Monday, June 30, 2014
Sunday, June 22, 2014
முக்கியத்துவமிக்க ஊடகங்களும் அதன்பாலான முஸ்லிம்களுக்குள்ள தேவைகளும்
மனித சிந்தனையைச்
செம்மைப் படுத்துவதிலும், நாகரீகத்தைக் கட்டியெலுப்புவதிலும்
இன்று ஊடகங்கள் மிக முக்கியதொரு இடத்தை மக்கள் மத்தியில் பெற்றுள்ளன. மனிதர்களை சீரான-தவறான
வழிகளின் பால் இட்டுச் செல்லக்
கூடியதாகவும், பொய்யை உண்மையாகவும்-உண்மையை
பெய்யாகவும் மாற்றக் கூடிய கருவியாகவும், ஒரு நாட்டின் ஆட்சியாளர்களையே மாற்றக்கூடிய சக்தியாகவும் ஊடகங்கள் இன்று மாறியுள்ளதை
எங்களால் கண்டுகொள்ள முடியும். சுருக்கமாக கூறுவதாயின், தற்காலத்தின் மாபெரும் தீர்மானிக்கும் சக்தியாக
இந்த தகவல் ஊடகங்கள் மாறியிருக்கின்றன.
Wednesday, June 18, 2014
அழுத்கம சம்பவத்திலிருந்து முஸ்லிம்கள் பெறவேண்டிய படிப்பினை என்ன?
பல்வேறுபட்ட காலப்பகுதிகளிலும்
எமது முஸ்லிம் சமூகம் பல்வேறு வகையான அடக்குமுறைகளுக்கும், இனவெறித்தாக்குதல்களுக்கும், இனவாத செயற்பாடுகளுக்கும் உட்பட்டுவருவதை நாம் அவதானிக்கின்றோம்.
குறிப்பாக எமது இலங்கை தாய்நாட்டில் அன்மைக்காலமாக இவ்வாறான நிகழ்வுகள் அதிகரித்திருப்பதை
கண்டுகொள்ளமுடியும். இதற்கு உதாரணமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை பேரினவாதிகளால் பேருவல,அழுத்கம பகுதிகளில் நடத்தப்பட்ட இனவெறித்தாக்குதல்களை
எடுத்துக்காட்டலாம்.
Tuesday, June 10, 2014
இலங்கை தேசத்தை கட்டியெழுப்புவதில் முஸ்லிம்களின் பங்கு
இலங்கை தென் ஆசியாப்
பிராந்தியத்தில் அமைந்துள்ள பன்மைத்துவ சமூக அமைப்பைக் (plural
communities status) கொண்ட ஒரு நாடாகும். இங்கு சிங்களவர், இந்துக்கள், முஸ்லிம்கள், கிரிஸ்தவர்கள் போன்ற இனக் குழுமங்கள் வாழ்ந்து வருகின்றன.
ஒவ்வொரு இனமும் இந்நாட்டில் தொன்மை வரலாற்றினைக் கொண்டு காணப்படுவது அடையாளமிட்டுக்
கூறப்படவேண்டிய சிறப்பம்சமாகும். முஸ்லிம்கள் இந்நாட்டில் பூர்வீக வரலாற்றைக் கொண்ட
சமூகம் என்பதையும் இத்தேசத்தை சகல விதத்திலும் கட்டியெழுப்புவதில் தொன்மைக் காலம் முதல்
இற்றை வரை பாரிய பங்களிப்புக்களை ஆற்றி வருகின்றனர் என்பதும் வரலாற்று சான்றாதாரங்களின்
பின்னணியில் நிரூபனமான ஒன்றாகும்.
Monday, June 2, 2014
பல்கலைக்கழக வாழ்வும் நெருக்கீடுகளும் - Crisis and University life
சாதாரணமாக
எமது நாளாந்த வாழ்வில் நெருக்கடி
நிலைகள் தோன்றுவது இயல்பு. நெருக்கடி
நிலைகள் எம்மை இயங்க வைக்கின்றது.
நெருக்கடி நிலைகளில் வாழப் பழகுவதே மனிதனிடமுள்ள
இயல்பாகும்.நெருக்கடி நிலைகளே இல்லாத வாழ்வினை
ஒருவரால் கற்பனை பண்ணிக் கூடப்
பார்க்க முடியாது. மனிதன் சமூகப் பிராணி
என்பதன் அடிப்படைத் தத்துவத்தின் பிரகாரம் அமைகின்ற சமூகஞ்சார் வாழ்வில் நெருக்கடிகளும் இயல்பானதே.
Sunday, June 1, 2014
மறைக்கப்பட்டிருக்கிருக்கும் பைபில் பர்ணாபா
இங்கு கிறிஸ்தவ திருச்சபை
அறிந்திராத ஒரு பைபிலும் உண்டு. அதுதான் ஐந்தாவது பைபிலாகிய பைபில் பர்ணாபா.
இந்த பைபிளைத் தொகுத்த
பர்ணாபா என்பவர் கிறிஸ்தவ பெரியார்களில் ஒருவராவார். மேலும் ஆரம்ப கட்டங்களில் கிறிஸ்தவ
மதத்தை பிரச்சாரம் செய்தவர்களில் இவரும் ஒருவர் என்பதற்கான
உடன்படான ஆதாரங்களும் கிறிஸ்தவ அறிஞர்களிடமுண்டு. இவருடன் இணைக்கப்படும் இத்தொகுப்பில்
இவர் மஸீஹின் 12 சீடர்களில் ஒருவரென்றும்,
திருச்சபையின் கருத்துப்படி
இவர் ஒரு தூதர் என்றும் அறியப்படுகின்றது.
மேற்கினதும், இஸ்லாத்தினதும் பார்வையில் கருத்துச் சுதந்திரம்
இன்று அநேக இடங்களில் எல்லோரும்
கேள்விப்படும் ஒரு வார்த்தைதான் 'கருத்துச்
சுதந்திரம்' என்ற பதமாகும். இது
பின்வருமாறு வரைவிலக்கனப் படுத்தப்படுகிறது. 'குறித்த சமுதாயமொன்றில் ஒரு
தனி மனிதனோ அல்லது ஒரு
குழுவோ அல்லது ஒரு சமூகமோ
பேச்சின் மூலம் அல்லது எழுத்தின்
மூலம் தமது கருத்தை, உணர்வை
வெளிப்படுத்தும் உரிமையாகும்.' சுருங்கச் சொன்னால், பேச்சுச் சுதந்திரம், எழுத்துச் சுதந்திரம், நம்பிக்கைச் சுதந்திரம் ஆகியவற்றை உள்ளடக்கிய எண்ணக்கருவே கருத்துச்
சுதந்திரமாகும்.
Subscribe to:
Posts (Atom)