கல்வியானது பல்வேறு வகையான நோக்கங்களைக் அடிப்படையாகக் கொண்டே வழங்கப்பட்டு வருகின்றது. இதன்படி சமகால நவீன உலக முறைமையில் தனிமனித, சமூக மற்றும் நாடுகளின் வளர்ச்சியிலும் முன்னேற்றத்திலும் செல்வாக்குச் செலுத்துகின்ற மிக முக்கிய காரணியாக கல்வி காணப்படுகின்றது. இதனால் இன்றைய உலகில் கல்விக்கு மிக உயர்ந்த இடம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்தவகையில் கல்வியின் சமகால முக்கிய வகிபங்குகளாக பின்வரும் விடயங்களை குறிப்பிடலாம்.
Saturday, August 10, 2024
Thursday, August 8, 2024
கல்வியும் மனித அபிவிருத்தியும்
கல்வி என்பது உண்மையைத் தேடுகின்ற, வாழ்க்கையில் நீடித்த ஒரு செயன்முறையாகும். இது சாந்தமான பண்புகளை வளர்க்கக் கூடியதாகவும், ஒழுக்கத்தை விருத்தி செய்யக் கூடியதாகவும், சமூகத்தினதும் சூழலினதும் தேவைகளுக்கு ஏற்ப வழங்கப்படக் கூடியதாகவும், சமூக வாழ்க்கைக்கு தேவையான பயிற்சிகளை வழங்கக் கூடியதாகவும் மற்றும் சகலருக்கும் சமமான வகையில் கிடைக்கக் கூடியதாகவும் அமைய வேண்டும். கல்வியானது முன்பள்ளிக் கல்வி, பொதுக் கல்வி, உயர் கல்வி, தொழிற் கல்வி, வளர்ந்தோர் கல்வி, சமூகக் கல்வி, பாலியல் தொடர்பான கல்வி என பல்வேறு வகையான பிரிவுகளை உள்ளடக்கியதாகக் காணப்படுகிறது.
பிள்ளைகளின் ஆளுமைச் சீராக்கத்தில் சமூகத்தினதும் ஆசிரியர்களினதும் வகிபங்கு
ஆளுமையைக் குறிக்கும் Personality எனும் ஆங்கிலச்சொல், மறைப்பு / முகமூடி எனும் கருத்தையுடைய persona எனும் இலத்தீன் மொழிச் சொல்லிருந்து வந்ததாகும். இதன்படி ஆளுமை என்பது ஒருவர் அணிந்திருக்கும் முகமூடி என்னும் கருத்தினை வெளிப்படுத்துகிறது.
உளவியல் நோக்கில் ஆளுமை என்பது ஒருவரின் ஒழுங்கமைந்த இயங்கியல் பண்புகள், அவை தோற்றுவிக்கும் நடத்தைகள், உணர்வுகள் மற்றும் சிந்தனைகளைக் குறிக்கிறது.
Subscribe to:
Posts (Atom)