.உங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக ------- Meesan Way ------- தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்

Monday, August 25, 2025

இலங்கையில் அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய கல்வி சீர்திருத்தம் தொடர்பான ஒரு பார்வை

எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு முதல் இலங்கையில் புதிய கல்விச் சீர்திருத்தம் நடைமுறைக்கு வரவுள்ளது. இகல்விச் சீர்திருத்தமானது பல்வேறு முக்கிய அம்சங்களையும், பல மாற்றங்களையும் உள்ளடக்கியதாகக் காணப்படுகின்றது. அவை பின்வருமாறு,


  • Module களை அடிப்படையாகக் கொண்ட கற்றல்.

  • செயற்பாடுகளை அடிப்படையாகக் கொண்ட கற்றல் (தரம் 1 - 5).

  • தேர்ச்சிதேர்ச்சி மட்டம் என்பன நீக்கப்பட்டு, கற்றல் பேறுகளை அடிப்படையாகக் கொண்ட கற்பித்தல் செயற்பாடுகள்.

  • புதிய பாடங்களின் அறிமுகம் (தரம் 1 - 5).

  • மூன்று வகையான பாடத் தொகுதிகளின் அறிமுகம் (தரம் 6 - 9).

  • தொழில் சார்ந்த கற்கைகளுக்கான வாய்ப்புகள் உள்ளடக்கப்பட்டுள்ளமை.

  • Credit அடிப்படையில் பாடங்களுக்கான நேரம் ஒடுக்கப்பட்டிருத்தல்.

  • ஒரு பாட வேலைக்கான நேரம் 50 நிமிடங்களாக அதிகரிக்கப்பட்டிருத்தல்.

  • மாணவர் மைய கற்றல் செயற்பாடுகள்.

  • Grade, GPV, GPA இணை அடிப்படையாகக் கொண்ட கணிப்பீடுகள்.

  • தொடர் மற்றும் இறுதி கணிப்பீடுகளை அடிப்படையாகக் கொண்ட மதிப்பீடு.

  • தரம் 9 இலும் தேசிய மட்ட பரீட்சை ஒன்று நடத்தப்படல்.


தரம் 1 - 5 பாட உள்ளடக்கம்

ஏற்கனவே உள்ள 5 பாடங்களுக்கு மேலதிகமாக இரண்டாம் மொழி, அழகியல், சுகாதாரமும் உடற் கல்வியும் மற்றும் இணைப்பாட விதான செயற்பாடுகள் ஆகியவற்றை உள்ளடக்கிய வகையில் மொத்தம் 9 பாடங்களை உள்ளடக்கியது.

 

தரம் 6 - 9 பாட உள்ளடக்கம்

இங்கு மூன்று வகையான பாடத் தொகுதிகள் காணப்படுகின்றன. முதலாவது தொகுதியானது கட்டாயப் பாடங்கள் 15 ஐ உள்ளடக்கியுள்ளது. இரண்டாவது தொகுதியானது மேலதிக கற்றலுக்காக (Further Learning) தெரிவு செய்யப்படக்கூடிய மூன்று பாடங்களை உள்ளடக்கியதாகும். மூன்றாவது தொகுதியில் (மாணவர்கள் தாம் விரும்புகின்ற) தொழில் துறை மற்றும் வாழ்க்கைத் திறன்களை (Transversal skills) அடிப்படையாகக் கொண்ட இரண்டு தெரிவுப் பாடங்களை உள்ளடக்கியது.

இங்கு கட்டாயப் பாடத் தொகுதியில், விளையாட்டு சார்ந்த பாடம்  தவிர்ந்த ஏனைய 14 பாடங்களுக்கும் கணிப்பீடுகள் நடத்தப்படும். அதேபோல் மேலதிக கற்றலுக்காக மாணவர்கள் தெரிவு செய்கின்ற மூன்று பாடங்களுக்கும் செற்றிட்டங்களை மேற்கொள்ள வேண்டும். தொழில் மற்றும் வாழ்க்கைத் திறன்களை அடிப்படையாகக் கொண்ட இரண்டு பாடங்களுக்கு கணிப்பீடுகள் நடத்தப்பட மாட்டாது.

 

தரம் 10 - 11 பாட உள்ளடக்கம்

இங்கும் மூன்று வகையான பாடத் தொகுதிகள் காணப்படுகின்றன. இதன்படி முதலாவது பாடத் தொகுதியில் கட்டாய பாடங்கள் 5உம் விருப்பத்திற்குரிய பாடங்கள் 2உம் உள்ளடங்களாக மொத்தம் 7 பாடங்கள் காணப்படுகின்றன. இந்த 7 பாடங்களுக்குமே மாணவர்கள் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றுவர்.

இரண்டாவது தொகுதியில் மாணவர்கள் தெரிவு செய்யக்கூடிய 7 பாடங்கள்  காணப்படுகின்றன. இவ்வேலு பாடங்களுக்கும் மாணவர்கள் SBA விற்கு தோற்ற வேண்டும். அத்துடன் மூன்றாவது தொகுதியில் மாணவர்கள் தொழில் மற்றும் வாழ்க்கைத் திறன்கள் சார்ந்த 9 பாடங்களில் இருந்து விரும்பிய இரண்டை தெரிவு செய்தல் வேண்டும்.

அத்துடன் தரம் 9 (2029 இலிருந்து) மற்றும் 11 என தேசிய மட்டப்  பரீட்சைகள் இரண்டு நடைபெறும்.


தரம் 12 - 13 பாட உள்ளடக்கம்

விஞ்ஞானத்துறை (Science), தொழிநுட்பத்துறை  (Technology), முகாமைத்துவத்துறை (Management & Entrepreneurship), சமூக விஞ்ஞானத்துறை (Humanities and Social Sciences)  மற்றும் தொழிற்துறை  (Vocational Path) ஆகிய 5 துறைகளைக் கொண்டிருத்தல்.

 

கணிப்பீட்டு மதிப்பீட்டு  முறைகள்

இங்கு ஒவ்வொரு module இன் தொடர் கணிப்பீடுகளை அடிப்படையாகக் கொண்டு 70 புள்ளிகளும்,  தவணைக்கான இறுதிக் கணிப்பீட்டுக்கு 30 புள்ளிகளும் என, தவணை முடிவில் மொத்தம் 100 புள்ளிகள் வழங்கப்படும். இவ்வாறு ஒவ்வொரு module க்குமான இறுதிப் புள்ளிகளை அடிப்படையாகக் கொண்டு, அவற்றுக்கான தரங்கள் (Grades) மற்றும் GPV என்பன கணிப்பிடப்படும்.

 

இச்சீர்த்திருத்தத்தில் காணப்படும் சாதகமான அம்சங்கள் 

  • மாணவர் மைய கற்றல் சார்ந்த உள்ளடக்கமாக காணப்படல்.

  • திருத்தியமைக்கப்பட்ட புளூமின் taxonomy  / கற்றல் பிரமிட் இற்கு ஏற்ப மாணவர்களின் உயர் சிந்தனை ஆற்றல்களை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் காணப்படல்.

  • 21 ஆம் நூற்றாண்டுக்கான திறன்களை உள்ளடக்கிய / நோக்கிய கற்றல் முறைமையாக இருத்தல்.

  • நிஜ உலக பொருத்தப்பாட்டு அம்சங்களை உள்ளடக்கி இருத்தல்

  • STEM போன்ற கலப்புக் கற்றல் அம்சங்களை உள்ளடக்கி இருத்தல்.

  • மாணவர்கள் தொழில் ரீதியாக பயிற்றுவிக்கப்படுவதற்கான வாய்ப்புகளை உள்ளடக்கியிருத்தல்.

  • கல்வியுடன் தொழிநுட்பங்களை ஒருங்கிணைப்பதற்கான   வாய்ப்புகளை உள்ளடக்கிய இருத்தல்

  • மாணவர்கள் ஒவ்வொரு விடயங்களையும் இலகுவாக கற்க கூடிய வகையில் module களாக கட்டமைக்கப்பட்டிருத்தல்.

  • கணிப்பீடு, மதிப்பீடுகள் சர்வதேச தரநிலைகளை அடிப்படையாகக் கொண்டிருத்தல்.

 

இங்கு காணப்படும் சவால்கள்

  • இங்கு மாணவர்களுக்கு பயனளிக்கக்கூடிய பல சிறந்த அம்சங்கள் உல்லடக்கப்பத்திருந்தாலும், அதன் நடைமுறைச் சாத்தியப்பாட்டை பொறுத்தே இதன் வெற்றி தங்கியுள்ளது.

  • இப்புதிய கல்விச் சீர்திருத்தத்தின் அடிப்படையில் கற்றலை வினைத்திறனாக முன்னெடுப்பதற்கு ஆசிரியர்கள் போதிய அறிவு, திறன் மற்றும் பயிற்சிகளை கொண்டவர்களாக இருக்க வேண்டியிருத்தல்.

  • இங்கு பாடத் தெரிவுகள் அதிகமாக காணப்படுவதால், அவற்றுக்குத் தேவையான Module களை எல்லா பாடசாலைகளும் உரிய நேரத்தில் பெற்றுக்கொள்ள முடியுமா என்ற வினா காணப்படுதல்.

  • நடைமுறையில் இங்கு எதிர்பார்க்கப்படும் விடையங்கள் எந்த அளவு அடையக் கூடியதாக இருக்கும் என்ற வினா காணப்படுதல்.

  • இங்கு மேற்கொள்ளப்பட்டுள்ள சில மாற்றங்கள் தொடர்பாக தொடர்ந்தும் சில கருத்து முரண்பாடுகள் காணப்படுதல். உதாரணமாக வரலாறு பாடம் கட்டாயப்பாடத்திலிருந்து தெரிவுப்பாடமாக மாற்றப்பட்டிருத்தல் தொடர்பாக.

  • ஆரம்பப் பிரிவு மாணவர்களுக்கான பாடச்சுமை அதிகரித்திறுத்தல்.

  • இச்சீர்திருத்தத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றங்கள் தொடர்பான இறுதி அறிக்கை அல்லது உத்தியோகபூர்வ ஆவணம் இதுவரை வெளியிடப்படாமல் இருத்தல்.

By : M.S.M. Naseem (SLTS)

       Visiting Lecturer & Master Teacher (NIE) 



No comments:

Post a Comment