.உங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக ------- Meesan Way ------- தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்

Tuesday, August 28, 2018

தனியார் கல்வி நிறுவனத்தில் ஒரு கற்கையினை (course) தெரிவு செய்யும் போது கவணத்தில் கொள்ளவேண்டிவை


இன்று அதிகாணமவர்கள் Course என்று கூறிக்கொண்டு அங்குமிங்கும் அலைந்து திரிந்து அதிகமான பணத்தினை வீண்விரயம் செய்து கொண்டிருப்பதைக் காணமுடிகின்றது. மறுபுரத்தில் பல தனியார் கல்வி நிறுவனங்கள் தமது வருமானத்தினை மாத்திரம் மையமாகக் கொண்டு மாணவர்களை ஏமாற்றிக் கொண்டிருக்கின்றன.
எனவேதான் தமது எதிர்காலத்தையும், தொழில் வாய்ப்பையும் இலக்காகக் கொண்டு கற்கைகளை தொடர்பவர்களும், பெற்றோர்களும் அவை தொடர்பான தெளிவைப் பெற்று செயற்பட வேண்டியது அவசியமாகும். அந்தவகையில் இவ்வாறானவர்களுக்கு உதவும் வகையில் இவ்வாக்கமானது வெளியிடப்படுகின்றது. 

எனவேதான் ஒரு கற்கையை (course) தொடர முன் நாம் பின்வரும் விடயங்கள் தொடர்பாக அறிந்திருக்க வேண்டியது அவசியமாகும்.

1. கற்கை நெறியின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தல்

நீங்கள் தொடரும் ஒரு கற்கை நெறியானது, Diploma, Advance Diploma, NVQ போன்ற பட்டப்படிப்பிற்கு குறைந்த தரத்திலுள்ள மூன்றாம் நிலைக்கல்வி அல்லது தொலைக்கல்வியாயின், நாராயன் பிட்டியவில் அமைந்துள்ள TVEC எனப்படும், மூன்றாம் நிலைக்கல்வி மற்றும் தொலைக்கல்வி ஆணைக்குழுவில் (Tertiary and Vocational Education Commission) குறித்த நிறுவனம் மற்றும் அந்நிறுவனத்தால் நடத்தப்படும் எல்லா கற்கைகளும் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவேண்டும்.

நீங்கள் தொடரும் ஒரு கற்கை நெறி பட்ட படிப்பு (Graduate Degree) அல்லது பட்டப்பின் கற்கையாயின் (Post Graduate Degree) குறித்த கற்கை நெறி மற்றும் அதனை வழங்கும் நிறுவனம் University Grants Commission (UGC) எனப்படும் பல்கழைக்கழகங்கள் மானியங்கள் ஆணைக்கழுவினால் அங்கீகரிக்கப்பட்டதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

ஏனெனில் இந்நிறுவனங்களே இக்கற்கைகளுக்கான அனுமதியை வழங்கக் கூடிய அரச நிறுவனங்களாகும்.

இலங்கையின் UGC ஆல் அனுமதிக்கப்பட்ட பல சர்வதேச பல்கழைக்கழகங்கள் காணப்படுகின்றன. இந்நிறுவனங்களில் கற்கைகளை தொடருவதன் மூலமும் எம்மால் தொழில் வாய்ப்புக்களை பெற்றுக்கொள்ள முடியுமாக இருக்கும். கீழே தரப்பட்டுள்ள link இணை click செய்து அவ்வாறான பல்கழைக்கழகங்கள் எவை என்பதை அறிந்து கொள்ள முடியும்.

இங்கு கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான விடயம், இவ்வாறு இலங்கையின் UGC ஆல் அனுமதிக்கப்பட்ட வெளிநாட்டு பல்கழைக்கழகங்களில் சிலவை எமது நாட்டிலேயே தமது நிலையங்களை அமைத்து கல்வி நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றன. அத்துடன் இங்குள்ள பல தனியார் கல்வி நியைங்கள் இவ்வாறான பல்கழைக்கழங்களின் கீழ் தம்மைப் பதிவு செய்து அவர்களிடமிருந்து சான்றிதல்களைப் பெற்றுக் கொடுக்கிள்றன.

எனினும் இவ்வாறான UGC அனுமதி பெற்ற வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களை மையப்படுத்தி முன்னெடுக்கப்படும் பட்டப்படிப்புக்கள் பெரும்பாலும் வியாபாரத்தை அல்லது வருமானத்தை இலக்காகக் கொண்டே மேற்கொள்ளப்படுகின்றன. இங்கு மாணவர்களுக்கு போதியளவு அறிவுகள், பயிற்சிகள் வழங்கப்படுவதில்லை. இதனால் சில நிறுவனங்களில் இவ்வாறான பல்கலைக்கழகங்களால் வழங்கப்படும் சான்றிதல்கள் கருத்தில் கொள்ளப்படுவதில்லை. குறிப்பாக சில இந்தியப் பல்கலைக்கழகங்கள் இவ்வாறு செய்கின்றன.

எனவே அரசாங்த்தினால் நடத்தப்படும் பல்கலைக்கழகங்கள், தொழிநுட்பக் கல்லூரிகள், ஏனைய கல்வி நிறுவனங்களில் எமது கற்கைகளை தொடர்வது மிகச் சிறந்ததாகவும், தரமானதாகவும், செலவு குறைந்ததாகவும் இருக்கும்.

அல்லது அரிசின் நேரடி அனுமதிபெற்ற SLIIT, SAITM, CINEC, NSBM போன்ற சில கல்வி நிறுவனங்கள் இங்கு காணப்படுகின்றன. இவற்றிலும் எமது கற்கை நெறிகளை தொடர முடியும். இங்கு வழங்கப்படும் கல்வி மற்றும் சான்றிதல்கள் தரமானதாக இருக்கின்ற அதேவேளை, கற்கைக்கான கட்டணங்களும் அதிகமாகவே காணப்படும். இவ்வாறான பல்கலைக்கழகங்கள் எவை என்பதை கீழே தரப்பட்டுள்ள link இன் மூலம் உயர் கல்வி அமைச்சின் இணையத்தளத்திற்கு சென்று பார்வையிடலாம்.

அல்லது, சர்வதேச பல்கலைக்கழகங்களின் சான்றிதலைப் பெற்றுத்தருகின்ற British College போன்ற மிகப்பிரபல்யமான, பழமையான சில தனியார் கல்வி நிறுவனங்கள் இங்கு காணப்படுகின்றன. வசதி படைத்தவர்கள் அவ்வாறான கல்வி நிறுவனங்களிலும் தமது கற்கைகளை தொடர முடியும்.

2. கற்கைக்கான கால எல்லையை அறிதல்

இன்று அதிகமான தொழில்களுக்கான நேர்முகப்பரீட்சைகளில் பட்டச் சான்றிதலுடன், அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களின் ஏனைய  சான்றிதல்களுக்கும் புள்ளிகள் வழங்கப்படுகின்றன. உதாரணமாக ஆசிரியர் நியமனம் போன்ற அரச வேலை வாய்ப்புக்கான நேர்முகப்பரீட்சைகளில் ஆறு மாததத்திற்கு மேற்பட்ட காலப்பகுதியை உள்ளடக்கிய தகவல் தெழிநுட்ப(ICT) மற்றும் ஆங்கில Diploma சான்றிதல்களுக்கும் புள்ளிகள் வழங்கப்படுகின்றன. இது போன்று ஏனைய கற்கைளும் குறிப்பிட்ட கால அளவு கற்பிக்கப்படடிருக்க வேண்டும் என தொழில் வழங்குனர்களால் நிபந்தனைகள் விதிக்கப்படுகின்றன.

ஆனால் இன்று பல தனியார் கல்வி நிறுவனங்கள் தமது இலாபத்தினை மட்டும் இலக்காகக் கொண்டு குறுகிய கால கற்கைகளை மேற்கொண்டு சான்றிதல்களை வழங்குகின்றன. இதனால் பல வேலைவாய்ப்புக்களின் போது அவை கருத்தில் கொள்ளப்படுவதில்லை. உதாரணமாக : இரண்டு அல்லது மூன்று மாத தகவல் தெழிநுட்ப மற்றும் ஆங்கில Diploma சான்றிதல்களை எடுத்துக்காட்டலாம்.

3. விரிவுரையாளர்களின் தகமை மற்றும் தரம்

பல கல்விசார் நிறுவனங்கள் தமது செலவுகளை கட்டுப்படுத்திக் கொள்ளும் நோக்கிலும் இலகு தன்மையை கருத்தில் கொண்டும் தமக்கு அண்மித்த பிரதேசங்களில் காணப்படும் தகுதி குறைவான, திறமையற்ற ஆசிரியர்களைக் கொண்டு தமது கல்வி நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றன. இதனால் மாணவர்களுக்கு போதுமான அறிவு, பயிற்சி போன்றவை கிடைப்பதில்லை. இதனால் குறித்த கற்கைச் சான்றிதல்களைக் கொண்டு அவர்களால் போட்டி மிக்க சூழலில் வேலை வாய்ப்புக்களை பெற முடியாது போகின்றது. காலம் மற்றும் பண விரயம் மட்டுமே அதனால் ஏற்படுகின்றது.

எனவே நாம் ஒரு கற்கையை தெரிவு செய்யும் போது, அதனை கற்பிக்கு ஆசிரியர்களது தகுதிகள் மற்றும் திறன்களை தெரிந்து கொள்வதும், அவர்கள் தொடர்பான பழைய மாணவர்களின் பின்னூட்டல்களைப் பெற்றுக் கொள்வதும் அவசியமாகும்.

4. இலங்கை திறந்த பல்கலைக்கழகம்

மாணவர்களின் திறமைகளை வளர்த்துக் கொண்டு போட்டித் தன்மையுள்ள தொழிற்சந்தைக்கு தம்மை தயார்படுத்துவதற்கான அனைத்து வாய்ப்புகளையும் வழங்கும் ஒரு நிறுவனமாக இலங்கை திறந்த பல்கலைக்கழகம் காணப்படுகின்றது. இது 1978ம் ஆண்டின் 16ம் இலக்க பல்கலைக்கழக சட்டத்தின் கீழ் 1980ம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்டது. நாட்டிலுள்ள ஏனைய 14 பல்கலைக்கழகங்களால் வழங்கப்படும் சான்றிதழ்களுக்கு சமமான அங்கீகாரத்தை இதன் சான்றிதல்களும் பெற்றுள்ளன. இதனால் இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட 15 வது பல்கலைக்கழகமாகவும் இது கருதப்படுகிறது.

இலங்கையிலுள்ள 14 பல்கலைக்கழகங்களில் இல்லாத பல வாய்ப்புகள் திறந்த பல்கலைக்கழகத்தில் கிடைக்கின்றன. இங்கு 600 இற்கும் அதிகமான கற்கைநெறிகள் உள்ளன.. ஏனைய பல்கலைக் கழகங்களை விட இது முற்றிலும் வித்தியாசமானது. 14 பல்கலைக்கழ கங்களிலும் அனுமதி பெறாத மாணவர்கள் பல்லாயிரக் கணக்கானோர் இங்கு தமது உயர் கல்வியைப் பெற்றுவருகின்றனர்.

திறந்த பல்கலைக்கழத்தில் பதிவுசெய்துகொண்ட மாணவர்கள் எவ்வித சட்ட ரீதியான தடைகளுமின்றி ஒரே நேரத்தில் அல்லது சமகாலத்தில் ஏனைய அரச பல்கலைக்கழகங்களில் வேறு கற்கை நெறிகளையும் தொடர்வதற்கு அனுமதியுள்ளது. மேலும், மாணவர்கள் தமது தொழிலைச் செய்து கொண்டே கல்வி நடவடிக்கைகளில் எவ்விதத் தடையுமின்றி ஈடுபடமுடியும். பகுதிநேர கற்கை நெறிகள் இதற்கு உதவுகின்றன.

இங்கு வகுப்பறை விரிவுரைகளுக்கு மேலதிகமாக தொலைக்கல்வி முறையிலும் மாணவர்களுக்கு விரிவான அறிவு வழங்கப்படுகின்றது. மாணவர்களுக்கு வழங்கப்படும் ஒப்படைகள், மாணவர்களது சுய தேடல் முயற்சிகளால் மேற்கொள்ளப்படுகின்ற விடயங்கள், மற்றும் வழங்கப்படும் பாடப்புத்தகங்கள் என்பன விரிவான, வினைத்திறனுள்ள கற்றலை உறுதி செய்கின்றன.

திறந்த பல்கலைக்கழகத்திற்கு என்றே உரித்தான கற்றல்-கற்பித்தல் முறைகள் மாணவர்களின் பல்கலைக்கழகக் கனவை நனவாக்கும் ஆற்றல் உள்ளவை. 18 வயதுக்கு மேற்பட்ட எந்தவொரு இலங்கைப் பிரஜையும் வயது கட்டுப்பாடுகள் ஏதுமின்றி நேரடியாகவோ அல்லது தொலைக்கல்வி முறையிலோ தாம் விரும்பும் துறையில் கற்கையைத் தொடர, தம்மை இப்பல்கலைக் கழகத்தில் பதிவு செய்துகொள்ளலாம். தற்போது வெளிநாட்டவர்களுக்கும் இங்கு இடம் ஒதுக்கப்படுகின்றது.

இலங்கை திறந்த பல்கலைக்கழகம் நுகேகொட, நாவல வீதியில் சுமார் 30 ஏக்கர் நிலப்பரப்பில் நிர்மானிக்கப்பட்டுள்ளது. இது பற்றிய மேலதிக தகவல்களுக்கு கீழே தரப்பட்டுள்ள link இணை click செய்து அறிந்து கொள்ள முடியும்.

5. அரச தொழிநுட்பக் கல்லூரிகள்

இலங்கையில் மிகக் குறைந்த செலவில் HND உற்பட அதிகமான தொழில்சார் கற்கைகள் மற்றும் பயிற்சிகளை வழங்கும் கல்வி நிறுவனமாக, அரச தொழிநுட்பக் கல்லூரிகள் காணப்படுகின்றன. இவை அரசினால் உருவாக்கப்பட்டு நடத்தப்பட்டு வருபவையாகும். இவற்றினால் வழங்கப்படும் சான்றிதல்களும் தரம் மிக்கவையாகும்.

இங்கு முழு நேர மற்றும் பகுதி நேர அடிப்படையில் பல துறைசார்ந்த கற்கைகள் நடத்தப்படுவதுடன், முழு நேர மாணவர்களுக்கு கொடுப்பணவுகளும் வழங்கப்படுகின்றன. இதில் மாணவர்கள் தமக்கு பிடித்த துறையை தெரிவு செய்து தமது கற்கைகளை தொடர முடியும். தற்போது நாட்டின் பல பாகங்களிலும் 33 தொழிநுட்பக் கல்லூரிகள் காணப்படுகின்றன.

இவ்வாறான அரச தொழிநுட்பக் கல்லூரிகளினால் வழங்கப்படும் சான்றுதல்கள் மூலம் துறைசார்ந்த அரசாங்க, தனியார் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்புக்களை பெற்றுக் கொள்ள முடியும். இவை பற்றிய மேலதிக தகவல்களை கீழே தரப்பட்டுள்ள link இணை click செய்து அறிந்து கொள்ள முடியும்.

By : M.S.M. Naseem 
MA(R), BA (Hons)



No comments:

Post a Comment