.உங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக ------- Meesan Way ------- தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்

Saturday, July 19, 2014

பின் கீழைத்தேயவாதிகளின் தாக்கங்கள் (தொடர்-2)


1.இஸ்லாமிய வட்டத்தினை குறுகியதாக காட்ட முயற்சித்தல்
இஸ்லாத்தையும், அதன் சட்டதிட்டங்களையும் வெறும் இபாதத்துடன் சுருக்கிக் காட்டி பித்அத், ஷிர்க்கான விடயங்களையும் மிகைப்படுத்தி, சூபித்துவ கருத்துக்களை பரப்பிவிடும் கைகரியத்தையும் இன்று மேற்கு முனைப்புடன் செய்து வருகின்றது. இதன் மூலம் இஸ்லாமிய ஆட்சியினை வியாபிக்க விடாது உட்பூசல்களை அதிகப்படுத்துவதே இதன் உள்நோக்கமாகும்.

2.சமூகவியல் துறைசார் மாற்றங்களை ஏற்படுத்தல்
இஸ்லாத்தின் அடிநாதமான உம்மத்துர் ரசூல் எனும் உயரிய கோட்பாட்டினை குறுகிய தேசியவாத, பொருள் முதவாத சிந்தனைகளால் களங்கப்படுத்தியதுடன் சுயநலமும் பொருள் குவிப்பும் சுரண்டலுமே வாழ்க்கையின் இலக்குகள் என்ற பண்பினை முஸ்லிம் உலகில் வளர்த்தது. இப்படியாக இஸ்லாத்தின் மீது சமூகவியல் ஆக்கிரமிப்புக்களை திட்டமிட்டு மேற்குலகு நிறைவேற்றி வருகிறது. குறிப்பாக
  • மேற்கத்தைய பாணியில் அமைந்த வாழ்க்கை முறை அறிமுகம்
  • கல்வித்துறையில் ஆண், பெண் பாகுபாடற்ற கலவன்(mixed) முறையும் சுதந்திர மனப்பாங்கும்.
  • கட்டுப்பாடற்ற சமூக உறவுகள்.
என ஆண்- பெண் பாகுபாடு முற்றாக மறக்கப்பட்டு பெண்ணுரிமை, பெண் விடுதலை என்ற அர்த்தமற்ற கோஷங்கள் சாதாரண நிகழ்வுகளாக ஆக்கப்பட்டுள்ளன.

3.கலாசார ஊடுருவல் - திணிப்பு முறைகள்
இஸ்லாத்திற்கு எதிரான மேற்குலகு நடாத்தி வரும் சிந்தனா ரீதியான மற்றொரு அடக்கு முறைதான் கலாசார ஊடுருவல் ஆகும். ஒரு சமூகத்தின் இருப்பை நிச்சயிப்பது அதன் பண்பாட்டு மற்றும் கலாசார பழக்கவழக்கங்கள் ஆகும். ஒரு சமூகத்தின் இருப்பை ஆட்டங்காணச் செய்ய கலாசார திணிப்பு முறையைத்தான் இன்றைய மேற்குலகம் செய்து வருகின்றது. அதுமட்டுமின்றி இஸ்லாமியக் கலாசாரத்தை துடைத்தொழிப்பதே இதன் முக்கிய குறிக்கோள்.

1803 தொடக்கம் 1908 வரை எகிப்தின் ஆங்கியேப் பிரதிநிதி Load Cromer என்பவர்; Modern Egypt என்ற தனது நூலில் எகிப்திய இளைஞர்களுக்கு மேற்கத்தைய நாகரியத்தின் உண்மையான உயிரோட்டத்தை ஊட்டவேண்டும் என்பதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார்.

அதேபோன்று 1860இல் பிரித்தானியாவின் பிரதமர் ஐரோப்பாவின் கலாசாரத்தைக் கிழக்குலகில் விதைக்க பல்வேறு திட்டங்களையும் ஒரு மாநாட்டிலே முன்வைத்தார். அதற்கமைய கல்வி, அறிவியல்துறைகள், சமூகப்பண்பாட்டுத் துறைகள், ஆய்வுத்துறைகள் போன்ற துறைகளுடாக திட்டமிட்ட அடிப்படையில் நடாத்தி வருவதைக் காணலாம்.
அண்மையில் ஒரு மாநாட்டில் எகிப்திய சலாசார அமைச்சர் முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணிவது பிற்போக்குவாதம் எனப்பகிரங்கமாகக் கூறியது. Load Cromer கூறியதன் வெற்றியைக் காட்டுகின்றது.

4.ஊடகத்துறை ஊடான கலாசார படையெடுப்பு
இன்று பெரும்பாலான ஊடகங்கள் யூத ஸியோனிஸ்டுகளின் ஆதிக்கத்தில் இருப்பது சிந்தனைப் படையெடுப்பிற்காக அவர்கள் வகுத்த திட்டங்களிள் ஒரு கட்டமாகும். 1897 இல் சுவிட்ஸர்லாந்தில் 300 யூதத் தலைவர்கள் கலந்து கொண்ட மாநாட்டில் எடுத்த தீர்மானங்கள் குறித்து மீளச்சிந்திக்க வைக்கின்றது. அவற்றில் சில தீர்மானங்கள் வறுமாறு
  • ஊடகங்கள் குறிப்பாக தொலைத் தொடர்பு சாதனங்கள் யூதர்களின் கைவசம் இருக்க வேண்டும்.
  • பல்கலைக்கழகங்களிலும், கலாசாலைகளிலும் ஆதிக்கம் செலுத்த வேண்டும்.
  • கேளிக்கை விடுதிகள், பொழுது போக்கு அறைகளை உருவாக்க வேண்டும்
  • உலகில் பிரிவினைகளையும், பிளவுகளையும் உட்பூசல்களையும் ஏற்படுத்த வேண்டும்
இது போன்றுதான் ஊடகத்தைப் பயன்படுத்தி உலகில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதை போர்த்துக்கல் என்ற யூத அறிஞன் இவ்வாறு கூறுகின்றான். இலக்கியப் பத்திரிகைகளால் மக்களிடையே பெரும் பாதிப்புக்களை ஏற்படுத்த முடியும். இவற்றினால் நாடுகளை வாங்கவும், எந்தவொரு ஊடகத்தில் பாதிப்பை ஏற்படுத்தவும், தீய சிந்தனைகளை உருவாக்கவும் முடியும். எனவே யூத நாட்டைத் தவிர மற்ற அனைத்து நாடுகளிலும் நாம் ஊடகத்துறையில் ஆதிக்கம் செலுத்த வேண்டும்.என்றான்.

அந்தவகையில் மேற்கத்தேய தொடர்பூடகங்கள் அமெரிக்க-ஐரோப்பிய சிந்தனைப் படையெடுப்பிற்கான சாதனங்களாக விளங்குகின்றன. CNN, BBC, VOA, CIA, REUTER போன்ற  செய்தி நிறுவனங்களும் உளவு ஸ்தாபனங்களும் யூதர்களினதும், அது சார்பானவர்களினதும் அகன்ற கையில் குவிந்துள்ளமையால் இவை இஸ்லாமிய எழுச்சி குறித்துப் பல வன்மையான செய்திகளை வெளியிட்டு வருகின்றன. அவ்வாரே News Week, The Washington Times, Washington Post, Usa Today போன்ற பத்திரிகைகளும் யூத ஆதிக்கத்திலேயே செயற்படுகின்றன.

நெதர்லாந்தின் கிரிகோரியல் நெக்ஸ்கோட் என்ற ஓவியன் நபியவர்கள் குறித்து வரைந்த அப்பட்டமான 08 சித்திரங்களை அந்நாட்டின் 17 பத்திரிகைகள் ஊடகச் சுதந்திரம் என்ற பெயரில் பிரசுரித்து உலகலாவிய முஸ்லிம் சமூகத்தின் உணர்வுகளையும் புண்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

தகவல்களின் கழஞ்சியமாக திகழும் இணைய தளங்களில் இஸ்லாத்தைப் பற்றிய போலிப்பிரசாரங்கள் மேற்கத்திய விஷமிகளால் முனைப்புடன் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அவற்றில் 10,000 க்கும் அதிகமான இணையதளங்கள் இஸ்லாத்தைப்பற்றிய பொய்யான தகவல்களைத் திரிவுபடுத்தி கூறிவருகின்றன. இஸ்லாமிய இணைய தளங்கள் எனப் போலியாக இஸ்லாமிய பெயர்களை வைத்துக்கொண்டே இன்னும் அதிகமானவை செயற்படுகின்றன. அதேபோன்று Google, Yahoo, face book, magasin  என்பன கூட யூதர்களினாளேயே வழிநடாத்தப்படுகின்றன. இன்னும் 253 மொழிகளில் சுமார் 10மில்லியன் ஆக்கங்களைக் கொண்ட Wikipedia கூட இஸ்லாம் குறித்து தவறான கருத்துக்களைப் பதித்து வருகின்றது. இந்த இணைய தளத்திலேயே டென்மார்க்கில் நபியவர்கள் பற்றி வெளியிடப்பட்ட கேலிச்சித்திரம் முஸ்லிம்களின் உணர்வை தூண்டவே மேற்கொள்ளப்பட்டது. என்பது புலனாகிறது.

கிறிஸ்தவ பிரச்சாரத்திற்காக வருடம் தோரும் 500மில்லியன் அமெரிக்க டொலர் செலவு செய்கின்றனர் (அல் ஹஸ்ஸனாத் 2008) என்றும் வெள்ளை மாளிகையின் தரவின் படி 2005 ஆம் ஆண்டு இதற்காக 2மில்லியன் செலவிடப்படதாகவும் கருத்து வெளியிட்டுள்ளது. இன்னும் முஹம்மதுக்கு எதிரான மில்லியன்கள்எனும் சஞ்சிகையை வெளியிட்டு பிரச்சாரம் செய்கின்றது.

ஒவ்வொரு வீடும் தட்டப்பட்டு கிறிஸ்தவமாக மாற்றப்பட வேண்டும் என்பது வத்திக்கானின் கட்டளை. கிறிஸ்தவ மிஷனரிகளின் தொகை 2.5 இலட்சத்தைக் கடந்து விட்டது. 100 மில்லியன் கணினிகளும், 25 இலத்திரணியல் வலைப்பின்னல்களும், 100 ஆயிரம் கிறிஸ்தவ புத்தகங்களையும் வெளியிட்டு வருகின்றது.

மற்றொரு தகவல்களின் படி 82 மில்லியன் கணினி, 24900 வாராந்த சஞ்சிகைகள் 53 மில்லியன் மக்களுக்கு விநியோகிக்கப்படுகின்றது. மற்றும் 3240 ஒலிபரப்பு நிலையம் காணப்படுதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. (ஜெம்சித் அஸீஸ் மேற்கில் கிறிஸ்தவ அமைப்புகளின் அதிகரிப்பும், இஸ்லாத்தின் பரவலை முடக்குவதற்குமான முயற்சிகளும்- தினகரன் 2008)

5.அரபு மொழியிலிருந்து மக்களைத் தூரமாக்குதல்
மேற்குலகின் இச்சிந்தனைப் படையெடுப்பில் அவர்கள் பயன்படுத்தும் அடுத்த ஆயுதம் மிகப் பயங்கரமானது. அதுதான் மக்களை அல்குர்ஆனிலிருந்து தூரமாக்கும் செயற்பாடாகும். விக்டோரியாக் காலத்தில் எகிப்து பிரித்தானியாவின் காலனித்துவத்தில் இருந்த போது கிளாஸ்டன் என்ற பிரித்தானியப் பிரதமர் மக்கள் சபையில் அல்குர்ஆனை கையில் ஏந்தியவாறு இந்நதப் புத்தகம் எகிப்த்தியரிடம் இருக்கும் வரை அந்த நாட்டில் நாம் நிம்மதியாக இருக்க முடியாது. இதிலிருந்து அவர்களைத் தூரப்படுத்த வேண்டும் என்றார்இன்று இதற்கான திட்டமிடல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன.

6.தம்மை தன்னிறைவு கொண்டவர்களாகவும் முஸ்லிம்களை, சார்ந்து வாழும் சமூகமாகவும் சித்தரித்தல்
முஸ்லிம் நாடுகளைத் தமது வியாபார சந்தையாக இன்று அமெரிக்கா உட்பட ஐரோப்பிய நாடுகள் மாற்றி வருகின்றன. இதற்கு அந்நாடுகளை சுய நிர்ணய சக்தியற்றவர்களாகவும் எப்போதும் சார்ந்து வாழும் (Dependent Society)  நுகர்வுச் சமூகமாகவும் சித்தரித்து பொருதார ரீதியாகவும், அறிவியல் தொழிநுட்ப ரீதியிலும், அரசியல், கலாசார, நாகரிகத்திலும் தாம்தான் விற்பனர்கள் என்றும் தம்மைச் சார்ந்தே ஏனைய நாடுகள் காணப்பட வேண்டும் என்றும் கழிவரை முதல் கல்லரை வரை விதவிதமான உற்பத்திப் பொருட்களைப் பெற தங்களையே சார்ந்திருக்க வேண்டும் என்றும் பெருமையுடன் மேற்கு கூறுகிறது. இருந்த போதும் முஸ்லிம் நாடுகளும் இத்துறைகளில் முன்னேற்றம் கண்டுவருவது வரவேற்கத்தக்க விடயமாகும்.

7.மருத்துவத்துறை சார்ந்த சிந்தனைகள்
இத்துறையிலும் அவர்களது சிந்தனையை வித்திடாமல் இல்லை என்று சொல்லும் அளவுக்கு அவர்களது செயற்பாடு மாறியுள்ளது. மருத்துவ சிகிச்சைக்காக நோயாளிகள் அமர்த்தப்படும் போது பல்வேறு உதவிகள் ஒத்தாசைகளை வழங்கி அவர்களை கிறிஸ்தவர்களாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். உண்மையில் இயேசு கிறிஸ்துவினால் மாத்திரமே நோயைக்குணப்படுத்த முடியும் என்று அவர்களது சிந்தனையில் மாற்றத்தை கொண்டு வருகிறார்கள். இதன் மூலம் எத்தனையோ சிறுவர்கள், வயோதிபர்கள் கிறிஸ்தவ மதத்திற்கு மதமாற்றப்பட்டுள்ளார்கள் என்பதை ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

மேலும் கிறிஸ்மஸ் காலங்களில் வைத்தியசாலைக்கு சென்று சிறுவர்களுக்கு அன்பளிப்புக்களை கொடுத்துவிட்டு இது யார் உங்களுக்கு கொடுத்தார்கள் என்று வினா எழுப்பி இதனை உங்களுக்கு கொடுத்தவர். உங்கள் இறைவன் இயேசு என்று அந்த பிஞ்சி உள்ளங்களில் மதமாற்று கொள்கையை பரப்புகின்றனர்.

8.சமூகப்பணியில் கிறிஸ்துவ சிந்தனை
கிறிஸ்தவ மிஷனரிகள் பல்வேறு சமூகப்பணிகளை மேற்கொண்டு கிறிஸ்தவ மதத்திற்குள் ஈர்க்கும் முயற்சிகளை மேற் கொண்டு வருகின்றனர். குறிப்பாக கிராமப்புற மக்களுக்கு வீடுகளை, கிணறுகளை வழங்கி அவர்களின் கொள்கைக்குள் தினிக்கின்றனர். இதன் மூலம் எத்தனையோ கஷ்ட நிலையில் உள்ள குடும்பங்கள் வெறும் வீடு, கிணறுக்காக இஸ்லாத்தை விட்டும் மதமாறியுள்ளது. காரணம் கேட்கும் போது எந்தவொரு இஸ்லாமிய அமைப்பும் எமக்கு உதவவில்லை. கிறிஸ்தவரகளே உதவினார்கள் என்ற நொண்டிச் சாட்டைக் கூறி மதமாறுவதைக் குறிப்பிட முடியும்.

இன்னும் 1966 ஆம் ஆண்டு எடுத்த தீர்மானத்தின் படி அமெரிக், ஐரோப்பிய தேவாலயங்களில் உள்ள பணத்தினை இடம்பெயர்ந்த முஸ்லிம்களுக்காக செலவிட வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இன்னும் வாலிப கிறிஸ்தவ ஒன்றியம் வாலிபர்களை கிறிஸ்தவ மயமாக்களுக்கு மாற்றுவதோடு, பெண்களையும் குறிவைத்து செயற்படுகிறார்கள். காரணம் ஒரு பெண்ணின் மூலம் ஒரு குடும்பத்தை இலகுவாக கிறிஸ்தவமாக மாற்றிவிடலாம் என்ற எண்ணத்தில் செயற்படுகிறார்கள்.

இத்தகைய செயற்பாடுகளுக்கு மத்தியில் இஸ்லாத்தின் வளர்ச்சி பற்றி பின்னர் பார்ப்போம்...


உசாத்துணைகள்.

1.இஸ்மியா பேகம்,எம்.எஸ்.,(2013) “இஸ்லாமிய நாகரிகமும் பிற நாகரிகங்களும்”, இஸ்லாஹியா வெளியீட்டு மையம், மாதம்பை. ப.ப.113- 124.

2.ஹபீபுல்லாஹ், எம்.டி.,(2005), “இஸ்லாமிய உலகும் முஸ்லிம்களுக்கு எதிரான சதித்திட்டங்களும்”,ஐ.எஸ்.ஏஸ், கிண்ணியா.

3.அப்துல் ஹமீது, எம். ஏஸ்.,(2000) “தேசியவாதமும் இஸ்லாமும்”, இலக்கியச் சோலை 26 உரோம் ரோட், சென்னை.

MLM.Hilfan
Reading B.A Special in Islamic Civilization
South Eastern University Of Sri Lanka  

No comments:

Post a Comment