.உங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக ------- Meesan Way ------- தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்

Sunday, July 20, 2014

இளைஞர்களுக்கு ஓர் Role Model

மக்காவிலே புகழ் பூத்த ஒரு இளைஞன். குறைஷிய இளைஞர்களில் மிகவும் விவேகமானவர், அழகிய முகம், அடர்ந்த முடி, சிவப்பு கலந்த நிறம், விசாலமான, சதைப்பிடிப்பான உடம்பு, நடுநிலையான உயரம் போன்ற உடற்கட்டமைப்பைக் கொண்டவர். இவர் போர்களில் அச்சமின்றி துணிவோடும், ஆர்வத்தோடும் குதித்து ஆக்ரோசமாக போராடுவதன் மூலம் அங்கு பிரபல்யம் அடைந்திருந்தார். இவர் போர்க்கலத்தில் பாய்ந்தோடுகின்ற வெள்ளத்தைப் போன்று உந்திச் செல்பவராக காணப்பட்டார். மேலும் அல்லாஹ் இவருக்கு வியாபாரத்திலும் நல்ல திறமையைக் கொடுத்திருந்ததால் வியாபாரக்கலத்தில் அவரைவிட அணுபவத்திலும், வயதிலும் பெரியவர்களுடன் போட்டியிட்டு முன்னேறிருந்தார்.

ஒரு நாள் இந்த இளைஞன் வியாபார நோக்கமாக ஷாமூக்கு(சிரியா) சென்று பல்வேறு நாட்டவரும் வருகின்ற ஒரு பொதுச்சந்தையில் தனது வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அவ்வேலையில் அங்கு அவர்களுக்கு மத்தியில் ஒரு துறவி தோன்றினார். அவர் அங்கு வந்திருந்தவர்களை நோக்கி ஏ வியாபாரிகளே இங்கு உங்களில் மக்காவை சேர்ந்த யாராவது உள்ளீர்களா?” என சப்த்தமிட்டுக்கொண்டிருந்தார். இதை அவதாணித்த இந்த இளைஞன் அத்துறவியின் அருகில் சென்று தான் மக்காவைச்சேர்ந்தவன்தான் என்பதைக் கூறினார். உடனே அத்துறவி அவ்விளைஞனைப்பார்த்து உங்களிடத்தில் அஹ்மத் தோண்றி விட்டாரா?” என வினவினார். அதற்கு அவ்விளைஞன் யார் அஹ்மத்என அத்துறவியிடம் வினவ அவர்தான் அப்துல் முத்தலிபின் மகன், இந்த மாதம் அவர் தன்னை நபியாக வெளிப்படுத்துகின்ற மாதமாயிற்றே! அவர்தான் இறுதி நபி மேலும் அவர் உங்களுடைய நிலத்திலிருந்து(மக்கா) வெளிப்படுவார் அத்துடன் கருப்புக்கல்லையும், ஈச்சை மரங்களையும், சதுப்பு நிலத்தையும், நீர்க்கசியக்கூடியதுமான இடத்துக்கு(மதீனா) ஹிஐரத் செய்வார்எனக் கூறிவிட்டு பின் மீண்டும் அவ்விளைஞனை நோக்கி ஏ இளைஞனே! உன்னை அவரிடம் முந்திக்கொள்ள நான் வேண்டுகிறேன்எனக் கூறினார். இதனைக்கேட்ட அந்த மக்கத்து இளைஞன் அத்துறவியின் கூற்றில் ஏதோ ஒரு உண்மை உள்ளது என்பதை அறிந்து கொண்டு தனது வியாபார நடவடிக்கைகளை அவ்வாறே கைவிட்டு விட்டு தனது ஊரை நோக்கி விரைந்து சென்றார்.

தனது வீட்டை அடைந்ததும் தனது வீட்டாரிடம் தான் இல்லாத போது இங்கு ஏதாவது முக்கிய நிகழ்வுகள் நிகழ்ந்ததா? ஏனக் கேட்டார். அதற்கு அவரது குடும்பத்தார் ஆம் அப்துல் முத்தலிபின் மகன் முஹம்மத் தன்னை நபியென  உருதி பூண்டு கொண்டார். அபூ குஹாபாவின் மகனும்(அபூ பக்கர்(ரழி) ) அவரை பின்பற்றுகிறாராம்என பதிலலித்தனர். அதற்கு அவ்விளைஞன் அபூ பக்கர்(ரழி) அவரைப் பின்பற்றுகிறாரா! நான் அவரை அறிந்திருக்கின்றேன், அவர் ஏனையவர்களுடன் மென்மையாகவும், நேசத்துடனும் நடந்துகொள்பவர், நல்ல பண்புகளுடைய ஒரு வியாபயரி. நாங்கள் அவருடன் பழகியிருக்கிறோம், மேலும்  அவர்கள் பாதுகாத்துள்ள குறைஷிகள் பற்றிய தகவல்கள் குலங்கள் பற்றிய தகவல்கள் தொடர்பாக அவரின் அறிவுக்கான அமர்வுகளை (கற்பித்தல் வகுப்பறைகள்) விரும்கபக்கூடியவர்களாகவும் இருந்தோம்என்று கூறிவிட்டு உடனடியாக அபூ பக்கர்(ரழி) யை சந்திப்பதற்காக வேண்டி வெளியாகிச் சென்றார். அபூ பக்கர்(ரழி) யை சந்தித்ததும் தனது குடும்பத்தார் தன்னிடம் கூறிய விடயங்கள் பற்றி அவரிடம் அந்த இளைஞன் வினவினான். அதற்கு ஆபூ பக்கர்(ரழி) இஸ்லாத்தைப் பற்றி அவ்விளைஞனுக்கு விளக்கினார். பின் அவ்விளைஞன் சிரியாவில் இடம்பெற்ற சம்பவத்தை அபூ பக்கர்(ரழி) அவர்களுக்கு கூறினார். பின் இருவருமாக இணைந்து நபி(ஸல்) அவர்களிடம் சென்றார்கள்.

நபி(ஸல்) அவர்கள் இவருக்கு இஸ்லாத்தைப் பற்றிய விளக்கங்களை கொடுத்துவிட்டு சில குர்ஆன் ஆயத்துக்களையும் ஓதிக்காட்டினார்கள். பின் இவ்விளைஞனின் இஸ்லாத்தின் மீதான அலாதியான ஆர்வத்தைக் கண்ட நபி(ஸல்) அவர்கள் இம்மை மருமைக்காக வேண்டி இவ்விளைஞனுக்கு நன்மாராயனம் கூறினார்கள். பின் அவ்விளைஞன் அவ்விடத்திலேயே நபி(ஸல்) அவர்களின் கரத்தில் இஸ்லாத்தை ஏற்றுக்கொன்டார். இவ்விளைஞன் தான் உபைதுல்லாஹ் மற்றும் ஸஃபா பின்த் அப்துல்லா ஆகியோரின் மகனான தல்ஹத் இப்னு உபைதுல்லா(ரழி) ஆகும்.
 
தல்ஹா(ரழி) அவர்கள் இஸ்லாத்தை ஏற்ற பின் பல வகையிலும் இஸ்லாத்தின் வளர்ச்சிக்காகவும் முஸ்லீம்களின் பாதுகாப்பிற்காகவும் தன்னை அர்ப்பணித்து செயற்படக்கூடியவர்களாக கானப்பட்டார்கள். அந்த வகையிலும் இஸ்லாத்திற்கான இவரது பங்களிப்புகளில் முக்கியமான ஒன்றாக உஹதுப்போரில் இவரது பங்களிப்பை எடுத்துக்காட்டலாம். அந்த வகையில் உஹதுப்போரில் முஸ்லீம்கள் ஆரம்பத்தில் வெற்றியை நோக்கிச் சென்று கொண்டிருந்த போதும் இடையிலே அவர்கள் விட்ட தவருகள் காரனமாக அவர்கள் பலவீனப்பட்டு சிதறியடிக்கப்பட்டனர். இந்தச் சந்தர்ப்பத்தில் நபி(ஸல்) அவர்களை சூழ இருந்த படையும் கலைந்து செலல்ல வெறும் 9 பேர்களுடன் மாத்திரம் நபி(ஸல்) அவர்கள் தனிமைப்பட வேண்டிய நிலை ஏற்பட்டுது. அவ்வேளை 7 அன்சாரிகளும் மற்றும் தல்ஹா(ரழி), ஸஃத் இப்னு அபி வக்காஸ்(ரழி) ஆகிய இரு முஹாஜிர்கள் மட்டுமே நபி அவர்களைச் சூழ்ந்திருந்தனர். இதனைக் கண்ட எதிரிகளுக்கு நபி(ஸல்) அவர்களை கொள்வதற்கான சிறந்த சந்தர்ப்பமாக இது அமைந்தது. அந்த வகையிலே உத்பா பின் அபி வக்காஸ் என்பவன் நபி(ஸல்) அவர்களுக்கு கல்லால் எரிந்ததும் அவர்கள் கீழே விழுந்ததுடன் அவர்களின் உதடும் வெடித்து, பல் ஒன்றும் உடைந்தது. அச்சந்தர்ப்பத்தில் அங்கு வந்த ஸிஹாப் சுஹ்ரி என்பவன் நபியவர்களின் முகத்தைக் காயப்படுத்தினான். மேலும் இப்னு கமிஆ என்பவன் நபி(ஸல்) அவர்களின் புஜத்தில் வாளால் வெட்டினான். நபி(ஸல்) அவர்கள் இரண்டு கவச ஆடைகளை அணிந்திருந்ததால் அது ஒழுங்காக படவில்லை. ஆனால் அதன் வலி ஓரு மாதம் வரை இருந்தது. இதே வேளை 7 அன்சாரிகளும் எதிரிகளைத் தாக்கிக் கொண்டும் ஸஃத் இப்னு அபி வக்காஸ்(ரழி) நபி(ஸல்) அவர்களின் கட்டளைக்கினங்க எதிரிகளை நோக்கி அம்பெரிந்தும் கொண்டிருந்தார்கள். இச்சந்தர்ப்பத்தில் தான் தல்ஹா(ரழி) அவர்களின் அர்ப்பணமிக்க வீரம் வெளிப்பட்டது. நபியவர்களை நோக்கி வந்த அனைத்து எதிரிகளையும் துணிவோடு தனிமையில் நின்று தடுத்துக்கொண்டிருந்தார்கள். அவ்வேளை தல்ஹா(ரழி) அவர்கள் 11 பேருக்கு சமமாக நின்று எதிரிகளை துவம்சம் செய்து கொண்டிருந்தார்கள். இவ்வாறு போரில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் போது இவருக்கு பல வெட்டுக்கள் விழுந்தன, மேலும் சில விரல்களும் துன்டிக்கப்பட்டன. சுமார் 300 அல்லது 350 வெட்டுக் காயங்கள் இருந்தன. இவ்வாறு தல்ஹா(ரழி) எதிரிகளிடமிருந்து நபி(ஸல்) அவர்களை பாதுகாப்பதற்காக வேண்டி போராடிக்கொண்டிருப்பதைப் பார்த்த நபி(ஸல்) பின்வருமாரு கூறினார்கள். யார் பூமியில் நடமாடிக்கொண்டிருக்கும் ஒரு ஸஹீதை காண விரும்கிறார்களோ அவர்கள் இந்த தல்ஹத் இப்னு உபைதுல்லாவைக் கண்டுகொள்ளட்டும்”. நபி(ஸல்) அவர்களே இவ்வாறு கூறும் அளவுக்கு இவரது அர்ப்பனமிக்க போராட்டம் அவ்வேளையில் வெளிப்பட்டது. மேலும் ஆயிஷா(ரழி) அறிவிக்கின்றார்கள் - அபூ பக்கர்(ரழி) அவர்களின் முன் உஹதுப் போர் பற்றிப் பேசப்பட்டால் அன்றய தினம் முழுவதும் (அதாவது உஹதுத் தினம்) நபி(ஸல்) அவர்தளை பாதுகாத்த நன்மைகளையெல்லாம் தல்ஹாவையே சாறும் என்று கூறிவிட்டு தல்ஹாவே உனக்காக பல சொர்க்கங்களும் இன்னும் பல கண்னழகிகளும் உண்டுஎனக் கூறுபவர்களாகக் காணப்பட்டார்கள்.

மேலும் கைஸ் இப்னு ஹாஸிம் கூறியதாக புஹாரியில் அறிவிக்கப்படும் ஹதீஸில் உஹத் கலத்தில் நபியை நோக்கி வந்த அம்புகளை எந்தக் கையால் தல்ஹா(ரழி) தடுத்தாரோ அது போருக்கு பின் செயலிழந்து போனதை அவதானித்தேன்என்று கூறினார். இதிலிருந்து இப்போரில் தல்ஹா(ரழி) அவர்களின் பங்கு எவ்வாறு இருந்தது என்று அறிந்து கொள்ளலாம்.

இவ்வாறு தல்ஹா(ரழி) தனிமையாக நின்று போராடிக்கொண்டிருந்ததால் அவர்களின் நிலமை மோசமாகிக் கொண்டே சென்றது. இந்நிலையில் அல்லாஹ்வின் அருளால் உமர்(ரழி), அபூ பக்கர்(ரழி), அலி(ரழி) உட்பட்ட ஒரு பிரிவினர் நபியவர்களின் இருப்பிடத்தை அறிந்ததும் அங்கு வந்து நபி(ஸல்) அவர்களை சூழ்ந்து கொண்டனர். அதே நேரத்தில் அவ்வளவு நேரமும் போராடிக்கொண்டிருந்த தல்ஹா(ரழி) பலகீனமான நிலையில் மயக்கமுற்று கீழே விழுந்தார். இதனைக் கண்ட நபி(ஸல்) அவர்கள் உங்கள் சகோதரரைக் காப்பாற்றுங்கள் அவர் தனக்கு சுவனத்தை சொந்தமாக்கிக்கொண்டார்என சப்தமிட்டுக் கூறிக் கொண்டிருந்தார்கள். நிலமை மோசமாகிக் கொண்டிருப்பதை உணர்ந்த நபியை சூழவிருந்த முஸ்லிம் படையினர் நபியவர்களை அழைத்துக் கொண்டு பாதுகாப்பான இடமாகக் காணப்பட்ட அருகிலிருந்த மலையை நோக்கிச் சென்றனர். அவ்வேளை காயமுற்று பலகீனமான நிலையில் காணப்பட்ட தல்ஹா(ரழி) அவர்களை நபி(ஸல்) அவர்கள் தானே சுமந்து கொண்டு மலையேரினார்கள். இவ்வாறு பல்வேறு வகையிலும் இஸ்லாத்துக்கு தனது அர்ப்பனமிக்க பங்களிப்பினை வழங்கக் கூடிய ஒரு உண்மை முஸ்லிமாக தல்ஹா(ரழி) அவர்கள் காணப்பட்டார்கள்.

உஹதுப் போருக்குப் பின்னரும் பல்வேறு வகையிலும் இஸ்லாத்துக்காக தனது பங்களிப்பினை செய்யக்கூடியவர்களாக  இவர்கள் காணப்பட்டார்கள். மேலும் நபி(ஸல்) அவர்கள் வாழ்ந்த காலப்பகுதியிலும், அவர்களின் மரணத்தின் பின்னரும் பல்வேறு போர்களில் பங்குபற்றியிருந்ததுடன், அவரது இறுதி மூச்சும் போராட்டக்களத்திலேயே போனதும் இங்கு குறிப்பிடத்தக்கது. அந்தவகையில் ஹிஜ்ரி 35இல் இடம்பெற்ற ஜமல் யுத்ததின் போது மர்வான் இப்னு ஹகம் என்பவனால் கொலை செய்யப்பட்டு ஷஹீதாக மரணமடைந்தகர்கள். மரணிக்கும் போது இவருக்கு வயது 64 ஆகும்.

இவ்வாறு சத்தியத்தை நிலைநாட்டுவதற்காக தம்மை முழுமையாக அர்ப்பனித்து வாழ்ந்த இவர் போன்ற வரலாற்று நாயகர்களின் வரலாற்றிலிருந்து நாங்கள் நிறையவே படிப்பினைகள் பெறவேண்டியுள்ளது. எனவேதான் இவற்றை வாசிப்பதுடன் மட்டும் நிறுத்திக் கொள்ளாமல் எமது வாழ்விலும் இதன் படிப்பினைகளைக் கொண்டுவர முயற்சிக்க வேண்டும். அதற்கு எல்லாம் வல்ல இறைவன் உதவி புரிவானாக.

உசாத்துனைகள்

  1. كتاب سلسلة أعمدة الإسلام ,حلمي علي شعبان
  2. كتاب صور من حياة الصحابة, ألفه الدكتور عبد الرحمن رأفت الباشا
  3. كتاب حياة الصحابة 
  4. www.teachislam.com
  5. en.wikipedia.org
  6. www.fountainmagazine.com
  7. www.sunnah.org
  8. focus-aakhirah.com 


MSM.Naseem
B.A(Hons)

No comments:

Post a Comment