.உங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக ------- Meesan Way ------- தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்

Thursday, August 6, 2026

அரசறிவியல் (02) நூல் அறிமுகம்

இன்று உலகளவில் முக்கியத்துவமிக்க ஒரு கற்கைத்துறையாக அரசறிவியல் காணப்படுகிறது. இலங்கையைப் பொருத்தமட்டிலும் கல்விப் பொதுத் தராதர உயர்தரம் மற்றும் பல்கலைக்கழகக் கற்கைகளில் முக்கியத்துவம் பெற்றுள்ள ஒரு பிரதான கற்கையாகக் அது காணப்படுகின்றது.

அரசறிவியல் எனும் இந்நூலானது, முழுமையாக 2017ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படும் புதிய பாடத்திட்டத்தின் கீழ், கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை அடிப்படையாகக் கொண்டு, முழுமையாக புதிய பாடத்திட்டத்தை தழுவிய வகையில், இலகுவான மொழிநடையில் அரசறிவியல் பாடத்திட்டத்தின் கீழ் நான்காவது முதல் ஆறாவது வரையான மூன்று அலகுகளையும் உள்ளடக்கிய வகையில்  இற்றைப்படுத்தப்பட்டு தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்நூல் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு வழிகாட்டியாகவும் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுக்கொள்ள உதவக்கூயதாகவும் அமைந்துள்ளது.

 நூலின் பெயர் : அரசறிவியல்

பாகம் : 02

பக்கங்களின் எண்ணிக்கை : 124

விலை : இலவசம்

வெளியீட்டாளர் : Meesan Way Publication


ஆசிரியர் அறிமுகம்

இப்புத்தக ஆசிரியரான பொலன்னறுவையைச் சேர்ந்த ஆ.ளு.ஆ. நஸீம் அவர்கள் தனது ஆரம்ப மற்றும் இடைநிலைக் கல்வியை பொலன்னறுவை முஸ்லிம் தேசிய பாடசாலை மற்றும்  மாதம்பை  இஸ்லாஹிய்யா  அரபுக்  கல்லூரி ஆகியவற்றில் பயின்றார்.  பின்னர்   தனது இளமானிப்  பட்டத்தினை  இலங்கை  தென்கிழக்குப் பல்கலைக் கழகத்திலும், அரசறிவியல் துறையில் முதுமானிப் பட்டத்தினை இலங்கை பேராதனைப் பல்கலைக் கழகத்திலும் பூர்த்தி செய்துள்ளதுடன், பட்டப்பின் கல்வி டிப்ளோமா கற்கைநெறி மற்றும் கல்வியியல் துறையில் முதுமானிப் பட்டப்படிப்பு  ஆகியவற்றை இலங்கை திறந்த பல்கலைக் கழகத்திலும் பூர்த்தி செய்துள்ளார். தற்போது இவர் அரசறிவியல் பாட ஆசிரியராகவும், இலங்கை தேசிய கல்வி நிறுவகத்தின் பகுதி நேர விரிவுரையாளராகவும் காணப்படுகிறார்.

ஏற்கனவே அரசறிவியல் பாடத்தை கற்பிக்கும் ஆசிரியர்கள் மற்றும் கற்கும் மாணவர்களுக்கு கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கு வழிகாட்டும் வகையில் 'அரசறிவியல் பரீட்சை வழிகாட்டி' மற்றும் அரசறிவியல் (பாகம் 01) ஆகிய நூல்களையும் ஆசிரியர் எழுதி உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். அத்துடன் தனது ‘Meesan Way’ இணையத்தளம் மற்றும் சமூக வலைத்தளங்களில் அரசறிவியல் சார்ந்த பல ஆக்கங்களை தொடர்ந்தும் எழுதி வருவதுடன், நாடளாவிய ரீதியில் பல கருத்தரங்குகளை நடாத்தி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

நூலின் உள்ளடக்கம் பின்வருமாறு

அலகு 04 : அரசாங்க மாதிரிகள்

4.1. அரச அதிகாரத்தைப் பகிரும் முறையினை அடிப்படையாகக் கொண்ட அரசாங்க மாதிரிகள்

  • ஒற்றையாட்சி முறை
  • சமஷ்டியாட்சி முறை
  • பாதி சமஷ்டி  முறை
  • கூட்டுச்சமஷ்டி முறை

4.2 நிறைவேற்று அதிகாரம் ஒழுங்கமைந்துள்ள விதத்திற்கு ஏற்ப காணப்படும் அரசாங்க மாதிரிகள்

  • பாராளுமன்ற (மந்திரிசபை) முறை
  • ஜனாதிபதித்துவ முறை
  • கலப்பு முறை
  • அனைத்தாண்மை முறை 

அலகு 05 : அரசியல் கருத்தியல்கள்

5.1. தாராண்மைவாதம்

5.2. சமவுடைமைவாதம்

5.3. குடியரசுவாதம்வாதம்

5.4. சமூக ஜனநாயகவாதம்

5.5. பாசிசவாதம்

5.6. தேசியவாதம்

5.7. மதசார்பின்மைவாதம்

5.8. பெண்ணியவாதம்

அலகு 06 : மோதலும் மோதல் தீர்த்தலும்

6.1. மோதல் தொடர்பான வரைவிலக்கணங்களும் வகைப்படுத்தல்களும்

6.2. மோதல் தீர்வுச் செயன்முறைகள்

  • முன்னெச்சரிக்கை செய்தல்
  • மோதலைத் தவிர்த்தல்
  • மோதல் முகாமைத்துவம்
  • மோதல் நிலை மாற்றம்
  • மோதலுக்குப் பின்னரான சமாதானத்தைக் கட்டியெழுப்புதல்
  • மோதல் தீர்வு

6.3. மோதல் தீர்வு ஊடகங்கள்

  • பேச்சுவார்த்தை
  • மத்தியஸ்தம் செய்தல்
  • சமாதான உடன்படிக்கைகள்
  • சமாதானத்தைக் கட்டியெழுப்புதல் 

6.4. சமாதானத்தைக் கட்டியெழுப்புதல்

  • வரைவிலக்கணம் மற்றும் அணுகுமுறைகள்
  • மீள்கட்டமைத்தல்

பதவிறக்கம்  (Download) செய்துகொள்ள முடியும்.






No comments:

Post a Comment