.உங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக ------- Meesan Way ------- தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்

Monday, June 30, 2014

மால்கம் X (மாலிக் அல்-ஷபாஸ்) இஸ்லாமிய கருப்பின போராளி


இஸ்லாமிய நெறிமுறைகளால் கவரப்பட்டு அதன் வளர்ச்சிக்காகவும், அமெரிக்கா, ஆபிரிக்காவில் இன ஒடுக்குதல்களுக்கு உள்ளாக்கப்பட்டு, அடிமைப்படுத்தப்பட்டிருந்த கருப்பினத்தவர்களின் உரிமைகளுக்காகவும் போராடி படுகொலை செய்யப்பட்ட மாவீரன் தான் இந்த மால்கம் X.

மால்கம் X மிகச்சிறந்த பேச்சாளராக விளங்கினார். அவருடைய ஆழ்ந்த அறிவு, புரட்சிகரமான பேச்சு என்பவை கேட்போரை பிரமிக்க செய்தது. அவருடைய பேச்சுகளை கேட்டு கறுப்பினத்தவர் மட்டுமல்ல வெள்ளையர்களும் எப்படி ஓர் தனிமனிதனாக இப்படிப்பட்ட ஏராளமான மக்களை கவர முடிந்தது என்று வியந்தனர். மால்கமின் ஓர் சொல்லிற்கு எண்ணற்ற கறுப்பினத்தவர்கள் பின்னால் நின்றார்கள்.

வாழ்க்கை வரலாறு

1925இல் மால்கம் லிட்டில் அமெரிக்காவின் ஹார்லமில் 'ஏர்ள் லிட்டில்' என்ற சுவிஷேசகருக்கு மகனாக பிறந்தார். தாய் 'லௌசி லிட்டில்' சகோதரர்கள் 'பில்ஃபிரட், ரெனிக்கால்டு' சகோதரிகள் 'யோன்னி, இன்னும் இருவர்'.

கருப்பினத்தவரான இவரது இளமைப்பருவம் போதைப் பொருளுக்கு அடிமையானதாகவும், வன்முறை நிறைந்ததாகவுமே காணப்பட்டது. அந்தவகையில் சமூக செயற்பாட்டாளரான இவரது தந்தை இவரது சிறுவயதிலேயே இனவெறியர்களால் காரில் மோதவிட்டு கொள்ளப்பட்டார், கணவனின் இறப்பு மற்றும் வறுமை காரணமாக தாய் மனநிலை பாதிப்புக்கு உள்ளானார். இதனால் இவரது பாடசாலைக் கல்வி தடைப்பட்டதுடன், போதைப் பொருள்களுடனான தொடர்பும் அதிகரித்தது. மேலும் இவரும், இவரது சகோதரர்களும் வேறு வேறு இடங்களில் வாழும் நிலையேற்பட்டது.

1946இல் ஒரு வழிப்பறி வழக்கில் குற்றவாளியாகக் காணப்பட்டு சிறை பிடிக்கப்பட்டார் (10 வருடம் சிறைத் தண்டனை), சிறையில் அறிமுகமான விரிவான புத்தக வாசிப்பால் மல்கம் X ஆளுமை மிக்க மனிதராய் சிறைக்குள் வளர்ந்தார். அடிப்படைவாத கிறிஸ்தவம் கூட கறுப்பினத்தவர்களை ஒடுக்குகின்றது என்பதை அறிந்து கொண்ட மல்கம் X அனைவருக்கும் சமத்துவத்தைப் போதிக்கும் புனித மார்க்கமான இஸ்லாத்தை இதற்கான தீர்வாக தேர்ந்தெடுத்துக்கொண்டார். இதற்கு வழிகாட்டியாக சிறைச்சாலையில் வைத்து எலிஜா முஹம்மதின் 'நேஷன் ஆஃப் இஸ்லாம்' என்ற இஸ்லாமிய அமைப்புடனான தொடர்பு கிடைத்ததுடன், இஸ்லாத்தை விளங்கும் வாய்ப்பும் கிட்டியது. இதன் மூலம் புனித இஸ்லாத்தை தழுவினார். பின்னர் 7வருடங்களின் பின் 1952இல் நன்நடத்தையின் காரணமாக பினையில் விடுதலை செய்யப்பட்டார்.

சிறையிலிருந்து வெளியே வந்த மல்கம் X, 'நேஷன் ஆஃப் இஸ்லாம்' இல் இனைந்து இஸ்லாத்தினை கறுப்பின மக்களிடையே பரப்புகின்ற பணியில் ஈடுபட்டார். வெறும் 500 அங்கத்துவர்களுடன் இருந்த நேசன் ஒஃப்வ் இஸ்லாம் மல்கமின் கடின உழைப்பால், பத்தாண்டுகளுக்குள் 30,000 க்கு மேற்ப்பட்டவர்களை அங்கத்துவராய்க்கொண்டு பிரமாண்டமாய் வளர்ந்தது. அதேவேலை இஸ்லாத்தின் அடிப்படையில் தனது வாழ்க்கையை அமைத்துக் கொண்டதுடன், கருப்பினத்தவர்கள் மீதான வெள்ளையினத்தவர்களின் அடக்குமுறைகளையும், உரிமை மறுப்புக்களையும், காழ்ப்புணர்ச்சியையும் இஸ்லாத்தை அடிப்படையாகக் கொண்டு எதிர்த்தார். அமெரிக்காவின் கருப்பினத்தவர்கள் அனைவரும் இவரின் பின்னால் சென்று விடுவார்களோ என்று எதிரிகள் அஞ்சும் அளவுக்கு இவரது போராட்டத்துக்கு ஆதரவாக பல்லாயிரக்கனக்கானவர்கள் சேர்ந்தனர். படிப்படியாக ஒரு ஆளுமைமிக்க மனிதவுரிமைச் செயற்பாட்டாளாராக மல்கம் உருவெடுத்தார்

கறுப்பினத்தவர்களுக்கென்று தனியான கல்வி, பொருளாதாரம் போன்ற பிற அடிப்படை வசதிகள் தேவை என்ற கோரிக்கைகளை மல்கம் X கடுமையான மொழியில் முன்வைத்தார். அதே நேரத்தில் மிகவும் புரட்சிகரமான உரைகளின் மூலம் அடிமைப்படுக்கிடந்த கறுப்பின மக்களின் ஆன்மாக்களை விழிப்புறச்செய்தார். மறுபுறம் FBI இவரைக் கொல்ல துடித்துக் கொண்டிருந்தது.

1965.02.21 ம் திகதி பொது அரங்கு ஒன்றில் புரட்சிகரமான உரையாற்றிக் கொண்டிருக்கும் போது தோமஸ் ஹாகன் என்பவனால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். எனினும் இவரது கொலைக்கு பின்னனியில் இருந்த காரணி யார்? என்பது இன்னும் மர்மமாகவே உள்ளது. இவரைக் கொலை செய்ய அமெரிக்காவின் உளவு அமைப்பான FBI பல முறை முயற்சி செய்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. அந்தவகையில் இவரை உளவு பார்த்தே 7000க்கு மேற்பட்ட பக்கங்கள் உளவுத்துறையில் சேகரிக்கப்பட்டிருந்ததாக ஒரு அறிக்கை குறிப்பிடுகிது. மேலும் இவரது காருக்கு வெடிகுண்டு வைக்க முயற்சித்தமை மற்றும் வீட்டுக்கு தீயிட்டு கொளுத்தியமை போன்ற கொலை முயற்சிகளும் இதற்கு முன் மேற்கொள்ளப்பட்டிருந்தன. இவற்றிலிருந்து இவர் தப்பியிருந்தார்.




மால்கம் X என்ற பெயருக்காண காரணம்

ஆபிரிக்காவில் இருந்து அடிமைகளாக்கப்பட்ட கறுப்பினமக்களின் கலாச்சார வேர்களை முழுதாக அறியச்செய்யாது இருப்பதற்கே, வெள்ளை இனத்தவர்கள் திட்டமிட்டு வேறு பெயர்களை ஆப்பிரிக்க அமெரிக்க கறுப்பினத்தவர்களுக்கு சூட்டி அழைக்கின்றார்கள் (அதாவது தங்களை அடிமையாக வைத்திருப்பவர்களின் பெயரை இணைத்து) என்பதை விளங்கிக்கொண்ட மல்கம் 'நான் யாருக்கும் அடிமையில்லை, என் பெயருக்குப் பக்கத்தில் என்னை அடிமைப்படுத்தியவனின் பெயரை இணைக்க விரும்பவில்லை.' என்று கூறிவிட்டு, அவ்வாறான வெள்ளையினத்தவர்களின் பெயர்களை மறுதலிப்பதற்காய் மல்கம் லிட்டில்” என்ற தனது தனது பெயரிலுள்ள லிட்டில்(Little) என்ற பெயரை எக்ஸ் (X) ஆக மாற்றுகின்றார். தொலைந்து போய்விட்ட தனது கலாச்சார வேரை, அந்த எக்ஸ் (X) என்ற எழுத்தில் அடையாளப்படுத்துகின்றார். அதன்பின் அமெரிக்க கறுப்பினமக்களில் பலபேர் எக்ஸ் (X) என்ற பெயரை தங்களுக்குச் சூட்டிக்கொ ண்டனர்.

மால்கம் X இன் வாழ்கையின் முக்கிய சில நிகழ்வுகள்

1958இல் பெட்ராய் என்னுமிடத்தில் பெற்றி X (Betty X) என்ற பென்னை திருமணம் செய்தல். இதன் மூலம் 4 குழந்தைகள் கிடைத்தல்(3பெண், 1ஆண்).

1963இல் எலிஜா முஹம்மதுடனான முரண்பாட்டின் காரணமாக நேஷன் ஆஃப் இஸ்லாம் இருந்து நீக்கப்படல்.

1964இல் உலகம் முழுவதிலுமுள்ள கருப்பினத்தவர்களின் முன்னேற்றத்தை அடிப்படையாகக் கொண்டு Organization Of Afro-American Unity(OAAU) என்ற அமைப்பை ஆரம்பித்தல்.

1964இல் கோஸியஸ் மார்லஸ் கிலோ (பிரபல குத்துச்சண்டை வீரர் 'முஹம்மத் அலி') இவரின் முயற்சியால் புனித இஸ்லாத்தை தழுவல்.

1964இல் புனித ஹஜ் கடமையை நிறைவேற்றிவிட்டு, கருப்பினத்தவர்கள் அதிகமாக வாழும் நாடுகளுக்கும் விஜயம் செய்தல்.

அமெரிக்காவின் போல்டன், ஃபிலடல்பியா, ஹார்லோம், ஸ்பிரிங் ஃபீல்டு, ஹார் ஃபோர்டு, போன்ற இடங்களில் இவர் மஸ்ஜிதித்களை அமைத்தார்.

1992இல் மால்கம் X இன் வாழ்க்கை வரலாற்றைக் கூறும் Malcolm X”  என்ற திரைப்படமும் வெளியானது குறிப்பிடத்தக்கது. 

MSM. Naseem
BA(Hones)




No comments:

Post a Comment