.உங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக ------- Meesan Way ------- தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்

Tuesday, May 30, 2017

வரலாற்றில் முஸ்லிம் ஸ்பெய்ன்



ஸ்பெய்ன் என்பது ஐரோப்பா கண்டத்தின் தென்மேற்குப்பகுதியில் காணப்படும் ஐபீரியத் தீபகற்பத்தில்; அமைந்துள்ள ஒரு நாடாகும். இது தனது மேற்கு எல்லையில் போர்த்துக்கல்லையும், தெற்கு எல்லையில் ஜிப்ரால்டர் மற்றும் மொரோக்கோவையும், வடகிழக்கில் பிரைனீஸ்ட் மலைத்தொடர் மற்றும் பிரான்சின் ஒரு பகுதியையும் எல்லைகளாகக் கொண்டுள்ளது. ரோமப் பேரரசின் ஒரு பகுதியாகக் காணப்பட்ட இப்பிரதேசம் ஹிஜ்ரி 92ல் (கி.பி 711) முஸ்லிம்களால் கைப்பற்றப்பட்டது. அன்று முதல் ஹிஜ்ரி 898 (கி.பி 1492) வரை சுமார் 8 நூற்றாண்டுகள் முஸ்லிம்களால் ஆட்சி செய்யப்பட்டது. இக்காலப் பகுதியில் ஸ்பெய்ன் அறிவியல், அழகியல், நாகரீகம் மற்றும் கலாசாரம் என பல்வேறு துறைகளிலும் உச்ச கட்ட வளர்ச்சியைக் கண்டு செழிப்புற்று விளங்கியதுடன், அஞ்ஞான இருளில் மூழ்கிக் கிடந்த ஐரோப்பாவுக்கு ஒளியை ஊட்டிய மூலமாகவும் காணப்பட்டது. எனவேதான் அதன் வராலாற்றுப் பின்னனியையும், பல்துறைப் பங்களிப்புக்களையும் அறிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும்.