.உங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக ------- Meesan Way ------- தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்

Sunday, July 6, 2014

இஸ்லாமிய விழுமியங்கள் திருட்டுப்போன பொக்கிசம் காணுமிடத்தில் கைப்பற்றிடு

தத்திப்பிடித்து வரலாறு கண்ட
பண்பாட்டுப்பாசறை
பட்டைத்தீட்டிய  இரத்தினங்கள்
சீர்கெட்ட மேற்கின்
சாக்கடைக்குள்
கூழாங்கற்களாய்
மங்கிக்கிடக்கின்றன!!!!

அன்று ஆன்மாக்கள்
ஒளியூட்டப்பட்டு
உணர்வுகளையெல்லாம்
தட்டிவிடப்பட்டு
நிரந்தர இலட்சிய வேட்கையை
துளிர் விடச்செய்த
இஸ்லாமிய கலாச்சார விழுமியங்களை
அவை விழுங்கி
ஒப்பமிட்டு கொண்டிருக்கும்
அவல நிலைக்குள்!!!!

பாதை தெரியாமல் தடுமாறி
கால் போகும் திசையெல்லாம்
பாதம் பதித்து
சடவாத சக்திக்குள்
தன்னிலை மறந்த அடிமைகளாய்
மூட்டை மூட்டையாய்
புத்தகச்சுமையை
முதுகெலும்பு முறியச்செய்ய
செல்லும் இளைஞனே!!!
சற்று விழித்துக்கொள்………!!!!!!!

வழிகாட்டும் அகள்விளக்காய்
ஓர் தூதை தந்து
மதி எனும் ஒளிகொண்டு
சாதனை படைத்திட
கை கொடுத்த மார்க்கம்
இஸ்லாம்-அதில்
உன் பகுத்தறிவை
விலை பேசி
ஆட்டு விக்கும் பொம்மைப் போல்
இயந்திரமாய்
முடக்கிவிட்டு
பிரம்மைக்குள் வாழவிட்டது
மேற்குலகம்

அதன் கோரப்பிடி
உன் கலாச்சாரத்தை
காலில் போட்டு
மிதிக்கிறது
கல்விப்பாதையின்
உண்மை ரூபத்தை
திறையிட்டு மறைக்கிறது!
சந்தேகம் கொள்வதே
கல்வியின் அடிப்படை
என்ற கோசத்தால்
உன் மூளையை
சலவை செய்து
மறு உலகையும்
சந்தேகத்தில் ஆழ்த்தி
சிந்தனையை
சிதைந்து விட்டது!!!!!!!!

உன் பயணத்தை
சற்று திரும்பிப் பார்
சிறந்ந கற்கைக்கு
உதாரணம் - உன்னை
அது வாழ்வின்
யதார்த்தத்திற்குள்
பக்குவப்படுத்த வேண்டும்
பண்பாட்டை உன்
ஆத்மாவுடன் கலந்து விட
வேண்டும்
இலட்சியத்தின் பெருபேருகளை
சடவாதத்திலிருந்து
தூரப்படுத்த வேண்டும்
அவ்வாறில்லை??????????

அவை உன்னை
உனக்குத் தெரியாமலே
அடிமைபடுத்தி விட்டன
விரக்தி, ஏமாற்றம்
தடுமாற்றம், உளநோய்
என அடுக்கடுக்காய்
உனக்குள் பல
ஆற்பரிப்புகள்………..
இவைகளெல்லாம்
மேற்கின் சிந்தனைதாக்கம்
புரையோடிவிட்ட கல்விப்பாதையில்
உன் ஆன்மாவை
நச்சுத் துளிகளால்
சிறைப்பிடித்து விட்டன!!!!!!!!

எழுந்து நில்!!!!!!!!!!!!
நடை பிணமாய்
வாழ்வதற்கு
இன்னும் நீ கேவலமானவனல்ல

திருட்டுப்போன
பொக்கிசங்களை
கடலில் மூழ்கி
தேடிப்பெறு
வெறும் அலைகளின்
முதுகில் மறைந்து
போகும்
குமிழிகளின்
குறிக்கோளற்ற
பயணத்தை
மாற்றிவிடு
துரதிஸ்டம் - அது
வீதிக்குள் புதைந்திருப்பதில்லை
அவற்றை
நீயாகவே தான்
வீதிக்குள் புகுத்திக்
கொள்கின்றாய்…..
பணத்திற்காய் பட்டம்
வாங்கி
பண்பாட்டை
பொசுக்கி விட்டு
பரிதாபமாய் வாழ்வதற்கு
பாவியல்லவே நீ

ஈடேற்றமும்
வெற்றியும் கொண்டு
அறிவியல் புரட்சியை
ஆத்மீக உயிர்நாடியில்
தொடக்கி விட்ட
இஸ்லாத்தினை
வரலாறுகளை
புரட்டிப்படி
தொலைந்துப்போன
கலாசாரத்தையும்
மறைந்துப்போன
பண்பாட்டையும்
மீட்டெடுத்திடு

புது யுகம் படைக்க
கைகளில் ஒளிப்பிழம்பை
இறுகப்பிடித்து
உயிரோட்டமான
கல்விப்பாதையை
உதயமாக்கிடு!!!!!!!

வரலாறு பேசும்
அறிவியல் மாற்றத்தில்
உன் இள ரத்தம்
துணிந்து
சாதனை படைத்திடட்டும்!!!!!!!

அன்று காரிருள் சூழ
அறியாமை கல்லறைக்குள்
புதை போன உலகத்தை
கற்றலை கடமையாக்கி
ஆறாட்சி வேட்கையை
தொடக்கி விட்ட
பெருமை இஸ்லாத்தையே சாறும்

பட்டப்படிப்பிற்காய்
பல்கலைக்கழகங்களையும்
அறிவியல் புரட்சிக்காய்
ஆய்வுகூடங்களையும்
உருவாக்கி
விஞ்ஞான விருட்சத்திற்கு
முஸ்லிம்கள் வித்திடவில்லையென்றால்
இன்று உலகம்
ஓர் ஓலைக்குடிசைக்
குப்பி விளக்கோடு தான்
காலம் கடத்தியிருக்கும்
என்பதை நன்றி
உள்ள ஓர் உள்ளமும்
மறந்து விடாதே!!!!!!!

MJ. Fathima Jadheela
Reading B.A

South Estern University Of  Sri Lanka


No comments:

Post a Comment