.உங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக ------- Meesan Way ------- தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்

Tuesday, November 3, 2026

நவீன கல்வி முறையில் தொழில்நுட்பமும் பாரம்பரியக் கற்றலும்: இலங்கைக்கான பாடங்கள்

இன்றைய உலகம் தொழில்நுட்பப் புரட்சியின் உச்சக்கட்டத்தை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறது. குறிப்பாக, தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியானது மனித வாழ்க்கையின் அனைத்துத் துறைகளிலும் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் கல்வித்துறையும் இம்மாற்றத்திலிருந்து விலகி நிற்கவில்லை. ஒரு காலத்தில் கரும்பலகை, வெண்கட்டி, பாடப்புத்தகம், பேனா, பயிற்சிக் கொப்பிகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு முன்னெடுக்கப்பட்ட கல்விச் செயற்பாடுகள் இன்று கணினி, மடிக்கணினி, கையடக்கத் தொலைபேசி, டெப்லெட், ஸ்மார்ட் போர்ட் மற்றும் இணையவழிக் கற்றல் தளங்கள் எனப் பல்வேறு டிஜிட்டல் சாதனங்களை மையமாகக் கொண்டு முன்னெடுக்கப்படுகின்றன.