M.S.M. Naseem (MA in Political Science)
இலங்கையின் 1978 ஆம் ஆண்டு இரண்டாம் குடியரசு அரசியலமைப்பின் அத்தியாயம் VII இன் உறுப்புரை 38 (1) இற்கு ஏற்ப இடைக்காலத்தில் ஜனாதிபதிப் பதவியில் வெற்றிடம் ஏற்படுகின்றவிடத்து, எஞ்சியுள்ள காலத்துக்கு அப்பதவியை வகிக்கவென அரசியலமைப்பின் உறுப்புரை 40 (1) (அ) இற்கு ஏற்ப பாராளுமன்றத்தினால் அதன் உறுப்பினர்களில் இருந்து தகுதியான ஒருவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.