மனித வாழ்க்கையில்
மரணம் என்பது தடுத்து நிறுத்த முடியாத ஒன்று, எனினும் நாம் உடல் நலத்துடன் வாழ முயற்சித்தல்
வேண்டும். 'நோயற்ற வாழ்வே குறைவற்ற
செல்வம்' என்பது பழமொழி. உடல்
ஆரோக்கியம்தான் மற்ற எல்லாச் செல்வங்களைவிடவும் சிறந்தது.
மற்ற செல்வங்களைப்
பெறவும், பெற்ற செல்வத்தை அனுபவிக்கவும் ஆரோக்கியம் இன்றியமையாததாய் திகழ்கிறது. உயர்பதவி
வகிப்பவர்கள், கல்வி ஞானம் உடையோர், உழைப்பாளிகள், நாளைய உலகை வழி நடாத்தும் குழந்தைச்
செல்வங்கள் போன்றோருக்கு ஆரோக்கியம் இல்லையெனில் அவர்களது கல்வியும், உழைப்பும், இவ்வுலகுக்கு
பயன்படாமலேயே போய்விடும்.
அந்தவகையில் மனிதன்
தனது ஆரோக்கியம் தொடர்பாக திட்டமிடல்களை மேற்கொண்டுஇ அதை பின்பற்ற வேண்டுமென்பதை பின்வரும்
ஹதீஸ் வழியுறுத்தியுள்ளதை பார்க்கலாம்.
நபி(ஸல்) அவர்கள்
கூறினார்கள்: “ஐந்து கட்டங்களுக்கு முன் உள்ள ஐந்து கட்டங்களை
பேணிக் கொள்ளுங்கள்:
1) முதுமைக்கு முன் உள்ள
வாலிபம்
2) வறுமைக்கு முன் உள்ள
செல்வம்
3) நோய்க்கு முன் உள்ள
ஆரோக்கியம்
4) வேலைக்கு முன் உள்ள
ஓய்வு
5) மரணத்திற்கு முன்
உள்ள வாழ்வு”
- (முஸ்னத் ஹாக்கிம்)
ஆரோக்கியமான சிறந்த
வாழ்க்கைக்கு நல்ல உணவுப்பழக்கத்தை பின்பற்ற வேண்டியது அவசியமாகும். எனவேதான், ஆரோக்கியத்தின் அடிப்படை அம்சமான உணவுப்
பழக்கம் எவ்வாறு அமையந்திருக்க வேண்டுமென இங்கு நோக்குவோம்.
ஆரோக்கியமான உணவு
வகைகளை தெரிவு செய்தல்
எப்போதும் ஆரோக்கியமான
நல்லவகை உணவுகளையே உண்தபற்கு தெரிவு செய்து கொள்ள வேண்டும். ஆரோக்கியமாக சாப்பிட வேண்டும்
எனின் முதலில், சாப்பாட்டின் அளவு என்ன? அதில் எவ்வளவு கலோரி உள்ளது என்பவற்றிற்கு முன்னுனிமை கொடுக்காதீர்கள், மாறாக,
வெவ்வேறு வகையான புத்துணர்ச்சி தரும் உணவு வகைகளை உணவுப்பழக்கத்தில் கொண்டுவரவேண்டும்.
காலை உணவு மிக அவசியம்
தினமும் தவறாது பின்பற்ற
வேண்டிய ஒன்று என்னவென்றால், ஆரோக்கியமான காலை உணவு சாப்பிடுவதே. காலையில் எழுந்தவுடன்
அன்றைய நாளை ஆரோக்கியமான காலை உணவோடு ஆரம்பிக்க வேண்டும்.
Karbonat பானங்களைத் தவிர்த்தல்
Karbonat பானத்தில் இயற்கையாக இனிப்புச் சுவை சேர்க்கப்படுவதால்,
அது ஆரோக்கியத்தில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும். அதிலும் தினமும் ஏதாவது ஒரு குடிபானம்
அருந்துபவராக இருந்தால், உடல் நிலை மிகவும் மோசமாகும்.
பழங்கள்இ காய்கறிகளை
அதிகளவு சேர்த்துக்கொள்ளல்
மாலையில் Snacks சாப்பிடுவதற்கு பதிலாக ஒரு கப் fresh fruits சாப்பிடவும். பசி எடுக்கும் போதெல்லாம், ஒரு துண்டு
பழம் சாப்பிட்டு பழகினால், அதனால் உடலுக்குத் தேவையான, உயிர்ச்சத்துகள்(vitamins), ஊட்டச்சத்துக்கள்(Nutrients) கிடைக்கும். அன்றாட
உணவில் குறைந்தது ஐந்து பகுதியாவது வெவ்வேறு வகையான பழங்கள் மற்றும் காய்கறிகளை சேர்த்துக்
கொள்ளுங்கள்.
அளவாகச் சாப்பிடடல்
'அளவுக்கு மீறினால்
அமிர்தமும் விஷம்' என்பார்கள். உணவின்
ருசி கருதி தனக்குப் பிடித்த உணவை அதிகமாக உட்கொள்வதைத் தவிர்த்து புரோட்டீன்இ கொழுப்பு,
வைட்டமின்கள், தாதுப் பொருட்கள், மாவுச் சத்து, நார்ச் சத்து போன்ற எல்லாம் கலந்த பல
உணவுகளை உண்ணப் பழகிக் கொள்ள வேண்டும். அத்தோடு உட்கொள்ளும் உணவுப் பொருளின் வெப்ப
வெளிப்பாட்டுத் திறன்(கலோரி) ஐயும் கணக்கிடத் தெரிந்து கொள்ள வேண்டும். மேலும்
கடையில் உணவுப்பொருள் வாங்கும் போது லேபிளை நன்றாக படித்து, அதில் என்ன செயற்கை பொருட்கள்
சேர்த்துள்ளனர் என்பதை தெரிந்து கொண்டு பொருளை வாங்கவேண்டும்.
மெதுவாக சாப்பிடல்
“பதறாத காரியம் சிதறாது”
என்பார்கள். ஆகவே முடிந்த
வரை மெதுவாகச் சாப்பிட வேண்டும். இது உடலுக்கு மிகவும் நல்லது. மேலும் சாப்பிடும்போது,
உணவை சிறு சிறு துண்டுகளாக மென்று சாப்பிட்டால், உணவு விரைவாக ஜீரணமடைந்து திருப்தியளிக்கும்.
வீட்டில் சமைத்து
சாப்பிடடல்
ஹோட்டல் போன்ற வெளியிடங்கனில்
அடிக்கடி சாப்பிடுவதை குறைத்து முடிந்தளவு இயற்கை உணவுகளை வீட்டிலேயே சமைத்து உண்ண
பழகிக் கொள்ளவேண்டும். இது தான் உண்மையில் ஆரோக்கியத்துக்கு பெரிதும் உதவும் வழி முறையாகும்.
புரோட்டீன்(Protein) உணவுகளை அதிகம் சாப்பிடல்
அன்றாடம் சுறுசுறுப்பாக
வேலை செய்வதற்கு energy அவசியம். இறைச்சி, முட்டை, பால், பருப்பு வகைகள், சீஸ் போன்றவற்றில்
Protein அதிகமாக கிடைக்கும். மேலும் தயிர், சோயா பீன்ஸ்,
கடலை சாப்பிட்டு வந்தால் எலும்பு, பற்கள் ஆரோக்கியமாக இருக்கும்.
சரியான நேர இடைவெளியில்
சாப்பிடடல்
மூன்று அல்லது நான்கு
மணிநேரத்திற்கு ஒரு முறை சாப்பிடுவது சிறந்தது. அதாவது தினமும் மூன்று வேளை சாப்பாடும்,
ஒன்று அல்லது இரண்டு வேளை Snacks ம் சாப்பிடலாம்.
இவ்வாறு நேர இடைவெளியில் சாப்பிடுவதால், அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதை தவிர்க்கலாம்.
அதிகளவு தண்ணீர் குடித்தல்
தினமும் காலையில்
எழுந்தவுடன் குறைந்தது ஒரு டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும். இது உடலுக்கு Oxygen மற்றும் நீரை வழங்கி,
உடல் திசுக்களுக்கு புத்துயிர் அளிக்கும்.
Carbohydrates உள்ள உணவுகளை சேர்த்துக்கொள்ளல்
போதிய அளவு Carbohydrates மற்றும் நார்ச்சத்து(Fiber) அடங்கிய ஆரோக்கியமான
உணவு வகைகளை தேர்வு செய்ய வேண்டும். தானிய வகை உணவுகள் நீண்ட நேர energy க்கு உகந்தது.
தானிய வகை உணவுகளில் அதிகளவு phytochemical மற்றும் antioxidant இருப்பதால், இதயநோய், புற்றுநோய், மற்றும் நீரிழிவு
நோயிலிருந்து நம்மை பாதுகாக்க உதவும்.
ஆரோக்கியமான கொழுப்புச்சத்துள்ள
உணவுகளை சேர்த்தல்
ஆரோக்கியமான நல்ல
கொழுப்பு மூளை, இதயம் மற்றும் திசுக்கள் வளர்ச்சிக்கு அவசியம். அதேபோல் தலை முடி, சருமம்
மற்றும் நகங்களுக்குச் சிறந்தது. ஒமேகா3 என்ற கொழுப்பு வகை உள்ள உணவுகள், இதய நோய் அபாயத்தை குறைத்து உற்சாகமான மனநிலையை
கொடுப்பதுடன், அறிவாற்றல் குறையை நீக்கவும் உதவும்.
நல்லவகை சமையல் எண்ணையை
தெரிவு செய்தல்
சமையல் எண்ணையில்
கொழுப்புச் சத்து அதிகமாக உள்ளது. கொழுப்புச் சத்துக்களை இரண்டுவகையாகப் பிரிக்கலாம்.
1) முழுமையடையாத கொழுப்பு
(Poly unsaturated Acid)
2) முழுமையடைந்த கொழுப்பு
(Saturated Fatty Acid)
இதில் முதல்வகைக்
கொழுப்பில் அதிக தீங்குகள் இல்லை. இவை இரத்தக் குழாயில் படியாது. இதிலுள்ள Linoleic
Acid கொலஸ்ட்ராலை(cholesterol) ) குறைக்கும் தன்மையுடையது.
இரண்டாம் வகைதான்
மிக ஆபத்தானது. இதில் உள்ள கொழுப்புக்கள் இரத்தக் குழாயில் படிந்து பெரும் ஆபத்தை ஏற்படுத்தக்
கூடியது.
எனவே இதில் கவனமாக
இருந்து நல்லவகை சமையல் எண்ணையை தெரிவு செய்து கொள்ளவேண்டும்.
தவிர்க்க வேண்டியவை
போதைப் பொருட்களான
மது, புகைபிடித்தல், குட்கா வகைகள், போதை மருந்து போன்றவற்றை முற்றாகத் தவிர்க்க வேண்டும்.
துரித உணவு வகைகள்(Fast Food), ஐஸ்கிரீம், சாக்லேட், செயற்கை குளிர்பான வகைகள்
போன்றவற்றை தவிர்த்துக் கொள்ள வேண்டும். இதில் ப்ரிசர்வேட்டர் போன்ற வேதிப் பொருட்கள்(Chemical products) உடல் நலத்திற்குக்
கேடு விளைவிக்கும். மேலும் சுத்திகரிக்கப்பட்ட உணவு(Refined Foods) களையும், வெள்ளை மைதா
போன்ற மிகச் சுத்திகரிக்கப்பட்ட (Processed
Food) களையும் குறைத்துக்கொள்வது நல்லது.
இவ்வாறான உணவுப் பழக்கத்தினை
கடைபிடித்து எமது வாழ்க்கையையும் ஆரோக்கியமானதாக ஆக்கி கொள்ள முயற்சிப்போம்.
No comments:
Post a Comment