.உங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக ------- Meesan Way ------- தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்

Tuesday, January 30, 2018

ஒளரங்கஜீப் மீதான போலிக் குற்றச் சாட்டுக்களும் உண்மை நிலையும்


ஷாஜஹான் மற்றும் மும்தாஜிற்கு மூன்றாவது மகனாக கி.பி 1618ல் குஜராத்தின் தோஹாத் எனுமிடத்தில் முஹியத்தீன் முஹம்மத் ஒளராங்கஜீப் பிறந்தார். ஸஅதுல்லாஹ் கான், ஹாஷிம் ஜெய்லா,னி முல்லா ஜீவன்> முஹம்மது கானோஜி, அப்துல் ஹமீத் சுல்தான்பூரி ஆகிய கல்விமான்களிடம் கல்வியைக் கற்றுக் கொண்ட இவர் பல்துறைகளிலும் பாண்டித்தியம் பெற்று விளங்கினார்.

இயல்பாகவே சாந்த குணமுடையவராகக் காணப்பட்ட ஒளராங்கஜீப்> இளமை முதலே ஆழ்ந்த மார்க்கப்பற்றுள்ளவராகவும் சூபித்துவத்தில் நாட்டம் உடையவராகவும்; ஆடம்பரங்களைப் புறக்கணித்து எளியமையாகவே வாழ்பவராகவும் காணப்பட்டார். இதனால் இவரை மக்கள் 'பக்கீர் இளவரசன் என்றே அழைத்தனர். மேலும் தனது 24வது வயதில் காடுகளுக்குச் சென்று தனித்து தியானத்தில் ஈடுபடும் வழக்கத்தையும் கொண்டிருந்தார். சிறந்த வீரராகவும் துணிவுள்ளவராகவும் இருந்த இவரிடத்தில் யானைகளை அடக்கும் வல்லமை காணப்பட்டது. 16வது வயதில் 10>000 குதிரைப் படையினருக்கும் 4>000 காலாட்படையினருக்கும் தளபதியாக நியமிக்கப்பட்டிருந்தார். ஷாஜஹானின் காலத்தில் பல்க் பிரதேசத்தின்மீது மேற்கொள்ளப்பட்ட படையெடுப்புக்கும் இவரே தளமையேற்றுச் சென்றார். அரச அந்தஸ்துப் பெற்ற சிவப்புக் கூடாரத்தைப் பயன்படுத்தும் அணுமதியும் இவருக்கு வழங்கப்பட்டிருந்தது. தனது 18வது வயதில் தெக்கான் பகுதியைக் கைப்பற்றியதுடன் அதன் கவர்ணாகவும் இருந்தார். பின்னர் 1645ல் குஜ்ராத்தின் கவர்ணராகவும் பதவி வகித்தார்.

கி.பி 1657ல் ஷாஜஹான் கடுமையாக நோய்வாய்ப்பட்டபோது அவர் உயிர் பிழைக்க மாட்டார் என்றெண்ணிய அவரது பிள்ளைகள் ஆட்சியைக் கைப்பற்றுவதற்காக வேண்டி போராட்டம் செய்தனர். ஒளரங்கஜீபின் சகோதரர்களில் ஒருவரான தாராஷிகா என்பவர் ஷாஜஹானின் பெயரைப் பயன்படுத்தி சில மோசடிகளில் ஈடுபட்டு வந்தார். மறுபுறத்தில் எதிரிகள் ஆட்சியைக் கைப்பற்ற தீவிர முயற்சிகளிலும் ஈடுபட்டு வந்தனர். தனது ஏனைய சகோதரர்கள் ஆட்சிக்கு வந்தால் மார்க்க விரோதச் செயல்களில் ஈடுபடலாம் என அறிஞர்கள் எச்சரித்ததை அஞ்சிய ஒளரங்கஜீப்> முராத் எனும் தனது சகோதரரோடு இணைந்து தாராஷிகாவுடன் போரிட படையெடுத்தார். இதையறிந்த தாராஷிகாவும் ஷாஜஹானும் அவரை எதிர்த்து படையணுப்பினார்கள். இப்படையினரை எதிர்த்து போரிட்டு வெற்றி கொண்ட ஒளரங்கஜீப் 1658ல் ஆலம்கீர் எனும் பட்டப்பெயருடன் ஆட்சி பீடமேறினார். ஆலம்கீர் என்பதற்கு அகிலத்தை அடக்கி ஆள்பவர் என்பது பொருளாகும்.

ஆட்சிக்கு வந்ததும் பல்வேறு சேவைகளையும் சீர்திருத்தங்களையும் மேற்கொண்டார். அந்தவகையில்> அக்பரால் உருவாக்கப்பட்ட தீனே இலாஹியை இரத்துச் செய்தார். இந்தியாவை இஸ்லாமிய பிரதேசமாக பிரகடனம் செய்தார். மது மற்றும் இசையின் பகிரங்க பயண்பாடுகளை தடை செய்தார்;. அரசவையில் காணப்பட்டுவந்த வீண் பகட்டுக்கள் அனைத்தையும் நீக்கினார். ஒவ்வொரு நாளும் அரண்மனை ஜன்னல் அருகே நின்று பொதுமக்களுக்குத் தரிசனம் அளிக்கும் வழக்கத்தை நிறுத்தினார். அரசரின் தரிசனத்தைப் பெறுவதை இந்துக்கள் இறை வழிபாடு போன்று கருதி விரதம் அனுஷ்டித்துக் காத்திருந்ததாலேயே இவர் அதிலிருந்து தவிர்ந்து கொண்டார். பைத்துல் மால் நிதியை தனது சொந்தத் தேவைக்கு பயன்படுத்துவதைத் விட்டும் தவிர்ந்து கொண்டார். ஷாஜஹான் ஆடம்பரத்துக்காக வேண்டி அரச சொத்துக்களை வீனாகப் பயண்படுத்தியதால்; தந்தை என்றும் பாராது அவரை சிறையிலிட்டு நீதியை நிலை நாட்டினார். தனது ஆட்சியைக் கவிழ்க்க மதத் தீவிரவாத போக்குடைய சிவாஜி போன்ற துரோகிகளால் மேற்கொள்ளப்பட்ட சதித் திட்டங்களை முறையடித்தார். இவரது காலத்து மார்க்க அறிஞர்கள் வழங்கிய தீர்ப்புக்கள் அனைத்தையும் சேர்த்து பதாவா ஆலம்கீரி எனும் பெயரில் வெளியிட்டார்.

தனக்கு ஆட்சியதிகாரங்கள் கிடைத்த போதும் ஒளரங்கஜீப் முன்பு போல எளிமையாகவே வாழ்ந்தார். அறிஞர்களுடன் ஆலோசனைகளை மேற்கொண்டே தனது செயற்பாடுகளை முன்னெடுத்துச் சென்றார். தனது கையால் எழுதப்பட்ட குர்ஆன் பிரதிகளை விற்றே தனது வாழ்க்கையை நடாத்தி வந்தார். இவ்வாறு அவர் எழுதிய இரண்டு குர்-ஆன் பிரதிகளை மஸ்ஜிதுந் நபவிக்கு அணுப்பியதாகவும் வரலாறுகள் குறிப்பிடுகின்றன. இவரது காலத்தில் முகலாயப் போரரசு காபூல் முதல் தமிழ்நாடு வரை பரந்து காணப்பட்டது.

இவ்வாறு மகத்தான சேவைகளையும் அர்ப்பணிப்புக்களையும் செய்த ஒளரங்கஜீப் நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில் 1707ம் ஆண்டு மரணமடைந்தார். இவரது உடல் அவர் விருப்பப்படியே எவ்விதமான ஆடம்பரமுமின்றி மிக எளிமையான முறையில் தௌலதாபாத் எனுமிடத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

ஒளரங்கஜீப்> தனக்குப் பின் தனது புதல்வர்களில் யார், எவ்வளவு காலம் ஆட்சி செய்ய வேண்டுமென்பதை தெளிவாக உயிலில் எழுதியிருந்தார். எனினும் அவரது பிள்ளைகள் அதைப் பின்பற்றத் தவறியதுடன் தங்களுக்குள் முரண்பட்டுக் கொண்டனர். இதனால் அவர் மரணித்து சில வருடங்களிலேயே மொகலாயர்களின் ஆட்சி இந்தியாவில் வீழ்ச்சியடைந்தது.


ஒளரங்கஜீப் மீதான போலிக் குற்றச் சாட்டுக்களும் உண்மை நிலையும்

ஒளரங்கஜீப் ஒரு தீவிர போக்குடைய முஸ்லிம்> அவர் இந்துக்களை கொடுமைப்படுத்தினார்> இந்துக் கோயில்களை இடித்தார் என்று பல்வேறு வகையான குற்றச் சாட்டுக்கள் அண்மைக்காலமாக அவர் மீது முன்வைக்கப்பட்டு வருவதைக் காணலாம். ஆனால் இவை முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவையாகும். இதற்கு பின்வருபவை ஆதாரங்களாகும்.

ஒளரங்கஜீபின் நம்பிக்கைக்குரிய முக்கிய தளபதிகளாக இந்துக்களே காணப்பட்டுள்ளனர். அவர்களில்  ஜெய்சிங்> ஜஸ்வந்த்சிங்> முகுந்த்சிங் ஹாதா> ரத்தன்சிங்> தயாள்சிங்> ஜல்லா> அர்ஜூன்சிங்> குமார்சிங்  ஆகியோர் முக்கியமானவர்களாவர். அத்துடன் அவரின் நிர்வாகத் துறையில் பல இந்துக்கள் காணப்பட்டனர். அவர்களில் பலர் மிக உயர்நிலையில் இருந்துள்ளனர். அவருடைய 393 மன்சப்தார்களில் (படைத் தலைவர்களுக்கான தகுதி) 182 பேர் இந்துக்களாவர். இவர்கள் 1000 முதல் 7000 குதிரை வீரர்களின் அதிபதிகள். அக்பர் மற்றும் ஷாஜஹான் காலத்தில் கூட இவ்வளவு அதிகமான எண்ணிக்கையில் இந்து மான்சப்தாரிகள் இருந்ததில்லை. இதுமட்டுமல்ல> ஒளரங்கஜீப் இந்துக் கோயில்களுக்கு மானியமும் இந்துத் துறவிகளுக்கு ஆதரவும் அளித்துள்ளார். உஜ்ஜைனின் பாலாஜி ஆலயம் சாவஹத்தியிலுள்ள உமானநித் கோயில்> சந்குஞ்சயின் ஜைனர்கள் கோயில்> வாரனாசி ஜங்கம்பதி சிவன் கோயில் ஆகியன ஒளரங்கஜீப்பினால் மானியங்கள் அளிக்கப்பட்ட பல நூறு கோயில்களில் சிலவாகும். தமிழகத்தைச் சேர்ந்த குமரகுருபரர் காசியிலும் மடம் அமைத்து சைவ மதப் பிரச்சாரம் செய்ய ஒளரங்கசீப் உதவினார். ஒளரங்கஜீப்பின் ஆட்சியின் போது பல நூலாசிரியர்கள்; மற்றும் இந்துமத போதகர்கள் எல்லாம் எந்தவொரு தீங்குமின்றி தங்கள் மதக்கருத்துகளை பரப்பி வந்துள்ளனர். அவர்களில் லஷ்மிலால், பாபாலால்> வைராஜா> விப்ரயோத் ஆகியோர் மிக முக்கியமானவர்களாவர்.

மேலும் விஜயநகர சாம்ராஜ்ஜியத்தின் கடைசி அரசர் ரங்கராயலு தானும் தனது உற்றார் உறவினர்களும்> குடிமக்களும் முஸ்லிமாக மதம் மாறுவதற்கு சம்மதிப்பதாக அறிவித்தனர். எனினும் தனது பரிபாலனத்தின் கீழ் உள்ள இந்து மதத்தைச் சார்ந்த குடிமக்கள் அமைதியாக வாழவேண்டும் என்றென்னிய ஒளரங்கஜீப் அதை ஏற்றுக் கொள்ளவில்லை - (வரலாற்று மாமேதை ஜாதுநாத் சர்கார்)

பிராமணர்களையோ அல்லது ஏனைய இந்துக் குடிமக்களையோ சட்டவிரோதமாகத் தலையிட்டு தொல்லைப் படுத்தக்கூடாது என ஒளரங்கஜீபால் பிறப்பிக்கப்பட்ட பனாரஸ் ஆணை” குறிப்பிடுகின்றது. மேலும்> இந்துக்களுக்கு குறிப்பாக பிராமணர்களுக்கு அவர் மானியம் வழங்கியதையும், அது சுட்டிக்காட்டுகின்றது (P.S பாண்டேவின்> Islam and Indian Culture)

எனினும் இவரது காலத்தில் ஒரு கோயில் உடைக்கப்பட்டது. அதற்கான காரணம் இதுவாகும். ஒளரங்கஜீபின் படை வங்காளத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்த போது வாரணாசியை வந்தடைந்தது. ஒளரங்கஜீபின் படையில் இருந்த இந்து அரசர்கள்> வாரணாசியில் அவரது படை ஓரு நாள் தங்கினால் தங்களுடன் வந்துள்ள தங்களது குடும்பப் பெண்கள் கங்கையில் குளித்துவிட்டு காசி விஸ்வநாதரை தரிசித்து செல்ல முடியும் என்ற கோரிக்கையை ஒளரங்கஜீபிடம் முன் வைத்தனர். அதை ஏற்றுக்கொண்ட அரசர்> தன் படை காசியில் ஓரு நாள் தங்கிச் செல்ல அணுமதியளித்தார். அந்தவகையில்> இந்து அரசிகள் மூடுபல்லக்கில் சென்று கங்கையில் நீராடிவிட்டு> காசி விஸ்வநாதர் கோயில் சென்று வழிபட்டும் திரும்பினர். ஆனால் ஆலயத்திற்கு வழிபடச் சென்ற கட்ச் இளவரசி மட்டும் திரும்பவில்லை. இளவரசியைத் தேடிக் கண்டு பிடிக்க மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்தன. இதனால் ஒளரங்கஜீப்> அந்த இளவரசியை கண்டுபிடிக்க தனது மூத்த அதிகாரிகளை அணுப்பி வைத்தார். அவர்கள் தீவிர தேடுதலில் ஈடுபட்டபோது விஸ்வநாதர் ஆலயத்தின் சுவற்றிலுள்ள ஒரு கணபதி சிலை மட்டும் சுழலும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது தெரிந்தது. அதனை சுழற்றியபோது> பாதாள சுரங்கத்திற்கு செல்லும் படிக்கட்டுகள் தென்பட்டன. அந்த பாதாள சுரங்கத்தில் சென்று பார்த்தபோது கட்ச் இளவரசி கற்பழிக்கப்பட்ட நிலையில் அழுது கொண்டிருந்தாள். விஸ்வநாதர் விக்கிரகம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த இடத்திற்கு நேர் கீழே அந்தத் துயரச் சம்பவம் நடைபெற்றிருந்தது. நடந்த சம்பவம் குறித்து விசாரித்த போது> மேற்படி கட்ச் இளவரசி விஸ்வநாதர் ஆலய புரோகிதரால் கற்பழிக்கப்பட்டு துன்புறத்தப்பட்டது உறுதிப்படுத்தப்பட்டது.

இதனால் கடுமையாக ஆத்திரமடைந்த> ஒளரங்கஜீபின் படையில் இருந்த இந்து அரசர்கள் இதற்கு கடுமையான நடவடிக்கை எடுக்கமாறும் மேலும் குறித்த சம்பவம் விஸ்வநாதர் சிலைக்கு நேர் கீழே இருந்த சுரங்க அறையில் நடைபெற்றதால்> கற்பக்கிரகத்தின் புனிதம் அழிந்து விட்டதாகக் கருதி> குறித்த விஸ்வநாதர் சிலையை வேறு இடத்திற்கு மாற்றுமாறும் அவரை வேண்டினர். அதனடிப்படையில்> சிலை வேறு இடத்திற்கு மாற்றப்பட்டதுடன் கோயிலும் இடிக்கப்பட்டது. இந்து அரசர்களின் கோரிக்கையின் பேரில் நடைபெற்ற இந்நிகழ்ச்சி மிக ஆதாரப்பூர்வமானது. இதன் விரிவான விளக்கம் ஒரிசா மாநில கவர்னராக இருந்த P.S பாண்டே அவர்களின் Islam and Indian Culture” என்னும் நூலில் தரப்பட்டுள்ளது.

மேலும் கொடியவர் - கொடுமைக் காரர் என்று அறியப்பட்ட ஒளராங் கஜீப்> பொதுவாழ்வில் எவ்வளவு தூய்மையானவராக இருந்தார் என்பதற்கு அவர் எழுதிய கடைசி உயில் சாட்சியாகிறது.

'என் கைகளால் தைக்கப்பட்ட குல்லாய்களை விற்ற பணம் 4 ரூபாய் 2 அணா(சதம்)> என் தலையணைக்குக் கீழ் இருக்கின்றன. நான் இறந்த பின்னர் எனது உடல் மீது போர்த்துவதற்குத் துணி வாங்க அதைப் பயன்படுத்துங்கள்.' (ஒளரங்கஜீப்பின் தூய்மையான வாழ்வுக்கு . சண்முகதாசன் என்பவர் எழுதிய உலக வரலாறு எனும் நூலுக்கு கவிப்பேரரசு வைரமுத்து வழங்கிய வாழ்த்துரை)

'புனித அல்குர்-ஆனிலிருந்து நான் எடுத்த பிரதிகளுக்காக எனக்கு ஊதியமாகக் கிடைத்த பணம் ரூபா 350 என் கைப்பையில் உள்ளது நான் இறக்கும் நாளன்று அதை ஏழைகளுக்குத் தானம் செய்து விடுங்கள். இந்த நாடோடியின் கல்லறை மிகவும் எளிமையாக வானத்தைப் பார்த்தபடி இருக்க வேண்டும். எவ்வித அழகோ ஆடம்பரமோ செய்யக் கூடாது. ஊர்வலம்> இசை எதுவும் கூடாது. என் கல்லறை மண்ணால் மூடப்பட்டிருக்கவேண்டும். அங்கே பசுமையன செடிகள் வளரட்டும். (உலக வரலாறு பக். 157)

நமக்கு போதிக்கப்படுவது போல் ஒளரங்கஜீப் ஒரு மதவெறியராக> இந்துக்களை துன்புறுத்துகின்ற ஓர் அரசராக இருந்திருப்பின் இந்துக்களை பெரும் பான்மையாகக் கொண்ட ஒரு நாட்டை ஐம்பது ஆண்டுகள் ஆண்டிருக்க முடியுமா? எனவே அவர் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் எவ்வித ஆதாரமுமற்ற வதந்திகள் என்பதை அறிந்துகொள்ள முடிகின்றது.

By : M.S.M. Naseem - MA (R), BA(Hons)


No comments:

Post a Comment