அல்லாஹ் நேர்வழியைக்
காட்ட பல நபிமார்களையும் அவர்களுக்கு அவர்களின் வழியை இலகுபடுத்தவும், அத்தாட்சியாகவும்
வேதங்களையும் காலத்துக்கு காலம் கொடுத்தான். இந்தப் பணியானது நபி (ஸல்) அவர்களதும்இ
அல் குர்ஆனின் வரவோடும் முற்றுப் பெற்றுவிட்டது. அந்த வகையில் அல்லாவின் தீனை இவ்வுலகில்
பரப்பி மக்களையும் வழிகேட்டிலிருந் பாதுகாக்க பல தூதர்கள் அனுப்பப்பட்டதுடன் அவர்களுக்கான
வேதங்களும் அருளப்பட்டிருந்நன. குர்ஆனைத் தவிர மற்றெல்லா வேதங்களும் ஒரு குறிப்பிட்ட
காலத்துக்கு இடத்துக்கு சமூகத்துக்கு பொருந்தும் விதத்திலேயே அருலப்பட்டன. இவ்வாறான
பல வேதங்கள் அருளளப்பட்டிருந்த போதும் குறிப்பிட்ட நான்கு வேதங்களைத் தவிர மற்ற வேதங்கள்
பற்றிய தெளிவான விளக்கங்கள் எதுவும் காணப்படவில்லை.
அந்த வகையில் இவ்வாறு
தெளிவாகக் குறிப்பிடப்பட்ட வேதங்கள் என்ற வகையில் அல் குர்ஆனில் குறிப்பிடப்பட்டுள்ள
பின்வரும் நான்கு வேதங்களைக் காட்டலாம்.
01. தாவூத் (ஸல்) அவர்களுக்கு
வழங்கப்பட்ட ஸபூர் வேதம்.
02. மூஸா (ஸல்) அவர்களுக்கு
வழங்கப்பட்ட தவ்ராத் வேதம்.
03. ஈஸா (ஸல்) அவர்களுக்கு
வழங்கப்பட்ட இன்ஜீல் வேதம்.
04. முகம்மத் (ஸல்) அவர்களுக்கு
வழங்கப்பட்ட குர்ஆன் வேதம்.
இவற்றில் ஸபூர் வேதத்தை
எடுத்து நோக்கும் போது இது தாவுத் (அலை) அவர்களுக்கு வழங்கப்பட்டதை அர்குர்ஆன் உறுதிபடுத்தியுள்ள
போதும் அது பற்றிய மேலதிகத் தகவல்களை அறிந்துகொள்ள முடியாமல் உள்ளதுடன்இ அதற்கான வேறு
தடயங்கள் ஏதும் காணப்படவில்லை.
தற்போது இன்ஜீலின்
தன்மை பற்றி நோக்குவோம். பைபிலை எடுத்து நோக்குமிடத்து
அது இரண்டு பிரதான பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
பழைய ஏற்பாடு
இது யூதர்களிடத்தில்
சங்கயான வேதமாக உள்ளதுடன் மூஸா (ஸல்) அவர்களின் காலத்திலிருந்து ஈஸா அலை அவர்களின்
காலத்துக்கு முன்னர் வரையான நபிமார்களைப்பற்றி குறிப்பிடுகின்றது. அந்த வகையில் இந்த
பழைய ஏற்பாடானது 39 ஆகமங்களையும், 929 வேத வாக்கியங்களையும் கொண்டுள்ளது.
இந்த 39 ஆகமங்களும் பிரதான மூன்று பகுதிகளாக பிரிகின்றன.
முதலாவது பகுதி
இது ஜந்து ஆகமங்களைக்
கொண்டுள்ளது.
01. ஆதியாகமம் - இதில்
உலகைப்படைத்த செய்தி, முதல் மனிதர்களைப் படைத்த கதை (ஆதம்- ஹவ்வா), நூஹ் நபி (தூபான்
வெள்ளம்), இப்ராஹிம் நபி, அவர்களது மகன்களான இஸ்மாயில் இஸ்ஹாக், யாகூப் நபியும்இ அவரது
12 பிள்ளைகள் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது.
02. யாத்திரகாமம் - இது
மூஸா நபியின் தோற்றம் பணீ இஸ்ரேவேலர்களின் வரலாறுஇ எகிப்தில் அவர்கள் மீதான பிர்அவ்னின்
வேதனைள்இ அவர்கள் எகிப்தை விட்டு வெளியேறல் போன்றவற்றைக் குறிப்பிடுகின்றது.
03. லேவியராகம்.
04. எண்ணாகமம்.
05. உபாகமம்.
இரண்டாவது பகுதி
இது 21 ஆகமங்களைக் கொண்டுள்ளது.
01. யோசுவா
02. நியாயாபதிகள்.
03. சாமுவேல் 1
04. சாமுவேல் 2
05. ராஜாக்கள் 1
06. ராஜாக்கள் 2
07. எமாசா.
08. எரேமியா.
09. ஓசியா.
10. யோவேல்.
11. ஆமோஸ்.
12. ஒபதியா.
13. யோனா.
14. மீகா.
15. நாகூம்.
16. ஆபகூம்.
17. செப்பனியா.
18. ஆகாய்.
19. சகரியா.
20. மல்கியா.
மூன்றாவது பகுதி.
இது 13 ஆகமங்களைக் கொண்டுள்ளது.
01. சங்கீதம்.
02. நீதி மொழிகள்.
03. யோபு.
04. உன்னதப்பாட்டு
05. றூத்.
06. புலம்பல்.
07. பிரசங்கி.
08. எஸ்தர்.
09. சாமுவேல் 1
10. சாமுவேல 2
11. நெகேமியா.
12. எஸ்ரா.
13. தானியேல்.
இவ்வாகமங்கள் அனைத்தும்
பழைய ஏற்பாட்டில் உள்ளடக்கப்பட்டிருப்பதுடன் எல்லா யூத கிறிஸ்துவர்களிடமும் சங்கையான
ஒன்றாகவும் காணப்படுகிறது. மேலும் இது புரட்டஸ்தாந்து திருச்சபையால் பின்பற்றப்படுபவையாகும்.
கத்தோலிக்கத் திருச்சபைகளைப்
பொருத்த மட்டில் பழைய ஏற்பாட்டை இவற்றோடு மட்டுப்படுத்தாமல் இதனுடன் ஏழு ஆகமங்களைச்
சேர்த்துக் கொண்டுள்ளனர்.
எனவே இவைதான் பழைய
ஏற்பாட்டில் உள்ளளடக்கப்பட்டவை ஆகும். இவ்வாறு பல பிரிவுகளாகக் குறிப்பிடப்பட்டிருக்கும்
இவற்றில் நம்மகத்தன்மையை நோக்குமிடத்துச் சந்தேகங்கள் நிறைந்தவையாகவே காணப்படுகிறது.
ஏனன்றால்இ இவற்றை யார் எழுதினார் அல்லது தொகுத்தார்? இதை எழுதியவருக்கும், சம்பவங்களுக்குமான தொடர்பு
போன்றவை புரியாத புதிராகவே உள்ளது. எனவே அதில்
பல திரிபுபடுத்தல்கள் ஏற்படுத்துவதற்கு ஒரு சாதகமான காரணியாக இது அமைந்தது. அந்த வகையில்
தற்போது காணப்படும் இவை பலரின் திரிபுபடுத்தலுக்கு உட்பட்டுள்ளன என்ற விடயம் பல அறிஞர்களாலும், வரலாற்று ஆசிரியர்களாலும் நிரூபிக்கப்பட்ட ஓர் உண்மையாகும்.
புதிய ஏற்பாடு
புதிய ஏற்பாட்டைப்
பொருத்தமட்டில் திருச்சபையால் அங்கிகரிக்கப்பட்ட 4 இன்ஜீல்கள் (தொகுப்புகள்) உண்டு அவற்றையும், அவற்றைத்
தொகுத்தவர் பற்றியும் நோக்குவோம்!
இந்த 4 இன்ஜீல்களும் மர்யமின் கதை, அவரது மகன் மஸீஹ்(ஈஸா) அவர்களின் பிறப்பு முதல் இறப்பு(?) வரையான வாழ்க்கை வரலாறு என்பவற்றைக் குறிப்பிடுகிறது.
1. மத்தேயு
இதனைத் தொகுத்த மத்தேயு
என்பவர் மஸீஹின் முக்கிய 12 சீடர்களில் ஒருவராகக்
கருதப்படுகிறார். இவர் மஸீஹைப் பின்பற்றுவதற்கு முன் உரோமானிய நாட்டு அரசின் வரி அரவிடும்
ஒரு அதிகாரியாக இருந்தார். எனவே இவரின் பக்கம்
மஸீஹின் பார்வை திரும்பயதோடு அவரது முக்கிய மாணவர்களில் ஒருவராக இருக்கவும் அவரைத்
தெரிவு செய்தார். அதற்கேற்ப மத்தேயு கிறிஸ்தவ மதத்தை ஏற்று மஸீஹூடன் உண்மையாக நடந்துகொண்டார்.
மேலும் ஈஸா (அலை) உயர்த்தப்பட்டதன் பின் இவர் பல பிரதேசங்களுக்கும் சென்று கிறிஸ்தவ
மதத்தை பிரசாரம் செய்தார். இவ்வாறு இவர் சுமார் 23 வருடங்களாக பிரசாரப்பணியை மேற்கொண்டிருக்கையில்
கி.பி. 72 வைத்து சுமான் என்ற
மன்னனால் கொலை செய்யப்பட்டார்.
தொகுப்பு
ஈஸா (அலை) உயர்த்தப்பட்டுச்
சுமார் நான்கு வருடங்களில் ஹிப்ர் (சுர்யானி) மொழியில் மத்தேயு இத்தொகுப்பை எழுதினார்
என்பதில் அதிகமான கிறிஸ்தவ அறிஞர்கள் உடன்படுகின்றனர். அறியப்பட்ட இன்ஐPல் மத்தேயுவின் மிகப் பழைமையான பிரதி யூனானி மொழியில் காணப்பட்டதாகவும், அதன் மூலப் பிரதி தொலைந்து விட்டதாகவும் எந்த ஒரு அறிஞரும் அதனது சுவடைக் கூட அறியவில்லை
என்பதில் இவ்வறிஞரகள் உடன்படுகின்றனர்.
எனவே தான் இவற்றை வைத்து நோக்குகின்ற போது முக்கிய பிரச்சினை எழுகின்றது. அதாவது மத்தேயுவால்
எழுதப்பட்ட ஹிப்ரு மொழியின் மூலமான இன்ஐPலுக்கும், அது வெளிப்பட்ட யூனானி மொழி மூலமான இன்ஜீலுக்கும் இடையே ஒரு ஆய்வு தேவைப்படுகிறது.
அப்போதுதான் இவ்விரண்டுக்கும் இடையிலான தொடர்பு எப்படிப்பட்டதென்ற உண்மை புலப்படும்.
ஆனால் அவை இரண்டும் தற்போது காணப்படாமையினால் இத்தொகுப்பின் நம்பகத் தன்மை குறித்துச்
சந்தேகம் எழுகின்றது. அதே போன்று தான் இதனை யார் யூனானி மொழிக்கு மொழி பெயர்த்தாரென்ற
கேள்வியும் அவர் மீதும் இதே போன்ற ஆய்வும், தேவைப்படுகிறது.
மேலும் இத்தொகுப்பானது
ஈஸா (அலை) அவர்களுடன் எந்த வகையிலும் தொடர்புறவில்லை என்பதும் உறுதியாகின்றது.
2. மாற்கு
'யோவான்' என்பவரே மாற்கு என்று இங்கு அழைக்கபப்பயடுகிளன்றார்.
இவர் மஸீஹீன் முக்கிய 12 சீடர்களில் உள்ளவரல்ல.
இவர் ஜெரூசலத்தைச் சேர்ந்த ஒரு யூதராவார். இவர் மஸீஹின் பிரச்சாரத்தின் மூலம் கிறிஸ்தவத்தை
தழுவியவர்களில் முதன்மையான ஒருவராகவும் கருதப்பணடுகிறார். கிறிஸ்தவர்களின் நம்பிக்கையில்
ஒன்றான ஈஸா (அலை) உயர்த்தப்பட்ட பின் 'றூஹுல் குத்ஸ்' ஜிப்ரீல் (அலை) 70 பேர் மீது இறங்கி அவர்களை கிறிஸ்தவ மதத்தை எல்லா
இடங்களிலும் பிரச்சாரம் செய்யத்தூண்டியதாகவும், அவர்களில் இவரும் ஒருவரெனவும் குறிப்பிடுகின்றனர்.
இவர் பர்ணாபா என்பவரின் சகோதரியின் மகனாவார். இந்தபர்ணாபா என்பவர் திருச்சபையின் கருத்துப்படி
ஒரு தூதுவர் என்றும்இ ஆய்வாளர்களின் கருத்துப் படி அவர் அந்த 12 சீடர்களின் ஒருவர் என்றும் நம்பப்படுகின்றார்.
பர்ணாபா – மாற்கு இவர்கள் இருவரும்
தற்போது துருக்கியில் உள்ள அந்தாக்கியா என்ற
பிரதேசத்துக்குச் சென்று அங்கு சில காலம் கிறிஸ்துவ மதத்தைப் பிரச்சாரம் செய்து விட்டு
பின் ஜெரூசலத்துக்கு மீண்டார். அதன் பின் அவர் பல பிரதேசங்களுக்கு சென்று அப்பிரதேசங்களில்
பிரச்சாரப் பணியில் ஈடுபட்டதால் அப்பிரதேசங்களில் கிறிஸ்துவ மதங்களின் எழுச்சி ஏற்பட்டது. இவ்வாறு பிரச்சாரப்பணியில் எகிப்தில் தங்கியிருந்த
வேளை சிலை வணங்கிகளால் திட்டமிட்டுச் சிறையில் அடைக்கப்பட்டு வேதனை செய்யப்பட்டு பின்
கொலை செய்யப்பட்டார். இவர் மஸீஹூக்கு கூறப்பட்ட இறைப் பண்புகளை மறுக்கக் கூடிய ஒருவராகக்
காணப்பட்டார் எனச் சில கிறிஸ்தவ வரலாற்றாசிரியர்கள் உருதிபடுத்துகின்றனர்.
தொகுப்பு
ஈஸா (அலை) அவர்கள்
உயர்தப்பட்டு 23 வருடங்களில் யூனானி
மொழியில் இத்தொகுப்பு எழுதப்பட்டது என்பதில் கிறிஸ்தவர்கள் உடன்படுகின்றனர். ஆனால்
இதை யார் எழுதினார் என்பதில் அவர்கள் முரண்படுகின்றனர் ஒரு குழுவினர் இத்தொகுப்பை மஸீஹின்
சீடர்களின் தலைவரான 'பத்ரஸ்' என்பவரே எழுதியதாகவும், என்றாலும் அதனை பத்ரஸின்
மாணவரான மாற்குடன் இணைந்து விட்டனர் என்றும், மற்றுமொரு குழுவினர் பத்ரஸ், பவுல் ஆகியோரின்
மரணத்தின் பின் மாற்குவே இதனை எழுதினார் என்று கூறுகின்றனர்.
எனவே இவற்றை வைத்து
நோக்கும் போது இங்கு ஒரு முக்கிய சந்தேகம் எழுகின்றது. இந்த சந்தேகம் தான் வரலாற்று
ஆசிரியர்களுக்கும் ஏற்பட்டது. உண்மையில் இதை எழுதியவர் யார்?
மேலும் இத்தொகுப்பை
மஸீஹ் எழுதவுமில்லை, அவர் சொல்லி இன்னொருவர் எழுதவுமில்லை. இந்த தொகுப்பு அவரோடு இணையவும்
இல்லை என்ற உண்மை இவரின் கூற்றிலிருந்தே உறுதிபடுத்தப்படுகின்றது.
3. லூக்கா
இத்தொகுப்பை எழுதியது
லூக்கா என்பவர், 'போல்ஸ்'(பவுல்) என்பவரின் மிகவும் நேசத்துக்கும்இ நெருக்கத்துக்கும்
உறிய மாணவர் ஆவார். இவர் அசலில் ஒரு யூதரல்ல. இவர் அந்தாக்கியா பிரதேசத்தில் பிரந்ததாகவும், வைத்தியத்துறையைக் கற்று அதில் ஈடுபட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் இவர் இத்தாலியில்
பிறந்த உரோமானியர் என்றும் கூறப்படுகிறது.
லூக்கா மஸீஹினது மாணவரோ
அல்லது மாணவரின் மாணவரோ அல்ல. மாறாக பவ்லின் மாணவராவார். இந்தப் பவுலும் மஸீஹைப் பார்ததும்
இல்லை, அவர்களிடமிருந்து எதையும் கேட்டதுமில்லை. எனவே தான் அவரைப் பற்றி அறிந்துகொள்வதும்
அவசியமாகும்.
பவுல் என அலைக்கப்படும்
இவர் கிறிஸ்தவ மத்ததை உண்மையான அடிப்படைத்தன்மையை விட்டுத் திரிபு படுத்திய ஒரு மோசமான
ஒரு நபராவார். இவர் உரோமானிய அல்லது துர்ஸூஸ் பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு யூதர். இவர்
பெயர் 'ஸாவூல்' என்பதாகும். இவர் ஆரம்பத்தில் கிறிஸ்தவத்தை கடுமையாக
எதிர்க்கக்கூடியவராகவும்இ அவர்கள் மீது பலவகையான அடக்கு முறைகள், வேதனைகள், அழிவுகளை மேற்கொள்பவராகவும்
காணப்பட்டார். இவர் திடீரென கிறிஸ்துவ மதத்தைத் தழுவிக்கொண்டார். இவர் இவ்வாறு கிறிஸ்தவ
மதத்தைத் தழுவியதற்கு இரண்டு காரணங்கள் கூறப்படுகின்றன. ஒன்று இவர் மீது மேற்கொள்ளப்பட்ட
பிரச்சாரங்கள். இரண்டாவது, இவர் டமஸ்கஸூக்கு அருகிலிருந்த வேளையில் கர்த்தர் இவர் முன்
ஒளி மூலம் தோன்றி ' ஏன் நீ என் மீது அடக்கு
முறைகளை மேற்கொள்கின்றாய்?' என்று கேட்க, இவர்
பயந்து நடுங்கியவராக நிலை குலைந்த நிலையில் ' கர்த்தரே! நான் என்ன செய்ய நாடுகிறாய்?'
என்று இவர் கேட்க, அதற்கு
கர்த்தர் ' எழுந்து சென்று கிறிஸ்தவ
மதத்தைப் பிரச்சாரம் செய்வாயாக! என்று கூறிய சம்பவமுமே இவர் கிறிஸ்தவ மதத்தைத் தழுவக்
காரணமாக கூறப்படுகின்றது.
மேற்கண்டவாறு லூக்கா
தனது ஆசியர்பற்றிய கதையைக் குறிப்பிட்டு விட்டு இந்த கதையின் இறுதியில் பின்வருமாறு
கூறுகின்றார்:
'மஸீஹ் கர்த்தரின்
மகன் என்று பிரச்சாரம் செய்த முக்கிய நபர் இவர் ஆவார்!'
இந்தக் கூற்றுக்கு
ஏற்ப அறியப்பட்ட வகையில் இந்தக் கூற்றானது இதற்கு முன் யாராலும் அறியப்பட்டிருக்கவில்லை.
இவரது தொகுப்பு
ஈஸா (அலை) உயர்த்தப்பட்டு
20 வருடங்களின் பின் யூனானி
மொழியில் லூக்கா இதனை எழுதினார் என்பதில் கிறிஸ்தவ வரலாற்று ஆசிரியர்கள் உடன்படுகின்றனர்.
லூக்கா தனது தொகுப்பை
பினவரும் பந்தியுடன் 'தாவூபிறஸ்' என்பவரை விளித்துக் கூறி ஆரம்பிக்கின்றார்.
'ஆரம்பத்திலிருந்து
மஸீஹைப் பார்த்தவர்கள், அவருக்கு பணிவிடை செய்தவர்கள் அறிவித்த மஸீஹ் பற்றி பல விடயங்களை
அதிகமானோர் தொகுப்பாக எடுத்துக் கொண்டனர். நானும் அவ்வாறு தான் அறிந்து கொண்டேன். அந்த
வகையில் உண்மையானவற்றை அறிந்து கொள்வதற்காக வேண்டி இத்தொகுப்பை உங்களுக்காக எழுதுகிறேன்.'
எனவே இவற்றை வைத்து
நோக்குகின்ற போது லூக்கா மற்றும் கிறிஸ்தவ மதத்தை அதனது அடிப்படைத் தன்மையை விட்டுத்
திரிபுபடுத்தியதாக குற்றம் சுமத்தியுள்ள அவரது ஆசிரியரான பவுல் பற்றி எழுப்பப்படுகின்ற
சந்தேகங்கள் அறிவார்ந்த ஆய்வினை வேண்டி நிற்பதுடன் இத்தொகுப்பானது மஸீஹூடன்'
எந்த வகையிலும் தொடர்புரவில்லை
என்பது உறுதியாகின்றது.
4. யோவான்
இந்த தொகுப்பானது
யோவான் என்று அறியப்படுகின்ற ஸூப்தியின் மகனான யோவானின் தொகுப்புத்தான் என்பதில் திருச்சபை
உருதியாக இருக்கின்றது. இவர் மஸீஹ் மீது இரக்கம் கொண்ட மீனவராக இருந்தார் என்றும்இ
ஆரம்பகாலத்தில் கிறிஸ்தவர்கள் முதல் தடைவையாக அடக்கு முறைகள் மேற்கொள்ளப்பட்ட போது
இவர் நாடு கடத்தப்பட்டதாகவும், பின்னர் இவர் 'அப்ஸூஸ்' என்ற பிரதேசத்துக்கு திரும்பி வந்து இறக்கும் வரை
அங்கு கிறிஸ்தவ மதத்தை பிரச்சாரம் செய்ததாகவும் திருச்சபை கூறுகின்றது. என்றாலும் யோவான்
இத்தொகுப்பை எப்போது எழுதினார் என்பதில் அவர்கள் முரன்படுகின்றனர். அந்த வகையில் சிலர்
கி.பி.65இல் என்றும், இன்னும்
சிலர் கி.பி. 98இல் என்றும் குறிப்பிடுகின்றனர்.
மஸீஹின் சீடர்களில்
ஒருவரான இந்த ஸூப்தியின் மகனான யோவானுடன் இத்தொகுப்பு இனைக்கப்படுவதை பெறும்பாலான கிறிஸ்தவ
ஆய்வாளர்கள் மறுக்கின்றனர். இம்மறுப்பானது இரண்டாம் நூற்றான்டுக்குப் பின் வந்த கிறிஸ்தவ
அறிஞர்களின் வாய்களாலும் வெளிப்பட்டது.
அந்த வகையில்
01. இஸ்தாடிலின் என்ற
அறிஞர் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்:
'இத்தொகுப்பபானது அலெக்ஸாந்திரியாவில்
இருந்த பாடசாலை மாணவர் ஒருவனாலேயே தொகுக்கப்பட்டது என்றும்இ இரண்டாம் நூற்றாண்டில்
காணப்பட்ட உலுறின் என்ற குழுவானது இத்தொகுப்பையும், யோவானுடன் இணைக்கபடும் அனைத்தையும்
மறுத்திருந்தது.
02. பிரித்தானியக் கலைக்
களஞ்சியம் இத்தொகுப்பு பற்றிப் பின்வருமாறு குறிப்பிடுகிறது:
'இத்தொகுப்புக்கு அதனது
உண்மையான தொகுப்பபாளர் அன்றிப் போலியான ஒருவரின் பெயருடன் இணைக்கப்பட்டிருக்கின்றது!'
நான்கு இன்ஜீல்களிலும்
இந்தத் தொகுப்பு மட்டும்தான் மஸீஹின் தெய்வீகத் தன்மைகளைக் பற்றிக் கூறுகின்ற பகுதிகளைக்
கொண்டுள்ளது. மஸீஹ் கர்த்தரின் அடிமையும், தூதருமென்ற அடிப்படையில் கர்த்தர் மஸீஹூக்கு
அருளிய மார்க்க அடிப்படைகளுக்கு எதிரான இந்த நம்பிக்கையின் மீதே திருச்சபையும் உருதியாக
இருக்கின்றது.
எனவே இத்தொகுப்பு
யோவானுடையதுதான் என்று திருச்சபையும் அது பொய்யானது என்று கிறிஸ்தவ ஆய்வாளர்களும் உருதிபடுத்தும்
இச்சந்தர்ப்பத்தில் இதனை உண்மையாக யார் எழுதினார் என்ற கேள்விக்கான விடை சந்தேகமாகவே
உள்ளது. மேலும் இத்தொகுப்பு மஸீஹுடன் எந்த வகையிலும் தொடர்புறவில்லை என்பதும் உறுதியாகின்றது.
எனவே தான் இவற்றையெல்லாம்
வைத்து நோக்குகின்ற போது இந்நான்கு சுவிஸேகங்களும் சந்தேகங்களும், குழப்பங்களும் நிறைந்த
நிலையிலும், தொகுப்பாளர்கள் தொடர்பான உறுதியற்ற நிலையிலும் காணப்படுவதுடன் இதில் எந்தொரு
தொகுப்பும் மஸீஹுடன் ஒழுங்கான, தொடரான முறையில் இணைந்து காணப்படவில்லை என்பதும் தெளிவாகின்றது.
பைபிள்ஃ இன்ஜீல் பர்ணாபா
இங்கு திருச்சபை அறிந்திராத
பைபிலும் உண்டு. ஐந்தாவது பைபிலாகிய அது தான் பைபில் பர்ணாபா.
இந்த பைபிளைத் தொகுத்த
என்பவர் கிறிஸ்தவ பெரியார்களில் ஒருவராவார். மேலும் ஆரம்ப கட்டங்களில் கிறிஸ்தவ மதத்தை பிரச்சாரம் செய்தவர்களில் இவரும் ஒருவர்
என்பதற்கான உடன்படான ஆதாரங்களும் கிறிஸ்தவ அறிஞர்களிடமுண்டு. இவருடன் இணைக்கப்படும்
இத்தொகுப்பில் இவர் மஸீஹன் அந்த 12 சீடர்களில் ஒருவரென்றும்இ திருச்சபையின் கருத்துப்படி
இவர் ஒரு தூதர் என்றும் அறியப்படுகின்றது.
பர்ணாபாவின் தொகுப்பு
இத்தொகுப்பு எப்போது
எழுதப்பட்டது என்பது குறித்த தகவல்கள் கிடைக்கவில்லை என்றாலும் இத்தொகுப்பு சம்மந்தப்பட்ட
உண்மைக் கதை அறியப்பட்ட வகையில் கி.பி. 492 இருந்து ஆரம்பிக்கின்றது.
கி.பி. 492 இல் முதலாவது ஜலாஸியூஸ் என்ற போப்பான்டவரின் ஆட்சிக்காலத்தில்
(இஸ்லாம் தோன்ற 110 ஆண்டுகளுக்கு முன்)
வாசிப்பதற்கு தடை விதிக்கப்பட வேண்டிய புத்தகங்கள் பற்றிய தகவல் ஒன்றை இந்த போப் வெளியிட்டார்.
அந்த வகையில் அவ்வாறு தடை செய்யப்பட்டு மறைக்கப்பட்ட ஒன்றுதான் இந்த பைபிள் பர்ணாபாகும்.
இது கி.பி. 1709 வரை இரகசியமாகவே
இருந்தது. என்றாலும் கி.பி. 1709 இல் இத்தாலி மொழியில்
எழுதப்பட்ட இதன் பிரதியொன்றை ரஷ்ய மன்னரின் ஆலோசகர்களில் ஒருவரான 'கிரைமர'; என்பவர் கண்டு கொண்டார். பின் அவர் அதனை 'அம்ஸ்திர்தாம்' எனும் ஒரு முக்கியஸ்தருக்கு இரவராக வழங்கினார்.
பின்னர் அந்த முக்கியஸ்தர் அப்பிரதியை 1713 இல் 'பிர்னஸ் அயூஜின் ஸாபவி'
என்பவருக்கு அன்பளிப்பாக வழங்கினார். பின்னர் இத்தொகுப்பானது கி.பி.
1738இல் அயூஜிடமிருந்து வியன்னாவில்
இருந்த அரச அரன்மனையின் நூலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அதன் பின் மறைத்து வைக்கப்பட்டிருந்த
இந்த பைபிள் பிரதியானது 'பராமியுனோ'
என்ற இலத்தீன் இனத்தைச் சேர்ந்த
கிறிஸ்தவ துறவி ஒருவரால் வெளிக் கொண்டு வரப்பட்டது.
இதனை இவர் வெளிக்
கொண்டு வரக் காரணம் என்னவென்றால்:
01. லாயிர் யானூஸ் என்பவரின்
சில ஏடுகள் இவருக்கு கிடைத்திருந்தன. அதிலே 'லாயிர் யானூஸ'; என்பவர் பவுலின் கருத்துக்களை இன்ஜீல் பர்ணாவை மேற்கோல்காட்டி
விமர்சித்திருந்தார். எனவே தான் பைபிள் பர்ணாவைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டுமென்ற
ஆசை அவருக்கு ஏற்பட்டது.
02. அந்த பைபிளைக் கொண்டு
அப்போது ஆட்சி செய்து கொண்டிருந்த 'ஐந்தாம் சக்தஸ்'
என்ற பாப்பரசரின் நெருக்கத்தைப்
பெருவது.
இவ்விரண்டு காரணங்களும்
அவரை இத்தொகுப்பைப் பற்றி அறிந்து கொள்ளத் தூண்டி இருந்தன. அந்தவகையில் பைபிள் பர்ணாபாவின் பிரதியைப் பாப்பரசரின்
நூலகத்;தில் கண்டுபிடித்தார். பின்னர்
அதனை அவர் பார்த்ததும் அதை யாருக்கும் தெரியாமல் தனது சட்டைப் பைக்குள் மறைத்துக் கொண்டார்.
பின் அவர் இஸ்லாத்தைத் தழுவினார்.
இந்த இன்ஜீல் பிரதியானது
கலாநிதி 'ஹலீல் சஆதாவால்'
அரபுக்கு மொழி பெயர்க்கப்பட்டது.
இன்ஜீல் பர்ணாபாவின்
கருத்துக்கள் பற்றிய ஒரு பார்வை
இத்தொகுப்பானது ஏனைய
எல்லா இன்ஜீல்களினதும் கருத்துக்களோடு முரன்படுவதுடன்இ மஸீஹின் வாழ்க்கை வரலாற்றை நுணுக்கமாகவும், அழகிய முறையிலும் தெளிவாகவும் குறிப்பிடுகின்றது.
அந்த வகையில் இதன்
சில முக்கிய முக்கிய கருத்துக்களை நோக்குவோம்;
01.மஸீஹ் கர்த்தரின்
அடிமையும், அவனது தூதரும் என்று குறிப்பிடுவதுடன் அவர் சம்பதமாக கூறப்படுகின்ற இறைப்
பண்புகளையும் மஸீஹ் கர்த்தரின்
மகன் என்பதையும் மறுக்கின்றது.
02.அல்குர்ஆனில் வந்துள்ளதை
உறுதிப்படுத்துவது போன்று முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் வருகையைகத்
தெளிவான பெயருடன் முன்னறிவுப்பு செய்கின்றது.
03.மஸீஹ் சிலுவையில்
அரையப்படவில்லை மாறாக வானுக்கு உயர்த்தப்பட்டதாகவும்இ உண்மையில் சிலுவையில் அறையப்பட்டது
மஸீஹூக்குச் சதி செய்த மோசடிக்கார யூதனான 'அல் ஹர்யூதி' என்பவனே என்றும் குறிப்பிடப்டுகிறது.
04கிறிஸ்தவர்களின் நம்பிக்கையான
இப்றாஹீம் (அலை) அவர்களால் அறுப்பதற்காக ஏவப்பட்டது. இஸ்ஹாக் (அலை) அவர்களைத்தான் என்ற
கூற்றை மறுத்து, இப்றாஹீம் (அலை) அவர்கள் அறுக்க முனைந்தது உண்மையிலேயே தன் மகனான இஸ்மாயில்
(அலை) அவர்களையே என்று உறுதியாகக் குறிப்பிடுகின்றார்.
இவ்வாறு யாராலும்
திரிபுபடுத்தலுக்கு உட்படாத வகையில் இறை சட்டங்களின் அடிப்படை நம்பிக்கைக் கோட்பாடுகளுடன்
உடன்படுகின்ற அதிகமானவற்றை பைபிள் பர்ணாபா உள்ளடக்கி இருக்கின்றது.
முன்னுள்ள வேதங்களை
ஆய்வு செய்து பிழைகளைச் சுட்டிக்காட்டிய ஆய்வாளர்கள் உண்மையில் இத்தொகுப்பு மஸீஹின்(ஈஸா) (அலை) சீடர்களில் ஒருவரான பர்ணாபாவுடையது தான் என்பதனை ஏற்றுக் கொள்கின்றனர்.
என்றாலும் பவுல் சுட்டிக்காட்டிய கிறிஸ்தவச்த் திருச்சபைகளால் பற்றிப்பிடிக்கப்பட்டுள்ள
கோட்பாடுகளுக்கு எதிராக இவரின் கருத்துக்கள் காணப்படுவதால் இத்தொகுப்பைக் கிறிஸ்தவத்
திருச்சபை வெறுப்பதுடன், அதனை அங்கீகரிக்காத அறியப்படாத ஒன்றாகக் கருதுகின்றது.
தமிழில்
: M.S.M.
Naseem (BA .Hones)
மூலம் : Habank Al-Maidhani, العقيدة الإسلامية " ”
இதை பயனுள்ளவாரு Copy செய்யும் முறையை கொடுத்திருக்கலாம்.
ReplyDelete