.உங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக ------- Meesan Way ------- தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்

Saturday, January 16, 2021

கல்வி அமைச்சினால் அறிமுகம் செய்யப்பட்டுள்ள 'பாடசாலை பண்புசார் விருத்தி நிகழ்ச்சித்திட்டம்'

2001 ஆம் ஆண்டிலிருந்து பாடசாலைகளுக்கு அறிமுகஞ் செய்யப்பட்ட மதிப்பீட்டு முறை காலத்தின் தேவைக்கேற்ப பல்வேறு திருத்தங்களுக்கு உட்பட்டுள்ளது. இந்தவரிசையில் 2009 ஆம் ஆண்டில் புதிய மதிப்பீடு மற்றும், மேற்பார்வைப் படிமுறை (சுற்றுநிருப இல. 2008/06) மூலம் பாடசாலைகளில் சுயமதிப்பீட்டை பலப்படுத்துவதற்கு சில வசதிகள் வழங்கப்பட்டன. இம்முறைமை பாடசாலைகளில் பல வருடங்களாக நடைமுறைப்படுத்தப்பட்டதுடன், தற்கால தேவைகளுக்கு பொருந்தும் வகையில் பாடசாலைக் கல்விச் செயற்பாடுகளின் பண்புசார் விருத்தியை வளப்படுத்துவதில் புதிய மதிப்பீட்டுக் கலாச்சாரம் ஒன்றை நிறுவும் காலத்தின் தேவையெழுந்தது.

எனவே இங்கு நிலைமையை உறுதிப்படுத்தும் (தர உறுதிப்பாடு) சிந்தனை மூலம் பாடசாலைகளின் பண்புசார் நிலையை உறுதிப்படுத்துவதற்கான நியதிகளை அடிப்படையாகக் கொண்ட மதிப்பீட்டு முறையொன்றின் தேவையேற்பட்டிருப்பதால் அதன்படி ஒத்துப்போகும் வகையில் நடைமுறையிலிருந்த மதிப்பீட்டு முறை சிற்சில திருத்தங்களுக்கு உட்படுத்தப்பட்டது.

இவ்வாறு பாடசாலைத்தொகுதியில் நடைமுறையிலிருந்த 'பாடசாலை கல்விச் செயற்பாடுகளின் பண்புசார் விருத்தி தேசிய கல்வித் தர உறுதிப்பாட்டு வழிகாட்டி' பல திருத்தங்களுக்கு உட்படுத்தப்பட்டு 2015ஆம் ஆண்டிலிருந்து ஒரு புதிய மதிப்பீட்டு வழிகாட்டியாக அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்தப் புதிய மதிப்பீட்டு வழிகாட்டிக்கு அமைவாக

1.    மாணவர் அடைவு

2.    கற்றல் - கற்பித்தல் மதிப்பீடு

3.    முறையான கலைத்திட்ட முகாமைத்துவம்

4.    இணை பாடவிதான செயற்பாடுகள்

5.    தலைமைத்துவமும் முகாமைத்துவமும்

6.    மாணவர் நலன்புரி

7.    பௌதீக வள முகாமைத்துவம்

8.    பாடசாலையும் சமூகமும்

 

ஆகிய பிரதான 08 துறைகளின் கீழ் 60 நியதிகளும் 210 சுட்டிகளும் அடையாளம் காணப்பட்டன.

மேற்குறிப்பிடப்பட்ட நியதிகளின் கீழ் தர ரீதியாகவும், பண்பு ரீதியாகவும் மதிப்பீடுகள் பாடசாலைகளில் இடம்பெறுகின்ற அதேவேளை பண்புத்தரத்தை மேலும் உறுதிசெய்யும் பொருட்டு அதிபரையும் பாடசாலையின் ஆசிரியர் குழாத்தையும் அழைத்து கலந்தாலோசிப்பதுடன் பண்புத்தரம் தொடர்பான வினாக்கள் சிலவும் உள்ளடக்கப்பட்டுள்ளன. அதே போன்று உள்ளக மதிப்பீட்டு முறைமையினால் வெளிக் கொண்டுவரப்படக்கூடிய விருத்தி செய்யப்பட வேண்டிய அம்சங்கள் ஐந்தைத் தெரிவுசெய்து அடுத்த வருட திட்டமிடல் செயற்பாட்டில் சேர்த்துக்கொள்ளப்படல் வேண்டியதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

மேற்படி தேவை கருதி தயாரிக்கப்பட்ட இந்த உள்ளக மற்றும் வெளியக மதிப்பீட்டு வழிகாட்டி 2015 ஆம் ஆண்டிலிருந்து பாடசாலைகளுக்கு அறிமுகம் செய்யப்பட்டதன் மூலம் இலங்கையின் கல்வியில் மதிப்பீடு பற்றிய புதிய கலாச்சாரத்தை உண்டாக்குவதற்கு வழிவகுக்க எதிர்பார்க்கப்படுகின்றது.

இவ்விடயத்துக்காக தயாரிக்கப்பட்ட புதிய தர உறுதிப்பாடுகள், மதிப்பீட்டு நியதிகள் மற்றும் சுட்டிகள் மூலம் பாடசாலைகளில் பலமான சுயமதிப்பீட்டு முறையொன்றை செயற்படுத்துவதற்கும் வெளியாட்களின் மூலம் பாடசாலையை மதிப்பீட்டுக்கு உட்படுத்துவதால் பாடசாலை உன்னதமான முன்னேற்றப் பாதையை நோக்கிப் பிரவேசிப்பதற்கு வழிகாட்டலொன்றை வழங்குவதற்கும் எதிர்பார்க்கப்படுகின்றது.

நியதிகளையும், சுட்டிகளையும் கருத்திற்கொண்டு மேற்கொள்ளப்படுகின்ற பாடசாலை மதிப்பீட்டுச் செயன்முறையை மேலும் வலுவூட்டுவதற்கான செயலொழுங்கு மேலே கூறப்பட்ட எட்டு மதிப்பீட்டு துறைகளின் கீழ் மேற்கொள்ளப்படுகின்றது. இதற்கமைய ஒவ்வொரு மதிப்பீட்டுத்துறைக்கும் பொருத்தமான பண்புத்தரங்கள் அவற்றை அடைவதற்கான தேவைப்பாடுகள் மதிப்பீட்டு நியதிகள், சுட்டிகள், பண்பு ரீதியான வினாக்கள் போன்றனவும் உள்ளடக்கப்பட்டுள்ளன.


By : M.S.M. Naseem - MA, PGDE(R), BA(Hons)



3 comments:

  1. மதிப்பீட்டு சுட்டிகளை தரவேற்றம் செய்யுங்கள்

    ReplyDelete
  2. இந்த புத்தகத்தின் pdf வடிவத்தை பதிவேற்றம் செய்யவும்

    ReplyDelete
  3. https://drive.google.com/file/d/1wa-Qz7ENW2W5hEmQI_MX0cPLQscx8K6y/view

    ReplyDelete