"இஸ்லாமிய எதிர்ப்பு
இயக்கம்- Ḥarakat al-Muqawama al-Islamiyya" என்ற பெயரே ஹமாஸ் என சுருக்கமாக அழைக்கப்படுகின்றது.
இது அமெரிக்கா மற்றும் மேற்குநாடுகளின் உதவியுடன் பலஸ்தீனில் இஸ்ரேல் மேற்கொண்டுவரும்
நில ஆக்கிரமிப்பு மற்றும் தாக்குதல்களுக்கு எதிராக போராடி வரும் இயக்கமும்,
பாலஸ்தீனத்தில் அதிகூடிய இடங்களைக்
கைப்பற்றியுள்ள அரசியல் கட்சியும் ஆகும்.
பலஸ்தீனில் பல சமூக
வேலைத்திட்டங்களை இவ்வியக்கம் முன்னெடுத்து நடத்திச் செல்வதன் மூலம் பாலஸ்தீனர்களிடையே
மிகுந்த செல்வாக்கைக் கொண்டுள்ள ஒரு அமைப்பாகவும் இது காணப்படுகிறது. அங்கு நடந்த இடைத்தேர்தல்களில்
ஹமாஸ் இயக்கம் பல வெற்றிகளைப் பெற்றுள்ளது. ஜனவரி 2006இல் 132 தொகுதிகளுக்கு நடந்த பொதுத் தேர்தல்களில் ஹமாஸ் 76 இடங்களைப் பெற்று பெரு வெற்றி பெற்றிருந்தது.
எனவேதான் பெரும் வல்லரசுகளின்
ஆதரவுடன் பலஸ்தீனில் அத்துமீறி நுழைந்து அவர்களது நிலங்களையும் உடமைகளையும் அபகரித்தும், அப்பாவி பலஸ்தீனர்கள்
மீது தாக்குதல் நடத்தி அவர்களை கொலை செய்து வரும் பலமிக்க இஸ்ரேல் இராணுவத்தை எதிர்த்து
யாரின் உதவியுமின்றி ஆக்கிரமிப்புக்குள்ளானவர்களின் உரிமைக் குரலாக போராடிவரும் ஹமாஸின்
வரலாற்றை அறிந்திருக்க வேண்டியது அவசியமாகும்.
ஹமாஸின் தோற்றத்திற்கான
காரணிகள்
1.பலஸ்தீன விடுதலையில்
தம்மை தலைவர்களாகக் காட்டிக் கொண்டோர் பலஸ்தீனின் உன்மை விடுதலைக்காக போராடியதாக தெரியவில்லை.
அவர்களது போராட்டங்களும் பேச்சு வார்த்தைகளும் ஒப்பந்தங்களும் அவர்களது சுயநலங்களை
அடியொட்டியதாகவே அமைந்தன. இதன் காரணமாக எகிப்து, சிரியா போன்ற நாடுகளும் இஸ்ரேலை
அங்கீகரிக்கும் நிலை தோன்றியது. இதனால் இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீனை மீட்டெடுப்பதற்கான
போராட்டங்கள் கொண்டு செல்லப்படும் விதத்தில் பொதுமக்கள் நம்பிக்கை இழந்தனர்.
2.பலஸ்தீன விடுதலை
இயக்கத்தின்(PLO) தலைவராக தன்னைப் பிரகடனப்படுத்திக் கொண்ட யசீர் அரபாத்தின் தூய விடுதலைக்
கேஷமும் சிறிது சிறிதாக மங்கத் தொடங்கியது. அவரும் அவர் போன்றோரும் மேற்கு நாடுகளின்
கை பொம்மைகளாகச் செயற்பட ஆரம்பித்தனர். ஆக்கிரமிப்பு இஸ்ரேலுடன் ஒப்பந்தங்கள், சமரசப் பேச்சுக்களை
ஏற்படுத்திக் கொண்டதன் மூலம் அவர்கள் அரியாமலே மேற்கின் சதிவலைக்குள் வீழ்ந்தனர். இதுவும்
ஆக்கிமிக்கப்பட்ட பலஸ்தீனின் விடுதலைக்காக தூய்மையாகப் போராடுகின்ற ஒரு இயக்கத்தின்
தேவையை வழியுருத்தியது.
இது போன்ற பல நிகழ்வுகளை
அடிப்படையாகக் கொண்டு பல்வேறு அறிஞர்கள் மற்றும் சமூகப் பற்றுக் கொண்டோர்கள் மத்தியில்
பலமான ஒரு இயக்கத்தின் தேவை உணரப்பட்டதன் விளைவாக உருவானதே ஹமாஸ் எனும் விடுதலை விருட்சமாகும்.
ஹமாஸின் தோற்றம்
1960 களின் இறுதிப் பகுதியில்
அஷ்ஷெய்க் அஹ்மத் யாஸினின் தலமையில் “அல்லாஹ்வே எமது இலட்சியம், இறைத்தூதர் எமது முன்மாதிரி, அல்-குர்ஆன் எமது
சட்ட யாப்பு, போராட்டம் எமது வழிமுறை, அல்லாஹ்வின் பாதையில்
மரணிப்பது எமது உயர்ந்த ஆசை” என்ற உன்னதமான கொள்கையை
சுமந்து கொண்டதாக முளைவிட்டது ஹமாஸ். ஆரம்பத்தில் ஹமாஸ் என்ற பெயரில் இவ்வியக்கம் செயற்படவில்லை.
இயக்கத்தின் பெயர், தலமை, இயக்கக் கட்டமைப்பு என்பன
மிகவும் இரகசியமாகவே இருந்து வந்தன. அன்றிலிருந்து கொள்கைக்காக புறப்பட்ட அஷ்ஷெய்க்
அஹ்மத் யாஸினின் தலமையிலான சிறு அமைப்பாகக் காணப்பட்ட இது தனது கிளைகளை பரப்பி ஹமாஸ்
என்ற பெயரில் பெரு விருட்சமாய் வளரத்தெடங்கியது.
காஸாவில் தொடங்கிய
இவ்வமைப்பின் சமூக, அரசியல் செயற்பாடுகள் பலஸ்தீனின் ஏனைய பிரதேசங்களுக்கும்
ஊடுருவிச் சென்றன. 1978-1980 களின் போது இவ்வியக்கம்
பெரும் சமூக சக்தியாக வளர்ச்சியடைந்து மக்களின் ஆதரவையும் பூரணமாக பெற்றது. 1967 முதல் பள்ளிவாயல்களை தளமாகக் கொண்டு ஆணமீக, லௌகீக வழிகாட்டல்
பயிற்சிகளை இயக்க உறுப்பினர்களுக்கு ஊட்டி அஷ்ஷெய்க் அஹ்மத் யாஸின் இவ்வியக்கத்தை மக்கள்
மயப்படுத்தினார்.
மேலும் இதே ஆண்டில்
இயக்க உறுப்பினர்களின் தேக ஆரோக்கியத்தை பேனுவதற்காக
வேண்டி “ஜம்இய்யத்துல் இஸ்லாமிய்யா”
என்ற பெயரில் விளையாட்டுக்
கழகமொன்று ஹமாஸினால் தொடங்கி வைக்கப்பட்டது. இதன் மூலம் பெரும்பாலான இளைஞர்களை ஹமாஸ்
தன் பக்கம் ஈர்த்துக் கொண்டது. இக்காலப்பகுதியில் ஸலாஹ் ஷஹாதா, அப்துர் ரஹ்மான் தர்ராஸ், ஸாபிர் போன்று ஆளுமைகள் இவருடன் இனைந்து இவ்வியக்கத்துக்காக
தோல் கொடுத்தவர்களில் மிக முக்கியமானவர்களாவர்.
1973 களில் ஹமாஸிற்கு
மக்கள் ஆதரவை திரட்டுவதற்காக வேண்டி “அல்-மஜ்மஉல் இஸ்லாமி” எனும் பெயரில் ஒரு
கிளை அமைப்பு தோற்றுவிக்கப்பட்டது. இதன் மூலம் கல்வி, பொருளாதாரம் மற்றும் அனைத்துவகையான
சமூகப் பணிகளும் திட்டமிட்ட அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்பட்டன. இவ்வாறு வளர்ச்சிப்
பாதையில் வீற நடை போட்டுக் கொண்டிருந்த ஹமாஸிற்கு, காஸாவிலுள்ள எகிப்தின் அல்-அஸஹர்
பல்கலைக் கழகத்தின் கிளை தரமுயர்த்தப்பட்டமை அதன் வளர்ச்சிக்கு மிகவும் பக்கபலமாய்
அமைந்தது. 1980-1984 காலப் பகுதியில்
ஒரு ஒழுங்கான கட்டமைப்புக்கு உட்பட்ட பெரும் இயக்கமாகவும், அரசியல் சக்தியாகவும், பலம் வாய்ந்த போராட்ட
சக்தியாகவும் ஹமாஸ் தோற்றம் பெற்றது.
1982இல் நேரடியாக ஆயதப்
போராட்டத்தில் இறங்க வேண்டுமென்ற கருத்து ஹமாஸிற்குள் எழுந்த போது அதற்கான முன்னெடுப்புக்கள்
ஆரம்பமாகின. 1984இல் ஹமாஸின் ஆயுதச்
சேகரிப்பு வெளிச்சத்துக்கு வந்ததினையடுத்து ஆணமீகத் தலைவர் அஹ்மத் யாஸினும் இன்னும்
சிலரும் சிறை சென்று அடுத்த ஆண்டே விடுதலையாகினர். அதன் பின் 1987இன் கடைசிப்பகுதியில் ஆயுதப் போராட்டத்தை உத்தியோகப்
பூர்வமாக, தொடங்க வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
எனினும் 1989இல் தான் இஸ்ரேலுக்
கெதிரான ஹமாஸின் முதல் ஆயுதத் தாக்குதல் நடத்தப்பட்டது.
இவ்வாறு வளர்ச்சியடைந்த
ஹமாஸ் இன்று இராணுவப் பலமிக்க இஸ்ரேலுடன் எதிர்த்து போராடக் கூடிய சக்தி மிக்க இராணுவ
வலிமை கொண்டதாகவும், பலஸ்தீனின் பெரும் அரசியல் சக்தியாகவும்
மாறியுள்ளது. அதேவேலை உலகலவில் பிரபல்யமான ஒரு அமைப்பாகவும் காணப்படுகின்றது.
உசாத்துனைகள்
- காஸா இரத்தம் கசியும் ஈமானிய தேசம்,(2009), சுதந்திர பலஸ்தீனத்துக்கான மையம்,கொழும்பு-10.
- www.Aljazeera.com
- www.idfblog.com/hamas
- www.thewire.com/...history...hamas
- en.wikipedia.org/wiki/History_of_Hamas
- www.jstor.org/stable/2538077
- www.cfr.org
MSM. Naseem
No comments:
Post a Comment