இங்கு கிறிஸ்தவ திருச்சபை
அறிந்திராத ஒரு பைபிலும் உண்டு. அதுதான் ஐந்தாவது பைபிலாகிய பைபில் பர்ணாபா.
இந்த பைபிளைத் தொகுத்த
பர்ணாபா என்பவர் கிறிஸ்தவ பெரியார்களில் ஒருவராவார். மேலும் ஆரம்ப கட்டங்களில் கிறிஸ்தவ
மதத்தை பிரச்சாரம் செய்தவர்களில் இவரும் ஒருவர் என்பதற்கான
உடன்படான ஆதாரங்களும் கிறிஸ்தவ அறிஞர்களிடமுண்டு. இவருடன் இணைக்கப்படும் இத்தொகுப்பில்
இவர் மஸீஹின் 12 சீடர்களில் ஒருவரென்றும்,
திருச்சபையின் கருத்துப்படி
இவர் ஒரு தூதர் என்றும் அறியப்படுகின்றது.
பர்ணாபாவின் தொகுப்பு
இத்தொகுப்பு எப்போது
எழுதப்பட்டது என்பது குறித்த தகவல்கள் கிடைக்கவில்லை என்றாலும் இத்தொகுப்பு சம்மந்தப்பட்ட
உண்மைக் கதை அறியப்பட்ட வகையில் கி.பி 492ல் இருந்து ஆரம்பிக்கின்றது. கி.பி.492 இல் முதலாவது 'ஜலாஸியூஸ்' என்ற போப்பான்டவரின் ஆட்சிக்காலத்தில் (இஸ்லாம்
தோன்ற 110 ஆண்டுகளுக்கு முன்)
வாசிப்பதற்கு தடை விதிக்கப்பட வேண்டிய புத்தகங்கள் பற்றிய தகவல் ஒன்றை இந்த போப் வெளியிட்டார்.
அந்த வகையில் அவ்வாறு தடை செய்யப்பட்டு மறைக்கப்பட்ட ஒன்றுதான் இந்த பைபிள் பர்ணாபாகும்.
இது கி.பி.1709 வரை இரகசியமாகவே
இருந்தது. என்றாலும் கி.பி.1709 இல் இத்தாலி மொழியில்
எழுதப்பட்ட இதன் பிரதியொன்றை ரஷ்ய மன்னரின் ஆலோசகர்களில் ஒருவரான 'கிரைமர்' என்பவர் கண்டு கொண்டார். பின் அவர் அதனை 'அம்ஸ்திர்தாம்' எனும் ஒரு முக்கியஸ்தருக்கு இரவலாக வழங்கினார்.
பின்னர் அந்த முக்கியஸ்தர் அப்பிரதியை 1713 இல் 'பிர்னஸ் அயூஜின் ஸாபவி'
என்பவருக்கு அன்பளிப்பாக வழங்கினார்.
பின்னர் இத்தொகுப்பானது கி.பி. 1738 இல் அயூஜிடமிருந்து
வியன்னாவில் இருந்த அரச அரன்மனையின் நூலகத்துக்கு கொண்டுசெல்லப்பட்டது. அதன் பின் மறைத்து
வைக்கப்பட்டிருந்த இந்த பைபிள் பிரதியானது 'பராமியுனோ' என்ற இலத்தீன் இனத்தைச் சேர்ந்த கிறிஸ்தவ துறவி ஒருவரால் வெளிக் கொண்டு வரப்பட்டது.
இதனை இவர் வெளிக்
கொண்டு வரக் காரணம் என்னவென்றால்:
01.' லாயிர் யானூஸ்'
என்பவரின் சில ஏடுகள் இவருக்கு
கிடைத்திருந்தன. அதிலே லாயிர் யானூஸ் என்பவர்
பவுலின் கருத்துக்களை இன்ஜீல் பர்ணாவை மேற்கோல்காட்டி விமர்சித்திருந்தார். எனவே தான்
பைபிள் பர்ணாவைப் பற்றி அறிந்துகொள்ள வேண்டுமென்ற ஆசை அவருக்கு ஏற்பட்டது.
02. அந்த பைபிளைக் கொண்டு
அப்போது ஆட்சி செய்து கொண்டிருந்த 'ஐந்தாம் சக்தஸ்'
என்ற பாப்பரசரின் நெருக்கத்தைப்
பெருவது.
இவ்விரண்டு காரணங்களும்
அவரை இத்தொகுப்பைப் பற்றி அறிந்து கொள்ளத் தூண்டி இருந்தன. அந்தவகையில் பைபிள் பர்ணாபாவின்
பிரதியைப் பாப்பரசரின் நூலகத்தில் கண்டுபிடித்தார். அதனை அவர் பார்த்ததும் அதை யாருக்கும் தெரியாமல் தனது
சட்டைப்பைக்குள் மறைத்துக் கொண்டார். பின் அவர் இஸ்லாத்தைத் தழுவினார்.
இந்த இன்ஜீல் பிரதியானது
கலாநிதி 'ஹலீல் சஆதாவால்'
அரபுக்கு மொழி பெயர்க்கப்பட்டது.
இன்ஜீல் பர்ணாபாவின்
கருத்துக்கள் பற்றிய ஒரு பார்வை
இத்தொகுப்பானது ஏனைய
எல்லா இன்ஜீல்களினதும் கருத்துக்களோடு முரன்படுவதுடன், மஸீஹின் வாழ்க்கை வரலாற்றை நுணுக்கமாகவும்,
அழகிய முறையிலும்,
தெளிவாகவும் குறிப்பிடுகின்றது.
அந்த வகையில் இதன்
சில முக்கிய கருத்துக்களை நோக்குவோம்:
01. மஸீஹ் கர்த்தரின்
அடிமையும், அவனது தூதரும் என்று
குறிப்பிடுவதுடன் அவர் சம்பதமாக கூறப்படுகின்ற
இறைப் பண்புகளையும், மஸீஹ் கர்த்தரின்
மகன் என்பதையும் மறுக்கின்றது.
02. அல்குர்ஆனில் வந்துள்ளதை
உறுதிப்படுத்துவது போன்று முஹம்மத் நபி(ஸல்) அவர்களின் வருகையைகத் தெளிவான பெயருடன்
முன்னறிவுப்பு செய்கின்றது.
03. மஸீஹ் சிலுவையில்
அரையப்படவில்லை மாறாக வானுக்கு உயர்த்தப்பட்டதாகவும், உண்மையில் சிலுவையில் அறையப்பட்டது மஸீஹூக்குச்
சதி செய்த மோசடிக்கார யூதனான 'அல் ஹர்யூதி'
என்பவனே என்றும் குறிப்பிடப்டுகிறது.
04 கிறிஸ்தவர்களின்
நம்பிக்கையான இப்றாஹீம்(அலை) அவர்களால் அறுப்பதற்காக ஏவப்பட்டது. இஸ்ஹாக்(அலை) அவர்களைத்தான்
என்ற கூற்றை மறுத்து, இப்றாஹீம்(அலை) அவர்கள்
அறுக்க முனைந்தது உண்மையிலேயே தன் மகனான இஸ்மாயில்(அலை) அவர்களையே என்று உறுதியாகக்
குறிப்பிடுகின்றது.
இவ்வாறு யாராலும்
திரிபுபடுத்தலுக்கு உட்படாத வகையில் இறைசட்டங்களின் அடிப்படை நம்பிக்கைக் கோட்பாடுகளுடன்
உடன்படுகின்ற அதிகமானவற்றை பைபிள் பர்ணாபா உள்ளடக்கி இருக்கின்றது.
முன்னுள்ள வேதங்களை
ஆய்வு செய்து பிழைகளைச் சுட்டிக்காட்டிய ஆய்வாளர்கள் உண்மையில் இத்தொகுப்பு மஸீஹின்(ஈஸா
(அலை)) சீடர்களில் ஒருவரான பர்ணாபாவுடையது தான் என்பதனை ஏற்றுக் கொள்கின்றனர். என்றாலும்
பவுல் சுட்டிக்காட்டிய, கிறிஸ்தவ திருச்சபைகளால்
பற்றிப்பிடிக்கப்பட்டுள்ள கோட்பாடுகளுக்கு எதிராக இவரின் கருத்துக்கள் காணப்படுவதால்
இத்தொகுப்பைக் கிறிஸ்தவத் திருச்சபை வெறுப்பதுடன், அதனை அங்கீகரிக்காத, அறியப்படாத ஒன்றாகக் கருதுகின்றது.
தமிழில் : M.S.M. Naseem (BA .Hones)
மூலம் : Habank Al-Maidhani, العقيدة الإسلامية " ”
No comments:
Post a Comment