ஒரு சொல்லை இன்னொரு சொல்லுடன் இனைக்கப் பயன்படும் சொற்கள் அல்லது ஒரு வாக்கியத்திலுள்ள சொற்களுக்கிடையிலான உறவுகளை விவரிக்கும் சொற்கள் முன்னிடைச் சொற்கள் அல்லது உருப்பிடைச் சொற்கள் எனப்படும். அதாவது இவை ஒரு வாக்கியத்தில் வருகின்ற ஒரு பெயர்ச்சொல் அல்லது பிரதிப் பெயர்ச்சொல்லுக்கும் மற்றும் இன்னுமொரு பெயர் அல்லது பிரதிப் பெயர்ச் சொல்லுக்கும் இடையிலான தொடர்பை விளக்குவதற்கு பயன்படும் சொற்களாகும்.
Tuesday, January 16, 2024
Adverb (வினையெச்சம்)
ஒரு வினைச்சொல்லினை வர்ணிக்க அல்லது சிறப்பிக்க அல்லது விவரித்துக் கூற பயன்படும் சொற்கள் வினையெச்சங்கள் (Adverbs) எனப்படும். இவை வினையடைகள், வினை உரிச்சொற்கள் எனவும் தமிழில் அழைக்கப்படுகின்றது. Adverbs ஆனது ஒரு செயலை விவரித்துக் கூறும்போது அச்செயலை பின்வரும் முறைகளில் விவரித்து அல்லது வர்ணித்துக் கூறும்.
Pronouns (பிரதிப் பெயர்ச் சொற்கள்)
பெயர்களுக்கு அல்லது பெயர்ச்சொற்களுக்குப் பதிலாக பயன்படுத்தப்படும் சொற்கள், பிரதிப் பெயர்ச்சொற்கள் எனப்படும். இவை சுட்டுப் பெயர்கள், பதிலிடு சொற்கள் எனவும் அழைக்கப்படும். இது ஆங்கிலத்தில் பல பகுதிகளாக பிரித்து நோக்கப்படுகிறது. அவற்றை இங்கு நோக்குவோம்.
Adjectives (பெயர் வர்னணைச் சொற்கள்)
ஆங்கில இலக்கணத்தில் முக்கியமான ஒரு பகுதியாக பெயர் வர்னணைச் சொற்கள் காணப்படுகின்றன. பெயர்ச் சொல் ஒன்றை அல்லது பிரதிப் பெயர்ச் சொல் ஒன்றை விபரிக்க அல்லது வர்ணிக்கப் பயன்படுத்தப்படும் சொற்கள் பெயர் வர்னணைச் சொற்கள் எனப்படும். இவை பெயர் உரிச்சொற்கள் அல்லது பெயரடைச் சொற்கள் எனவும் அழைக்கப்படும். இவை எப்போதும் பெயர்ச் சொல்லுக்கு முன்னாலேயே வரக்கூடியதாகும்.
Gender (பால் பாகுபாடு)
தமிழ் இலக்கணத்தில் காணப்படுவது போன்று ஆங்கிலத்திலும் ஆண்பால், பெண்பால், பொதுப்பால் என பால் பாகுபாடுகள் காணப்படுகின்றன. அவற்றை இங்கு நோக்குவோம்.
Articles (சுட்டிடைச் சொற்கள்)
ஒன்றை சுட்டிக்காட்ட பயண்படுத்தப்படும் சொற்கள் சுட்டிடைச் சொற்கள் எனப்படும். ஆங்கிலத்தில் A, An, The எனும் மூன்று சுட்டிடைச் சொற்கள் காணப்படுகின்றன. இவை Definite Articles, Indefinite Articles என இரண்டு வகையாகப் பிரித்து நோக்கப்படுகிறது. இவை பெயர்ச் சொற்களைச் சார்ந்து வரும் அடைச்சொற்களாகும்.
Verbs (வினைச் சொற்கள்)
ஒரு செயலை குறிக்க பயண்படுத்தப்படும் சொற்கள் வினைச் சொற்கள் எனப்படும். அதாவது மனிதர்களாகிய நாங்கள் அல்லது ஏணைய படைப்புக்கள் ஏதாவது ஒரு செயலில் ஈடுபடுவதை குறித்துக்காட்ட பயன்படுத்தும் சொற்களாகும். இவ் வினைச்சொற்கள் வெவ்வேறு நிலைகளுக்கேற்ப ஐந்து வடிவங்களைப் பெற்று வரும். அவற்றை பின்வருமாறு பிரித்து நோக்கலாம்.
Nouns (பெயர்ச் சொற்கள்)
பிரபஞ்சத்திலுள்ள இடங்கள், பொருற்கள், மனிதர்கள், உயிரினங்கள், உணர்வுகள் என நாம் உலகில் காணும் அல்லது பயன்படுத்தும் பெயர்கள் யாவும் பெயர்ச் சொற்கள் என்ற வகைக்குள் அடங்கும். ஆங்கிலத்தில் இவை 'Noun' என அழைக்கப்படுகிறது. இச்சொல் “nōmen” (பெயர்) என்ற இலத்தீன் மொழிச் சொல்லிருந்து தோன்றியதாகும்.
Subscribe to:
Posts (Atom)