அல்லாஹ் நேர்வழியைக்
காட்ட பல நபிமார்களையும் அவர்களுக்கு அவர்களின் வழியை இலகுபடுத்தவும், அத்தாட்சியாகவும்
வேதங்களையும் காலத்துக்கு காலம் கொடுத்தான். இந்தப் பணியானது நபி (ஸல்) அவர்களதும்இ
அல் குர்ஆனின் வரவோடும் முற்றுப் பெற்றுவிட்டது. அந்த வகையில் அல்லாவின் தீனை இவ்வுலகில்
பரப்பி மக்களையும் வழிகேட்டிலிருந் பாதுகாக்க பல தூதர்கள் அனுப்பப்பட்டதுடன் அவர்களுக்கான
வேதங்களும் அருளப்பட்டிருந்நன. குர்ஆனைத் தவிர மற்றெல்லா வேதங்களும் ஒரு குறிப்பிட்ட
காலத்துக்கு இடத்துக்கு சமூகத்துக்கு பொருந்தும் விதத்திலேயே அருலப்பட்டன. இவ்வாறான
பல வேதங்கள் அருளளப்பட்டிருந்த போதும் குறிப்பிட்ட நான்கு வேதங்களைத் தவிர மற்ற வேதங்கள்
பற்றிய தெளிவான விளக்கங்கள் எதுவும் காணப்படவில்லை.
Saturday, May 31, 2014
இஸ்லாமிய கண்ணோட்டத்தில் ஆய்வும் அதன் முக்கியத்துவமும்
ஆய்வு
என்பது இன்றைய சமகால உலகில் மிகுந்த செல்வாக்கு பெற்ற ஒன்றாகவும் வளர்ச்சி
மற்றும் நாகரீகமடைந்த நாடுகளின் அபிவருத்தி பொறிமுறைகளில் அதிகம்
பயன்படுத்தப்படக்கூடிய ஒன்றாகவும் விளங்குகிறது எனலாம். மேற்கு நாடுகள்
அபிவிருத்தியில் சிகரத்தை தொட்டிருப்பதற்கு முறையான ஆய்வு முறையியல்
பயன்பாடும் தொடர்ச்சியான செயற்பாடுகளும் அடிப்படையாக அமைந்துள்ளது என்பதைத்
துணிந்து கூறலாம். 'மனிதனது தேடல் உண்மையைக் கண்டறிவதாகவே உள்ளது. ஆயினும்
உண்மையைக் கண்டறிவதற்கான சிறந்த வழி ஆய்வாகும். இதனை பீ. ஏம். குக்
பின்வருமாறு வரையரை செய்கின்றார்.
Subscribe to:
Posts (Atom)