.உங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக ------- Meesan Way ------- தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்

Monday, June 28, 2021

கலீபா உமர் (ரழி) அவர்களின் வரலாறு (காணொளி - தமிழில்)

உலகின் தலை சிறந்த ஆட்சியாளர்களில் ஒருவரான கலீபா உமர் (ரழி) அவர்கள் கி.பி 580 இல் மக்காவில் பிறந்தார்கள். இவர் நபி (ஸல்) அவர்களை விட 10 வயது இளையவராகக் காணப்பட்டார். இவரது தந்தையின் பெயர் கத்தாப், தாயின் பெயர் கன்த்மா அல்லது கந்தாமா (ஹிஷாம் இப்னு முகீராவின் மகள்). ஸைத் மற்றும் பாத்திமா ஆகியோர் இவரது உடன் பிறந்தவர்களாவர்.

இவர் மக்காவை நிர்வகித்து வந்த 10 கோத்திரத்தாரில் ஒன்றான அதீ கோத்திரத்தை சேர்ந்தவர் (அதீ என்பவர் நபியவர்களின் 7வது தலைமுறைப்பட்டனார் 'முர்ராஹ்'வின் உடன் பிறந்த சகோதரர்). இவரது கோத்திரத்தினர் மக்காவில் நீதி வழங்குபவர்களாக காணப்பட்டனர் (கஃபாவை பரிபாலனம் செய்வது யார் என்பது தொடர்பாக உமையா மற்றும் அப்துல் முத்தலிப் தரப்பினரிடையே ஏற்பட்ட பிரச்சினைக்கு தீர்வு வழங்கியவர் உமர் (ரழி)யின் பாட்டனாரான நுஃபைல் என்பவராவார்)

உமர்(ரழி) அவர்கள் மக்காவிலிருந்த எழுதப் படிக்கத் தெறிந்தவர்களில் ஒருவராவார். ஆரம்பத்தில் ஆடு, மாடு மேய்க்கக் கூடியவராக இருந்த இவர், ஒரு மல்யுத்த மற்றும் ஓட்டப்பந்தய வீரராகவும், குதிரையை அடக்கி ஓட்டக் கூடியவராகவும் இருந்தார்கள். அதேவேளை வழக்குகளுக்கு தீரப்புச் சொல்லும் மத்தியஸ்த்தராகவும், வியாபாரியாகவும் காணப்பட்டார்கள்.

இவரது வாழ்க்கை வரலாற்றினை விளக்குகின்ற காணொளியானது சிரியாவினைச் சேர்ந்த ஹாமித் அலி என்ற இயக்குனரின் இயக்கத்தில்,  கட்டார் டீவியின் தயாரிப்பில் 2012 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. 

உமர் (ரழி) அவர்களின் வரலாற்றினை உள்ளடக்கிய காணொளியானது 31 பாகங்களை உள்ளடக்கியுள்ளது. கீழே அவற்றிற்கான Link தரப்பட்டுள்ளது. ஒவ்வொரு பாகத்தின் Link இனையும் Click செய்வதன் மூலம் அதன் காணொளிகளை பார்க்கவும் மற்றும் பதவிறக்கம் செய்து கொள்ளவும் முடியுமாக இருக்கும்.

பாகம் - 01

பாகம் - 02

பாகம் - 03

பாகம் - 04

பாகம் - 05

பாகம் - 06

பாகம் - 07

பாகம் - 08

பாகம் - 09

பாகம் - 10

பாகம் - 11

பாகம் - 12

பாகம் - 13

பாகம் - 14

பாகம் - 15

பாகம் - 16

பாகம் - 17

பாகம் - 18

பாகம் - 19

பாகம் - 20

பாகம் - 21

பாகம் - 22

பாகம் - 23

பாகம் - 24

பாகம் - 25

பாகம் - 26

பாகம் - 27

பாகம் - 28

பாகம் - 29

பாகம் - 30

பாகம் - 31


உமர் (ரழி) அவர்களின் வரலாற்றுக் காணொளியை விரும்பிய Video Quality வடிவில் இல்பதவிறக்கம் செய்து கொள்ள கிழே தரப்பட்டுள்ள Link இனை Click செய்யவும்.

To Download Umar Seies - Degoo


Telegram Application ஊடாக பதிவிறக்கம் செய்து பார்ப்பதற்கு கிழே தரப்பட்டுள்ள Link இனை Click செய்யவும்.

Watch in Telegram




No comments:

Post a Comment