.உங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக ------- Meesan Way ------- தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்

Monday, June 2, 2014

பல்கலைக்கழக வாழ்வும் நெருக்கீடுகளும் - Crisis and University life



சாதாரணமாக எமது நாளாந்த வாழ்வில் நெருக்கடி நிலைகள் தோன்றுவது இயல்பு. நெருக்கடி நிலைகள் எம்மை இயங்க வைக்கின்றது. நெருக்கடி நிலைகளில் வாழப் பழகுவதே மனிதனிடமுள்ள இயல்பாகும்.நெருக்கடி நிலைகளே இல்லாத வாழ்வினை ஒருவரால் கற்பனை பண்ணிக் கூடப் பார்க்க முடியாது. மனிதன் சமூகப் பிராணி என்பதன் அடிப்படைத் தத்துவத்தின் பிரகாரம் அமைகின்ற சமூகஞ்சார் வாழ்வில் நெருக்கடிகளும் இயல்பானதே.
ஆயினும் மனிதனிடம் காணப்படும் (Id) நனவுமனதின் வழியான செயற்பாடுகள் தனக்கு சந்தோசமான நிகழ்வுகள் மட்டுமே இடம்பெற வேண்டும் என எமக்குள்  எண்ணங்களைத் தோற்றுவிக்கும்.

இந்தநெருக்கடி நிலைகள் மனிதனுக்கு மன அழுத்தத்தை(Stress) ஏற்படுத்துகின்றது. இவ் அழுத்தம் நெருக்கடியினை மட்டும் சார்ந்ததல்ல , அது மனிதத் தேவைகளை நிறைவு செய்யும் கருவியாகவும் தொழிற்படுகின்றது.

மனிதர்களுடன் இணைந்து வாழும்போது பிரச்சினைகளும், சவால்களும், எதிர்பாராத விடயங்களும் இடம்பெறத்தான் செய்யும் .அவ்வேளைகளில் , எம்மை அவற்றிற்குத் தயார் படுத்த வேண்டும்.  ஆனால் சமுதாயத்தில் பிரச்சினைகள் ஒருவரை  வந்து அடையும்போது அவற்றை ஏற்றுப் போராடி வெற்றிகொள்வது என்பது எல்லோராலும் சாத்தியப்படுவதும் இல்லை. இருப்பினும்  மனிதர்கள் ஒவ்வொருவரிடமும்  நெருக்கடிகளை எதிர்கொள்கின்ற மன இயலளவு உண்டு. அது தனிநபருக்குத் தனிநபர் வேறுபடுகின்றது.

நெருக்கீடு என்பது பல வடிவங்களில் அமையும்  இது ஒரு தனி நபருக்கு தனது நட்புகளால் உருவாகலாம், குடும்பத்தால் உருவாகலாம், உறவினர்களால் , வேலைத்தளங்களால் உருவாகலாம்.  ஆக ஒருவரைச் சுற்றி அமையும் சூழலில் ஒருவரை நெருக்கும் விடயங்களால் உருவாகும் ஒன்றை நெருக்கீடு என்று சொல்லலாம். இத்தகைய நெருக்கீடுகள் எம்மை எதையாவது ஒன்றை நோக்கி இயங்கச் செய்கின்றது. நெருக்கீடுகள் சாதகமான விளைவுகளையும் கொடுக்கும். பாதகமான விளைவினை நோக்கியும் எம்மைச்  செலுத்தும் . இதனைத் தீர்மானிப்பது எமது , கைகளில்தான் இருக்கின்றது.

ஒருவர் நெருக்கீட்டு நிலைக்குள்ளாகும்போது பதட்டம்(Tension) , மன அழுத்தம் (Stress), போன்ற விடயங்களுக்கு உள்ளாகக் கூடும். எமது சமூகப் புலத்தில் குறிப்பாக பல்கலைக் கழக மாணவர்களிடம் , கல்வி செயற்பாடுகள் சார்ந்த நெருக்கீடுகள்  காதல் விடயங்களுடன் தொடர்பான நெருக்குதல்கள். சிலவேளை புதிய இடம், மொழி. பழக்கவழக்கங்கள் தொடர்பான உப பண்பாட்டு( Sub Culture) நெருக்கடிச் சம்பவங்கள் இடம்பெறுகின்றன்.  இந்த நெருக்கடிகளினை விட்டு ஒருவர் தூரம்செல்ல  நினைத்தாலும்  அது  சாத்தியமற்ற ஒன்றாகவே இச்சூழ்நிலையில் அமைகின்றது . இதனால் மன அழுத்தத்திற்கு உள்ளாகும் சந்தர்ப்பங்கள் ஒருவருக்கு  அதிகமாயுள்ளது.  எனவே  பிரச்சினைகளை எதிர்கொண்டு வாழும் பண்புகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

பல்கலைக் கழகம் பல்பண்பாட்டுச் சூழலில் உள்ளவர்களை ஒன்றிணைக்கும் வெளியாக(Space) உள்ளது. இருப்பினும் ஒவ்வொருவரிடமும் தனித்துவமான  சுயஅடையாளங்களும்(Self  identity) உள்ளன. இச்சுயம் சிலவேளை மாணவரை குழுநிலையான செயல்முறையில் இயங்கும்போது பல ஆதிக்கங்களுக்குள்ளாகின்றது.   பல்கலைக்கழகங்களுக்குள்  பல்லாயிரக்கணக்கான தனித்தனியான எண்ணங்கள், உணர்வுகள், ஆசைகள், எதிர்பார்ப்புகள் கொண்டதன்த்தனியான மாணவர்கள் உள்நுளைகின்றனர்.  ஓவ்வெருவருக்குமென்று ஒரு தனியான உலகம் உண்டு. இந்தத் தனியான உலகில் யாரும் அவருக்குச் சமமாக கைகோர்த்துப் பயணிக்க முடியாது இங்கு  ஓவ்வெரருவரும் தமக்கான அடையாளங்களைத் தேட முனைவர். அவர்களை Erikson  அடையாளம் தேடுபவர்கள்( identity Seeker) என்றழைக்கின்றார். இந்த உலகில்  யாராவது உள்நுளைய விளையும்போது அல்லது அதனை கையாள விளையும்போது  அவர்களது நம்பிக்கை , சுயாதீனம்,  தனித்துவம் பாதிக்கப்படுவதாகக் கருதுவர் . அது பல்கலைக் கழகத்தில் பெரும்பாலும் கல்வி நடவடிக்கைகளின் போதான அடைவுகளில் வெளிப்படலாம். அப்போது நெருக்கடிகள் ஆரம்பிக்கின்றது.

'பல்கலைக் கழகமாணவர்கள்  பின் கட்டிளமைப்பருவ வயதினுள்(post- Adolesence) உள்ளதனால் இவர்கள் எதற்கும் துணிந்தவர்களாகவும், நம்பிக்கையுள்ளவர்களாகவுமுள்ள அதே சமயத்தில் குழப்பமடையக்கூடிய மனோநிலையும், பதட்ட நிலையும், இலகுவில் பாதிக்கக்கூடிய தன்மையும் அதிகம் நிலவுகின்றது . உடலில் ஏற்படும் மாற்றங்களாலும் ,  உள்ளத்தில் உண்டாகும் மாற்றங்களாலும் பெரும்பாலான நேரங்களில் சமநிலையினை இழந்தவர்களாக இருப்பர். இதனால் அழுத்தங்கள் நிறைந்த பருவமாக இது இருக்கும்.'(கோகிலா மகேந்திரன், 2008) அத்துடன் பல்கலைக் கழகத்தின் புதிய சூழலுக்கு இயைபாகவேண்டிய சூழல் சமூகமயமாக்கற் பதட்டத்தை(Socialized anxiety) உருவாக்குகின்றது. எனவே ஒவ்வொருவரும் இந்த யதார்த்தத்தைப் புரிந்த கொள்ள வேண்டும்.

நெருக்கடிகள் வருவது இயல்பானது .அதனைக் கையாளும் திறன்களும் தனியாளுக்குத் தனியாள் வேறுபடுகின்றது. பொதுவாக இத்தகைய நெருக்கடிகளை நாம்  தீர்ப்பதற்குப் பல வழிகளைப் பயன்படுத்துகின்றோம்.இதன்போது ஒரு குறிப்பிட்ட கால வரையறைகளுக்குள் நாம்  எதிர்கொள்ளும் நெருக்கடிகளைத் தீர்த்துக் கொள்ளும் போது  அது பிரச்சினையாக மாறாது .ஆயினும் அது  குறிப்பிட்ட காலத்தைத் தாண்டும் போதும், நெருக்கடிகள் எம்மிடமுள்ள இயலளவைத் தாண்டும் போதும் இது பிரச்சினையான வடிவம் கொள்கின்றது. அத்தகைய சந்தர்ப்பங்களில் இதனை உளவியல் பிரச்சினையாகவும் பார்கக் வேண்டிவருகின்றது.

சாதாரணமாக எம்மிடம்  இயல்பாகவே   பிரச்சினைகளைத் தாங்குத் திறன் உள்ளது.   இயல்பாகவே பிரச்சினைகளும் எம்மிடன் வந்தவண்ணமே இருக்கும் . இங்கு இரண்டுக்கும் இடையில் தொடர்புண்டு.

 நெருக்கடிகளை வெல்லக்கூடிய ஆழுமை,நெருக்கடிகளைத் தாங்க முடியாத ஆழுமை.

யாரிடம் பிரச்சினைகளை வெல்லும் ஆளுமை  அதிகம் உள்ளதோ அவர்கள் நெருக்கடிகளை எதிர்கொள்ளும் அழுத்தங்களை  இலகுவாவக் கடந்து விடுவர். எனவே பிரச்சினைகளை விளங்கி திட்டமிட்டு அதனை எதிர்கொள்ளும் ஆளுமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

ஒருவரை நெருக்கடிகள் அழுத்தும் போது    அவர் சுய உளப்போராட்டத்திற்கு உட்படுகின்றார். இவ்வேளைகளில் ஒருவர்
1.            உடலியல் மாற்றங்கள் (Physical Change)
2.            உணர்வு மாற்றங்கள் (Emotional Change)
3.            சிந்தனை மாற்றங்கள் (Cognitive Change)
4.            நடத்தை மாற்றங்கள் (Behavioral Change)

உடலியல் மாற்றங்கள் (Physical Change)

நெருக்கடி நிலைகள் உருவாகும் போது எமது உடல் அந்நெருக்கீட்டுச் சூழலை எதிர்கொண்டு வெற்றிபெறும் நிலைக்கு இயற்கையாகவே உடலைத்  தாயார்படுத்துகின்றது. போரிடல் அல்லது தப்பித்தல் என்ற செயன்முறைக்கு உடல் தயாராக்கப்படுவது. இது  சாதாரணமானது.
உதாரணமாக.
ஒருவர் பரீட்சைக்குத் தயார்செய்யாது exam sit பண்ணும்போதும், அல்லது பரீட்சையில் எதிர்பாராத வினாக்கள் அமையும் போதும்,  வினாப்பத்திரம் வழங்கப்பட்டவுடன்   தன்னால் முடியாத வேளையிலும் ,  சமாளித்து அவ்விடத்தில் இருந்து முடிந்தளவு exam இனை தொடரத் தேவையான சக்தியினை உடனே  உடல் வழங்குகின்றது.  உடல் சுரப்பிகளின் உதவியால்  சக்தியினை உருவாக்குகின்றது  இதன் விளைவாக இதயத்துடிப்பு வேகம் அதிகரிக்கும். சுவாசச் செயற்பாடும் அதிகரிக்கும். தசைகள் இறுகும், வாய்  உலர்ந்து போதலும் இடம்பெறும். இப்படியான சிக்கலான நிலைக்கு உடல் தயாராகும். சற்று பின் எம்மால் பழைய நிலைக்கு வரமுடியும். சிலருக்கு முன்  சொன்னது போல இதனை எதிர்கொள்ளும் ஆழுமை குறைவாக அமையும் போது சில வேளை மயங்கியும் விழலாம்.


உணர்வு மாற்றங்கள் ( Emotional Change)

உளச்சமநிலையிலும் மாற்றங்கள் உருவாகும். உணர்வுகள் குழப்பமான நிலைக்குட்படு கின்றது. எதிரிடையான எண்ணங்கள், இறுக்கமான மனோநிலை, மிகையான யோசனை.... உருவாகலாம். தன்னம்பிக்கை குறைவான ஆழுமையுள்ளவர்கள் விடயங்களைக் கருத்தூன்றிக் கவனிப்பதில் ஆர்வமற்றோராக மாறுவர். கண்கலங்குவதும் அதிகமாக இருக்கும்.

சிந்தனை மாற்றங்கள்  (Cognitive Change)

மேற்கூறியவற்றினூடாக  ஒருவர் 'தன்னை யாரும் புரிந்து கொள்கின்றார்களில்லை',  'என்னால் இதனை எதிர்கொள்ள முடியாது' .நான் தோல்வியடையப்போகின்றேன்' என்ற எண்ணங்களால் அதிகளவில் ஆட்கொள்ள்ளப்படுவர்.
இதனால் தனது  விடயங்களைத் தான் தீர்மானிக்க முடியாதவராக, என்ன செய்வது எனத் தெரியாதவராக மாறுவார்.

நடத்தை மாற்றங்கள் (Behavioral Change)

சாதாரணமாக ஒருவர் கொண்டுள்ள நடத்தையிலிருந்து விலகிய நடத்தைகளை இவர்கள் பெரும்பாலும் மேற்கொள்வர். சாதாரணமாக  தூக்கம் கெட்டுப்போகும், உணவில் நாட்டமின்மை உருவாகும், திடீரென உணர்ச்சி வசப்பட்டு செயற்படும் நிலை உருவாகும்.சிலவேளை புகைப் பிடிப்பவர் அதிகம் புகைப்பிடிக்கத் தொடங்கலாம், குடும்பம் , நண்பர்களிலிருந்து விலகிக் காணப்படுவார்.

மேற்கூறியபடி நெருக்கீட்டு நிலையின் போது ஏற்படும்   நிலைகள் இயல்பானது. இது தொடர்ந்து  நிலைக்கும்போது அது பின்வரும்  உளநோய்களுக்கு ஒருவரை  இட்டுச் செல்லலாம் ஏக்கம் (Anxiety), மனச்சோர்வு( Depression), நெருக்கீட்டுக்குப் பிற்பட்ட மனவடு( Post Traumatic Stress Disorder- PTSD)> போதைப் பாவனை( Substance Abuse).

எனவே நெருக்கீட்டிலிருந்து  விடுபடுவது மிக அவசியமானது . ஏனெனில் பல்கலைக் கழக வாழ்வுதான்  பொது வாழ்விற்கான கற்றல் பாசறை .இங்கு ஏற்படும் நெருக்கீடுகளை முகாமை செய்யப் பழகும் போதே மிகப்பெரிய சமூகவெளிகளை இலகுவாக எம்மால் கடந்து செல்ல முடியும்.



நெருக்கீட்டு நிலையின் போது எம்மை எப்படி முகாமை செய்து கொள்வது? ஏன்பதனை நாம் விளங்கிச் செயற்படுத்த வேண்டும்.  பின்வரும் வழிமுறைகளை நாளாந்த வாழ்கையில் பின்பற்றும் போது காலப்போக்கில் சாத்தியமான ஆழுமைகளை நீங்கள் வளர்த்துக் கொள்ளலாம்.

 Ø  உங்களை நீங்களே சுய விசாரணை செய்ய வேண்டும்.- நான் யார்? எனது நோக்கம் என்ன? நான் தற்போது எத்தகைய சூழலில் இருக்கிறேன்? இச்சூழ்நிலையில் நான்  எதனைச் செய்ய வேண்டும்? ஏதனைச் செய்யக் கூடாது?
 Ø  உங்களின் பலம். பலவீனங்களை நீங்களே அறிந்க கொள்ள முயங்சியுங்கள்.
 Ø  ஏனையவர்களுடன் தெளிவான முறையில் தொடர்பாடலை வைத்திருக்க வேண்டும்.
 Ø  பிரச்சினைகளை நிர்வகிக்கும் திறனை வளர்க்க வேண்டும்.
 Ø  நியாயமான கருத்துக்களை ஏற்கும் மனோநிலையினை வளர்க்க வேண்டும், திறந்த மனதுடன் பேச வேண்டும்.
 Ø  நீங்கள் உங்களை உள , உடல் ரீதியில் ஆரோகிகயமாக வைத்திருக்க வேண்டும்.
 Ø  அனுபவங்கள் மூலம் வாழ்க்கை பற்றி கற்றுக் கொள்ள வேண்டும்.
 Ø  நேரத்தையும் வேலைகளையும் திட்டமிட்டுச் செய்ய வேண்டும்.

நெருக்கீடடினை முகாமை செய்யப் பல வழிமுறைகள் உள்ளன.

தொடரும்

Mrs. MYM. Suheera (Councelor)
Lecturer in Social Sciences,
Faculty of Islamic Studies and Arabic languages
South Eastern University of Srilanka.

No comments:

Post a Comment