.உங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக ------- Meesan Way ------- தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்

Wednesday, May 12, 2021

க.பொ.த பத்திர உயர் தரப் பரீட்சை வினாக்கட்டமைப்பு மற்றும் பரீட்சை தொடர்பான வழிகாட்டல் (அரசியல் விஞ்ஞானம்)


.பொ. உயர் தர அரசியல் விஞ்ஞானப் பாடமானது வினாப்பத்திரம் I, வினாப்பத்திரம் II ஆகிய இரண்டு வினாப்பத்திரங்களைக் கொண்டது.


வினாப்பத்திரம் I

  •  நேரம் : 02 மணித்தியாலங்கள்
  •  வினாப்பத்திரம் I ஆனது, பகுதி A மற்றும் பகுதி B என இரு பகுதிகளைக் கொண்டது.

பகுதி  A

« இதில் 5 தெரிவுகளைக் கொண்ட 30 பல்தேர்வு வினாக்கள் காணப்படும்.

« இங்கு ஒரு வினாவிற்கு 02 புள்ளிகள் வீதம் மொத்தம் 60 புள்ளிகள் வழங்கப்படும்.

 

பகுதி  B

« இதில் குறு விடை வழங்கத்தக்க 20 வினாக்கள் காணப்படும்.

« இங்கு ஒரு வினாவுக்கு 02 புள்ளிகள் வீதம் மொத்தம் 40 புள்ளிகள் வழங்கப்படும்.

 

  • வினாப்பத்திரம் I இன் எல்லா வினாக்களுக்கும் கட்டாயம் விடையளிக்க வேண்டும்.
  • வினாப்பத்திரம் I இன் A பகுதியினதும் B பகுதியினதும் மொத்தப் புள்ளி 100 ஆகும்.

 

வினாப்பத்திரம் II

  •  நேரம் : 03 மணித்தியாலயங்கள்.
  •  வினாப்பத்திரம் II ஆனது மொத்தமாக 10 வினாக்களையும் பகுதி I, பகுதி II, பகுதி III என மூன்று பகுதிகளையும் கொண்டதாககக் காணப்படும்.

« பகுதி I இல் கட்டுரை வகை வினாக்கள் 03 காணப்படும்.

« பகுதி II இல் கட்டுரை மற்றும் அரைக்கட்டமைப்பு வகை  வினாக்கள் 04 காணப்படும்.

« பகுதி III இல் கட்டுரை மற்றும் அரைக்கட்டமைப்பு வகை வினாக்கள் 03 காணப்படும்.

 

இம்மூன்று பகுதிகளிலிருந்தும் அதாவது,

« பகுதி I இருந்து குறைந்தது ஒரு வினாவையும்,

« பகுதி II இல் இருந்து குறைந்தபட்சம் இரு வினாக்களையும்,

« பகுதி III இல் இருந்து குறைந்தபட்சம் ஒரு வினாவையும் உள்ளடக்கிய வகையில் மொத்தமாக 05 வினாக்களுக்கு விடை எழுத வேண்டும்.

 

  •  வினாப்பத்திரம் II இற்கான மொத்தப் புள்ளிகள் 100 ஆகும்.
  •  வினாப்பத்திரம் II வினாக்களுக்கு புள்ளிகள் வழங்கப்படும் முறை

1)   10 புள்ளிகள் கொண்ட வினா ஒன்றுக்கு

 « அறிமுகம்                 (1 புள்ளிகள்)

« உள்ளடக்கம்       (8 புள்ளிகள்)

« முடிவுரை                 (1 புள்ளிகள்)

 

2)   20 புள்ளிகள் கொண்ட வினா ஒன்றுக்கு

« அறிமுகம்                (2 புள்ளிகள்)

« உள்ளடக்கம்            (16 புள்ளிகள்)

« முடிவுரை                 (2 புள்ளிகள்)

 

 

இறுதி மொத்தப் புள்ளியைக் கணித்தல்

« வினாப்பத்திரம் I             -        100

« வினாப்பத்திரம் II            -        100

« இறுதி மொத்தப் புள்ளி   -        200/2 = 100

 

வினாக்;களுக்கு விடைகளை அளிப்பதற்கான வழிகாட்டல்

1. பல்தேர்வு வினாக்கள்

« மாணவர்கள் பல்தேர்வு வினாக்களுக்கு விடையளிக்கும் போது, கொடுக்கப்படும் அறிவுறுத்தல்களை மிக அவதானத்துடன் கவனத்தில் கொண்டு, துல்லியமான முறையில் விடைகளை தெரிவு செய்ய வேண்டும்.

« உதாரணமாக, விடையளிக்க முன்னர் பொருத்தமான கூற்றையா அல்லது மிகப்பொருத்தமான கூற்றையா, அல்லது பொருத்தமற்ற கூற்றையா தெரிவு செய்ய வேண்டும் என்பதை தெளிவாக விளங்கிக் கொள்ளல். அத்துடன் மிகப் பொருத்தமான விடையை தெரிவு செய்துள்ளதை உறுதிப்படுத்;திக் கொள்ளல்.

« விடையளிக்கும் போது இலகுவான அல்லது நிச்சியமாக விடை தெரிந்த வினாக்கள் அனைத்திற்கும் முதலில் விடையளிக்க வேண்டும்.

« சிக்களுக்குரிய வினாக்கள் ஏதும் காணப்படுமாயின் அவை தொடர்பாக சிந்தித்து அதிக நேரத்தை வீணடிக்காமல் அதை விட்டுவிட்டு அடுத்த கேள்விக்கு செல்ல வேண்டும். நிச்சியமான விடை தெரிந்த எல்லா வினாக்களுக்கும் விடையளித்து முடிந்த பின்னர் அவ்வினாக்களுக்கு விடையளிக்க முனைய வேண்டும்.

« ஒரு வினாவுக்கு செலவிட வேண்டிய நேரம் எவ்வளவு என்பது தொடர்பாகவும் அறிந்திருத்தல் வேண்டும்.

« மாணவர்களிடம் இப்பகுதியில் உள்ள வினாக்களில் தெளிவற்ற நிலை அல்லது மயக்க நிலை காணப்படுமாயின் அது புள்ளிகளை இழக்க செய்யும் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

 

2. குறு வினாக்கள்

« மாணவர்கள் குறு வினாக்களுக்கு விடையளிக்க முன்னர், அவற்றை கவனமாக நன்கு வாசித்து விளங்கிய பின்னரே அவற்றுக்கு விடையளிக்க வேண்டும்.

« விடைகளை அளிக்கும்போது வினாக்களுக்கு ஏற்ப குறித்த ஒழுங்கு முறையிலும், தெளிவாகவும், முழுமையாகவும் விடைகளை எழுத வேண்டும்.

« ஒரு வினாவுக்கு செலவிட வேண்டிய நேரம் எவ்வளவு என்பது தொடர்பாகவும் அறிந்திருத்தல் வேண்டும்.

« ஒழுங்கு முறை மாறி எழுதப்படும் விடைகள் (விடைகள் சரியாக இருந்தாலும்) மற்றும் முழுமையாக எழுதப்படாத விடைகள் எனபவற்றிற்கு, முழுமையான புள்ளிகள் வழங்கப்படுவதில்லை.

 

3. கட்டுரை மற்றும் அரைக்கட்டமைப்பு வினாக்கள்

« கட்டுரை மற்றும் அரைக்கட்டமைப்பு வினாக்கள் முழுமையான வினாக்களாகவோ அல்லது பகுதிகளாக பிரிக்கப்பட்ட வினாக்களாகவோ காணப்பட முடியும்.

« வினாப்பத்திரத்திலுள்ள அடிப்படை அறிவுறுத்தல்களை வாசித்து நன்கு விளங்கிக்கொள்ள வேண்டும். அதாவது ஒவ்வொரு பகுதியிலிருந்தும் எத்தனை வினாக்களுக்கு விடையளிக்க வேண்டும். எந்ததெந்த வினாக்கள் கட்டாயமானது, வழங்கப்பட்டுள்ள நேரம் எவ்வளவு, குறித்த வினாக்களுக்கு எத்தனை புள்ளிகள் வழங்கப்படும் என்பனவற்றை கவனத்தில் கொள்ளவேண்டும்.

« பூரணமாக விடையளிக்க முடியுமான, ஓரளவு விடையளிக்க முடியுமான மற்றும் விடையளிக்க கடினமான வினாக்கள் எவை என்பதை சரியாக இனங்கண்டு, அதனடிப்படையில் விடையளிக்கவுள்ள எல்லா வினாக்களையும் iயாளப்படுத்திக் கொள்ள வேண்டும்.

« வினாக்களுக்கு விடையளிக்க முன்னர் அவற்றை நன்கு வாசித்து, சரியாக விளங்கி பொருத்தமான விடைகளை எழுத வேண்டும்.

« விடையளிக்கும்போது நேர மகாமைத்துவத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும். ஒரு வினாவிலேயே அதிக நேரத்தை செலவிடமால், குறித்த வினாவிற்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் அதற்கான விடைகளை எழுதி முடிக்க வேண்டும். மேலும் நேரம் தேவைப்பட்டால் எல்லா வினாக்களுக்கும் விடையளித்த பின்னர் அவற்றை தொடர வேண்டும்.

« வினாக்களுக்கு விடையளிக்கும்பொது சகல பிரதான வினாக்களையும் ஒரு புதிய பக்கத்தில் ஆரம்பிக்க வேண்டும்.

« வினா இலக்கங்கள், பிரிவுகள், உப பிரிவுகள் மற்றும் உதாரணங்கள் என்பவற்றை முறையாக வகைப்படுத்தி எழுத வேண்டும்.

« விடைகளை எழுதும்போது சுருக்க விடைகளை எழுத வேண்டிய வினாக்களுக்கு நீண்ட விளக்கங்களை எழுதுதல், விளக்கமான விடைகளை எழுத வேண்டிய வினாக்களுக்கு சுருக்க விடைகளை எழுதுதல் என்பன தவிர்க்கப்பட வேண்டும்.

« விடைகள் வினவப்பட்ட வினாவிற்கு ஏற்ப தர்க்கரீதியாகவும் பகுப்பாய்வுரீதியாகவும் எழுதப்பட வேண்டும். அதாவது, ஒவ்வொரு தலைப்போடும் தொடர்பான விடயங்களை விளக்கும்பேது நடைமுறையிலுள்ள அரசியல் செயற்பாடுகளையும் நிகழ்வுகளையும் பாடத்துடன் இணைந்த விதத்தில் விளக்க வேண்டும்.

« மாணவர்கள் இவ்வகையான வினாக்களுக்கு விடையளிக்கின்ற போது பின்வரும் அமைப்பில் அவற்றை எழுதுவது மிகவும் பயன்மிக்கதாக அமையும்.

I. அறிமுகம்     

w குறிப்பிட்ட விடயம் என்றால் என்ன?

w அது பற்றிய விளக்கம்

w அதன் தோற்றம், வரலறு மற்றும் முக்கியத்துவம் போன்ற விடயங்களை போதுமான அளவில் அறிமுகப்பகுதியில் குறிப்பிட வேண்டும்.   

 

II. உள்ளடக்கம் / கலந்துரையாடல்

w வினவப்பட்ட வினாவுக்கு பொருத்தமான விடைகளை ஒவ்வொன்றாக உரிய ஒழுங்குமுறையில் எழுத வேண்டும்.

w வினாவிற்கு ஏற்ப அவற்றை ஒவ்வொன்றாக விளக்கப்படுத் or ஆராய or விமர்சிக்க வேண்டும்.

 

III. முடிவுரை

இருதியாக நடைமுறையுடன் தொடர்புபடுத்தியவகையில் மேலே குறிப்பிட்ட விடயங்களை தொகுத்ததாக சுருக்கமான முடிவுரை ஒன்றையும் எழுத வேண்டும்.

 

பொதுவான வழிகாட்டல் விடயங்கள்

« வினாக்களின் இலக்கங்களை சரியாக இட வேண்டும். இல்லையெனில் புள்ளிகளை இழக்க நேரிடும்.

« விடைகளை குறித்த நேரத்தினுள் தெளிவாகவும், நேர்த்தியாகவும், இலகுவான மொழிநடையிலும் எழுத வேண்டும்.

« கையெழுத்துக்கள் சரியாகவும், தெளிவாகவும் காணப்பட வேண்டும்.

« சுட்டெண்ணை சகல பக்கங்களிலும் உரிய இடத்தில் எழுத வேண்டும்.

« விடைகளை எழுதும்போது சிவப்பு நிற, பச்சை நிறப் பேனாக்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.

 

பரீட்சையில் மாணவர்கள் பொதுவாக வெளிப்படுத்துகின்ற சில குறைபாடுகள்

« வினாவை விளங்கி விடையளிக்காமை.

« வினாவை கிரகிக்கமால் மனனம் செய்த ஒரு விடையை எழுதுதல்.

« கூற்றுகளை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளாமை.

« விடைகளை எழுதும்போது விமர்சன முறையில் விடயங்களை முன்வைக்காமை.

« ஒப்பிட்டு விளக்க வேண்டிய பகுதிகளை ஒப்பிடாமை.

« சம்பந்தப்பட்ட விடயத்தை மட்டும் தெரிவு செய்து எழுத முடியாமை.

« அறிமுகம் மற்றும் முடிவுரை என்பன எழுதப்படாமை.

« கூறப்பட்ட வினாக்களை விட அதிக வினாக்களுக்கு விடையளித்தல் (மேலதிகமாக விடை எழுதப்பட்ட வினாக்கள் எக்காரணம் கொண்டும் கவனத்தில் கொள்ளப்பட மாட்டாது. மாறாக நேர விரயம் மாத்திரமே ஏற்படும்)

« விடயங்களை முன்வைக்கும்போது தெளிவான புரியும் தன்மையின்மையால் நம்பிக்கையின்றி விடைகளை எழுதுதல்.

« விடைகளை முன்வைக்கும்போது விடையின் அற்றொழுக்கு பலவீனமாகக் காணப்படுதல்.

« விடைகளில் வசன உடைவுகள், எழுத்துப் பிழைகள் காணப்படல்.

« கோட்பாட்டுக்கும் நடைமுறைக்குமிடையில் வேறுபாட்டை இனம் காணாமை.

« ஒரு பாட விடயத்தை உறுதிப்படுத்துவதற்கு பிறிதொரு பாட விடயத்தை எடுக்காமை.

« வெளிவாரியான நூல்களிலிருந்து விடயங்களைச் சேர்ப்பதில் ஆர்வமின்மை.


ஆசிரியர்M.S.M. Naseem  M.Ed ®,  BA (Hons), MA (in Political Science)



No comments:

Post a Comment