.உங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக ------- Meesan Way ------- தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்

Friday, March 20, 2020

கொரோனா வைரஸை கட்டுப்படுத்த சீனா பயன்படுத்திய கியூபா மருந்தும், பின்னால் உள்ள மருந்து மாபியாவும்.


"Interferon alfa-2b" என்ற கியூபா நாட்டில் தயாரிக்கப்பட்ட மருந்தைப் பயன்படுத்தியே சீனா கொரோனா நோயைக் கட்டுப்படுத்தியுள்ளது(இணைப்பு) இம்மருந்தினைப் பயன்படுத்தி பாதிக்கப்பட்ட மக்களையும்நாடுகளையும் பாதுகாப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ள முடியும்.

ஆனால் அமெரிக்க, இஸ்ரேல் மருந்து விற்பனை மாபியாக்கள் கியூபாவிற்கு இன்னும் பல பொருளாதார தடைகளை விதித்து அதனை புறந்தள்ளி, பக்கவிளைவுகள் மிக்கதும், அதிக இலாபம் தரக்கூடியதுமான மருந்தினை கண்டுபிடித்து பணத்தினை கொள்ளையடிக்க தயாராகிக் கொண்டிருக்கின்றன.

இதன் வெளிப்பாடாகவே அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாம் இன்னும் ஒரு வாரத்தில் கொரோனாவிற்கான மருந்தினை கண்டுபிடித்து விடுவோம் எனவும் அறிவித்துள்ளன. அத்துடன் தாம் கொரோனா வைரஸிற்கான மருந்துகளை இன்னும் சில வாரங்களில் கண்டுபிடிக்கப் போதாக ஜேர்மன் நிறுவனமான "Cure Vac" அறிவித்ததும், அமெரிக்க அதிபர் டொனலட் டிரம்ப் அதனை தமது நாட்டில் செய்யுமாறும், அதனை தமக்கு மாத்திரமே கொடுக்குமாறும் அதற்கு எத்தனை கோடிகள் வேண்டுமானாலும் தான் தருவதாக குறிப்பிட்டிருந்தார்.

கியூபாவில் தயாரிக்கப்படும் மருந்துகள் பெரும்பாலும் பக்க விளைவுகள் அற்றதும், நோய்களை முழமையாக குணப்படுத்தும் தன்மையையும் கொண்டவையாகும். இதற்குக் காரணம் கியூபா நாட்டினர் மருத்துவத்துறையை ஒரு தொழிலாகக் கருதுவதில்லை. மாறாக சமூதாயத்துக்கான ஒரு சேவையாகவே கருதுவதாகும். எனவே அவர்கள் குறித்த நோயானது அன்றுடன் முழுமையாக இல்லாது போக வேண்டும் என்ற அடிப்படையை நோக்காக் கொண்டே மருந்துகளை உற்பத்தி செய்கின்றார்கள். இவர்களின் இந்த மனித நேயத்தன்மையை WHO இன் இனை இயக்குணரும் பாராட்டியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

ஆனால் அமெரிக்க, இஸ்ரேல் மாபியாக்கள் இவ்வாறான மருந்துகள் சந்தைக்கு வருவதை பல வழிகளில் முடக்கி வருகின்றன. அதன் ஒரு  அம்சமே கியூபா மீது அமெரிக்கா விதித்துள்ள நூற்றுக்கு மேற்பட்ட பொருளாதாரத் தடைகளாகும்.

அதுமட்டுமன்றி இன்று உகளவில் அதிகமான மருந்து வகைகளை உற்பத்தி செய்து விற்பனை செய்யும் நிறுவனங்கள் இந்த அமெரிக் இஸ்ரேல் மாபியாக்களே. இவர்கள் உற்பத்தி செய்து விற்பனை செய்யும் மருந்துகள் யாவும் நோய்களை குணப்படுத்துவதற்குப்பதிலாக, தற்காலிக நிவரணத்தைத் தந்து நோய்களை தொடர்ந்திருக்கச் செய்யக்கூடிய வகையில் உற்பத்தி செய்யப்படுபவைகளாகும்இதனை  மருத்துவத்துறையில் நோபல் பரிசு பெற்ற  Richard J. Roberts என்ற அறிஞரும் வெளிப்படையாக கூறியுள்ளமை (இணைப்பு) குறிப்பிடத்தக்கது.

கியூபா நாடானது புற்று நோய்க்கான மருந்தை கண்டு பிடித்து விட்டோம் என்று எப்போது அறிவித்ததோ! அன்று முதல் அமெரிக்க அதன் மீது பாரிய பொருளாதாரத் தடைகளை விதிக்க ஆரம்பித்தது. அதுமட்டுமன்றி கியூபாவிடமிருந்து யாரும் மருந்துகளை வாங்கக் கூடாது என்று கடுமையான எச்சறிப்புக்களையும் ஏனைய நாடுகளுக்கு விதித்ததுடன், அதை மீறினால் அவர்களுக்கும் தடைகள் விதித்தது.

கியூபா தங்கள் மீதான தடைகளை நீக்குமாறு 2019 நவம்பரில் .நா சபையிடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்தபோது 183 நாடுகள் அதற்கு ஆதரவு தெரிவித்தன. எனினும் உலக ரௌடி அமெரிக்கா, அதன் எஜமானான இஸ்ரேல் மற்றும் பிரேசில் ஆகிய 3 நாடுகள் மட்டும் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்திருந்தன. இதனால் அந்த கோரிக்கையை அமெரிக்க, இஸ்ரேலின் ஆதிக்கத்துக்கு உட்பட்ட .நா சபையால் நிறைவேற்ற முடியவில்லை. இதேபோல் கடந்த 2018 இலும் கியூபாவால் இதே பிரேரனை .நா சபையில் முன்வைக்கப்பட்டதுடன்> அதை அமெரிக்காவும்> இஸ்ரேலும் எதிர்த்தால் கைவிடப்பட்டது. இதுவும் இங்கு குறிப்பிட்டு காட்டப்பட வேண்டிய ஒரு முக்கிய அம்சமாகும்.

எனினும் சீனா மற்றும் ஸ்பைன் ஆகிய நாடுகள் கியூபாவின் மருந்து உற்பத்தி தொடர்பாக ஆலோசனை வழங்குபவர்களாக செயற்பட்டன. இதனாலேயே கொரோனோவைக் கட்டுப்படுத்தும் மேலே குறிப்பிட்ட மருந்தை சீனாவால் இலகுவாக பெற முடிந்து.

By : M.S.M. Naseem  - MA (P.sc), BA (Hons), PGDE (R)

 


1 comment: