உலகின் தலை சிறந்த ஆட்சியாளர்களில் ஒருவரான கலீபா உமர் (ரழி) அவர்கள் கி.பி 580 இல் மக்காவில் பிறந்தார்கள். இவர் நபி (ஸல்) அவர்களை விட 10 வயது இளையவராகக் காணப்பட்டார். இவரது தந்தையின் பெயர் கத்தாப், தாயின் பெயர் கன்த்மா அல்லது கந்தாமா (ஹிஷாம் இப்னு முகீராவின் மகள்). ஸைத் மற்றும் பாத்திமா ஆகியோர் இவரது உடன் பிறந்தவர்களாவர்.