.உங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக ------- Meesan Way ------- தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்

Friday, October 5, 2018

இலங்கையின் கல்விப்புலம் சார்ந்த முக்கிய தகவல்கள்

இலங்கையில் கல்வி சார்ந்த அரச துறைகளுக்கான ஆட்சேர்ப்புக்கள் மற்றும் பதவி உயர்வுகளை மேற்கொள்ள நடத்தப்படும் SLEAS, SLTES, SLPS, SLTS போன்ற பரீட்சைகளுக்கும், மேலும் பல்வேறு வகையான தகுதிகான் மற்றும் நுழைவுப் பரீட்சைகளுக்கும் உதவும் வகையில் கல்விப்புலத்துடன் தொடர்புடைய பல தகவல்கள் இங்கு தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.


  1. கட்டாயக் கல்விச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு? 1998
  2. கட்டாயக் கல்விச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு? 1998
  3. கட்டாய கல்வி சட்டமூலமாக்கப்பட்ட ஆண்டு? 1997(1003/05)
  4. Loco Parents என்ற பதம் குறிப்பது? இடம் மாறும் பெற்றோர்
  5. கலைத்திட்ட நிகழ்வுகளுக்கு உதவி வழங்கும் வெளிநாட்டு நிறுவனம்? உலகவங்கி
  6. இலங்கையின் தற்போதைய சனத்தொகை? 21.4 மில்லியன் (2017)
  7. இலங்கையில் மடிக் கணனி (Laptop) பவிப்போர் வீதம்? 23.5% (2017)
  8. இலங்கையில் Desktop கணனி பவிப்போர் வீதம்? 12.5% (2017)
  9. இலங்கையிலுள்ள தேசிய கல்வியியற் கல்லூரிகளின் எண்ணிக்கை? 19
  10. முதலாவதாக அமைக்கப்பட்ட தேசிய கல்வியியற் கல்லூரி? மகாவலி தேசிய கல்வியியற் கல்லூரி
  11. இலங்கையின் முதலாவது கல்வியமைச்சர்? C.W.W கண்ணங்கர
  12. C.W.W கண்ணங்கர அவர்கள் கல்வி அமைச்சராக இருந்த காலப்பகுதி? 1931 - 1947
  13. சுதந்திர இலங்கையின் முதலாவது கல்வியமைச்சர்? E.A நுகேவெல
  14. இலங்கையில் மத்திய மகா வித்தியாலயங்களை நிறுவிய பெறுமைக்குரியவர்? C.W.W கண்ணங்கர
  15. இலவச சீருடை வழங்கப்படுவது? 1993 முதல்
  16. இலவச சீருடைக்கு பதிலாக பண வவுச்சர் வழங்கும் முறை நடைமுறைப் படுத்தப்பட்ட ஆண்டு? 2015
  17. இலவச பாடநூல்கள் வழங்கப்படுவது? 1980 முதல்
  18. தற்போது ஆரம்பப்பிரிவு மாணவர்களுக்கு வழங்கப்படும் சத்துணவுதிட்டம் ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு? 2005
  19. தற்போதைய கட்டாய கல்வி வயதெல்லை? 5-16 வயது (20/4/2016)
  20. ஐ.நா சபையால் 'பிள்ளை' என ஏற்றுக்கொள்ளப்பட்ட வயதெல்லை? பிறப்பு முதல் 18 வயது வரை
  21. இலங்கையில் இலவசக்கல்வித்திட்டம் அமுலுக்கு வந்த ஆண்டு? 1945
  22. இலங்கையில் தேசிய பாடசாலைகள் உருவாக்கப்பட்ட ஆண்டு? 1987
  23. தற்போது இலங்கையிலுள்ள அரச பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கை? 15
  24. தற்போது இலங்கையிலுள்ள அரசபாடசாலைகளின் எண்ணிக்கை? 10194 (2017)
  25. தற்போது இலங்கையிலுள்ள தேசிய பாடசாலைகள் எண்ணிக்கை? 353 (2017)
  26. தற்போது இலங்கையிலுள்ள மாகாண பாடசாலைகள் எண்ணிக்கை? 9841 (2017)
  27. தற்போது இலங்கையிலுள்ள பாடசாலை மாணவர்களின் தொகை? 4,165,964 (2017)
  28. தற்போது இலங்கையிலுள்ள பாடசாலை ஆசிரியர்களின் தொகை? 241,591 (2017)
  29. தற்போது இலங்கையிலுள்ள பாடசாலைகளில் ஆசிரியர் மாணவர் விகிதம் 1:17 (2017)
  30. இலங்கை சனத்தொகையில் மாணவர் விகிதம்? 21,444,000 ÷ 4,165,964 = 5.14 (2017)
  31. இலங்கையிலுள்ள கல்வி மாவட்டங்களின் எண்ணிக்கை? 25 (2017)
  32. இலங்கையிலுள்ள கல்வி வலையங்கள் எண்ணிக்கை? 98 (2017)
  33. இலங்கையிலுள்ள கல்விக் கோட்டங்கள் எண்ணிக்கை? 312 (2017)
  34. தேசிய கல்விக்குறிக்கோள்கள் எத்தனை? 8
  35. தேசிய கல்விக்கொள்கையை வடிவமைக்கும் அமைப்பு? தேசிய கல்வி ஆணைக்குழு (NEC)
  36. பாடசாலை கலைத்திட்டத்தை வடிவமைக்கும் அமைப்பு? தேசிய கல்வி நிறுவகம் (NIE)
  37. தேசிய மட்ட பரீட்சைகளை நடத்தும் நிறுவனம்? இலங்கை பரீட்சைகள் திணைக்களம்
  38. தேசிய கல்விக் கொள்கைக்கேற்ப கலைத்திட்டங்கள் திருத்தப்படுவது? 8 வருடங்களுக்கு ஒரு தடைவை
  39. தேசிய கல்வி ஆணைக்குழு உருவாக்கப்பட்ட ஆண்டு? 1991
  40. தேசிய கல்வி நிறுவகம் உருவாக்கப்பட்ட ஆண்டு? 1986
  41. இலங்கையில் கல்விப்பீடமுள்ள பல்கலைக்கழங்கள்? கொழும்பு, திறந்த பல்கலைக்கழகம்
  42. பரிஸ் பாடசாலைகள் யாரால் ஆரம்பிக்கப்பட்டது? போர்த்துக்கேயரால்
  43. ஆங்கில பாடத்துக்கென ஆரம்பிக்கப்பட்ட கல்வியியற் கல்லூரி? பேராதனிய தேசிய கல்வியியற் கல்லூரி
  44. C.W.W கன்னங்கராவினால் ஆரம்பிக்கப்பட்ட கிராமிய கல்வித்திட்டத்தின் பெயர்? ஹெந்தஸ (1932)
  45. முன்பள்ளிகளை கட்டுப்படுத்தும் அமைப்பு? உள்ளூராட்சி மன்றங்கள்
  46. பொது போதனா திணைக்களம் ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு? 1869
  47. பாடசாலை மைய ஆசிரியர் நியமனத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு? 2011
  48. சார்க் பல்கலைக்கழகம் உருவாக்ப்பட்ட ஆண்டு? 2007 (புது டெல்லி)
  49. பாடசாலைகள் தேசிய மயமாக்கப்பட்ட ஆண்டு? 1960
  50. திறந்த பல்கலைக்கழகம் அமைக்கப்பட்ட ஆண்டு? 1980
  51. இலங்கை சட்டக் கல்லூரி ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு? 1874
  52. சுயமொழிப்போதனை ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு? 1956
  53. தொழினுட்பதுறைக்கான கல்வியியற் கல்லூரி அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ள இடம்? குளியாப்பிட்டிய
  54. இலங்கையில் நனோ தொழிநுட்ப நிறுவனம் அமைந்துள்ள இடம்? மல்வானை
  55. இலங்கையில் முதலாவது மத்திய மகாவித்தியாலயம் அமைக்கப்பட்ட இடம்? மத்துகம
  56. வணிகக் கல்விக்கான கல்வியற் கல்லூரி அமைந்தள்ள இடம்? மகரகம
  57. முதலாவது திறன்வகுப்பறை (Smart Classroom) அமைக்கப்பட்டது? ஜயவர்த்தனபுர(ஆண்கள்) மகாவித்தியாலயம்.
  58. இலங்கையில் நனோ தொழிநுட்ப பூங்கா அமைந்துள்ள இடம்? ஹோமாகம
  59. தெற்காசியாவின் முதலாவது பசுமைப்பல்கலைக்கழகம் (National School of Business Management - NSBM) அமைந்துள்ள இடம்? ஹோமாகம, பிட்டிபன
  60. இலங்கையில் தெற்காசிய ஆசிரியர் பயிற்சி நிலையம் அமைக்கப்பட்டுள்ள இடம்? மீபே
  61. கல்வி அமைச்சினது உத்தியோக பூர்வ வாசஸ்தலம் அமைந்துள்ள இடம்? பத்தரமுல்ல (இசுறுபாய)
  62. கல்வித்திட்டமிடலுக்கான சர்வதேச நிறுவனம் அமைந்துள்ள நகரம்? பரிஸ் (பிரான்ஸ்)
  63. 'மகாபொல' புலமைப்பரிசில் திட்டத்தை ஆரம்பித்தவர்? லலித் அத்துலக் முதலி
  64. குடியரசு, சட்டம் ஆகிய நூல்களை எழுதிய கல்வி சிந்தனையாளர்? பிளேட்டோ
  65. 'கல்வியும் தத்துவமும் ஒரு நாணயத்தின் இருபக்கங்களை போன்றன' என்று கூறியவர்? W.றோஸ்
  66. அரசியல் என்ற நூலை எழுதியவர்? அரிஸ்ரோட்டில்
  67. 'துப்பாக்கிகளை விட பயங்கரமான ஆயுதங்கள் புத்தகங்களே' எனக் கூறியவர்? மார்டின் லூதர் கிங்
  68. 'கல்வியே சக்திவாய்ந்த ஆயுதமாகும்' எனக் கூறியவர்? நெல்சன் மண்டேலா
  69. 'அனுபவங்களை அனுபவங்களுடாக அனுபவங்களாகவே பிள்ளைகளுக்கு பெற்றுக்கொடுக்க வேண்டுமென' வலியுறுத்தியவர்? ஜோன் டூயி
  70. கல்வியில் பயன்பாட்டுவாதக் கருத்துக்களை முன்வைத்தவர்? ஜோன் டூயி
  71. 'எமிலி' எனும் கல்வி தொடர்பான நூலை எழுதியவர்? ஜீன் ஜாக்ஸ் ரூசோ
  72. பல் நுண்ணறிவுத் தத்துவத்தை (Multiple Intelligences) அறிமுகப்படுத்தியவர்?  ஹூவார்ட் காடினர்
  73. உளப்பகுப்புக் கொள்கையை முன்வைத்தவர்? சிக்மன் பிரய்ட்
  74. இயற்கைவாத or சூழல்மையவாத சிந்தனையை முன்வைத்தவர்? ரூசோ
  75. கல்வி தொடர்பாக இலட்சியவாத கருத்தை முன்வைத்தவர்? பிளேட்டோ
  76. 5E முறையை அறிமுகம் செய்தவர் ? ரொகர் பைபீ (Rodger Bybee)
  77. பாடசாலை முகாமைத்துவக் குழுவில் உள்ளடங்க வேண்டிய உயர்ந்தபட்ச உறுப்பினர்களின் எண்ணிக்கை? 12 (1 வருட பதவிக் காலம்)
  78. இலங்கைப் பாடசாலைகளுக்கான தேர்ச்சி மட்ட கலைத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு ? 2007
  79. ஆசிரியர் தொழில்வாண்மை என்பதனாற் கருதப்படுவது? ஆசிரியர்களால் பெறப்படவேண்டிய ஒரு தன்மை.
  80. பாடசாலை மட்டக் கணிப்பீடு அறிமுகப் படுத்தப்பட்ட ஆண்டு? 1998
  81. 1980ல் அறிமுகப்படுத்தப்பட்ட கல்வி சீர்திருத்தக் கொள்கை? கல்விச் சீர்திருத்த வெள்ளை அறிக்கை
  82. பாடசாலைக் கல்வி அமைச்சு உருவாக்கப்பட்ட ஆண்டு? 2000
  83. தோட்டப்பாடசாலைகள் அரசினால் பொறுப்பேற்கப்பட்ட ஆண்டு? 1977
  84. தற்போது நடைமுறையில் உள்ள ஆசிரியர் பிரமாணக்குறிப்பு திருத்தப்பட்டது? 2014 இல்
  85. கல்வி முறையில் தேர்வுகளை அறிமுகம் செய்த நாடு? சீனா
  86. இலவசக் கல்வியை அறிமுகம் செய்த நாடு? நெதர்லாந்து
  87. உலகின் முதலாவது பல்கலைக்கலகம்? University of Bologna - Italy (1088)
  88. தேசிய தொழில் தகமை (NVQ) முறைமையை அறிமுகப்படுத்திய நாடு? இங்கிலாந்து
  89. தேசிய தொழில் தகமை (NVQ) சட்டத்தின் கீழுள்ள மட்டங்களின் எண்ணிக்கை? 7
  90. இலங்கையில் சிறந்த ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் விருது? குரு பிரதீபா பிரபா
  91. இலங்கையில் அறிவியல் துறைக்காக வழங்கப்படும் விருது? வித்யா ஜோதி
  92. கணிததிற்கான நோபல் எனப்படும் Fields Medal விருதை வழங்கும் அமைப்பு? சர்வதேச கணித ஒன்றியம்
  93. மாகாண கல்வி அமைச்சுக்கு பொறுப்பான அலுவலர்? மாகாண கல்வி அமைச்சின் செயலாளர்
  94. இலங்கையில் ஆரம்பிக்கப்பட்ட முதல் பாடசாலை? காலி றிச்மன்ட் கல்லூரி (1814)
  95. இலங்கையில் ஆரம்பிக்கப்பட்ட முதல் சிறைச்சாலை பாடசாலை? ஹேமாகம சுனிதா வித்தியாலயம், (வட்டரக்க சிறைச்சாலை - 2014)
  96. இலங்கையில் அமைக்கப்பட்ட முதல் தொழிநுட்பக் கல்லூரி? மருதானை தொழிநுட்பக் கல்லூரி
  97. இலங்கையில் அமைக்கப்பட்ட முதல் பல்கலைக்கழகம்? சிலோன் பல்கலைக்கழகம் (1921)
  98. இலவச பாட நூல்களை அச்சிட்டு வெளியிடும் நிறுவனம்? தேசிய கல்வித் வெளியீட்டுத் திணைக்களம்
  99. பரீட்சை முறைகளை அறிமுகப்படுத்தியவர்? ஹென்றி பிஸல் (Henry Fischel ) *
  100. உலக கல்விப் பிரகடனத்தின் உறுப்புரைகளின் எண்ணிக்கை? 10
  101. ஐக்கிய நாடுகள் சபையின் உத்தியோக பூர்வ மொழிகளின் எண்ணிக்கை? 6
  102. பாடசாலை அபிவிருத்திக் குழுவின் உத்தியோகபூர்வ சேவைக்காலம்? 2வருடம்
  103. கிராமப் புறங்களில் தகவல் தொழிநுட்ப விருத்திக்காக அமைக்கப்பட்டுள்ள நிறுவனம்? நெனசல
  104. பாடசாலை அபிவிருத்தி திட்டமிடல் பணிக்கு ஒத்துழைப்பு வழங்கும் சர்வதேச நிறுவனம்? யுனஸ்கோ
  105. UNESCO என்பதன் விரிவாக்கம்? United Nations Educational, Scientific and Cultural Organization (ஐக்கிய நாடுகளின் கல்வி, விஞ்ஞான மற்றும் பண்பாட்டு நிறுவனம்)
  106. யுனஸ்கோ நிறுவனத்தின் தலமையகம் அமைந்துள்ள இடம்? பரிஸ் (பிரான்ஸ்)
  107. ஆசிரியர் என்பதன் பொருள்? தவறை திருத்துபவர் (ஆசு = தவறு, இரியர் = திருத்துபவர்)
  108. இலங்கையில் சர்வதேச பாடசாலைகளை பதிவு செய்வது? கம்பனிகள் பதிவாளர் திணைக்களத்தில்
  109. தேசிய கல்விக் கல்லூரிகளின் பிரதான நிறைவேற்று அலுவலர்? கல்விக் கல்லூரிகளின் ஆணையாளர்
  110. மாகாண சபைகளுக்கு கல்வியதிகாரம் வழங்கப்பட்டது? 13வது அரசியல் யாப்பு சீர்திருத்தத்தின் மூலம்
  111. போர்த்துக் கேயரின் கல்விக் குறிக்கோள்? கத்தோலிக்க மதத்தைப் பரப்புதல்
  112. ஓல்லாந்தரின் கல்விக் குறிக்கோள்? புரட்டஸ்தாந்து மதத்தைப் பரப்புதல்
  113. நாடாளவிய ரீதியில் தரம் 7 மாணவர்களின் தாங்கும் திறனை அறிய மேற்க்கொள்ளப்பட்ட செயற்றிட்டம்? திடசங்கல்பம்
  114. பாடசாலை பிள்ளைகளின் அடைவு மட்டத்தை மதிப்பிட சர்வதேச ரீதியாக நடத்தப்படும் பரீட்சை? சர்வதேச பாடசாலை கணிப்பீட்டு வேலைத்திட்டம் ; (Programme for International Assessment - PISA)
  115. மொத்த புள்ளிகளுக்கு பதிலாக ணு புள்ளி அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு? 2001
  116. தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நடாத்தப்படுவதன் 2 நோக்கங்கள்? உதவிப்பணம் வழங்கல், பிரபல பாடசாலைகளில் சேர்த்தல்
  117. பிள்ளை ஒன்றை பாடசாலையில் சேர்ப்பதற்கான மிகக் குறைந்நத வயதெல்லை? 4வருடம், 6மாதம்
  118. கிராம பிரதேசங்களில் கல்வியை மேம்படுத்தும் நோக்குடன் கல்வி அமைச்சினால் ஆரம்பிக்கப்பட்ட புதிய வகைப் பாடசாலை? இசுறு
  119. 'அன்மையிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை' திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் காலம்? 2016-2020
  120. க.பொ.த உயர் தரத்தில் தொழிநுட்பப் பாடங்கள் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு? 2013
  121. கல்வி செயன்முறையின் போது ஆசிரியரால் மாணவர்களிடம் விருத்தி செய்யப்பட வேண்டிய துறைகள்? அறிவு, திறன், மனப்பாங்கு
  122. பாடசாலையை விட்டு இடைவிலகியோருக்கு முறைசாராக் கல்வியை வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு? 1974
  123. முதன் முதலில் மேற்கத்தேய கல்வியை இலங்கையில் அறிமுகம் செய்தவர்கள்? போர்த்துக்கேயர்
  124. பாடசாலையில் மாணவர்களின் நிதியைப் பெற்றுக் கொள்வதற்கு முறையான ஏற்பாடுகள்? வருடாந்த சந்தாப்பணம், வசதிகள் சேவைக்கட்டணம்
  125. வலயக்கல்வி அலுவலகங்களில் காணப்படும் பிரிவுகள்? நிர்வாகப்பிரிவு, திட்டமிடல் பிரிவு
  126. கோட்டக்கல்வி அதிகாரியின் பணிகள்? பாடசாலையை மேற்பார்வை செய்தல், பாடப்புத்தகங்களை பாதுகாத்தல்
  127. இலங்கை மக்களின் நலன் கருதி நாட்டின் பல இடங்களிலும் உதவி நன்கொடை பாடசாலைகளை அமைத்த அறிஞர்? M.C சித்திலெப்பை
  128. தேசிய கல்வியியல் கல்லூரிகளை நிறுவுவதில் முன்நின்றவர்? ரணில் விக்ரமசிங்க
  129. முன்பள்ளி பாடசாலை முறையை உலகிற்கு அறிமுகம் செய்தவர்? மரியா மொண்டிஸரி (இத்தாலி)
  130. ஆங்கிலேயர் காலத்தில் கல்விக்கு பொறுப்பான நிறுவனங்கள்? அமெரிக்கன் மிசனரி, வெஸ்ஸியன் மிசனரி, லண்டன் மிசனரி
  131. ஓல்லாந்தர் காலத்தில் கல்விக்கு பொறுப்பான நிறுவனம்? ஸ்கோலார்கள் கொமிஸன்
  132. ஆரம்ப பிள்ளைகளின் கல்வி அபிவிருத்திக்கு பொறுப்பான மத்திய அமைச்சு? சிறுவர் விவகார அமைச்சு
  133. உலகில் அதிகளவு பல்கலைக்கழகங்களைக் கொண்ட நாடு? இந்தியா
  134. உலகின் மிகப்பெரிய பல்கலைக்கழகம்?  Indira Gandhi National Open University - India
  135. ஐக்கிய நாடுகள் சபையின் பல்கலைக்கழகம் அமைந்துள்ள இடம்? டோக்கியோ, ஜப்பான் (1973)
  136. சாரணர் இயக்கத்தை தோற்றுவித்தவர்? றொபட் ஸ்டீவன் ஸ்மித் பேடன் பவல் (1907)
  137. இலங்கைப் பாடசாலைகளில் சாரணர் இயக்கம் கொண்டுவரப்பட்ட ஆண்டு? 1912
  138. இலங்கையில் சிறுவர்களின் நலன்களை மேம்படுத்துவதற்காக ஏற்படுத்தப்பட்ட நிறுவனம்? தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை
  139. இலங்கையில் உருவாக்கப்பட்ட முதலாவது சிறுவர் நட்புறவு பாடசாலை? ஹோமாகம பாடசாலை 2002
  140. மறை கலைத்திட்டம் எனப்படுவது? பாடசாலையின் முறைசார் கலைத்திட்டத்திற்கு புறம்பாக தேர்ச்சி விருத்திக்கு உதவும் செயற்பாடுகள்.
  141. கல்விக்கான உரிமையை முதன்முதலில் ஏற்றுக்கொண்ட சர்வதேச சமவாயம்? 1948 மனித உரிமை பற்றிய உலகப் பிரகடனம்
  142. தற்போது அமுலிலுள்ள கல்வி கட்டளைச்சட்டம்? 1939, 31ம் இலக்க கல்வி கட்டளைச்சட்டம்
  143. பிள்ளை ஒன்றுக்கு பெற்றோர் இல்லாத வேளையில் அந்தப் பிள்ளையின் பாதுகாவலராக ஏற்றுக்கொள்ளப்படக் கூடியவர்? நீதிமன்றத்தினால் பாதுகாவலராக பொறுப்பு ஒப்படைக்கப்பட்ட ஒருவர்
  144. பிள்ளைகளின் உயரமும் நிறையும் வயதிற்கு பொருத்தமாக உள்ளதா என்பதைக் காட்டும் சுட்டென்? Body Mass Index (BMI)
  145. SBA என்பதன் விரிவாக்கம்? School Based Assessment (பாடசாலை மட்டக் கணிப்பீடு)
  146. SBA முறை இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு, அதற்கு உதவி வழங்கிய நிறுவனம்? 1999, ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB)
  147. SBTD இன் விரிவாக்கம்? School Based Teacher Development (பாடசாலை மட்ட ஆசிரியர் அபிவிருத்தி)
  148. நூல்களுக்கு வழங்கப்படும் ISBN என்பதன் விரிவாக்கம்? International Standard Book Number
  149. ESDP என்பது? Educational Sector Development Programme கல்வி அமைச்சினால் தேசிய கல்வி தொடர்பாக உருவாக்கப்பட்ட (கல்வித் துறைசார் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம்) 2013-2018
  150. PSI என்பது? Programme for School Improvement (பாடசாலை மேம்படுத்தல் வேலைத்திட்டம்)
  151. TSEP என்பது? Transforming School Education Project - அறிவுப் பொருளாதாரத்தினூடாக மானிட மூலவளத்தை அடிப்படையாகக் கொண்டு பாடசாலை முறையினை மாற்றியமைத்தல்
  152. 2018 அகில ஆசிரியர் நாளுக்கான UNESCO வின் கருப்பொருள்? 'தகுதியுடைய ஆசிரியத்துவத்துக்கான உரிமையே, கல்விக்கான உரிமையாகும்' 

இத்தகவல்களை pdf வடிவில் பெற்றுக் கொள்ள இங்கே Click செய்யவும்


தொகுப்பு : M.S.M. Naseem
                       MA (P.sci), BA (Hons), PGDE

3 comments: