.உங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக ------- Meesan Way ------- தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்

Tuesday, August 16, 2022

க.பொ.த (உ/த) அரசறிவியல் பாடத்திற்கான நிகழ்நிலைப் பரீட்சைகள்

கல்விப் பொதுத் தராதரப் பத்திர (உயர் தர) General Certificate of Education (Advance Level) பரீட்சைக்கு மாணவர்களை வழிப்படுத்தும் வகையில்  அரசறிவியல் பாடத்தின் ஒன்று முதல் 15 வது அலகு வரையான பாடங்ககளையும் உள்ளடக்கிய வினாக்கள் இங்கு இணைக்கப்பட்டுள்ளன.  

இந்நிகழ்நிலைப் பரீட்சை வினாக்கள் அனைத்தும் இலங்கை தேசிய கல்வி நிறுவகத்தின் (NIE) ஆசிரியர் வழிகாட்டியினை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டதாகும்.

க.பொ.த (உ/த) அரசறிவியல் பாடத்திற்கான கடந்கால வினாத்தாள்கள்

கல்விப் பொதுத் தராதரப் பத்திர (உயர் தர) General Certificate of Education (Advance Level) பரீட்சைக்கு தோற்றுகின்ற மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அரசறிவியல் பாடத்திற்கான கடந்தகால வினாத்தாள்கள் இங்கு இணைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஆண்டுக்குமான Link இணை Click செய்வதன் மூலம் குறித்த வினாப்பத்திரங்களை தரவிறக்கம் செய்து கொள்ள முடியும். 

அரசறிவியல் தவணைப் பரீட்சை வினாத்தாள்கள்

கல்விப் பொதுத் தராதரப் பத்திர (உயர் தர) General Certificate of Education (Advance Level) - பரீட்சைக்கு மாணவர்களை வழிப்படுத்தும் வகையில்  அரசறிவியல் பாடத்திற்கான முதலாம் தவணை முதல் ஆறாம் தவணை வரையான  தவணைப் பரீட்சை வினாத்தாள்கள் இங்கு இணைக்கப்பட்டுள்ளன.  

இவ்வினாத்தாள்கள் அணைத்தும் இலங்கை தேசிய கல்வி நிறுவகத்தினால் (NIE) தயாரிக்கப்பட்டுள்ள ஆசிரியர் வழிகாட்டியினை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டதாகும்.

Sunday, August 7, 2022

இலங்கையும் உலகமும் (அலகு 15)

உலகமயமாக்கலின் தாக்கம், நவீன தொழிநுட்ப சாதனங்களின் வளர்ச்சி மற்றும் தொடர்பாடல் துறையின் வளர்ச்சி போன்ற பல காரணிகளின் விளைவாக அண்மைக்காலங்களில் மக்களின் வாழ்க்கை, எதிர்பார்ப்புகள் மற்றும் நடைமுறைகள் போன்றவற்றில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இதேவேளை அரசுகளின் அரசியல் செயற்பாடுகளை நோக்குகின்றபோதும், அவை தமது தேச எல்லைக்குள் மாத்திரம்  இயங்கும் செயற்பாட்டினைத் தாண்டி, சர்வதேச சூழல் முறைமைக்கு ஏற்பவும் செயற்படுகின்றமையை அவதாணிக்க முடிகின்றது. வரலாற்று ரீதியாக அரசுகள் மேற்கொண்டுவரும் இடைத்தொடர்புகளும் இதனை உறுதிப்படுத்துகின்றன. 

சர்வதேச அரசியல் (அலகு 14)

சர்வதேச அரசியல் என்பதை தேசங்களுக்கிடையிலான அரசியல் என எளிமையாக விளக்கலாம். இங்கு தேசம் என்பதன் மூலம் ஆட்புல இறைமை மற்றும் சுதந்திர தேசிய அரசுகளே கருத்தில் கொள்ளப்படுகின்றன. பரந்த அர்த்தத்தில் இதனை பார்க்கும்போது தேசங்களின் வெளிவாரியான தொடர்புகள் எனக் குறிப்பிடலாம். 

இலங்கையின் அரசியல் கட்சி முறை (அலகு 13)

அரசியல் கட்சி என்பது 18 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் தோற்றம் பெற்று, பிற்காலத்தில் பரவலடைந்தவையாகும். இப்பரவலுக்கு ஐரோப்பாவில் ஆரம்பமாகிய பிரதிநித்துவ ஜனநாயமானது பிரதான பின்னணிக் காரணியாக அமைந்தது. அரசியல் கட்சிகள் நவீன பண்புகளுடன் 19 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் பரிணாமம் பெற்றன. பின்னர் 19 ஆம் மற்றும் 20 ஆம்  நூற்றாண்டுகளில் அரசியல் கட்சிகளின் நவீன அரசியல் மாதிரிகள் உலகம் முழுவதும் பரவின.

1978 ஆம் ஆண்டு இரண்டாம் குடியரசு அரசியலமைப்பு (அலகு 12)

தற்போது இலங்கையில் நடைமுறையிலிருப்பது 1978 ஆம் ஆண்டு அமுல்படுத்தப்பட்ட இரண்டாம் குடியரசு அரசியலமைப்பாகும். இந்த  அரசியலமைப்பை அறிமுகம் செய்வதில் பல்வேறு பின்னணிக் காரணிகள் செல்வாக்குச் செலுத்தியிருந்தன. அவற்றில் பின்வருவனவற்றை முக்கியமானவைகளாக அடையாளப்படுத்திக் காட்டலாம்.

பொதுக் கொள்கையும் அரசியல் செயன்முறையும் (அலகு 11)

பொதுக் கொள்கை என்பது தொடர்பில் சரியானதும் ஏற்றுக்கொள்ளக் கூடியதுமான வரைவிலக்கணம் ஒன்றைக் காணமுடியாதுள்ளதோடு, அரசறிவியலாளர்கள் இது தொடர்பில் முன்வைத்துள்ள பல்வேறு வரைவிலக்கணங்களினூடாக அரச கொள்கை என்பதன் கருத்தினை விளங்கிக் கொள்ள முடிகின்றது.

சமகால அரசியலமைப்பு மாதிரிகள் (அலகு 10)

உலகளவில் காணப்படும் பல்வேறு நாடுகளும் பல வகையான அரசியலமைப்பு மாதிரிகளைப் கொண்டவைகளாகக் காணப்படுகின்றன. இந்தவகையில் இவ்வலகில் அமெரிக்கா, இந்தியா, சுவிட்சர்லாந்து, பெரிய பிரித்தானியா, இலங்கை மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளின் அரசியலமப்புகள் தொடர்பாக கவனம் செலுத்தப்படுகின்றது. இந்நாடுகளின் சமகால அரசியலமைப்பு மாதிரிகளை கீழ் வரும் வகையில் மூன்று பகுதிகளினாலான மாதிரிகளின் மூலம் கற்கலாம். 

ஜனநாயக ஆட்சி முறை (அலகு 09)

நவீன ஜனநாயக ஆட்சிமுறையானது 17 ஆம் நூற்றாண்டின் பின்னரைப்பகுதியில் இடம்பெற்ற எதேட்ச்சாதிகாரமிக்க மன்னராட்சி முறைக்கு எதிராகவும், மாற்றீடாகவும் பிரித்தானியாவில் இம்முறை தோற்றம் பெற்றது. பின்னர் இக்கருத்துக்கள் ஐரோப்பாவுக்கும் மற்றும் அமெரிக்காவுக்கும் பரவியது. பிரித்தானியாவில் அக்காலப்பகுதியில் தோற்றம் பெற்ற தாராண்மைவாத கருத்துக்களை உள்வாங்கிக்கொண்டு முன்னிலையடைந்த தாராண்மைவாத ஜனநாயகத்தையும் மக்களாட்சியினை அடிப்படையாகக் கொண்டு உருவான பிரதிநிதித்துவ சனாநாயகம் பற்றிய அடிப்படை அறிவையும் பெற்றுக்கொள்வது இவ்வலகின் நோக்கமாகும். 

வெஸ்ட்மின்ஸ்டர் மாதிரியும் அதில் ஏற்பட்ட மாற்றங்களும் (அலகு 08)

பிரித்தானியவின் அரசியலமைப்பின் பண்புகளை ஒத்தவகையில் உருவாக்கப்பட்ட அரசியல் அமைப்புக்களே வெஸ்ட்மினிஸ்டர் அரசியலமைப்பு மாதிரிகள் எனப்படுகின்றன. இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்ட சோல்பரி அரசியல் அமைப்பானது வெஸ்ட்மினிஸ்டர் மாதிரிக்கு ஏற்ப உருவாக்கப்பட்டதாகவே காணப்பட்டது. அத்துடன் 1972 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட  யாப்பானது ஒரு குடியரசு யாப்பாகக் காணப்பட்ட போதும், வெஸ்ட்மினிஸ்டர் அரசியலமைப்பு மாதிரிக்கான பண்புகளையும் கொண்டதாகவே அது காணப்பட்டது. இந்தவகையில் சோல்பரி அரசியலமைப்பானது பின்வரும் விடயங்களில் பிரித்தானிய அரசியலமைப்பை ஒத்ததாகக் காணப்பட்டது.

குடியேற்றவாதமும் அதன் விளைவுகளும் (அலகு 07)

பலமான நாடுகள் பலம் குன்றிய நாடுகளை தமது இராணுவ ரீதியான பலத்தினைப் பிரயோகித்து ஆக்கிரமித்து அவற்றை தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்து நிருவகிக்கின்ற செயற்பாடே காலனித்துவம் அல்லது குடியேற்றவாதம் ஆகும். இன்னொருவகையில் கூறுவதாயின் காலனித்துவம் என்பது ஒரு நாடு தனது நலன்களை அடைந்து கொள்ளும் நோக்கில் ஏனைய நாடுகளை ஆக்கிரமித்து அங்கு தமது ஆதிக்கத்தினை நிலைநிறுத்துவதைக் குறிக்கின்றது.

மோதலும் மோதல் தீர்த்தலும் (அலகு 06)

மோதல் மற்றும் மோதல் தீர்வு என்பது மிக முக்கியத்துவமிக்க ஒரு விடயமாக காணப்படுகின்றது. இன்று மனிதனது அன்றாட வாழ்க்கையில் தவிர்க்கப்பட முடியாத ஒரு அம்சமாக மோதல் என்பது மாறியுள்ளது. சமூகங்களிடையே காணப்படும் மாறுபட்ட கலாசாரபண்பாட்டு அம்சங்கள்பழக்கவழக்கங்கள்இனபிரதேச ரீதியான வேறுபாடுகள் மற்றும் பாகுபாடுகள்வளங்களில் காணப்படும் சமமற்ற பலம்வளப்பங்கீட்டில் காணப்படும் பாரபட்சம் போன்றவற்றுடன் வேகமாக அதிகரித்துள்ள மனிதனது தேவைகள் மற்றும் கௌரவம் போன்றவை இதற்கான அடிப்படைக் காரணிகளாகக் காணப்படுகின்றன.

Saturday, August 6, 2022

அரசியல் கருத்தியல்கள் (அலகு 05)

அரசறிவியல் ஆய்வில் முக்கிய இடத்தினை வகிக்கின்ற ஒன்றாக அரசியல் கருத்தியல் எனும் எண்ணக்கரு காணப்படுகின்றது. இது அரசியல் ஆய்வுகளுக்காக பயன்படுத்தப்படுவதுடன்நடைமுறை அரசியலை ஒழுங்குபடுத்துவதிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்பினை வழங்கி வருகின்றது. அரசியலில் கருத்தியல்களின் பயன்பாடானது மிக நீண்டகால வரலாற்றினைக் கொண்டிருப்பினும் 20 ஆம் நூற்றாண்டிலேயே அவை மிக முக்கிய இடத்தினைப் பெற்றுக்கொண்டன. அத்துடன் அவை நடைமுறையில் எழுந்த பல்வேறு சமூகபொருளாதார மற்றும் அரசியல் பிரச்சினைகளுக்கு பதிலளிக்கக்கூடிய விதத்திலும் எழுச்சியடைந்தன.

அரசாங்க மாதிரிகள் (அலகு 04)

இன்று உலகில் பல்வேறு வகையான அரசாங்க மாதிரிகள் காணப்படுகின்ற இவை பிரதான இரண்டு வகைப்படுத்தல்களின் கீழ் எட்டு மாதிரிகளாக வகைப்படுத்தப்படுகின்றது. இதன்படி, அதிகாரத்தைப் பகிரும் முறையினை அடிப்படையாக் கொண்டு ஒற்றையாட்சி முறை, சமஷ்டியாட்சி முறை, அர்த்த சமஷ்டி முறை மற்றும் கூட்டுச் சமஷ்டி முறை எனவும் அதேபோல், நிறைவேற்று அதிகாரம் ஒழுங்கமைந்துள்ள விதத்திற்கு ஏற்ப, பாராளுமன்ற முறை (மந்திரி சபை முறை), ஜனாதிபதித்துவ முறை, கலப்பு முறை மற்றும் அனைத்தாண்மை முறை எனவும் வகைப்படுத்தப்படுகின்றது.

அரசு (அலகு 03)

அரசு என்பது அரசறிவியலில் காணப்படுகின்ற மிக முக்கியமான ஒரு எண்ணக்கருவும்மிகப்பழமையான ஒரு நிறுவனமுமாகும். இது கண்ணுக்கு புலப்படாததும் தொட்டுணர முடியாதததும் ஆனால் எல்லா இடங்களிலும் வியாபித்திருக்கின்றதுமான ஒரு தோற்றப்பாடாக இருப்பதுடன்அரசியல் கோட்பாட்டுப் பரிசீலனை மற்றும் தத்துவங்களில் பிரதானப் பேசு பொருளாகவும் காணப்படுகின்றது.

அரசறிவியல் பாடத்துறைக்கு உட்பட்ட கருப்பொருள்கள் (அலகு 02)

சுமார் 25 நூற்றாண்டு காலமாக வளர்ச்சியடைந்து வருகின்ற அரசறிவியல் கற்கை நெறியானது. புராதன கிரேக்க காலம் முதல் இன்றுவரை பல்வேறு கருப்பொருள்களை அரசியல் ஆய்வுக்கான உள்ளடக்கமாகக் கொண்டு வருகின்றது.

அரசறிவியலின் தோற்றம், அரசியல் ஆய்வு மற்றும் அணுகுமுறைகள் (அலகு 01)

அரசறிவியல் கற்கைநெறியானது, அரசியலின் பல்வேறு பிரிவுகளை கற்கும் ஒரு துறையாகும். இது கிரேக்க காலம் முதல் இன்று வரை சுமார் 25 நூற்றாண்டு காலமாக பல்வேறு விடயங்களையும் உள்வாங்கிய வகையில் வளர்ச்சியடைந்து வருகின்ற ஒரு கற்கை நெறியாகக் காணப்படுகின்றது. 

அரசறிவியல் பாட உள்ளடக்கம்

க.பொ.த உயர்தரத்திற்கான (தரம் 12, 13) அரசறிவியல் பாடமானது 15 பிரதான பாட அலகுகளை உள்ளக்கியதாகக் காணப்படுகின்றது. அந்தவகையில் அதன் பிராதான அலகுகள் 15 மற்றும் அவற்றின் உப அலகுகள் என்பன பின்வருமாறு அமைந்து காணப்படுகின்றன.