.உங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக ------- Meesan Way ------- தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்

Wednesday, January 20, 2021

பதின் மூன்று வருட உத்தரவாதப்படுத்தப்பட்ட பாடசாலைக்கல்வி நிகழ்ச்சித்திட்டம்

பதின் மூன்று வருட உத்தரவாதப்படுத்தப்பட்ட பாடசாலைக்கல்வி நிகழ்ச்சித்திட்டம் எனப்படுவது இலங்கையின் அனைத்து மாணவர்களினதும் கல்வி உரிமையைப் பாதுகாத்தல் மற்றும் திறண்களை விருத்தி செய்யும் நோக்கில், கல்வி அமைச்சினால் முன்னெடுக்கப்படும் ஒரு நிகழ்ச்சித்திட்டமாகும்.

இது க.பொ.த சாதாரண தரப்பரீட்சையின் வெற்றி> தோல்வியைப் பொருற்படுத்தாது மாணவர்கள் உயர்தரத்திற்கு உள்வாங்கப்படக் கூடிய புதிய தொழில் முறைப் பாடத்துறையாகக் காணப்படுகின்றது. அந்தவகையில், கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சையில் தேர்ச்சி பெறாத மாணவர்களும் இவ்வேலைத்திட்டத்தின் கீழ் இரண்டு வருட காலத்திற்கு உயர்தர பாடசாலைக் கல்வியினை தொடரும் வாய்ப்பு இதன் மூலம் வழங்கப்படுகின்றது.

இதன்போது இம்மாணவர்களுக்காக தொழில் மற்றும் தொழில்நுட்பத் தேர்ச்சியை வழங்கும் பாடவிதானத்தின் மூலம் தேசிய தொழில்சார் தகைமை (NVQ) மட்டத்தைப் பெற்றுக் கொள்ள வாய்ப்புக் கிடைக்கின்றது. மேற்பார்வைச் செயற்திட்டமாக 2016 இல் க.பொ.த (சா.த) தோற்றிய மாணவர்களுக்காக 2017 ஜுன் மாதம் தொடக்கம் 42 பாடசாலைகளில் திட்டமிட்டபடி அமுல்படுத்தப்பட்டது.

இத் திட்டத்தின் கீழ் தற்போதுள்ள உயர்தரப் பாடத்திட்டங்களுக்கு மேலாக பொதுப்பாடத்திட்டம் மற்றும் பிரயோக பாடத்திட்டங்கள் எனும் இரு பிரிவுகளின் கீழ் இக் கல்வித்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன. இரண்டு வருடங்களைக் கொண்ட கல்வியாண்டுப்பகுதியில், முதல் ஆறு மாதங்களில் பொதுப்பாடத்திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள 9 பாட  விதானங்களை கற்று தேர்ச்சி பெறுவது மாணவர்களுக்கு கட்டாயமானதாகும். அவையாவன,

1. முதலாம் மொழி (சிங்களம் / தமிழ்)

2. பிரயோக ஆங்கிலம் மற்றும் தொடர்பு திறன் மேம்பாடு

3. அழகியல் மற்றும் பொழுதுபோக்கு கற்கை

4. தகவல் மற்றும் தொடர்பு திறன்

5. குடியுரிமை தொடர்பான கல்வி

6. சமூக நல்வாழ்விற்கு தேவையான சுகாதாரம் மற்றும் வாழ்க்கை திறன்

7. தொழிற் திறன்

8. விளையாட்டு மற்றும் பிற விஷேட செயற்பாடுகள்

9. தொழில் வழிகாட்டல் வேலைத் திட்டம்

அதனையடுத்து வரும் 18 மாதங்களில் பிரயோக பாடத்திட்டத்தில் தெரிவு செய்யப்படக்கூடிய வகையில் 26 தொழில் முறைப்பாடங்கள் காணப்படுகின்றன. அவற்றுள் ஏதேனும் ஒன்றை மாணவர்கள் தெரிவு செய்து குறித்த கற்கையை தொடரவேண்டும். அவை,

 v   குழந்தை உளவியல் மற்றும் பராமரிப்பு கற்கை

 v   சுகாதாரம் மற்றும் சமூக பாதுகாப்பு கற்கை

 v   உடற்கல்வி மற்றும் விளையாட்டு கற்கை

 v   ஆற்றுகை கலை கற்கை

 v   நிகழ்ச்சி முகாமைத்துவம் கற்கை

 v   கலை மற்றும் கைவினை கற்கை

 v   உள்துறை வடிவமைத்தல் கற்கை

 v   ஆடை வடிவமைப்பு கற்கை

 v   கணினி வரைகலை கற்கை

 v   கலை மற்றும் வடிவமைப்பு கற்கை

 v   பூகோள கல்வி கற்கை

 v   தோட்டக்கலை ஆய்வுகள் தொழிநுட்ப கற்கை

 v   கால்நடை உற்பத்தி ஆய்வுகள் கற்கை

 v   உணவு உற்பத்திக் கற்கை

 v   நீர் வள தொழிநுட்ப கற்கை

 v   தோட்டக்கலை தயாரிப்பு தொழிநுட்ப கற்கை

 v   கட்டுமான ஆய்வு தொழிநுட்ப கற்கை

 v   மோட்டார் இயந்திர தொழிநுட்ப கற்கை

 v   மின் மற்றும் மின்னியல் கற்கை

 v   ஆடை மற்றும் ஆய்வுகள் கற்கை

 v   உலோக உற்பத்தி தொழிநுட்ப கற்கை

 v   அலுமினிய மீள் உற்பத்தி தொழிநுட்ப கற்கை

 v   மென்பொருள் மேம்பாட்டு கற்கை

 v   இணைய மேம்பாட்டு கற்கை

 v   சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் கற்கை

 v   சூழல் கற்கை 


போன்றவையாகும்.

1 comment: