.உங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக ------- Meesan Way ------- தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்

Saturday, August 10, 2024

கல்வியும் வேலை உலகும்

கல்வியானது பல்வேறு வகையான நோக்கங்களைக் அடிப்படையாகக் கொண்டே வழங்கப்பட்டு வருகின்றது. இதன்படி சமகால நவீன உலக முறைமையில் தனிமனித, சமூக மற்றும் நாடுகளின் வளர்ச்சியிலும் முன்னேற்றத்திலும் செல்வாக்குச் செலுத்துகின்ற மிக முக்கிய காரணியாக கல்வி காணப்படுகின்றது. இதனால் இன்றைய உலகில் கல்விக்கு மிக உயர்ந்த இடம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்தவகையில் கல்வியின் சமகால முக்கிய வகிபங்குகளாக பின்வரும் விடயங்களை குறிப்பிடலாம்.

Thursday, August 8, 2024

கல்வியும் மனித அபிவிருத்தியும்

கல்வி என்பது உண்மையைத் தேடுகின்ற, வாழ்க்கையில் நீடித்த ஒரு செயன்முறையாகும். இது சாந்தமான பண்புகளை வளர்க்கக் கூடியதாகவும், ஒழுக்கத்தை விருத்தி செய்யக் கூடியதாகவும், சமூகத்தினதும் சூழலினதும் தேவைகளுக்கு ஏற்ப வழங்கப்படக் கூடியதாகவும், சமூக வாழ்க்கைக்கு தேவையான பயிற்சிகளை வழங்கக் கூடியதாகவும் மற்றும் சகலருக்கும் சமமான வகையில் கிடைக்கக் கூடியதாகவும் அமைய வேண்டும். கல்வியானது  முன்பள்ளிக் கல்வி, பொதுக் கல்வி, உயர் கல்வி, தொழிற் கல்வி, வளர்ந்தோர் கல்வி, சமூகக் கல்வி, பாலியல் தொடர்பான கல்வி என பல்வேறு வகையான பிரிவுகளை உள்ளடக்கியதாகக் காணப்படுகிறது. 

பிள்ளைகளின் ஆளுமைச் சீராக்கத்தில் சமூகத்தினதும் ஆசிரியர்களினதும் வகிபங்கு

ஆளுமையைக் குறிக்கும் Personality எனும் ஆங்கிலச்சொல், மறைப்பு / முகமூடி எனும் கருத்தையுடைய persona எனும் இலத்தீன் மொழிச் சொல்லிருந்து வந்ததாகும். இதன்படி ஆளுமை என்பது ஒருவர் அணிந்திருக்கும் முகமூடி என்னும் கருத்தினை வெளிப்படுத்துகிறது. உளவியல் நோக்கில் ஆளுமை என்பது ஒருவரின் ஒழுங்கமைந்த இயங்கியல் பண்புகள், அவை தோற்றுவிக்கும் நடத்தைகள், உணர்வுகள் மற்றும் சிந்தனைகளைக் குறிக்கிறது. 

Saturday, June 1, 2024

க.பொ.த உயர் தரத்தில் கலைத்துறையை தெரிவு செய்வதால் கிடைக்கும் நன்மைகள்

க.பொ.த உயர் தரத்தில் கலைத்துறையை மாணவர்கள் தெரிவு செய்து கற்பதன் மூலம் அவர்களால் பல்வேறு நன்மைகளை அடைந்துகொள்ள முடியுமாக இருக்கின்றது. எனினும் அதிகமான மாணவர்கள், பெற்றார்கள் மற்றும் ஆசிரியர்கள் இது தொடர்பாக அறிந்திருப்பதில்லை. எனவேதான் இவ்வாக்கமானது அவர்களுக்கு இது தொடர்பான தெளிவினை வழங்கும் நோக்கில் தயாரிக்கப்பட்டு பதிவிடப்பட்டுள்ளது.

Friday, May 17, 2024

க.பொ.த உ/த பாடத்தெரிவும் சா/த பின்னரான கல்வி வாய்ப்புக்களும்

இன்று அதிமான மாணவர்கள் க.பொ.த சதாரண தரப் பரீட்சையினைத் தொடர்ந்து தமது உயர்தர மற்றும் தொடர் கல்வியை தெரிவு செய்வதில் சிக்கல் நிலையினை கொண்டிருப்பதை அவதானிக்க முடிகின்றது. இதற்கு அவர்களுக்கு இது தொடர்பான தெளிவுகள் வழங்கப்படாமை முக்கிய காரணமாகும். எனவேதான் இம்மாணவர்களுக்கும் அவர்களது பெற்றோர்களுக்கும் தெளிவினை வழங்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டுவரும் வழிகாட்டல் கருத்தரங்கின் குறிப்புகள் இங்கே பதிவிடப்படுகின்றது.

Sunday, March 17, 2024

குடியியற் கல்வி (க.பொ.த சா.த) அலகு ரீதியான கடந்தகால வினாக்கள்

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு உதவக்குடிய வகையில் குடியியற் கல்வி பாடத்தற்கான 2016 முதல் 2022 வரை நடைபெற்ற பரீட்சைகளின்  கடந்தகால வினாக்கள்  அலகு ரீதியாக தொகுக்கப்பட்டு இங்கு வடிவில் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் கல்வியமைச்சினால் மதிப்பீட்டுக்காக வெளியிடப்படும் புள்ளித்திட்டங்களும் இதனுடன் இணைக்கப்பட்டுள்ளது தேவையானவர்கள் தரவிறக்கம் செய்து கொள்ள முடியும்.

Thursday, February 1, 2024

க.பொ.த (சா.த) ஆங்கிலம் கடந்தகால வினாத்தாள்கள் மற்றும் விடைகள்

க.பொ.த (சா.த) ஆங்கிலப் பாடத்திற்கான கடந்தகால வினாத்தாள்கள் மற்றும் விடைகள் இங்கு இணைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆக்கத்திற்கும் கீழுள்ள இணைப்பை செய்வதன் மூலம் அவற்றை தரவிறக்கம் செய்துகொள்ள முடியும்.

Tuesday, January 16, 2024

Preposition (முன்னிடைச் சொற்கள்)

ஒரு சொல்லை இன்னொரு சொல்லுடன் இனைக்கப் பயன்படும் சொற்கள் அல்லது ஒரு வாக்கியத்திலுள்ள சொற்களுக்கிடையிலான உறவுகளை விவரிக்கும் சொற்கள் முன்னிடைச் சொற்கள் அல்லது உருப்பிடைச் சொற்கள் எனப்படும். அதாவது இவை ஒரு வாக்கியத்தில் வருகின்ற ஒரு பெயர்ச்சொல் அல்லது பிரதிப் பெயர்ச்சொல்லுக்கும் மற்றும் இன்னுமொரு பெயர் அல்லது பிரதிப் பெயர்ச் சொல்லுக்கும் இடையிலான தொடர்பை விளக்குவதற்கு பயன்படும் சொற்களாகும். 

Adverb (வினையெச்சம்)

ஒரு வினைச்சொல்லினை வர்ணிக்க அல்லது சிறப்பிக்க அல்லது விவரித்துக் கூற பயன்படும் சொற்கள் வினையெச்சங்கள்  (Adverbs) எனப்படும். இவை வினையடைகள், வினை உரிச்சொற்கள் எனவும் தமிழில் அழைக்கப்படுகின்றது. Adverbs ஆனது ஒரு செயலை விவரித்துக் கூறும்போது அச்செயலை பின்வரும் முறைகளில் விவரித்து அல்லது வர்ணித்துக் கூறும்.

Pronouns (பிரதிப் பெயர்ச் சொற்கள்)

பெயர்களுக்கு அல்லது பெயர்ச்சொற்களுக்குப் பதிலாக பயன்படுத்தப்படும் சொற்கள், பிரதிப் பெயர்ச்சொற்கள் எனப்படும். இவை சுட்டுப் பெயர்கள், பதிலிடு சொற்கள் எனவும் அழைக்கப்படும். இது ஆங்கிலத்தில் பல பகுதிகளாக பிரித்து நோக்கப்படுகிறது. அவற்றை இங்கு நோக்குவோம்.

Adjectives (பெயர் வர்னணைச் சொற்கள்)

 ஆங்கில இலக்கணத்தில் முக்கியமான ஒரு பகுதியாக பெயர் வர்னணைச் சொற்கள் காணப்படுகின்றன. பெயர்ச் சொல் ஒன்றை அல்லது பிரதிப் பெயர்ச் சொல் ஒன்றை விபரிக்க அல்லது வர்ணிக்கப் பயன்படுத்தப்படும் சொற்கள் பெயர் வர்னணைச் சொற்கள் எனப்படும். இவை பெயர் உரிச்சொற்கள் அல்லது பெயரடைச் சொற்கள் எனவும் அழைக்கப்படும். இவை எப்போதும் பெயர்ச் சொல்லுக்கு முன்னாலேயே வரக்கூடியதாகும்.

Gender (பால் பாகுபாடு)

தமிழ் இலக்கணத்தில் காணப்படுவது போன்று ஆங்கிலத்திலும் ஆண்பால், பெண்பால், பொதுப்பால் என பால் பாகுபாடுகள் காணப்படுகின்றன. அவற்றை இங்கு நோக்குவோம்.

Articles (சுட்டிடைச் சொற்கள்)

ன்றை சுட்டிக்காட்ட பயண்படுத்தப்படும் சொற்கள் சுட்டிடைச் சொற்கள் எனப்படும். ஆங்கிலத்தில் A, An, The எனும் மூன்று சுட்டிடைச் சொற்கள் காணப்படுகின்றன. இவை Definite Articles,  Indefinite Articles என இரண்டு வகையாகப் பிரித்து நோக்கப்படுகிறது. இவை பெயர்ச் சொற்களைச் சார்ந்து வரும் அடைச்சொற்களாகும்.

Verbs (வினைச் சொற்கள்)

ஒரு செயலை குறிக்க பயண்படுத்தப்படும் சொற்கள் வினைச் சொற்கள் எனப்படும். அதாவது மனிதர்களாகிய நாங்கள் அல்லது ஏணைய படைப்புக்கள் ஏதாவது ஒரு  செயலில் ஈடுபடுவதை குறித்துக்காட்ட பயன்படுத்தும் சொற்களாகும். இவ் வினைச்சொற்கள் வெவ்வேறு நிலைகளுக்கேற்ப ஐந்து வடிவங்களைப் பெற்று வரும். அவற்றை பின்வருமாறு பிரித்து நோக்கலாம்.

Nouns (பெயர்ச் சொற்கள்)

பிரபஞ்சத்திலுள்ள இடங்கள், பொருற்கள், மனிதர்கள், உயிரினங்கள், உணர்வுகள் என நாம் உலகில் காணும் அல்லது பயன்படுத்தும் பெயர்கள் யாவும் பெயர்ச் சொற்கள் என்ற வகைக்குள் அடங்கும். ஆங்கிலத்தில் இவை 'Noun' என அழைக்கப்படுகிறது. இச்சொல் “nōmen” (பெயர்) என்ற இலத்தீன் மொழிச் சொல்லிருந்து தோன்றியதாகும்.