.உங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக ------- Meesan Way ------- தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்

Saturday, February 1, 2014

இஸ்லாத்தில் அரசியல் கொள்கை



இன்று உலகலாவியரீதியில் இஸ்லாத்திற்கும்,முஸ்லீம்களுக்கும் எதிராக பல வகையான அடக்குமுறைகளும், போலிவாதங்களும் பரப்பப்பட்டு வருகின்றன. இவ்வாறு இஸ்லாத்தின் மீது முன்வைக்கப்படுகின்ற போலிவாதங்களில் முக்கியமான ஒன்றுதான் இஸ்லாத்தின் உண்மையான அரசியல் கொள்கைகளை அறியாமல் அதனைப்பற்றிய போலியான விமர்சனங்களையும் குற்றச்சாட்டுகளையும் பரப்புகின்ற செயலாகும்.
அந்தவகையில் இஸ்லாத்தின் அரசியல் கொள்கை ஜனனாயகத் தன்மையற்றது மாறாக அது சர்வதிகாரத்தன்மை கொண்டது, அது குடும்ப ஆட்சியை வழியுறுத்துகின்றது, அதன் கொள்கைகள் பழமை வாய்ந்தவையாக காணப்படுகின்றது எனவே அவை தற்காலத்திற்கு பொருத்தமற்றது, அதன் கொள்கைகள் மனித சுதந்திரத்தையும், உரிமைகளையும் கட்டுப்படுத்துகின்றது போன்ற பல குற்றச்சட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. இக்குற்றச்சாட்டுகள் அன்னியர்களால் மட்டுமன்றி முஸ்லிம்களால் கூட தங்களது அறியாமைகாரணமாக முக்வைக்கப்படுவதைக் காணலாம். இதற்கப்பால் இன்னும் சிலர் இஸ்லாத்தில் அரசியல் பற்றி எதுவுமே குறிப்பிடப் படவில்லை என வாதாடுகின்றனர். எனவே இது பற்றிய உண்மை நிலையை தெளிவுபடுத்த வேண்டியதும், இஸ்லாத்தின் மீது புனையப் பட்டுள்ள போலியான குற்றச்சாட்டுக்களை களைபிடுங்க வேண்டியதும் முக்கியமாகும் அதற்கு  இஸ்லாத்தின் உண்மையான அரசியல் கொள்கைகளைப் பற்றி அறிந்து கொள்வது அவசியமாகும்.
மறுமையை இலக்காகக்கொண்டு வாழுகின்ற மனிதனுக்கு இஸ்லாம் இவ்வுலகில் மூன்று வகையான கடமைகளை நிறைவேற்றுமாறு ஏவுகின்றது. அவை இபாதத், இமாறத், கிலாபத் போன்றவையாகும். இதன்படி 'மனிதவர்க்கத்தையும், ஜின்வர்க்கத்தையும் என்னை வணங்குவதற்காகவன்றி படைக்கவில்லை' என்ற குர்ஆன் வசனமானது மனிதன் அல்லாஹ்வுக்கு அடிபணிந்து அவனை வணங்கவேண்டிய, அவனது சட்டங்களுக்கு கட்டுப்பட்டு நடக்கவேண்டியதன் அவசியத்தையும் எடுத்துக்காட்டுகின்றது. அதே போன்று 'சூராமுல்கின் 15வது வசனமானது' இவ்வுலகில் மனிதனின் சழூக, அரசியல்மேன்பாடு,விவசாய அபிவிருத்தி போன்ற கருத்துக்களை உள்ளடக்கியிருப்பதைக் காணலாம். அதே போன்று கிலாபத் என்ற பதமானது மனிதன் அல்லாஹ்வின் பிரதிநிதியாக இருந்து செயற்படுவதைக் குறிக்கின்றது. இதன் அடிப்படையில் இபாதத் என்ற பதம் இஸ்லாமிய அரசியலின் அடிப்படையையும், இமாறத், கிலாபத் போன்றவை மனிதனின் சழூக, அரசியல் செயற்பாடோடு சேர்ந்தவையாகவும் காணப்படுகின்றது. அந்தவகையில் மக்கள் வாழவும், அவர்களது வாழ்க்கை அபிவிருத்தியடையவும் அவர்கள் ஒரு சழூகமாக அமைவது அவசியமாகும். இவ்வாறு சமூகமாக வாழூம்போது அவர்களிடையே ஒரு ஓழுங்கை ஏற்படுத்தவும், அவர்களுக்கு மத்தியில் ஏற்படும் பிரச்சினைகளை தீர்க்கவும் ஒரு அரசின் தேவை அவசியமாகும். எனவேதான் இஸ்லாம் ஆன்மீக ரீதியில் ஒழுங்கமைந்த சிவில் அரசினை ஏற்படுத்த தூண்டுகின்றது. அத்தோடு இவ்வாறு ஒழுங்கமைந்த ஒரு அரசானது எவ்வகையான பண்புகளையும், அம்சங்களையும் கொண்டிருக்க வேண்டும் என்பதையும் தெளிவாக விளக்கியுள்ளது.
இஸ்லாத்தின் அரசியல் கொள்கையானது நான்கு அடிப்படை அம்சங்களில் உருவாக்கப்பட்டுள்ளது. ஒன்று 'ஆட்சியுரிமை இறைவனுக்குறியதாகும்';. அதாவது உலகில் ஆட்சி புரிபவர் இறைவனின் பிரதிநிதியாக இருந்து அவர்களுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ள அதிகாரங்களை இறைவரம்பிற்குட்பட்ட வகையில் நிறைவேற்ற உரிமை பெற்றவர். இதனை அவர் மீறும் போது அவர் பாவியாக மாறுகின்றார். மேலும் இங்கு ஆட்சிபுரிபவர் இஸ்லாமிய அறிவு, நல்லொழுக்கம், நற்பண்பு போன்ற பல தகைமைகளையும்  கொண்டிருக்கவேண்டியதும் அவசியமாகும் இது பற்றி 'சூரா மாயிதாவின் 44,47வது வசனங்கள் விளக்குகின்றது. இரண்டாவது அம்சம் 'இறைவனால் வழங்கப்பட்டது மக்கள் பிரதிநிதித்துவமாகும் அது ஒரு தனிமனிதனுக்கோ அல்லது ஒரு குடும்பத்திற்கோ உரித்துடையதல்ல என்பதாகும்'. எனவே இன்று இஸ்லாத்தின் பெயரால் ஆட்சிநடக்கின்ற சில நாடுகளைப் பார்த்துவிட்டு இஸ்லாம் குடும்ப ஆட்சியை வலியுருத்துகின்றது என விமர்சிப்போர் இதனை நன்கு புரிந்துகொள்ளவேண்டும். இவ்விரண்டு அடிப்படைகளையும் 'சூரா நூரின் 55வது வசனம்' விளக்குவதைக் காணலாம். அதே போன்று சூறாவின்(கலந்தாலோசனை சபை) அடிப்படையில் முடிவுகள் எடுக்கப்படல், சட்டங்களை நிருவகிக்கும் பொறுப்பு மனிதனுக்கு உண்டு என்பவை ஏனைய இரண்டு அம்சங்களாகும்.
இவ்வடிப்படையில் உருவாக்கப்பட்ட ஒரு அரசானது பின்வரும் மூலக்கூறுகளைக் கொண்டதாகக் காணப்படும்.                                               

1-தௌஹீத்(ஓர் இறைவாதம்) -: இறைவன் ஒருவனே அவனையே வணங்கவேண்டும், ஆட்சி அதிகாரங்கள் அனைத்தும் அவனுக்கேயுரியது, அவனதுசட்டங்களே இறுதியானதாகும், அதற்கு கட்டுப்பட்டு நடப்பது ஒவ்வொருவர் மீதும் கடமையாகும்.

2-றிஸாலத்(இறை தூதுத்துவம்) -: இறைவனால் வகுக்கப்பட்ட சட்டங்களை மனிதன் பெற்றுக்கொள்ளும் முறையே றிஸாலத் எனப்படும். இது இரண்டு முறைகளிள் பெறப்படும்.
•    இறைவன் தனது சட்டத்தை விளக்கிய வேதநூலாகிய அல்குர்ஆனிலிருந்து பெறப்படல்.
•    இறைதூதர் என்ற வகையில் நபி(ஸல்)அவர்கள் தனது சொல்,செயல்,அங்கீகாரம் என்பவற்றின் மூலம் இறைவனின் சட்டங்களை விளக்கிய தொகுதி(ஹதீஸ்).  
இவையிரண்டிலும் தெளிவான விளக்கங்கள் கிடைக்காதசந்தர்ப்பத்தில் இஜ்திஹாத் போன்றவற்றின் மூலம் தீர்வைப்பெறலாம். அத்துடன் சூறாவின் அடிப்படையில் கால,தேச வர்த்தமான சட்டங்களை உருவாக்கலாம்.                                           

3-ஷரீஆ(யாப்புஷ சட்டம்) -: அல்குர்ஆன்,ஹதிஸின் மொத்த அடிப்படைகளே ஷரீஆ எனப்படும். ஆட்சியாளர்கள் சட்டரீதியான அங்கீகாரத்தைப் பெற ஷரீஆவை முழுமையாக விளங்கி ஏற்றுக்கொள்ள வேண்டியது அவசியமாகும் இதுவே சமூகத்தை வடிவமைக்கும் ஆணிவேராகும்.                                                        

4-மஜ்லிஷே சூறா (கலந்தாலோசனை சபை) -: மஜ்லிஷே சூறா என்பது  தேவைகள், நலன்கள், அபிவிருத்திகள் போன்ற மக்களின் அனைத்தையும் நிறைவேற்றும் நோக்கில் உருவாக்கப்படுகின்ற ஒன்றாகும். இதற்கு இஜ்திஹாத் செய்யத்தகுதியுள்ள,அரசியல்,சமூக நலன்கள் பற்றிய அறிவுள்ள தகுதிவாய்ந்த அறிஞர்கள் கலீபாவால் தெரிவு செய்யப்படுவர். இஸ்லாமிய சமூகஅமைப்பில் முடிவுகள் அனைத்தும் இவர்களால் கலந்துரையாடப்பட்ட பின்னரே எடுக்கப்படும். இக்கலந்துரையாடலின் முக்கியத்துவம் பற்றி பின்வரும் அல்குர்ஆன் வசனம் விளக்குவதைக் காணலாம்'அவர்கள் தங்களின் இரட்சகனின் கட்டளைகளை ஏற்று தொழுகையும் நிறைவேற்றுவார்கள் மேலும் இவர்களது காரியமே தங்களுக்குள் கலந்தாலோசித்தலாக இருக்கும்'(42:38) மேலும் '(யுத்தம்,சமாதானம் என்பவற்றில்) அவர்களுடன் கலந்தாலோசனை செய்வீராக...'(3:159)                         

மேலும் இங்கு கலீபா பதவியின் நிரந்தரத்தன்மையைவிட சூறா அங்கத்தவர்களின் நிரந்தரத்தன்மை வலுவானதாகக் காணப்படும். இங்கு அங்கத்தவர்களை இரத்துச்செய்யும் அதிகாரம் கலீபாவுக்கில்லை. ஆனால் கலீபாவில் குறைகள் காணப்படின் அவரை நீக்கவும் அந்த இடத்திற்கு புதிய ஒருவரை நியமிக்கவும் சூறா அங்கத்தவர்கள் அதிகாரம் பெற்றிருப்பர். இங்கு சூறாவின் தலைவராக கலீபா காணப்படுவதுடன் ஆலோசனைகளின் போது அங்கத்தவர்கள் தமது கருத்துக்களை முன்வைக்க சமவாய்ப்பை  கலீபா உருதி செய்யவேண்டும். கலந்தாலோசனையின்போது கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டால் பெரும்பான்மை முடிவு தீர்வாகப்பெறப்படுவதுடன் அதனை அமுல்படுத்த கலீபாவுக்கு உதவுவது இவர்களின் கடமையாகும்.

5-நீதித்துறை -: இஸ்லாத்தின் நீதித்துறையானது நிர்வாகத்துறையின் ஆதிக்கத்திலிருந்து முற்றிலும் விடுபட்டு சுதந்திரமாக செயற்படக்கூடிய ஒன்றாகும். இங்கு நீதிபதிகள் கலீபாவால் தெரிவு செய்யப்படுகின்ற போதும் இவர்கள் நீதிமன்றில் கலீபாவின் பிரதிநிதியாகவன்றி அல்லாஹ்வின் பிரதிநிதியாகவே அமர்கினறனர். இவர்களின் பணி இறைசட்டங்களை பாகுபாடின்றி மக்களிடையே செயற்படுத்துவதாகும் இதனைப்பற்றி அல்குர்ஆன் பின்வருமாறு கூறுகின்றது 'அறியாமைக் காலத்து தீர்ப்பையா அவர்கள் தேடுகின்றனர்? உறுதியாக நம்பிக்கை கொண்ட சமூகத்தார்க்கு தீர்ப்பளிப்பதில் அல்லாஹ்வை விடவும் மிக அழகானவர் யார்? ' (5:50)

6-கிலாபத்(இறையாட்சி) -: இதன் கருத்து யாதெனில் இஸ்லாத்தின் பார்வையில் மனிதன் இவ்வுலகில் இறைவனின் பிரதிநிதியாவான் எனவே அவன் நிர்வாகச் செயற்பாடுகளில் ஈடுபகின்ற போது தனக்கு வழங்கப்பட்டுள்ள எல்லைக்குட்பட்ட வகையில் நின்று இறையதிகாரத்தை செயற்படுத்துவதற்கு வேண்டப்படுகின்றான் இதைப்பற்றி 'சூறா பகறாவின் 30வது' வசனத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதை அவதானிக்கலாம்.
இவ்வாறு மேற்கூறிய அம்சங்களை உள்ளடக்கியதாகவே ஒரு இஸ்லாமிய அரசானது ஒழுங்கமைந்திருக்கும். இங்கு மக்கள் அனைவரும் ஏனையவர்களின் உரிமைகளுக்கும், உடமைகளுக்கும் பாதிப்பு ஏற்படுத்தாத வகையிலும், மார்க்க வரையரைகளுக்குட்பட்ட வகையிலும் தங்களது உரிமைகளையும், கடமைகளையும் நிறைவேற்ற பூரண சுதந்திர முடையவர்களாக காணப்படுவர். இவ்வகையான மக்களின் உரிமைகள் பற்றி அல்குர்ஆனின் ' 9:71, 16:91, 2:190,256 ' வசனங்கள் விளக்குவதை அவதானிக்கலாம். மேலும் இங்கு இறைவனின் சட்டங்களே நடைமுறையில் காணப்படுவதனால் எதுவித இன,குல,ஜாதி,பிரதேச பாரபட்சமின்றி அனைவருக்கும் பொதுவானதும், நீதியானதுமான தீர்வுகளைப் பெறக்கூடிய நிலையே காணப்படுகின்றது. ஆனால் சட்டங்கள் மனிதர்களால் இயற்றப்படுகின்ற போது அவை தாம் சார்ந்த ஒரு சிலருக்கே சாதகமாகக் காணப்படுவதுடன், எல்லாக்காலகட்டங்களுக்கும் ஏற்புடையதாகவும் காணப்படுவதில்லை. அடுத்து இங்கு ஆட்சியாளர்களை நியமிக்கவும், அகற்றவும் மக்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதால் ஆட்சியாளர்களும் நீதியான முறையில் தமது நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடிய சூழ்நிலை உருவாகின்றது. இதனை நேர்வழி நடந்த நான்கு கலீபாக்களது(குலபாஉர் ராஷீதீன்கள்) ஆட்சியைப்பற்றி அறிவதன் மூலம் விளங்கிக் கொள்ளலாம்.  இங்கு குடும்பஆட்சி ழச பரம்பரையாட்சி என்பதற்குப்பதிலாக மக்கள் பிரதிநிதித்துவ ஆட்சியே வழியுருத்தப்படுவதால் தகுதியானவர்களே ஆட்சிப்பொருப்புக்கு வரக்கூடிய நிலை ஏற்படுகின்றுது. மேலும் ஷூறாவின் அடிப்படையில் கால, தேச, வர்த்தமான சட்டங்களை உருவாக்கக்கூடிய நிலையும் இதில்காணப்படுகின்றது. எனவேதான் எக்காலத்துக்கும் பொருந்தக்கூடிய அம்சங்களை உள்வாங்கக்கூடிய நிலையும் காணப்படுகின்றது. இவ்வாறான பல சிறப்பம்சங்களைக் கொண்ட இஸ்லாத்தின் அரசியல் கொள்கையானது எந்த விதத்திலும் விமர்சிக்கப்பட முடியாத ஒன்றாகும். எனவேதான் இது பற்றி முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள், விமர்சனங்கள் அனைத்தும் உண்மைக்குப் புறம்பானதாகும்.
அடுத்ததாக நாங்கள்விளங்கிக் கொள்ளவேண்டிய முக்கிய விடயம் என்னவெனில் இவ்வாறான பல சிறப்பம்சங்களைக்கொண்ட இஸ்லாத்தின் அரசியல் கொள்கையானது ஏன் முஸ்லீம்களால் கூட புரிந்து கொள்ளமுடியாதுள்ளது என்பதாகும். அந்தவகையில் இஸ்லாத்தில் அரசியல் பற்றி எதுவும் கூறப்படவில்லை என்ற முடிவுக்கு வருவதற்கான பிரதான காரணிகளாக பின்வருவற்றைக்காணலாம்.

1.அல் குர்ஆனை விளங்குவதிலுள்ள பிரச்சினை அதாவது ஒன்று' வெற்றுள்ளத்துடன் குர்ஆனை அணுகாமல் ஏனைய கோட்பாடுகள்இ சித்தாந்தங்களின் தாக்கத்துடன் அதனை அணுகல்' எனவே தவறான முடிவுகளுக்கு வரல்.
அடுத்தது 'அல்குர்ஆன் வாழ்க்கையை அரசியல், பொருளாதாரம், விஞ்ஞானம், சமூகமேன்பாடு... என கூறுபடுத்தி கூறவில்லை மாறாக அதன் ஒவ்வொரு பகுதியும் பல்வேறு அம்சங்களையும் உள்ளடக்கியதாக காணப்படுவதை அவதானிக்கலாம் உதாரணமாக-: சூரா மாவூனின் ஆயத்துக்களை எடுத்து நோக்கினால் அதன் ஒவ்வொரு வசனமும் மறுமை, சமூகமேன்பாடு, இபாதத்(தொழுகை) என வௌ;வேறான அம்சங்களை உள்ளடக்கியிருப்பதைக் காணலாம். ஆனால் உலகக்கல்வியானது வாழ்க்கையை அரசியல், பொருளாதாரம், விஞ்ஞானம், சமூகமேன்பாடு... என பல கூறுகளாக வேறுபடுத்திக்காட்டுகின்றது'. எனவேதான் மனிதன் இதனைப்படித்துவிட்டு இதே அமைப்பில் குர்ஆனிலும் தேடுகின்றான் அவனால் அவ்வாறு காணமுடியாத போது குறித்த விடயம் பற்றி அல்குர்ஆனில் எதுவுமே குறிப்பிடப்படவில்லை என்ற முடிவிற்கு வந்துவிடுகின்றான்.

2.இன்று அரசியல் என்பது கொள்கை,நடைமுறை என இரண்டுபகுதிகளாக காணப்படுகின்றது. இங்கு கொள்கைப்பகுதிகளை விட ஆட்சியாளர்களின் பதவிக்காலம் எவ்வளவு, எவை அடிப்படைஉரிமைகள், யார் ஆட்சிக்கு வரலாம், எத்தனைமுறை வறலாம், எப்படி பதவி நீக்கலாம்... போன்ற நடைமுறைப்பகுதிகளுக்கே அதிக முக்கியத்துவம் வழங்கப்படுகின்றது. ஏனென்றால் கொள்கைகள், சட்டங்களை உருவாக்கும் அதிகாரம் இங்கு மனிதனுக்கு வழங்கப்படடுள்ளதால் அந்த அச்சம் காரணமாகவே இவ்வாறான நிலை ஏற்படுகினறது. ஆனால் இஸ்லாத்தின் கொள்கைகளையும், சட்டங்களையும்(அல்குர்ஆன்) இறைவன் வழங்கியதால் இங்கு நடைமுறைப்பகுதிக்கன்றி கொள்கைப்பகுதிக்கே அதிக முக்கியத்துவம் வழங்கப்படுகின்றது. இதற்கு உதாரணமாக நான்கு நேர்வழி நடந்த நான்கு கலீபாக்களது(குலபாஉர் ராஷீதீன்கள்) தெரிவு முறையைக் குறிப்பிடலாம். இவர்கள் நால்வரும் வௌ;வேறு அமைப்புக்களிலேயே தெரிவுசெய்யப்பட்டனர். ஆனால் இன்று சில வித்தியாசஙக்ளுக்கு மத்தியில் ஒரே அமைப்பில் தெரிவுசெய்யப்படுவதை அவதானிக்கலாம். இவற்றைவிட ஊடகங்களின் போலிப்பிரச்சாரங்கள், இஸ்லாத்துக்கெதிரான சக்திகளின் நடவடிக்கைகள், இஸ்லாம் பற்றிய தெளிவின்மை போன்றவற்றை ஏனைய காரணிகளாகக் குறிப்பிடலாம்.                                                                                                                                                     

MSM. Naseem (BA. Hones)





No comments:

Post a Comment