.உங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக ------- Meesan Way ------- தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்

Thursday, March 26, 2026

அரசறிவியல் (இலவச) நூல் அறிமுகம்

அரசறிவியல் எனும் இந்நூலானது, முழுமையாக 2017ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படும் புதிய பாடத்திட்டத்தின் கீழ், கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை அடிப்படையாகக் கொண்டு, முழுமையாக புதிய பாடத்திட்டத்தை தழுவிய வகையில், இலகுவான மொழிநடையில் அரசறிவியல் பாடத்திட்டத்தின் கீழ் முதல் மூன்று அலகுகளையும் மையப்படுத்தி இற்றைப்படுத்தப்பட்டு தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்நூல் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு வழிகாட்டியாகவும் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுக்கொள்ள உதவக்கூயதாகவும் அமைந்துள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை மற்றும் மாணவர்களின் நலன் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு இப்புத்தகமானது PDF வடிவில் இலவசமாக வழங்கப்படவுள்ளது.


நூல் அறிமுகம்

நூலின் பெயர் : அரசறிவியல்

பாகம் : 1

பக்கங்களின் எண்ணிக்கை : 162

விலை : இலவசம்

வெளியீட்டாளர் : Meesan Way Publication


நூலாசிரியர் அறிமுகம்

இப்புத்தக ஆசிரியரான பொலன்னறுவையைச் சேர்ந்த எம். எஸ். எம். நஸீம் அவர்கள் தனது ஆரம்ப மற்றும் இடைநிலைக் கல்வியை பொலன்னறுவை முஸ்லிம் தேசிய பாடசாலை மற்றும்  மாதம்பை  இஸ்லாஹிய்யா  அரபுக்  கல்லூரி ஆகியவற்றில் பயின்றார்.  பின்னர்   தனது இளமானிப்  பட்டத்தினை  இலங்கை  தென்கிழக்குப் பல்கலைக் கழகத்திலும், அரசறிவியல் துறையில் முதுமானிப் பட்டத்தினை இலங்கை பேராதனைப் பல்கலைக் கழகத்திலும் பூர்த்தி செய்துள்ளதுடன், பட்டப்பின் கல்வி டிப்ளோமா கற்கைநெறி மற்றும் கல்வியியல் துறையில் முதுமானிப் பட்டப்படிப்பு  ஆகியவற்றை இலங்கை திறந்த பல்கலைக் கழகத்திலும் பூர்த்தி செய்துள்ளார். தற்போது இவர் அரசறிவியல் பாட ஆசிரியராகவும், இலங்கை தேசிய கல்வி நிறுவகத்தின் பகுதிநேர விரிவுரையாளராகவும் (Visiting Lecturer) காணப்படுகிறார்.

ஏற்கனவே அரசறிவியல் பாடத்தை கற்பிக்கும் ஆசிரியர்கள் மற்றும் கற்கும் மாணவர்களுக்கு கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கு வழிகாட்டும் வகையில் புதிய பாடத்திட்டத்தின் கீழ் ”அரசறிவியல் பரீட்சை வழிகாட்டி” எனும் நூலை ஆசிரியர் எழுதியுள்ளதுடன், நாடளாவிய ரீதியில் பல கருத்தரங்குகளை நடாத்தி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்.


நூலின் உள்ளடக்கம்

அலகு 01  : அரசறிவியலின் தோற்றம், அரசியல் ஆய்வு மற்றும் அணுகுமுறைகள்

1.1. அரசறிவியலை விளங்கிக் கொள்ளல்                                                          

1.2. அரசியலுக்கும் அரசறிவியலுக்கும் இடையிலான தொடர்புகள்

1.3. அரசியலை கல்வியாகக் கற்றல்                                            

 1.4. அரசறிவியலை கற்பதற்கான அணுகுமுறைகள்          


அலகு 02 : அரசறிவியலில் உள்ளடக்கப்படும் உபதுறைகள்

2.1. அரசியல் தத்துவம்                                                                                    

2.2. அரசியல் சிந்தனைகள்ஃகருத்தியல்கள்                                                     

2.3. அரசியல் கோட்பாடுகள்                                                                                    

2.4. அரசியல் நிறுவனங்கள்                                                                         

2.5. ஒப்பீட்டு அரசியல்                                                                         


அலகு 03 : அரசு

3.1. அரசும் அதன் வகிபாகமும்                                           

3.2. அரச மாதிரிகளும் அதன் வகைப்படுத்தல்களும்          

3.3. அரசு தொடர்பான அரசறிவியல் எண்ணக்கருக்கள்    

3.4. அரசின் இயல்பு பற்றிய கோட்பாட்டு அணுகுமுறைகள்        


இப்புத்தகத்தை 2026.04.05 முதல் Download  செய்துகொள்ள முடியும்.


iframe height="680px" src="https://drive.google.com/file/d/1MoaYd3uB-rjA6j7vzDEsNqF0ddaO00TI/preview?usp=drive_link" width="100%"> </iframe>


விரைவில் ...





1 comment: