.உங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக ------- Meesan Way ------- தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்

Tuesday, July 8, 2014

மருத்துவக் குனம் நிறைந்த பேரீச்சம் பழம்



பொதுவாக பழங்கள் விட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவையாகக் காணப்படுவதால் அவை எல்லோருக்கும் பயனுள்ளதாக இருப்பதுடன் எல்லோரும் அதை விரும்பி உண்னக்கூடிய ஒன்றாகவும் காணப்படுகிறது. அவற்றில் அதிக பிரயோசனம் தரக்கூடிய முக்கியமான ஒன்றுதான் பேரிச்சம்பழமாகும். இது அதிக நோய்களுக்கான நிவாரணியாகவும், பழங்களிலேயே தனிச்சுவை கொண்டதாகவும் காணப்படுகின்றது. எனினும் எம்மில் அதிகம் பேர் பேரிச்சம் பழத்தில் காணப்படும் எண்ணற்ற மருத்துவக் குனங்கள் பற்றி அறியாமலேயே இருக்கின்றோம். எனவே இந்த பேரிச்சம் பழத்தில் அடங்கியிருக்கும் பலவகையான மருத்துவக் குனங்களில் முக்கிய சிலதை இங்கு நோக்குவோம்.


அந்தவகையில் பேரிச்சம் பழத்தில் அதிகளவான விட்டமின் ஏ சத்தும், குறிப்பிட்ட அளவு விட்டமின் பி, இரும்புச் சத்து மற்றும் சுன்னாம்புச் சத்து போன்றனவும் காணப்படுகின்றன. உதாரணமாக ஒரு அவுன்ஸ்(28.3495231 grams) பேரிச்சம் பழத்தை;தை எடுத்துக் கொண்டால் அதில் 170 மில்லி கிராம் விட்டமின் ஏ சத்தும், 26 மில்லி கிராம் பி1 விட்டமினும், 9 மில்லி கிராம் பி2 விட்டமினும், 30 மில்லி கிராம் இரும்புச் சத்தும், 20 மில்லி கிராம் சுண்ணாம்புச் சத்தும் அடங்கியுள்ளது.

பேரிச்சம் பழத்திற்கு இரத்தத்தை விருத்தி செய்யும் ஆற்றலும், இரத்தத்தை வளப்படுத்தும் இயல்பும் உண்டு. எனவேதான் சிறியவர் முதல் பெரியவர் வரை அன்றாடம் உணவு உண்டபின் ஒரு வேளையாவது 2 அல்லது 3 பேரிச்சம்பழங்களைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் புதிய இரத்தம் உற்பத்தியாகும். மேலும் தினமும் இரவில் 4 பேரிச்சம் பழங்களை சாப்பிட்டுவிட்டு ஒரு டம்ளர் பால் குடித்து வந்தால் இரத்தம் விருத்தி அடைவதோடு, உடலில் தெம்பும், வலிமையும் கூடும். உடலில் சர்க்கரைத் தன்மை குறைந்து சோர்வடையும் போது, சில பேரிச்சம் பழங்களைப் சாப்பிட்டாலே போதும் உடனே ரத்தத்தில் சர்க்கரைத் தன்மையை அதிகரித்து உடலை சமநிலைக்கு கொண்டுவரும்.

தினமும் இரவில் பேரிச்சம்பழத்தை பாலில் வேகவைத்து சாப்பிட்டு வந்தால், சாப்பிட்ட உணவு எளிதில் செரிமானமாகுவதுடன், மலச்சிக்கலும் உடனே தீரும் என ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். மேலும் இருமல், கபம் போன்ற கோளாறுகளுக்கும் இதனால் நிவாரனம் கிடைக்கும்.

மாலைக் கண் நோயால் பாதிக்கப் பட்டவர்கள், பேரீச்சம் பழத்தை தேனுடன் கலந்து ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் உடலுக்குத் தேவையான எல்லா சத்துக்களும் கிடைப்பதுடன், இதனால் கண் பார்வை சம்பந்தப்பட்ட கோளாறுகளும் நீங்கவும் வாய்ப்புண்டு.
வளரும் குழந்தைகளுக்கு பேரிச்சம் பழம் கொடுத்து வந்தால் அது அவர்களின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு உதவக் கூடியதாய் அமையும். சக்தி குறையுடையவர்கள் பேரிச்சம்பழத்தைத் தேனில் ஊறவைத்து நாள்தோறும் சில துண்டுகளைச் சாப்பிட்டு பால் அருந்தினால் நல்ல பலன் கிடைக்கும். அதேபோல் பேரிச்சம்பழம் இரண்டை மதிய வேனையில் தேனில் ஊற வைத்து மறுநாள் காலையில் உணவுக்கு முன் சாப்பிட்டு வந்தால் இதயவலி குணமாகும்.


பெண்களுக்குப் பொதுவாக கால்சியம் குறைபாடு அதிகம் ஏற்படுகிறது. இவர்கள் பேரிச்சம் பழத்தை தினமும் உட்கொண்டு வந்தால் கால்சியம் குறைபாட்டை தவிர்க்க முடியும். மேலும், மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு ஏற்படும் சோர்வை போக்கவும் பேரிச்சம் பழம் உதவுகிறது.
இளம் பெண்கள் பெரும்பாலானவர்களுக்கு இரத்த சோகை உள்ளது. இதனால் குழந்தைப் பேறு காலகட்டத்தில் பல பாதிப்புக்கள் ஏற்பட வாய்ப்புண்டு. எனவே இதனைத் தவிர்க்க பேரிச்சம் பழத்தை உட்கொள்வதன் மூலம் இரத்த சோகையைப் போக்கிக் கொள்ளுங்கள்.
மெனோபாஸ் அதாவது 45 வயது முதல் 52 வயது வரை உள்ள காலகட்டத்தில் மாதவிலக்கு முழுமையடையும். அப்போது பெண்களின் எலும்புகள் பலவீனமாக இருக்கும். மேலும் கை, கால் மூட்டுகளில் வலி உண்டாகும். இதனை சரிசெய்ய, பேரீச்சம் பழத்தை பாலில் கலந்து கொதிக்க வைத்து பாலையும், பழத்தையும் சேர்த்து சாப்பிட்டு வருதல் நல்லது.

அதிக வேலைப்பளு, மன உளைச்சல், நீண்ட நேரம் பட்டினி இருப்பவர்கள், அதிக வெப்பமுள்ள பகுதிகளில் வேலை செய்பவர்கள் நரம்புத் தளர்ச்சியால் பாதிக்கப் படுவார்கள். இவர்கள் பேரீச்சம் பழத்துடன் பாதாம் பருப்பு சேர்த்து பாலில் கலந்து கொதிக்க வைத்து சாப்பிட்டால் நரம்புத் தளர்ச்சி நீங்கி, ஞாபக சக்தி கூடும். கைகால் தளர்ச்சியும் குணமாகும்.
மேலும் பேரிச்சம் பழமானது இரத்தத்தைச் சுத்தப்படுத்தி விருத்தி செய்தல், எலும்புகளை பலப்படுத்தல், இளைப்பு நோயைக் குணப்படுத்தல், முதியோர்களுக்கு ஏற்படும் உடல் ரீதியான இன்னல்களைக் குறைத்தல், தோல், கண் சம்பந்தமான கோளாறுகள், தொற்று நோய்கள் வராது பாதுகாத்தல், போன்றவற்றுக்கும் உதவுகின்ற ஒன்றாகக் காணப்படுகின்றது.

குறிப்பு: பேரிச்சம் பழத்தை நீரில் அதிக நேரம் வைத்து கழுவவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

எனவே இவ்வாறான பல்வேறு மருத்துவக் குனங்களை கொண்டுள்ள நோய்நிவாரணியான பேரிச்சம் பழத்தினைக் கொண்டு நாமும் பயன்பெற முயற்சிப்போம்.

No comments:

Post a Comment