இங்கு பாடசாலை நிருவாகச் செயற்பாடுகளுக்கு தேவையான தகவல்களை உள்ளடக்கிய பல்வேறு சுற்றுநிருபங்கள், படிவங்கள் மற்றும் வழிகாட்டிகள் போன்ற பல்வேறு ஆவணங்கள் இணைக்கப்பட்டுள்ளது. உரிய தலைப்புக்களை Click செய்வதன் மூலம் அது தொடர்பான ஆக்கத்தினை தறவிறக்கம் செய்துகொள்ள அல்லது பார்வையிட முடியும்.
Wednesday, July 5, 2023
Sunday, June 11, 2023
சமகால அரசியல் கருத்தியல்களும் அவற்றின் பொருத்தப்பாடுகளும்
கருத்தியல் எனும் சொல் முதலில் பிரெஞ்சுப் புரட்சியில் உருவாகிப் பின்னர் பலவகைப் பொருள் மாற்றங்களை அடைந்த ஒன்றாகும். கருத்தியல் (Ideology) என்பது தனி ஒருவர் or ஒரு குழு or ஒரு சமூகம் பெற்றிருக்கும் வரன்முறை நம்பிக்கைகள், மன எண்ணக்கருக்கள் ஆகியவற்றின் நுண்ணிலைத் தொகுப்பாக காணப்படுவதுடன், அது உலகப் பார்வை, கற்பனை (சமூகவியல்), இருப்பியல் (மெய்யியல்) ஆகியவற்றை விடக் குறுகிய கருத்துப்படிமம் கொண்டதாகும். கருத்தியல் என்றால் என்ன என்பது பற்றி பொதுவான ஒரு வரைவிளக்கனம் காணப்படாத போதும், அது தொடர்பாக பின்வரும் மூன்று அறிஞர்களின் கூற்றுக்கள் பிரபல்யமானதாகும்.
Tuesday, May 9, 2023
தரம் 01 தொடக்கம் 13 வரையான சகல பாடங்களுக்குமான பாடத்திட்டங்கள்
தரம் 01 தொடக்கம் 13 வரையான சகல பாடங்களுக்குமான பாடத்திட்டங்கள் இங்கு வழங்கப்பட்டுள்ளன. உரிய பாடத்தினை Click செய்வதன் மூலம் தேவையான பாடத்திட்டங்களை PDF வடிவில் தறவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ள முடியும்.
Sunday, May 7, 2023
இலங்கையில் பொதுத்துறை நிர்வாகமும் பிரதேச செயலகங்களும்
இன்று உலகளவில் மிகவும் முக்கியத்துவமிக்க ஒரு அம்சமாக பொதுத் துறை நிர்வாகம் காணப்படுகின்றது. இத்துறை மூலம் ஒரு நாட்டில் வாழும் பொதுமக்களுக்கு பல விதமான சேவைகள் முன்னெடுக்ப்படுவதுடன், அதன் நிர்வாக நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ஒரு நாட்டின் சிறந்த முகாமைத்துவ செயற்பாட்டிற்கும், அவிவிருத்திக்கும் ஒரு அடிப்படையான அம்சமாகவும் இது காணப்படுகின்றது. இதனால் அரசாங்கத்தின் நான்காவது கரமாகப் பொதுத்துறை நிர்வாகமானது சிறப்பிக்கப்படுகின்றது.
Monday, May 1, 2023
இலங்கையின் கல்விப்புலம் சார்ந்த புள்ளிவிபரத் தகவல்கள்
இலங்கையில் அரச துறைகளுக்கான ஆட்சேர்ப்புக்கள் மற்றும் பதவி உயர்வுகளை மேற்கொள்ள நடத்தப்படும் SLEAS, SLTES, SLPS, SLTS போன்ற பரீட்சைகளுக்கும், மேலும் பல்வேறு வகையான தகுதிகான் மற்றும் நுழைவுப் பரீட்சைகளுக்கும் உதவும் வகையில் கல்விப்புலத்துடன் தொடர்புடைய பல தகவல்கள் இங்கு தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.
Wednesday, April 26, 2023
அரச சேவையுடன் தொடர்பான பொதுப் படிவங்கள் (Government General Forms)
இலங்கையில் அரச சேவையிலுள்ள ஊழியர்கள் தமது பல்வேறு தேவைகளுக்காக வேண்டி பயன்படுத்த வேண்டியுள்ள பல்வேறு வகையான பொதுப் படிவங்கள் (General Forms) இங்கு PDF வடிவில் இணைக்கப்பட்டுள்ளது.
உரிய படிவத்தின் இலக்கத்தை அல்லது பெயரை Click செய்வதன் மூலம் குறித்த படிவத்தினை இலகுவாக தரவிறக்கம் செய்து பயன்படுத்திக்கொள்ள முடியும்.
Saturday, January 28, 2023
இலங்கையின் தற்போதைய உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முறை தொடர்பான பார்வை (தொடர் - 01)
இலங்கையில் தற்போது உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்கள் கலப்பு விகிதாசார முறையின் அடிப்படையிலேயே நடாத்தப்படுகின்றது. (2017 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க உள்ளூராட்சி அதிகார சபைத் தேர்தல்கள் திருத்தச் சட்டத்தின்படி)
கலப்பு விகிதாசார முறை என்பது, ஏதேனும் ஒரு உள்ளுராட்சி மன்றுக்கான உறுப்பினர்கள் வட்டார (உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான பிரதேச அலகு) மட்ட ரீதியாகவும் பொது ஆவணத்தின் மூலமாகவும் தேர்ந்தெடுக்கும் வழிமுறையாகும்.
Subscribe to:
Posts (Atom)