எம்மில் அதிகம் பேர் மிளகை அறிந்திருக்கின்றோம். ஆனால், அதில் காணப்படும் மருத்துவ குணங்கள் பற்றி நாம் எந்த அளவு அறிந்திருக்கின்றோம் என்பது கேள்விக்குறியே? இயற்கை வைத்தியத்தில் ஒன்றான மிளகு எமது சமூகத்தில் காணப்படும் அதிக நோய்களுக்கு நிவாரணம் தரும் ஒரு மருந்தாக காணப்படுகிறது. அந்தவகையில், மிளகில் காணப்படும் மருத்துவ குணங்கள் பற்றி இங்கு நோக்குவோம்.
மிளகு சுவாசக்கோளாறுகளுக்கு நிவாரணத்தை தருவதுடன் இருமல், மலச்சிக்கல், ஜலதோசம், செரிமானம், இரத்தசோகை, ஆன்மைக்குறைவு, தசை விகாரங்கள், பல் சம்பந்தமான நோய்கள், வயிற்றுபோக்கு, இதய நோய் போன்றவற்றை குணப்படுத்த சிறந்தது. மேலும் மிளகு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடியதாகவும் காணப்படுகிறது.
மிளகு சாப்பிடும் போது வயிற்றில் சுரக்கும் Hydrochloric அமிலம் வயிற்றில் ஏற்படக்கூடிய பிரச்சனைகளை சரிசெய்கிறது. அதாவது சரியான செரிமானம் வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல் மற்றும் வயிற்று வலி, குடல் எரிவாயு போன்றவற்றை தவிர்க்க மிளகு உதவுகிறது. மிளகு சேர்த்த உணவு உடலில் உள்ள வியர்வைகளை வெளியாக்குவதுடன் எளிதில் சிறுநீரை கழிக்கவும் உதவுகிறது. தினம் இரண்டு மிளகு சாப்பிடுவதன் மூலம் வயிறு சம்பந்தமான பிரச்சினை வராது.
மிளகின் வெளிப்புற கருப்பு அடுக்கு கொழுப்பின் காரணமாக உண்டாகும் உயிரணுக்களை முறிப்பதற்கு உதவுகிறது. எனவே மிளகு கலந்த உணவை சாப்பிட்டு வருவதன் மூலம் எடையை குறைக்கலாம்.
சருமநோயை குணப்படுத்துவதற்கும் மிளகு பயன்படுகிறது. இது தோலில் காணப்படும் வெண்புள்ளிகளின் நிறமியை அழிக்கிறது. ஆரம்பகட்ட வெண்புள்ளிகளை தடுப்பதற்கு மிளகை பயன்படுத்த வேண்டும். லண்டன் ஆராய்ச்சி ஒன்றின் படி மிளகு வெண்புள்ளிகளை உருவாக்கக்கூடிய நிறமிகளை அழிக்க உதவுகிறது என்பது கண்டறியப்பட்டுள்ளது.
ஆயுர்வேதத்தில் இருமல் மற்றும் சளிக்கு Tonic மருந்துகள் தயாரிக்கும் போது அதனுடன் மிளகு சேர்ப்பது உண்டு. ஏனெனில் மிளகு புரையழற்சி(Sinusitis) மற்றும் நாசிநெரிசல் போன்றவற்றிற்கு சிந்த நிவாரணம் தரக்கூடியது. இருமல் மற்றும் சளி உள்ளவர்கள் மிளகை சாப்பிட்டு வந்தால் எளிதில் குணமாகும்.
காது வலி மற்றும் காது சம்பந்தமான பிரச்சனைகள், பூச்சி கடித்தல், குடலிறக்கம், இருமல், ஆஸ்துமா, சுவாசபிரச்சனைகளை போக்க மிளகு நல்ல மருந்து. மேலும் பல் வலி, பற்சிதைவு போன்றவற்றிற்கும் இதை பயன்படுத்தலாம்.
note:குடல் புண்(ulcer) உள்ளவர்கள் மிளகு அதிகம் சேர்த்து கொள்ள கூடாது.
இவ்வாறு பல்வேறு மருத்துவ குணங்களை உள்ளடக்கிய ஒரு இயற்கை மருந்தாக இந்த மிளகு காணப்படுகின்றது.
No comments:
Post a Comment