.உங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக ------- Meesan Way ------- தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்

Friday, July 4, 2014

ஐ.ஸ்.ஐ.ஸ்(I.S.I.S) அறியப்பட வேண்டிய பிரபலம்

 அன்மைக்காலமாக ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும், அனைவரினதும் பார்iயிலும் ஓரு முக்கிய செய்தியாகக் கானப்பட்டுக் கொண்டிருப்பது I.S.I.S என்ற இந்த போராட்ட இயக்கம் பற்றிய செய்தியே. அந்தவகையில் யார் இந்த I.S.I.S போராளிகள் அமெரிக்காவினால் வழிநடத்தப்படும் கைக்கூலிகளா? அல்லது சவூதி அரேபியாவின் பின் புலத்தில் இயங்குபவர்களா? அல்லது அமெரிக்கா மற்றும் சவூதி அரேபியாவின் கூட்டனியில் வழிநடத்தப்படுபவர்களா

அல்லது ஈராக்கின் ஷீயா சார்பு பிரதமரான நு{ரி அல்-மலிக்கி தன்னுடன் இனைந்திருந்து பிரிந்து சென்ற ஷீயா குழுக்களின் ஆதரவினை மீளப்பெற்றுக்கொள்ள நடத்தும் நாடகமா? அல்லது ஈராக்கில் அமெரிக்கா ஆக்கிரமிப்பின் பின் ஆட்சி செய்து கொண்டிருக்கும் பிரதமர் நு{ரி அல்-மலிக்கியின் தலைமையிலான ஷீயா ஆட்சியாளர்களினால் ஒடுக்கப்பட்டு வரும் சன்னி முஸ்லிம்களின் எதிரொலியா இவர்கள்? அல்லது நபி(ஸல்) அவர்கள் குராசான் பகுதியிலிருந்து ஒரு கூட்டம் வெளிப்பட்டு உலகின் பல பகுதிகளைக் கைப்பற்றும் என முன்னறிவிப்பு செய்த அந்தக் கூட்டமாபோன்ற பல்வேறு கருத்துக்களும்அதற்கான சான்றுகளும் பல்வேறு தரப்பினரால் முன்வைக்கப்பட்டுக் கொண்டிருப்பதைக் காணலாம். எனவேதான் இது பற்றி கவனம் செலுத்த வேண்டியது காலத்தின் தேவையாகும்.

ஈராக்கில் அந்நாட்டு அரசாங்கத்துக்கு எதிராக தாக்குதல் நடத்தி வரும் போராளிகள் ஐ.எஸ்.ஐ.எஸ்.( I.S.I.S) என்ற பெயரில் அழைக்கப்படுகிறார்கள். ஐ.எஸ்.ஐ.எஸ். என்பது 'இஸ்லாமிக் ஸ்டேட் ஆப் ஈராக் அன்ட் சிரியா' என்ற ஆங்கில வார்த்தையின் சுருக்கம் ஆகும்.

இதன் வரலாற்றை எடுத்து நோக்கும் போது 2003–ம் ஆண்டு ஈராக் மீது அமெரிக்கா படையெடுத்தபோது சில அரபு நாட்டினர் சேர்ந்து இந்த படையை உருவாக்கினர்கள். அப்போது பெயரளவுக்கு தான் இது செயல்பட்டு வந்தது என்று கூறப்படுகிறது. ஆனால் 2006 க்கு பின்னர் I.S.I (Islamic State of Iraq) என்ற பெயரில் அது தீவிரமாக இயங்க ஆரம்பித்தது. இது தங்கள் பகுதியை இஸ்லாமிக் ஸ்டேட் எனவும், தாங்கள் அமீர் முஆவியாவின் ஆட்சியை உருவாக்க போவதாகவும் பிரகடனம் செய்தனர். ஈராக்கின் பலூஜா மாகாணத்தை தளமாக கொண்டு அது தன்னை மேலும் பல கட்டமைப்புக்கள் கொண்ட அணியாக வடிவமைத்தது. சிரியாவில் பஸர் அல்-அஸாதின் அரசிற்கு எதிரான சண்டைகளில் பங்கேற்க இது ஒரு அணியை அனுப்பி, அதில் பிளவு ஏற்பட்டு Jabah al-Nusrah (JN) எனும் அணி தனியாக இயங்குகின்றது. அதன் பின்னர் இந்த I.S.I அமைப்பு சிரியாவில் அஸாத்தின் படைக்கு எதிராக போராட நேரடியாகவே இன்னொரு அணியை இறக்குக்கியது. சில காலங்களின் பின் தங்களை I.S.I.S (Islamic State for Iraq & Sham(Syria)) என தன்னை பிரகடனம் செய்தது. இவர்கள் I.S.I.L (Islamic Stae for Iraq & Levant) எனவும் அழைக்கப்படுகிறார்கள். (இந்த I.S.I.S படையினர் ரஷ்ய ஆதரவுடன் சிரியாவில் ஆட்சி புரியும் பஸர் அல்-அஸாத்தின் படைக்கு எதிராக போரிட அமெரிக்க படையினரால் பயிற்சியளிக்கப்பட்டவர்கள் என்பதையும் கவனத்தில் கொள்ளவும்)
  
இதில்  செச்னியர்களை அதிகம் கொண்ட போராளிக்குழுக்கள் இவர்கள் சார்பாக சிரியாவில் போரிடுவதாகவும், மேலும் குளோபல் ஜிஹாத் எனும் பெயரில் உலகின் பல பாகங்களில் இருந்தும் வந்த போராளிகளும் இவ்வணியில் இணைந்து சண்டையிடுவதாகவும் குறிப்பிடப்படுகின்றது. ஈராக்கின் பல நகரங்களை வெற்றி கொண்ட இவ்வணியினர் ரமழானில் நல்ல செய்தி ஒன்றை உலக முஸ்லிம்களிற்கு அறிவிப்பதாக கடந்த ஜுன் மாதம் தமது டுவீட்டர் பக்கத்தில் செய்தி வெளியிட்டிருந்தனர். அதன்படி சில நாட்களிற்கு முன்னர் இவர்கள் ஈராக்கில் தாங்கள் கைப்பற்றிய பிரதேசங்களை இனைத்து 'இஸ்லாமிய கிலாபா' பிரகடனத்தை வெளியிட்டு இதன் கலீபாவாக தங்கள் தலைவரான 'அபூ பக்கர் அல்-பக்தாதியை' அறிவித்ததுடன், உலக முஸ்லிம்களை அங்கு குடியேற வருமாறும் அழைப்பு விடுத்துள்ளது. அதேவேலை மத்திய கிழக்கு, ஆபிரிக்காவின் சில பகுதிகள், துருக்கி, இலங்கை, இந்தியா, அதனை அன்டிய பகுதிகளை உள்ளடக்கிய உலகின் பல பகுதிகளை தாம் கைப்பற்றவுள்ளதாகவும் வரைபடத்துடன் ஒரு செய்தியையும் வெளியிட்டிருந்தது.

தற்போது சுமார் 20 ஆயிரம் பேர் வரையில் இப்படையில் உள்ளதுடன், அதில் ஓரு பகுதியினர் ஈராக்கில் போரிட்டு வருவதாகவும், இன்னொரு பகுதியினர் சிரியாவின் உள்நாட்டுப் போரில் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல்கள் சுட்டிக்காட்டுகின்றன.

இந்த I.S.I.S தொடர்பாக பின்வரும் விடயங்களில் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.

1. அன்மைக்காலமாக அமெரிக்கா, இஸ்ரேல், பிரித்தாணியா போன்ற வல்லரசுகள் கையாலும் பிரபலமான ஒரு யுக்திதான் ஒரு விடயத்தை அல்லது பிரச்சினையை மறைக்க அல்லது ஒரு விடயத்தை விட்டும் மக்களின் பார்வைகளை திசை திருப்ப இன்னொரு பிரச்சினையை ஏற்படுத்தி அல்லது முக்கியத்துவப்படுத்தி அதன்பால் மக்களின் பார்வையை திசை திருப்பி விடுவதாகும்”.  குறிப்பாக இஸ்ரேலுக்கு எதிராக போர் மற்றும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள், எழும்போது உலகில் பல முக்கிய நிகழ்வுகள், அனர்த்தங்கள் ஏற்படுவதையும், அதன் மூலம் குறிப்பிட்ட முன்னெடுப்புக்கள் கைவிடப்பட்டிருப்பதையும் இணையதளத்தில் தேடிப்பார்த்து தெரிந்து கொள்ளலாம். (கடந்த சில நாட்களாக இஸ்ரேல் பலஸ்தீன் மீது தாக்குதல் நடத்தி வருவதுடன், பலஸ்தீனத்துக்கு சொந்தமான பகுதிகளில் சட்டவிரோத குடியிருப்புக்களையும் அமைத்து வருவதும் இங்கு குறிப்பிடத்தக்கது).

2. ஷீயா சார்பு ஈராக் பிரதமரான நு{ரி அல்-மலிக்கிக்கு தாம் வழங்கி வந்த ஆதரவினை சில ஷீயா குழுக்கள் அவருடன் ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக அன்மையில் மீளப்பெற்றுள்ளன. இது அவரது எதிர்கால அரசியல் வாழ்க்கை தொடர்பான நிச்சியமற்ற தன்னையை ஏற்படுத்தியுள்ளது. எனவே தொடரந்தும் தான் அதிகாரத்தில் இருக்க அந்த குழுக்களின் ஆதரவினை பெற்றுக்கொள்ள வேண்டியது அவசியம் என்பதை உணர்ந்த அவர் விலகிச் சென்றவர்களின் ஆதரவினை மீளப் பெற்றுக்கொள்ள நடத்தும் ஓரு நாடகம் தான் இந்த I.S.I.S என்பது இன்னும் சிலரது கருத்து. இதனை உருதிப்படுத்தும் வகையில் சன்னி போராளிகளை எதிர்த்துப் போராட ஷீயாக்களை ஒன்றினையுமாறு இவர் அன்மையில் அழைப்புவிடுத்திருந்தமை, ஈராக் படையினரின் கட்டுப்பாட்டில் இருந்த பல பகுதிகளை போராளிகல் இலகுவாக கைப்பற்றியமை போன்றவற்றை எடுத்துக் காட்டலாம்.

3. ஈராக் மற்றும் சிரியாவில் ஆட்சிசெய்யும் ஷீயா சார்பு அரசாங்கமானது ஈரான் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்பின் உதவியுடன் அங்கு வாழும் சன்னி முஸ்லிம்கள் மீது தொடர்ந்தும் கட்டவிழ்த்துவிட்ட அடக்கு முறைகள்,வன்முறைகளை சகித்துக்கொள்ள முடியாமல் இவர்களிடமிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ளவும், தமது உரிமைகளை பெற்றுக்கொள்ளவும் பாதிக்கப்பட்டவர்களால் உருவாகியதுதான் இந்த I.S.I.S என்ற கருத்தும் ஏற்கக் கூடியதாகவே இருக்கின்றது. அந்தவவையில் ஈராக்கின் சன்னி முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளை இவர்கள் விரைவாக கைப்பற்றியமை இதற்கு சான்றாக நோக்க முடியும்.

4. மேலும் தங்களை உண்மை இஸ்லாமிய வாதிகளாக அடையாளப்படுத்திக் கொள்ளும் இவர்களின் பல செயற்பாடுகள் முஸ்லிம் அறிஞர்கள் மத்தியில் பல சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
  • இஸ்லாத்தில் போர் செய்ய தடைவிதிக்கப்பட்டிருக்கும் புனித மாதங்களில் ஒன்றான ரமழானில் இவர்கள் தங்கள் போராட்டத்தினை நடத்துகின்றமை.
  • சிரியா மற்றும் ஈராக்கில் வங்கி மற்றும் பல்வேறு இடங்களில் பல கோடி ரூபா பெருமதியான பணங்களை கொள்ளையடித்துள்ளமை (சுமார் ரூ.12 ஆயிரம் கோடி).
  • ஈராக் மற்றும் சிரியாவை பூரணமாக கைப்பற்றாத நிலையில், I.S.I.S தன்னை இஸ்லாமிய கிலாபா என்று கூறுவதுடன். அவசர அவசரமாக ஜோர்தான் நோக்கியும், சவுதி அரேபியா நோக்கியும் அதன் அணிகளை நகர்த்துகிறது. மேலும் வட ஆபிரிக்கா, மேற்காசியா, தெற்காசியா, கிழக்காசியா, அவுஸ்திரேலியா போன்றவற்றையும் இஸ்லாமிய ஆளுகைக்குள் கொண்டு வருவோம் என சூளுரைக்கிறது. அதற்கான வரைபடங்களையும் வெளியிட்டிருக்கிறது. எனவே இராணுவவியல் நோக்கில் அல்லது சாதாரன அறிவால் கூட சாத்தியப்பாடில்லாத இவ்வாறான கற்பனைகளை வெளியிட்டுள்ளமை பல மட்டங்களிலும் சந்தேகங்களை தோற்று வித்துள்ளது.
  • உலகலாவிய ரீதியில் முஸ்லிம் உம்மாவிற்காக போராடும், அதற்காக உழைக்கும் ஜிஹாதிய ஆதரவு கொண்ட மார்க்க அறிஞர்கள் கூட இந்த அமைப்பின் கிலாபா பிரகடனத்தை வரவேற்காமையாகும். அதேபோல் எந்த பிரபலமான இஸ்லாமிய அறிஞரும் இந்த அமைப்பிற்கு வெளிப்படையாக தமது ஆதரவினை தெரிவிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

எனவேதான் இவற்றையெல்லாம் வைத்து நோக்கும் போதுஇவர்கள் யார்?, இவர்களது உண்மையான நோக்கம் என்ன?, இவர்களை வழி நடத்துபவர்கள் யார்?, இவர்களுக்கு வெளிப்படையாகவும், மறைமுகமாகவும் உதவும் சக்திகள் எவை?, இவர்கள் யார் யாருடன் தொடர்பை கொண்டுள்ளனர்?, இவர்கள் உண்மையிலேயே இஸ்லாத்துக்காக போராடுகின்றனரா? அல்லது இஸ்லாத்தின் எதிரிகளின் கூலிகளாக செயற்படுகின்றனரா? போன்ற பல்வேறு கேள்விகளுக்கான விடை ஆராயப்பட வேண்டிய மர்மங்கள் நிறைந்த ஒன்றாகவே காணப்படுகின்றது.


அதேவேலை இறை தூதர் நபி(ஸல்) அவர்கள் செய்த முன்னறிவிப்பு பற்றியும் நாம் இங்கு நோக்க வேண்டிய தேவையுள்ளது. அந்தவகையில் நபி(ஸல்) அவர்கள் பின்வருமாறு முன்னறிவிப்பு செய்திருந்தார்கள் :


  • சிரியா வெற்றிக்கொள்ளப்படும்
  • யமன் வெற்றிக் கொள்ளப்படும்
  • இராக் வெற்றிக்கொள்ளப்படும்
  • பலஸ்தீன் வெற்றிக்கொள்ளப்படும்


பலஸ்தீனுக்கு நபியவர்கள் செய்த முன்னறிவிப்பு :
"குராஸான் பகுதியில் இருந்து "லிவாவுல் அஸத்" எனும் கருப்புக்கொடியுடன் ஒரு கூட்டம் பெரும் படையுடன் கிளம்பி, பல பகுதிகளை வெற்றிக்கொள்ளும். இறுதியில் நம் முதல் கிப்லாவான அக்ஸாவை வெற்றிக்கொள்ளும் ".
அறிவிப்பாளர் : ஸவ்பான்(ரழி), ( நூல் : அஹ்மத்).




   

1 comment:

  1. சைமன் எலியுட் என்ற யூத பயங்கரவாதிதான் ஐ எஸ் ன் தலைவன் இஸ்ரேலும் அமெரிக்காவும் இவர்களுக்கு உதவி செய்கிறது

    ReplyDelete