பல்வேறுபட்ட காலப்பகுதிகளிலும்
எமது முஸ்லிம் சமூகம் பல்வேறு வகையான அடக்குமுறைகளுக்கும், இனவெறித்தாக்குதல்களுக்கும், இனவாத செயற்பாடுகளுக்கும் உட்பட்டுவருவதை நாம் அவதானிக்கின்றோம்.
குறிப்பாக எமது இலங்கை தாய்நாட்டில் அன்மைக்காலமாக இவ்வாறான நிகழ்வுகள் அதிகரித்திருப்பதை
கண்டுகொள்ளமுடியும். இதற்கு உதாரணமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை பேரினவாதிகளால் பேருவல,அழுத்கம பகுதிகளில் நடத்தப்பட்ட இனவெறித்தாக்குதல்களை
எடுத்துக்காட்டலாம்.
இவ்வாறான பிரச்சினைகள்
ஏற்படும்போது எமது முஸ்லிம்கள் ஆவேசப்பட்டு பொங்கி எழுந்து பாதைகளில் இறங்கி ஆர்ப்பாட்டம்
செயவதும், பின் சில நாட்களில்
அதைமறந்துவிடுவதும், பின் மீண்டும் ஒரு
பிரச்சினை எழும்போது மீண்டும் ஆவேசப்பட்டு அதேபோல் பாதைகளில் ஆர்ப்பாட்டம் செய்வதும்,
பின்னர் மறந்துவிடுவதுமென
எமது செயற்பாடுகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது. ஆனால் பிரச்சினைகள் முடிந்தபாடில்லை
மாறாக நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டேதான் இருக்கின்றது.
இதற்கான காரணம் எங்களது
எதிர்ப்பு நடவடிக்கைகளும்,கண்டனங்களும் வெறுமனே
இவ்வாறான இஸ்லாமிய விரோத செயற்பாடுகளில் ஈடுபடும் வெளிப்படையான காரணிகளை மாத்திரம்
மையப்படுத்தி காணப்படுகின்றமையாகும். எனவேதான் சில இஸ்லாமிய விரோதப்போக்கு கொண்ட தீய
சக்திகள் மரைமுகமாக இருந்து தொடர்ந்தும் இவ்வாறான செயற்பாடுகளை தூண்டியும்,
அதற்கு உதவியும் வருகின்றன.
அந்தவகையில் இந்த பொதுபல சேனா இல்லாது போனால் இன்னும் இது போன்ற 1000 சேனாக்கள் இவ்வாறான தாக்குதல்களை மேற்கொள்ள எதிர்காலத்தில்
தோன்றலாம். எனவேதான் இந்த விடயத்தில் முஸ்லிம்களாகிய நாம் மிக்க கவனத்தோடும்,
நிதானத்தோடும் சிந்தித்து
செயற்படவேண்டிய தேவையுள்ளது.
செய்யவேண்டியது என்ன?
'நாம் ஏன் விழுந்தோம்
என்ற காரணத்தை அறியாமல் எழுந்து நடக்க முயற்சிப்போமானால் மீண்டும் மீண்டும் வீழ்ந்து
மடிய வேண்டியதுதான்' என இமாம் கஸ்ஸாலி(ரஹ்)
தனது 'இஹ்யாவுல் உழுமுத்தீன்'
எனும் புத்தகத்தில் குறிப்பிடும்
அம்சம் இங்கு மிக முக்கியமாக நம் கவணத்தில் கொள்ளப்பட வேண்டிய தேவையுள்ளது.
அந்தவகையில் முதலில்
இந்தப்பிரச்சினைக்கான மூலக்காரணிகளை இனம்கான வேண்டும் அதாவது
•இந்த நாசகரமான இனவெரிச்
செயற்பாடுகளை தூண்டுகின்றவர்கள் யார்?
•இதற்கு பின்னால் இருந்து
மறைமுகமாக, வெளிப்படையாக இவற்றை
வழி நடத்துகின்ற, இதற்கு உதவுகின்ற
காழ்ப்புணர்ச்சி கொண்ட உள்நாட்டு, வெளிநாட்டு சக்திகள்
எவை?
•அவர்களின் இலக்குகள்,
திட்டங்கள் என்ன?
•இவ்வாறான செயற்பாடுகளால்
எமது சமூகத்துக்கு ஏற்படக்கூடிய இழப்புக்கள் எத்தகையவை?
போன்றவற்றை மிக நுணுக்கமாக
ஆராய்ந்து சரியான உண்மைத்தகவல்களை பெற்று அதற்கான மாற்றுத்தீர்வுகளை நோக்கி எமது போராட்டத்தினை,
செயற்பாடுகளை முன்னெடுக்க
கூடியவர்களாக, சமூகத்தை வழி நடத்தக்
கூடியவர்களாக நாம் மாறவேண்டும்.
அந்தவகையில் இவற்றை எவ்வாறு முறையடிக்கலாம்?,
இதனால் எமது சமூகத்துக்கு
ஏற்படவிருக்கும் பாதிப்புக்களை எவ்வாறு இல்லாது செய்யலாம் or குறைக்கலாம்?,
இதற்கான முன் ஏற்பாடுகளை எவ்வாறு
செய்வது?, இவ்வாறான வன்முறைகளை
செயகின்ற, தூண்டுகின்ற,
இதற்கு உதவுகின்ற விசமிகள்
மீது அழுத்தங்களை பிரயோகித்து அவர்களை தடுப்பது எவ்வாறு?, எமக்கு ஏற்படும் பிரச்சினைகளை எவ்வாறு பல்வேறு தரப்பினருக்கும்
தெரியும் வகையில் கொண்டு செலவது போன்ற பல்வேறு அம்சங்களை திட்டமிட்டுக் கொள்ளவேண்டும்.
அத்துடன் இந்த சம்பங்களுடன்
தொடர்புடைய முஸ்லிம் விரோதப்போக்குடைய நாசகார சக்திகளுக்கு உரிய தண்டனகைளை பெற்றுக்கொடுப்பதற்கான
முயற்சிகனையும் மேற்கொள்ள வேண்டும். அப்போதுதான் இவ்வாறான
சம்பவங்கள் எதிர்காலத்திலும் ஏற்படாதவாறு பார்த்துக் கொள்ளவதுடன், எமது சமூகத்துக்கு ஏற்படவிருக்கும் அழிவுகளிலிருந்தும்
முன்னெச்சரிக்கையாக இருக்க முடியும்.
No comments:
Post a Comment