.உங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக ------- Meesan Way ------- தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்

Sunday, June 22, 2014

முக்கியத்துவமிக்க ஊடகங்களும் அதன்பாலான முஸ்லிம்களுக்குள்ள தேவைகளும்


மனித சிந்தனையைச் செம்மைப் படுத்துவதிலும், நாகரீகத்தைக் கட்டியெலுப்புவதிலும் இன்று ஊடகங்கள் மிக முக்கியதொரு இடத்தை மக்கள் மத்தியில் பெற்றுள்ளன. மனிதர்களை சீரான-தவறான வழிகளின் பால் இட்டுச் செல்லக் கூடியதாகவும், பொய்யை உண்மையாகவும்-உண்மையை பெய்யாகவும் மாற்றக் கூடிய கருவியாகவும், ஒரு நாட்டின் ஆட்சியாளர்களையே மாற்றக்கூடிய சக்தியாகவும் ஊடகங்கள் இன்று மாறியுள்ளதை எங்களால் கண்டுகொள்ள முடியும். சுருக்கமாக கூறுவதாயின், தற்காலத்தின் மாபெரும் தீர்மானிக்கும் சக்தியாக இந்த தகவல் ஊடகங்கள் மாறியிருக்கின்றன.

இதன் முக்கியத்துவம் பற்றி முன்னால் மலேசிய பிரதமர் மஹாதீர் மஹ்மூத் குறிப்பிடும் போது பின் வருமாறு குறிப்பிடுகிறார்: “19 ஆம் நூற்றாண்டில் எந்த நாடுகள் கடல் ரீதியாக ஆதிக்கம் செலுத்தியதோ, அப்போது அவை உலகின் ஆதிக்க சக்திகளாக விளங்கின. 20 ஆம் நூற்றாண்டில் எந்த நாடுகள் ஆகாய மார்க்கம் ரீதியாக ஆதிக்கம் செலுத்தியதோ, அவை உலகின் ஆதிக்க சக்திகளாக விளங்கின. மேலும் தற்காலத்தில் எந்த நாடுகள் ஊடக பலத்தால் ஆதிக்கம் செலுத்துகின்றனவோ, அவையே உலகின் தற்கால ஆதிக்க சக்திகளாக விளங்குகின்றன.  இந்த வகையில் தற்கால உலக வளர்ச்சி வேகத்தோடு தங்களையும் இனைத்துக் கொள்ள விரும்புபவர்கள், இந்த சக்திமிக்க ஊடகங்களை உள்வாங்கிக் கொள்ளவேண்டியது இன்றியமையாத ஒரு விடயமாகும்.

இவ்வாறான முக்கியத்துவமிக்க சக்திவாய்ந்த ஊடகங்களை இன்று அதிகமாக பெற்றிருப்பவர்கள் இஸ்லாமிய எதிப்புணர்வு கொண்ட தீய சக்திகளே. இதனை அவர்கள் இஸ்லாம், முஸ்லிம்கள் தொடர்பாக பொய்யான-நச்சுக் கருத்துக்களை ஏனையவர்களிடத்தில் பரப்பவும், இஸ்லாமிய நாடுகளை ஆக்கிரமிப்பு செய்யவும், முஸ்லிம்களுக் கெதிராக கலவரங்களை தூண்டவும் மற்றும் இஸ்லாம்-முஸ்லிம்களை இழிவு படுத்தும் செயற்பாடுகளுக்கும் அதிகம் பயண்படுத்திவருகின்றதைக் காணலாம். எனவேதான் இவ்வாறான ஒரு நிலையில் எமக்கெதிராக மேற்கொள்ளப்பட்டுவரும் பொய்யான வதந்திகளை முறையடிப்பதற்கு போதுமான வகையில் சக்திமிக்க ஊடகப்பலத்தினை முஸ்லிம்களாகிய நாம் பெறாதிருப்பது கவலைக்குரிய விடயமாகும்.

மேலும் ஊடகத்தின் பாலான முஸ்லலிம்களுக்குள்ள தேவையை பின்வரும் அடிப்படையிலும் முன்வைக்கலாம்.

பொதுவாக ஆரம்ப காலம் முதல் தற்காலம் வரை முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்பட்ட போராட்டங்களை 3 வகையாக பிரிக்க முடியும்.

1.நேரடி படையெடுப்பும், நில ஆக்கிரமிப்பும்:  இதற்கு உதாரணமாக சிலுவை யுத்தம், தாத்தாரியப் படையெடுப்பு போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

2.காலனித்துவ கலாசார ரீதியான ஆக்கிமிப்பு: பிரித்தாணியா, பிரான்ஸ் போன்ற நாடுகளால் மேற்கொள்ளப்பட்ட காலனித்துவ ஆட்சியை இதற்கு உதாரணமாக குறிப்பிடலாம்.

3.ஊடகங்கள் மூலம் நடத்தப்பட்டுவரும் உளவியல் ரீதியிலான யுத்தம்: இதுவே இன்று இடம்பெற்றுக்கொண்டிருக்கிறது.

இவற்றில் மூன்றாம் வகையே, அதாவது தற்போது ஊடகங்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் உளவியல்-சிந்தனை ரீதியான யுத்தங்களே தாக்கம் கூடியவையாக காணப்படுகின்றன. ஏனெனில் இதில் முதலாம் வகையை எடுத்து நோக்குமிடத்து இதனால் முஸ்லிம்கள் உடல்உயிர்செல்வம்நிலம் ரீதியாகப் பல பாதிப்புக்களை எதிர்கொண்டபோதும், அது அவர்களை பெரியளவில் உளரீதியாப் பலவீனத்துக்கு இட்டுச் செல்லவில்லை. எனவேதான் பிற்பட்ட காலங்களில் அவற்றை முறையடித்து, அவற்றிலிந்து மீளக்கூடிய ஒரு நிலை காணப்பட்டது. இரண்டாவது வகையை நோக்குமிடத்து இதனால் முஸ்லிம்கள் குறிப்பாக மத-கலாசார ரீதியாகப் பல பிரச்சினைகளை எதிர்கொண்டபோதும், அவர்கள் மத்தியில் தோன்றிய சீர்திருத்த இயக்கங்கள், அவர்களால் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு பணிகள் மூலம் அவற்றிலிருந்தும் படிப்படியாக மீளக்கூடிய ஒரு நிலை காணப்பட்டது. ஆனால் மூன்றாம் வகையைப் பொருத்தமட்டில் அது முஸ்லிம்களிடத்திலும், ஏனையவர்களிடத்திலும் இஸ்லாம்-முஸ்லிம்கள் பற்றிய பொய்யான பல தப்பவிப்பிராயங்களையும், பிரச்சாரங்களையும் பரப்புவதன் மூலம் பல்வேறு வகையான தீய விளைவுகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன. இவ்வூடகங்களில் சர்வதேச ரீதியாக மிகவும் பிரபல்யமானமானவற்றில் அதிகமானவை முஸ்லிம்கள்-இஸ்லாத்தின் மீது குரோதம் கொண்ட யூதர்கள்,அமெரிக்கா,ஜரோப்பா போன்றவையே நடாத்தி வருகின்றன. எனவேதான் அவை முஸ்லிம்களையும்,இஸ்லாத்தையும் பலவீனப்படுத்தி அழிக்கும் நோக்கில் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றன. இவற்றில் குறிப்பாக BBC, CNN, New York Times, Washington Post, Daily Mirror போன்றவற்றைக் குறிப்பிட முடியும். எனவேதான் இவற்றை முறியடிப்பதற்கு இவ்வாறான பலம் வாய்ந்த ஊடகங்களை நாமும் பெற்றிருக்க வேண்டியது அவசியமாகும். 

   
முஸ்லிம்களுக்கென்று தனித்துவமான ஊடகங்கள் தேவை என்பதற்கு பின்வரும் 4 காரணிகளையும் பிரதானமாக கூறமுடியும்.

1. பிரசாரம் செய்வதற்கு:

இன்று ஒரு தகவலை அல்லது ஒரு விடயத்தை உலகுக்கு அறிவிப்பதிலும், அறிமுகப்படுத்துவதிலும் ஊடகங்களின் பங்கு இன்றியமையாததொன்றாகும். எந்தவொரு தகவலையும் பரப்பவோ,விளக்கவோ,அறிமுகப்படுத்தவோ ஊடகங்களைப் பயண்படுத்துவதன் மூலமே குறிப்பிட்ட இலக்கைக் குறைந்தளவிலாவது அடைந்துகொள்ள முடியும். எனவேதான் முஸ்லிம்களாகிய நாமும் ஊடகங்களைப் பயண்படுத்துவதன் மூலமே தம்மைப் பற்றிய, தமது மார்க்கமான இஸ்லாம் பற்றிய உண்மை நிலையை இவ்வுலகிற்கு நிரூபிக்க முடியும்.

இவ்வாறான ஊடகத்தை பயண்படுத்துவதின் அவசியத்தைப் பற்றி பின்வரும் நபியின் நிகழ்வு சான்று பகர்கின்றது:
நபி(ஸல்) அவர்களின் காலத்தில் ஏதாவதொரு விடயத்தை மக்களுக்கு அறிவிக்க வேண்டுமாயின் அம்மக்கள் 'சபா' குன்றின் மீது ஏறியே அதை மக்களுக்கு எத்திவைக்கின்ற ஒரு நிலை காணப்பட்டது. அதாவது அன்றைய காலத்தில் ஓரு விடயத்தை அறிவிக்கும்,பரப்பும் ஊடகமாக அம்மக்களுக்கு 'சபா' குன்று காணப்பட்டது. மேலும் நபி(ஸல்) அவர்களுக்கு வஹியை இறக்கி, அதனை மக்களுக்கு எத்திவைக்குமாறு அல்லாஹ் அவர்களுக்கு கட்டளையிட்ட போது, இவ்வுயரிய பணியை எத்திவைக்க நபி(ஸல்) அவர்கள் முதலில் கையான்ட உத்தி 'சபா' குன்று என்ற இந்த ஊடகத்தை அதற்கு பயண்படுத்தியமையாகும்.   
 
இதிலிருந்து நபி(ஸல்) அவர்களும் அவர்களது காலத்தில் காணப்பட்ட ஊடகத்தையே தனது பிரச்சாரப்பணிக்கு முதலில் பயண்படுத்தியுள்ளமை தெளிவாகின்றது. எனவே நாமும் தற்காலத்தில் காணப்படும் பலவகையான ஊடகங்களை கையாள்வதன் மூலம் எமது இலக்கை அடைய முயற்சிக்கவேண்டும்.

2. எதிரிகளை முறையடிக்க:

ஆயுத ரீதியாக முஸ்லிம்களை வெல்ல முடியாது என்றுணர்ந்த இஸ்லாமிய எதிர்ப்புணவு கொண்ட யூத,கிறிஸ்தவ தீய சக்திகள் சிந்தனைப் படையெடுப்பை முடக்கிவிட்டு, அதன் மூலம் முஸ்லிம் சமூகத்தின் இருப்பைக் கொச்சைப்படுத்தியும், அவர்களது தனித்துவ அடையாளங்களை சிதைத்தும், முஸ்லிம்களை மதம்மாற்றும் செயற்பாடுகளிலும் ஈடுபட்டு வருகின்றன. அந்தவகையில் நாளாந்தம் இஸ்லாம்-முஸ்லிம்கள் பற்றிய பல பொய்யான தப்பவிப்பிராயங்களை பரப்பி அதன் மூலம் இஸ்லாம்-முஸ்லிம்கள் பற்றிய தப்பவிப்பிராயங்களை மக்கள் மத்தியில் பதித்துக்கொண்டிருக்கின்றன
இவ்வாறான சந்தர்ப்பத்தில் அதற்கான தீர்வைத் தேடும் முகமாக இவர்களின் விஷமித்தனமான பிரச்சாரங்களை முறியடிக்கவும், இஸ்லாத்தையும்-முஸ்லிம்களையும் பாதுகாக்கவும் சக்தி வாய்ந்த ஊடகங்களை நாங்களும் கைவரப்பெற்று பயண்படுத்த வேண்டியது அவசியமாகும்.

இதை பின்வரும் அல்-குர்ஆன் வசனமும் உறுதிப்படுத்துவதை அவதானிக்கலாம்:
மேலும், அவர்களுக்கு எதிராக உங்களால் முடியுமான அளவு பலத்தையும், போர்க்குதிரைகளையும் தயார்படுத்துங்கள்! இதன் மூலம் அல்லாஹ்வின் எதிரிகளையும், உங்கள் எதிரிகளையும், நீங்கள் அறியாத அல்லாஹ் மாத்திரம் அவர்களை அறியும் இவர்கள் தவிர்ந்த மற்றும் சிலரையும் நீங்கள் அச்சம் கொள்ளச் செய்யலாம்..”(8:60) 
     
3.அடக்குமுறைகளை வெளிச்சத்துக்குக் கொண்டுவர:

பொருளாதார-ஆயுத உற்பத்தியில் முன்னேறி வரும் முஸ்லிம் நாடுகளும், அதிகரித்து வரும் முஸ்லிம் சனத்தொகையும் தம்மை விஞ்சி விடலாம் என்ற அச்சத்தினால் முஸ்லிம்களை அழிக்கும் நோக்கில் இன்று முஸ்லிம் சமூகத்தின் மீது போலிக்காரணங்கள் கூறப்பட்டு பல வகையான அடக்குமுறைகளும், இனச்சுத்திகரிப்பும் இடம்பெற்று வருகின்றன. இவற்றில் பல நிகழ்வுகல் சர்வதேச சமூகத்துக்கு தெரியாமலேயே உள்ளன. உதாரணமாக ஈராக்-ஆப்கானிஸ்தான் மீதான அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு, சீனாவில் உய்குர் முஸ்லிம்களுக்கெதிரான அடக்குமுறைகள், காஷ்மீர் மக்கள் மீதான இந்திய இராணுவத்தின் அடாவடித்தனங்கள்... என பல நிகழ்வுகளை எடுத்துக்காட்டலாம். மேலும் குவாண்டனாமோ, அபூ குரைப் போன்ற சித்திரவதைத் தளங்களை நிறுவி அங்கு பல முஸ்லிம்கள் அநியாயமான முறையில் போலிக்காரணங்கள் சாட்டப்பட்டு சித்திரவதை,கற்பலிப்பு,கொலை போன்றவற்றுக்கு உட்படுத்தப்படுகின்றமை போன்ற அநியாயங்கள் மறைமுகமாக மேற்கொள்ளப்படுகின்றன. எனதோன் இவை பற்றிய உண்மை நிலைகளை உலகுக்கு அறிவிக்க வேண்டிய தேவையுள்ளது. இதனை நிறைவேற்ற முஸ்லிம்களாகிய நாமும் சக்தி வாய்ந்த ஊடகங்களை பெறுவதன் மூலமே இது சாத்தியமாகும்.

4.தற்கால உலகோடு இணைந்து செல்ல:

உலக வளர்ச்சி வேகத்தோடு தன்னையும் இணைத்துக்கொள்ள விரும்பும் எந்த சக்தியும் இவ்வாறான பலமிக்க ஊடகங்களை பெற்றிருக்க வேண்டியது அவசியமாகும். மேலும் இந்நூற்றாண்டின் சர்வதேசப் பொருளாதாரம், அரசியல், கலாசாரம், இராணுவப்போக்கு போன்றவற்றைத் தீர்மானிப்பதிலும் இவ்வூடகங்களின் பங்கு பாரியதாகக் காணப்படுகின்றது. எனவே முஸ்லிம்களாகிய நாமும், முஸ்லிம் நாடுகளும் முன்னேறுவதற்கும், பயன்பெறுவதற்கும் இவ்வாறான சக்திமிக்க ஊடகங்களை பெற்றிருக்க வேண்டியது அத்தியவசிய கடமையாகும். 

                                      
By : MSM.Naseem - MA, PGDE (R), BA (Hones)


     

No comments:

Post a Comment