.உங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக ------- Meesan Way ------- தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்

Thursday, December 12, 2019

பாடத்திட்டம் மற்றும் பாடக்குறிப்பு எழுதுவதற்கான மாதிரியும் படிவமும் pdf

கற்றல்-கற்பித்தல் செயற்பாடுகள் வினைத்திறன் மிக்கதாக அமைவதற்கு பாடத்திட்டம் (lesson plan) மற்றும் பாடக்குறிப்பு (notes of Lesson) என்பவை சிறந்த முறையில் தயாரிக்கப்பட் வேண்டியது அவசியமாகும். எனினும் அதிகமான ஆசிரியர்கள் பாடத்திட்டம் மற்றும் பாடக்குறிப்பு போன்றவற்றை எழுதுவதில் இடர்பாடுகளையும், சிக்கல்களையும் எதிர் நோக்குவதை அவதானிக்க முடிகின்றது.

Sunday, December 1, 2019

பரீட்சைக்கு ஆயத்தமாகும் வகையில் கற்பதற்கான சில உத்திகள்


மாணவர்கள் பரீட்சை ஒன்றில் சித்தி அடைவதை இலக்காகக் கொண்டு கற்றலில் ஈடுபடுகின்ற சந்தர்ப்பந்தில் எவ்வாறான கற்றல் உத்திகளைக் கையாண்டு தமது கற்றல் செயற்பாடுகளை வினைத்திறன்மிக்க வகையிலும் ஞாபகதத்தில் நிலை நிறுத்தி வைக்கும் வகையிலும் முன்னெடுக்க முடியும் என்பது தொடர்பாக இங்குள்ள காணொளியில் அறிந்து கொள்ள முடியும்.

Friday, October 25, 2019

கற்பித்தலின்போது ஆசிரியர் ஒருவரால் பல்வேறு படிகளில் பயன்படுத்தக் கூடிய வினாக்கள்

By : M.S.M. Naseem  - MA (P.sc), BA (Hons), PGDE (R)

பாடங்களை கற்பிக்கின்ற போது பிள்ளைகளை உள ரீதியாக ஊக்குவிப்பதற்கான ஒரு நுட்ப முறையாக வினாக்கேட்டல் காணப்படுகின்றது. கற்பித்தல் செயற்பாடுகளில் கருத்துக்களைப் பெற்றுக் கொள்வதற்கும், அவற்றை மனதில் பதிய வைப்பதற்கும் ஒரு நுட்பமுறையாக பயன்படுத்தப்படுகின்றது. விஷேடமாக ஏதாவதொரு குறிப்பிட்ட பிர்ச்சினையைத் தீர்க்கும் போது அதற்குப் பொருத்தமான முறையில் வினாக்களை வினவிப் பெற்றுக் கொள்ளும் விடைகள் அப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கான தகவல்களை வழங்கக் கூடியதாகக் காணப்படுகின்றன. இதன் மூலம் கற்றல்-கற்பித்தல் செயற்பாட்டில் வினாக்களை உள்ளடக்குதல் அவசியமான ஒன்று என்பது புலப்படுகின்றது.

Saturday, August 31, 2019

கற்றல்-கற்பித்தல் செயற்பாடுகளை வினைத்திறனாக்கிக் கொள்வதற்கான சில ஆலோசனைகள்

By : M.S.M. Naseem  - MA (P.sc), BA (Hons), PGDE (R)

ஒரு கற்றல்-கற்பித்தல் செயற்பாடானது சிறந்த முறையில் வினைத்திறன் மிக்கதாக அமைகின்ற போதே அதனால் எதிர்பார்க்கப்படும் இலக்ககளை அடையக் கூடியதாக இருக்கும். கற்றல்-கற்பித்ல் செயன்முறையானது வினைத்திறனாகக் காணப்படுவதற்கு கற்பித்தலில் ஈடுபடும் ஒரு ஆசிரியர் பின்வரும் ஆறு விடயங்கள் தொடர்பாக தனது அவதானத்தைச் செலுத்தி அவற்றை சிறந்த முறையில் வடிவமைத்து ஒழுங்குபடுத்திக் கொள்ள வேண்டியது அவசியமாகும். 

Friday, July 26, 2019

அல்-குர்ஆன் ஓர் இறை வேதமா?

1400 ஆண்டுகளுக்கு முன்னால் எந்த மனிதனுக்கும் தெரியாத அன்றைக்கு இறைவனுக்கு மட்டுமே தெரிந்த பல விஷயங்கள் திருக்குர்ஆனில் சொல்லப்பட்டுள்ளன. எழுதப்படிக்கத் தெரியாத முஹம்மது நபியால் இதைச் சொல்லி இருக்கவே முடியாது என்பதையும், இறைவன் தான் சொல்லி இருக்க முடியும் என்பதையும் நேர்மையான பார்வையுடையவர்களால் அறிந்து கொள்ள இயலும். இதற்கான ஆதாரங்களாக பின்வருவனற்றை எடுத்துக் காட்ட முடியும்.

Monday, July 15, 2019

சிறந்த ஆசிரியர் ஒருவரிடம் காணப்படவேண்டிய வகிபாகங்கள்


கல்வியானது மனிதவள மேம்பாட்டிற்கும் மனித வாழ்க்கை முன்னேற்றத்திற்கும் உறுதுணையாக அமைகின்ற ஒன்றாகக் காணப்படுகின்றது. கல்வியில் ஏற்படும் முன்னேற்றமானது ஒரு நாட்டின் அபிவிருத்தியில் முக்கிய பங்கு வகிக்கின்றது. ஒரு நாட்டின் வளமான எதிர்காலம் அந்நாட்டில் அளிக்கப்படும் கல்வியிலேயே தங்கியுள்ளது. எனவே இக்கல்வியை மாணவர்களுக்கு வழங்குகின்ற ஆசிரியர்களுக்கு முக்கிய பொறுப்புக்களும் கடமைகளும் காணப்படுகின்றன.

Tuesday, April 23, 2019

இலங்கையின் இன முரண்பாடுகளும் பின்னனியும்

இலங்கையின் இன முரண்பாடானது பிரித்தானியரின் ஆட்சிக் காலத்தில் விதைக்கப்பட்ட பிரிவினைவாத விதைகளாகும். பிரித்தானியா இலங்கையைக் கைப்பற்றும் போது தமிழ், சிங்கள, முஸ்லிம் இன உறவுகள் மிகவும் நெருக்கமாகவும் புரிந்துணர்வுடனுமே காணப்பட்டன. இத்தகைய ஒற்றுமைத் தன்மையானது பிரித்தானியரின் காலணித்துவத்திற்கு சவாலாக அமைந்தது. எனவே, இதனை மாற்றியமைத்து தமது நோக்கங்களை அடைந்து கொள்வதற்கு பிரித்தானியா பலவிதமான பிரிவினைவாதக் கொள்கைகளை இலங்கையர் மத்தியில் உருவாக்கினர்.

Thursday, April 11, 2019

கற்றல்-கற்பித்தல் செயற்பாடுகள் வினைத்திறனாக அமைய ஆசிரியர் ஆற்ற வேண்டிய வகிபாகங்கள்

கற்றல் - கற்பித்தல் செயற்பாட்டில் ஆசிரியர்கள் பொதுவாக மூன்று வகையான வகிபாகங்களை கொண்டவர்களாகக் காணப்படுகின்றனர். அவை அறிவைக் கடத்தல் வகிபாகம் (Transmission role) கொடுக்கல் வாங்கல் வகிபாகம் (Transaction role) நிலைமாற்ற வகிபாகம் (Transformation role) என்பனவாகும்.

Thursday, April 4, 2019

பிள்ளைகளின் விருத்திக்கட்டங்களும் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கான வழிகாட்டல்களும்


                M.S.M. Naseem - MA, BA (Hons), PGDE (R)

ஒரு பிள்ளையின் வாழ்வின் குறிப்பிட்ட வயதுக் கட்டங்களில் ஏனைய கட்டங்களிலும் பார்க்க வேறுபட்டுக் காணப்படும் பல்வேறு பண்புகளை அடிப்படையாகக் கொண்டு அறிஞர்களால் பிள்ளை விருத்திக்கட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. அனைத்துக் குழந்தைகளும் தனித்தன்மை கொண்டவர்கள் என்பதால், அவர்கள் ஒவ்வொருவரினதும் நடத்தைக் கோலங்கள் அவர்களுக்கு மட்டுமே உரியதாகும். எனினும் எல்லாக் குழந்தைகளுக்குமான ஓர் பொதுவான வளர்ச்சி முறையொன்று உள்ளது என உளவியலாளர்கள் குறிப்பிடுகின்றனர். இதன் மூலம் அவ்வவ் வயதுக்கட்டங்களில் தெளிவாகக் காணப்படும் நடத்தைப்பண்புகளைக் கற்பது இலகுவாகின்றது.