இன்று அநேக இடங்களில் எல்லோரும்
கேள்விப்படும் ஒரு வார்த்தைதான் 'கருத்துச்
சுதந்திரம்' என்ற பதமாகும். இது
பின்வருமாறு வரைவிலக்கனப் படுத்தப்படுகிறது. 'குறித்த சமுதாயமொன்றில் ஒரு
தனி மனிதனோ அல்லது ஒரு
குழுவோ அல்லது ஒரு சமூகமோ
பேச்சின் மூலம் அல்லது எழுத்தின்
மூலம் தமது கருத்தை, உணர்வை
வெளிப்படுத்தும் உரிமையாகும்.' சுருங்கச் சொன்னால், பேச்சுச் சுதந்திரம், எழுத்துச் சுதந்திரம், நம்பிக்கைச் சுதந்திரம் ஆகியவற்றை உள்ளடக்கிய எண்ணக்கருவே கருத்துச்
சுதந்திரமாகும்.
இவ்வாறு
வரைவிலக்கனப் படுத்தப்படும் இப்பதமானது
இன்று சமூகங்களினுள் அதிகமான அநீதிகள் ஏற்படுவதற்கு
காரணமாக அமைந்துள்ளது. அதாவது மேற்குலகினாலும், இஸ்லாத்துக்கெதிரான
ஏனைய சக்திகளாலும் முஸ்லிமகளுக்கும், இஸ்லாத்துக்கும் எதிரான செயற்பாடுகளுக்குப் பயண்படுத்தப்படுகின்ற
ஒரு கருவியாக இது மாறியிருப்பதை எங்களால்
காணக் கூடியதாக உள்ளது.
இந்த மேற்கு நாடுகளும் ஏனைய
இஸ்லாத்துக்கெதிரான சக்திகளும் தங்களுக்கெதிராக அல்லது தங்கள் மதத்துக்கு
அல்லது நாட்டுக்கெதிராக கருத்துக்கள், விமர்சனங்கள் வரும் போது அவற்றை
விமர்சித்து தடை செய்கின்றனர். அதே
வேலை இஸ்லாத்துக்கும், முஸ்லிம்களுக்கும் எதிராக பொய்யான விமர்சனங்கள்
கருத்துகள் வரும் போது அவற்றை
வரவேற்று ஆதரிப்பவர்களாகவும், அவ்வாறான செயல்களில் ஈடுபடுவோருக்கு 'கருத்து சுதந்திரம்' எனும்
இப் பெயரை பயண்படுத்தி அவர்களுக்கு
அடைக்கலம் வழங்குபவர்களாகவும் காணப்படுகின்றனர்.
இதற்கு
உதாரணமாக பின்வரும் சம்பவங்களை எடுத்து நோக்கலாம்!
1. ஜரோப்பாவின் இருண்ட யுகம்(Age
of Darkness) என வர்ணிக்கப்படும் மத்திய காலப்பகுதியில் பௌதீகவியல்,
பிரபஞ்சவியல் குறித்து கருத்து வெளியிட்ட பல
அறிவியலாளர்கள் கிறிஸ்தவ திருச்சபைகளின் ஒடுக்குமுறைகளுக்கு உள்ளானதுடன் சிறைச்சாலைகளுக்கும், தீக்கம்பங்களுக்கும் பலியாக நேர்ந்தது. உதாரணமாக
“கலிலியோ கலீலி, கொப்பர்னிகஸ்” போன்றோரின்
வரலாற்றை அவதானிக்க முடியும். மனிதனின் மேம்பாட்டுக்கான அடித்தளங்களை உருவாக்க துனை செய்த இந்த
விஞ்ஞானிகளது கண்டுபிடிப்புக்களும், கருத்துக்களும் கிறிஸ்தவ மத நம்பிக்கைக்கு விரோதமானவை
என்பதனாலேயே இவர்களுக்கு இந்நிலைமை ஏற்பட்டது.
2. 1980 இல் P. Write எழுதிய “Spy Cather” என்ற நூலும்,
Jerry Adems இன் “Death of Princess” என்ற தொலைக்காட்சி
நாடகமும், Allens எழுதிய “Prdition” எனும் நாவலும் பிரித்தாணியாவின் சமூக
வாழ்க்கைப் போக்குகளை விமர்சிப்பதாகவும், அந்நாட்டின் பாரம்பரியங்களுக்கு எதிரானவை எனவும் கூறப்பட்டு பிரித்தாணிய
அரசினால் தடை செய்யப்பட்டன. இவ்வாறு
தனக்கு பாதகமென கண்டபோது கருத்துச்
சுதந்திர வாயில்களை அடைத்த இதே பிரித்தாணியா
தான் இஸ்லாத்துக்கும், முஸ்லிம்களுக்கும் எதிரான முறையில் முஸ்லிம்களின்
கண்ணியமிக்க இறைத்தூதரான முஹம்மத் நபி(ஸல்) அவர்களைப்
பற்றி பொய்யாக இழிவான முறையில்
எழுதி உலக முஸ்லிம்களின் பாரிய
எதிர்ப்புக்குள்ளான, ஈரான் அரசினால் தூக்குத்
தண்டனை விதிக்கப்பட்ட 'ஸல்மான் ருஸ்திக்கு' அடைக்கலம்
வழங்கியதுடன், அதை ஊக்குவிக்கும் முகமாக
விருதும் வழங்கியது.
3. மேலும் இதே பிரித்தாணியா
தான் “Londonistan” என்ற இஸ்லாத்துக்கெதிரான முறையில்
எழுதப்பட்ட நூலை கருத்துச் சுதந்திரம்
என்ற பெயரில் வெளியிட்டது.
இவ்வாறு
பல சம்பவங்களை கூறிக்கொண்டே போகலாம்.
ஆனால்,
முஸ்லிம்கள் தமது உயிரிலும் மேலாக
மதிக்கும் இஸ்லாத்தை அவமதிக்கும் செயல்களைக்கண்டு வேதனையுற்று, அது தவறான செயலெனக்
கூறி அவற்றுக்கு தமது எதிர்ப்பை தெரிவிக்கும்
போது 'முஸ்லிம்களிடம் சகிப்புத்தன்மை இல்லை, கருத்துச் சுதந்திரமில்லை'
என பரவலாக போலிப் பிரச்சாரங்களை
இந்த மேற்கத்தேய நாடுகளும், இஸ்லாமிய எதிர்ப்புணர்வு கொண்டவர்களும் மேற்கொள்வதை அவதாணிக்கலாம்.
எனவே இவற்றை வைத்து நோக்கும்
போது கருத்துச் சுதந்திரம் என்ற பதமானது இன்று
மேற்கு நாடுகளதும், இஸ்லாமிய எதிப்புணர்வு கொண்ட தீய சக்திகளினதும்
சுய தேவைகளுக்காகப் பயண்படுத்தப்படுகின்ற ஒரு கருவியாக, கவசமாக
மாறிக் காணப்படுவதை எங்களால் கண்டுகொள்ள முடியும்.
மேலும்
இவர்களை பொருத்த வரையில் சிலருக்கு
மட்டும் என்ற மட்டுப்படுத்தப்பட்ட கருத்துச்
சுதந்திரம் என்பதுதான் உண்மை. 'விரும்பியோரை விரும்பியவாரு
அவமரியாதை செய்வதற்கான சுதந்திரம்' என்ற அடிப்படையிலேயே இவர்களது
செயற்பாடுகள் காணப்படுகின்றன.
இஸ்லாத்தில் கருத்துச்
சுதந்திரம்
இஸ்லாத்தைப்
பொருத்தவரையில் அதன் கருத்துச் சுதந்திரம்
பற்றிய களம் மிக விசாலமானதாகும்.
அது நியாயமான விமர்சனங்களை மறுப்பதில்லை. மேலும், இன்று மேற்கு
நாடுகள், ஏனைய மதத்தவர்கள், மதச்
சார்hற்றோர் மற்றும் இஸ்லாமிய
எதிப்புணர்வு கொண்டவர்கள் போன்றோரினால் இஸ்லாம் நிந்திக்கப்படுவது போன்று
யாருடைய மதத்தையும், புனித நம்பிக்கைகளையும் அவமதிப்பதை
இஸ்லாம் ஒரு போதும் அணுமதிப்பதில்லை.
இவ்வாறு இஸ்லாம் இதனைத் தடுப்பதற்கான
காரணம் இவற்றால் மனிதர்களிடையே வெறுப்பும் மற்றும் வீண் பிரச்சினைகளும்
தோன்றிவிடக் கூடாது என்ற உயரிய
நோக்கிலேயாகும்.
மேலும்,
ஓவ்வொரு தனி மனிதனுக்கும் கொள்கைச்
சுதந்திரம், சிந்தனைச் சுதந்கிரம், பேச்சுச் சுதந்திரம் என்பவை உண்டு என்பதை
புனித அல்-குர்ஆனும், ஹதீஸும்
தெளிவாக குறிப்பிட்டுள்ளதை கண்டு கொள்ளலாம்:
1. சத்தியம் உங்களது இரட்சகனிடமிருந்து உள்ளதே!
எனவே, விரும்பியவர் நம்பிக்கை கொள்ளட்டும். விரும்பியவர் நிராகரிக்கட்டும் என்று கூறுவீராக...(18:29)
2. இம்மார்க்கத்(தைத் தழுவுவ)தில்
எவ்வித நிர்ப்பந்தமும் இல்லை...(2:256)
3. நம்பிக்கை கொண்டோரே! ஒரு கூட்டத்தினர், மற்றொரு
கூட்டத்தினரைப் பரிகாசம் செய்ய வேண்டாம். இவர்களை
விட அவர்கள் சிறந்தவர்களாக இருக்கக்கூடும்.
எந்த பெண்களும் மற்ற பெண்களை (பரிகாசம்
செய்ய வேண்டாம்.) இவர்களை விட அவர்கள்
சிறந்தவர்களாக இருக்கக்கூடும். உங்களிடையே நீங்கள் குறை கூற
வேண்டாம்...(49:11)
4. அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்புபவர்கள்
நல்லவற்றையே பேசட்டும் அல்லது எதையும் பேசாமல்
(மௌனமாக) இருக்கட்டும். (புஹாரி, முஸ்லிம்)
இவ்வாறு
இன்னும் அதிகமான ஆதாரங்களை முன்வைக்க
முடியும்.
எழுத்தும்,
பேச்சும் மனித சிந்தனையிலிருந்து வெளிப்படுவதன்
காரணமாக அதற்கான சில வரையறைகளையும்
இஸ்லாம் விதித்துள்ளது. இந்த வரையரைகளின் நோக்கம்
மனிதனது நற்சிந்தனைகளை வளர்ப்பதும், தீய சிந்தனைகளை விட்டும்
தடுப்பதுமாகும். எனவேதான் இந்தக் கருத்துச்சுதந்கிரம் தொடர்பாக
இஸ்லாம் கொண்டுள்ள நிலைப்பாடானது ஒரு சிலருக்கோ அல்லது
முஸ்லிம்களுக்கோ மாத்திரம் உரிய கடமையல்ல. மாறாக,
முழு மனித சமுதாயத்துக்கும் உரியதாகும்.
MSM. Naseem
(BA. Hones)
No comments:
Post a Comment