இருபத்தொறாம் நூற்றாண்டின் மிகப்பெரிய மாற்றங்களில் ஒன்று, சமூக வலைத்தளங்கள்
நம் வாழ்வின் ஒருங்கிணைந்த பகுதியாக மாறியிருப்பதாகும். காலையில் எழுந்ததும் நாம் முதலில்
பார்ப்பது செய்தித்தாள்களையோ அல்லது தொலைக்காட்சியையோ அல்ல, மாறாக நம்
கைப்பேசிகளில் வந்துள்ள WhatsApp
செய்திகள்,
Facebook பதிவுகள்,
Twitter (X) ட்வீட்டுகள் மற்றும் YouTube காணொளிகள் என்பதை மறுப்பதற்கு வழியில்லை.
இந்த டிஜிட்டல் புரட்சி நமக்குத் தகவல்களை அணுகும் சுதந்திரத்தை வழங்கியிருக்கிறது
என்பதில் சந்தேகமில்லை. ஆனால்,
ஒவ்வொரு வரமும் ஒரு சாபத்தையும் சுமந்து வருகிறது. இவ்வாறன
ஒரு சாபத்தின் பெயர்தான் ‘ரூட் மாபியா’ (Root
Mafia).
Thursday, August 20, 2026
Thursday, August 6, 2026
அரசறிவியல் (02) நூல் அறிமுகம்
இன்று உலகளவில் முக்கியத்துவமிக்க ஒரு கற்கைத்துறையாக
அரசறிவியல் காணப்படுகிறது. இலங்கையைப் பொருத்தமட்டிலும் கல்விப் பொதுத் தராதர
உயர்தரம் மற்றும் பல்கலைக்கழகக் கற்கைகளில் முக்கியத்துவம் பெற்றுள்ள ஒரு பிரதான
கற்கையாகக் அது காணப்படுகின்றது.
அரசறிவியல் எனும் இந்நூலானது, முழுமையாக 2017ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படும் புதிய பாடத்திட்டத்தின் கீழ், கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை அடிப்படையாகக் கொண்டு, முழுமையாக புதிய பாடத்திட்டத்தை தழுவிய வகையில், இலகுவான மொழிநடையில் அரசறிவியல் பாடத்திட்டத்தின் கீழ் நான்காவது முதல் ஆறாவது வரையான மூன்று அலகுகளையும் உள்ளடக்கிய வகையில் இற்றைப்படுத்தப்பட்டு தயாரிக்கப்பட்டுள்ளது.
Thursday, May 21, 2026
சோமாலிய மீனவர்கள் சோமாலிய கடற்கொள்ளையர்களாக மாறியது எப்படி? - ஒரு அநீதியின் வரலாறு
கிழக்கு ஆப்பிரிக்காவின் கொம்பு என்றழைக்கப்படும் சோமாலியா, இந்தியப் பெருங்கடலின் முக்கியமான கடற்பரப்பைக் கொண்ட ஒரு நாடாகும். ஒரு காலத்தில் அழகிய இயற்கை வளங்கள் நிறைந்த செல்வந்த நாடாகக் காணப்பட்ட சோமாலியா, இன்று உலகின் மிகவும் வறுமையும், உள்நாட்டுக் குழப்பமும் கொண்ட நாடுகளில் ஒன்றாக உள்ளது. இந்த நிலைக்கு முக்கிய காரணம் பல நூற்றாண்டுகளாக பிரிட்டன், அமெரிக்கா, ரஷ்யா மற்றும் ஐரோப்பிய நிறுவனங்கள் போன்ற வெளிநாட்டுச் சக்திகள் இந்த நாட்டைத் தங்கள் இலாபத்திற்காகச் சுரண்டியதும், பிளவுபடுத்தியதுமே ஆகும்.
Tuesday, May 19, 2026
பிறர் நலம் நாடுவதே இஸ்லாத்தின் அடிப்படை
இஸ்லாம் மார்க்கம் மனிதர்களுக்கு இறைவனால் அருளப்பட்ட ஒரு முழுமையான வாழ்க்கை நெறியாகும். இது மனிதன் தன்னைத்தானே மேம்படுத்திக் கொள்வதை மட்டுமல்ல, தனக்குப் பக்கத்தில் வாழும் மற்றவர்களின் நலனையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்று கற்றுத் தருகிறது. இஸ்லாத்தின் அடிப்படைக் கோட்பாடுகளில் ஒன்றுதான் "பிறர் நலம் நாடுதல்" அதாவது, ஒரு முஸ்லிம் தனக்கு மட்டும் நல்லது நடக்க வேண்டும் என்று நினைக்காமல், தன்னைச் சுற்றியுள்ள சமூகத்தின் நன்மை, பாதுகாப்பு மற்றும் முன்னேற்றத்திற்காகவும் உழைக்க வேண்டும். இதைத்தான் இஸ்லாம் தனது முக்கிய கடமைகளில் ஒன்றாக ஆக்கியுள்ளது.
Thursday, April 16, 2026
இலங்கையின் கல்விப்புலம்சார் புள்ளிவிபரத் தரவுகள் (2025 & 2024)
இலங்கையின் கல்விப்புலத்துடன் தொடர்புடைய இற்றைப்படுத்தப்பட்ட (2025 & 2024) புள்ளிவிபரத் தரவுகள் இங்கு தொகுத்து வழங்கப்பட்டுள்ளன. இதில் பாடசாலைகள், ஆசிரியர்கள், மாணவர்கள், கல்வி நிறுனங்கள் மற்றும் கல்வித்துறையுடன் தொடர்புடைய இன்னும் பல தகவல்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இவ்வாக்கமானது "கல்விப்புலம் சார் பொது அறிவுகள்" எனும் போட்டிப் பரீட்சை வழிகாட்டி நூலின் இற்றைப்படுத்தப்பட்ட பதிப்பின் ஒரு பகுதியாகும். 2025இல் இற்றைப்படுத்தப்பட்ட (Updated) இப்புத்தகத்தினை தபால் மூலமாக பெற்றுக்கொள்ள முடியும். அது தொடர்பான தகவல்கள் பின்வருமாறு,
Wednesday, April 15, 2026
அல்-குர்ஆன் மற்றும் ஹதீஸின் பார்வையில் இறுதிக்கால பெரும் போர் (மல்ஹமா)
இன்றைய உலகில் நாம் காணும் குழப்பங்கள், அரசியல் கொந்தளிப்புகள், பொருளாதார நெருக்கடிகள், இயற்கைச் சீற்றங்கள்
மற்றும் போர்ச் சூழல்கள் ஆகியவை மனிதகுலத்தை ஒரு பெரும் முடிவை நோக்கி இட்டுச் செல்வதாக
உணர்த்துகின்றன. இஸ்லாத்தின் ஈமானியக் கொள்கையில் “ஆகிர் அஸ்ஸமான்” (இறுதிக்காலம்)
என்பது மிக முக்கியமான ஒரு நம்பிக்கைப் பகுதியாகும். இந்த இறுதிக்காலத்தில் நிகழும்
மிகப் பெரிய நிகழ்வுகளில் ஒன்று “மல்ஹமா குப்ரா” எனப்படும் பெரும் உலகப் போர் ஆகும்.
Saturday, April 4, 2026
ஒற்றைக் கண்ணுடைய தஜ்ஜாலை பின்பற்றுபவர்களின் பண்புகளும் படிப்பினையும்
இன்றைய உலகில் மனிதன் தொழில்நுட்பத்தின் உச்சியைத் தொட்டுவிட்டான். அவனது கண்கள் உலகின் எந்த மூலையையும் பார்க்கின்றன, காதுகள் பல்லாயிரக்கணக்கான ஒலிகளைக் கேட்கின்றன, இதயம் உணர்ச்சிகளின் ஊசலாட்டத்தில் அலைவுறுகிறது. ஆனால் இந்த உறுப்புகள் அனைத்தும் இருந்தும், அவற்றின் உண்மையான பயன்பாடு புறக்கணிக்கப்படும்போது மனிதன் என்ன நிலைக்குத் தள்ளப்படுகிறான் என்பதை அல்குர்ஆன் நமக்கு மிகத் தெளிவாக எச்சரிக்கிறது.
Thursday, March 26, 2026
அரசறிவியல் (இலவச) நூல் அறிமுகம்
அரசறிவியல் எனும் இந்நூலானது, முழுமையாக 2017ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படும் புதிய பாடத்திட்டத்தின் கீழ், கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை அடிப்படையாகக் கொண்டு, முழுமையாக புதிய பாடத்திட்டத்தை தழுவிய வகையில், இலகுவான மொழிநடையில் அரசறிவியல் பாடத்திட்டத்தின் கீழ் முதல் மூன்று அலகுகளையும் மையப்படுத்தி இற்றைப்படுத்தப்பட்டு தயாரிக்கப்பட்டுள்ளது.
Sunday, March 8, 2026
கல்விப்புலம் சார் பொது அறிவுகள் (முதலாம் பதிப்பு: 2023 Pdf)
"கல்விப்புலம் சார் பொது அறிவுகள் போட்டிப் பரீட்சை வழிகாட்டி நூலின் முதலாம் பதிப்பினை (2023) கீழே தரப்பட்டுள்ள இணைப்பினை Click செய்து இலவசமாக தரவிறக்கம் (Download) செய்துகொள்ளவும். 2025 இல் இற்றைப்படுத்தப்பட்ட (Updated) இதன் இரண்டாம் பதிப்பினை தபால் மூலமாக பெற்றுக்கொள்ள முடியும். அது தொடர்பான தகவல்கள் பின்வருமாறு,
Saturday, March 7, 2026
பசியின் பின்னால் மறைந்திருக்கும் பலன்கள்: ரமழான் நோன்பின் அதிசயங்கள்
ரமழான் மாதம் என்பது உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்கள்
ஆன்மீகப் பரிசுத்தத்தையும் சமூகப் பொறுப்புணர்வையும் வளர்த்துக்கொள்ளும் ஒரு
புனிதமான காலப்பகுதியாகும். இந்த மாதத்தில் கடைப்பிடிக்கப்படும் நோன்பானது
இஸ்லாத்தின் ஐந்து கடமைகளில் ஒன்றாகும். அதிகாலை
முதல் சூரிய அஸ்தமனம் வரை உணவு,
பானம், இச்சை
மற்றும் சில உலகியல் விருப்பங்களைத் தவிர்த்து, அல்லாஹ்வின் திருப்தியை நாடுவது இதன் அடிப்படை நோக்கமாகும்.
Subscribe to:
Posts (Atom)









