும் பல்வேறு வகையான தகுதிகான் மற்றும் நுழைவுப் பரீட்சைகளுக்கும் உதவும் வகையில் கல்விப்புலத்துடன் தொடர்புடைய பல தகவல்கள் இங்கு தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

Sunday, December 27, 2020

இலங்கையின் கல்விப்புலம் சார்ந்த முக்கிய தகவல்கள் (2020 ஆம் ஆண்டு புள்ளிவிபரத் தரவுகளுக்கு ஏற்ப இற்றைப்படுத்தப்பட்டது)

இலங்கையில் கல்வி சார்ந்த அரச துறைகளுக்கான ஆட்சேர்ப்புக்கள் மற்றும் பதவி உயர்வுகளை மேற்கொள்ள நடத்தப்படும் SLEAS, SLTES, SLPS, SLTS போன்ற பரீட்சைகளுக்கும், மேலும் பல்வேறு வகையான தகுதிகான் மற்றும் நுழைவுப் பரீட்சைகளுக்கும் உதவும் வகையில் கல்விப்புலத்துடன் தொடர்புடைய பல தகவல்கள் இங்கு தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

Thursday, December 12, 2019

பாடத்திட்டம் மற்றும் பாடக்குறிப்பு எழுதுவதற்கான மாதிரியும் படிவமும் pdf

கற்றல்-கற்பித்தல் செயற்பாடுகள் வினைத்திறன் மிக்கதாக அமைவதற்கு பாடத்திட்டம் (lesson plan) மற்றும் பாடக்குறிப்பு (notes of Lesson) என்பவை சிறந்த முறையில் தயாரிக்கப்பட் வேண்டியது அவசியமாகும். எனினும் அதிகமான ஆசிரியர்கள் பாடத்திட்டம் மற்றும் பாடக்குறிப்பு போன்றவற்றை எழுதுவதில் இடர்பாடுகளையும், சிக்கல்களையும் எதிர் நோக்குவதை அவதானிக்க முடிகின்றது.

Sunday, December 1, 2019

பரீட்சைக்கு ஆயத்தமாகும் வகையில் கற்பதற்கான சில உத்திகள்


மாணவர்கள் பரீட்சை ஒன்றில் சித்தி அடைவதை இலக்காகக் கொண்டு கற்றலில் ஈடுபடுகின்ற சந்தர்ப்பந்தில் எவ்வாறான கற்றல் உத்திகளைக் கையாண்டு தமது கற்றல் செயற்பாடுகளை வினைத்திறன்மிக்க வகையிலும் ஞாபகதத்தில் நிலை நிறுத்தி வைக்கும் வகையிலும் முன்னெடுக்க முடியும் என்பது தொடர்பாக இங்குள்ள காணொளியில் அறிந்து கொள்ள முடியும்.

Friday, October 25, 2019

கற்பித்தலின்போது ஆசிரியர் ஒருவரால் பல்வேறு படிகளில் பயன்படுத்தக் கூடிய வினாக்கள்

By : M.S.M. Naseem  - MA (P.sc), BA (Hons), PGDE (R)

பாடங்களை கற்பிக்கின்ற போது பிள்ளைகளை உள ரீதியாக ஊக்குவிப்பதற்கான ஒரு நுட்ப முறையாக வினாக்கேட்டல் காணப்படுகின்றது. கற்பித்தல் செயற்பாடுகளில் கருத்துக்களைப் பெற்றுக் கொள்வதற்கும், அவற்றை மனதில் பதிய வைப்பதற்கும் ஒரு நுட்பமுறையாக பயன்படுத்தப்படுகின்றது. விஷேடமாக ஏதாவதொரு குறிப்பிட்ட பிர்ச்சினையைத் தீர்க்கும் போது அதற்குப் பொருத்தமான முறையில் வினாக்களை வினவிப் பெற்றுக் கொள்ளும் விடைகள் அப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கான தகவல்களை வழங்கக் கூடியதாகக் காணப்படுகின்றன. இதன் மூலம் கற்றல்-கற்பித்தல் செயற்பாட்டில் வினாக்களை உள்ளடக்குதல் அவசியமான ஒன்று என்பது புலப்படுகின்றது.

Saturday, August 31, 2019

கற்றல்-கற்பித்தல் செயற்பாடுகளை வினைத்திறனாக்கிக் கொள்வதற்கான சில ஆலோசனைகள்

By : M.S.M. Naseem  - MA (P.sc), BA (Hons), PGDE (R)

ஒரு கற்றல்-கற்பித்தல் செயற்பாடானது சிறந்த முறையில் வினைத்திறன் மிக்கதாக அமைகின்ற போதே அதனால் எதிர்பார்க்கப்படும் இலக்ககளை அடையக் கூடியதாக இருக்கும். கற்றல்-கற்பித்ல் செயன்முறையானது வினைத்திறனாகக் காணப்படுவதற்கு கற்பித்தலில் ஈடுபடும் ஒரு ஆசிரியர் பின்வரும் ஆறு விடயங்கள் தொடர்பாக தனது அவதானத்தைச் செலுத்தி அவற்றை சிறந்த முறையில் வடிவமைத்து ஒழுங்குபடுத்திக் கொள்ள வேண்டியது அவசியமாகும். 

Monday, July 15, 2019

சிறந்த ஆசிரியர் ஒருவரிடம் காணப்படவேண்டிய வகிபாகங்கள்


கல்வியானது மனிதவள மேம்பாட்டிற்கும் மனித வாழ்க்கை முன்னேற்றத்திற்கும் உறுதுணையாக அமைகின்ற ஒன்றாகக் காணப்படுகின்றது. கல்வியில் ஏற்படும் முன்னேற்றமானது ஒரு நாட்டின் அபிவிருத்தியில் முக்கிய பங்கு வகிக்கின்றது. ஒரு நாட்டின் வளமான எதிர்காலம் அந்நாட்டில் அளிக்கப்படும் கல்வியிலேயே தங்கியுள்ளது. எனவே இக்கல்வியை மாணவர்களுக்கு வழங்குகின்ற ஆசிரியர்களுக்கு முக்கிய பொறுப்புக்களும் கடமைகளும் காணப்படுகின்றன.

Thursday, April 11, 2019

கற்றல்-கற்பித்தல் செயற்பாடுகள் வினைத்திறனாக அமைய ஆசிரியர் ஆற்ற வேண்டிய வகிபாகங்கள்

கற்றல் - கற்பித்தல் செயற்பாட்டில் ஆசிரியர்கள் பொதுவாக மூன்று வகையான வகிபாகங்களை கொண்டவர்களாகக் காணப்படுகின்றனர். அவை அறிவைக் கடத்தல் வகிபாகம் (Transmission role) கொடுக்கல் வாங்கல் வகிபாகம் (Transaction role) நிலைமாற்ற வகிபாகம் (Transformation role) என்பனவாகும்.