அரசு என்றால் என்ன என்பது பற்றி பொதுமைப்படுத்தப்பட்ட ஒரு வரைவிலக்கணம் காணப்படவில்லை. இதனால் அது பற்றி பல்வேறு வகையான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது.
அரசு தொடர்பான வரைவிலக்கணங்கள் சில,
- இயற்கையின் படைப்பே அரசாகும். இது மக்களின் நலனுக்காகத் தோன்றி அதற்காகவே நீடிக்கின்றது - அரிஸ்டோட்டில்
- மனிதனது சிறந்த படைப்பே அரசாகும - மக்கியவல்லி
- சமுதாய வர்க்க முரண்பாடுகளின் விளைவே அரசாகும் - கார்ள் மார்க்ஸ்
- குறிப்பிட்ட பிரதேசத்தில் அரசியல் ரீதியாக ஒழுங்கமைந்த மக்களே அரசாகும் - வூட்றோ வில்சன்
- அரசு என்பது ஒரு குறிப்பிட்ட பிரதேச எல்லைக்குள் அதன் அரசாங்;கம் மற்றும் குடிமக்களைக் கொண்ட ஒரு அரசியல் முறைமையாகும் - ரொபர்ட் டால்
இவற்றை வைத்து நோக்குகின்றபோது, பொதுவாக அரசு என்பதை 'ஒரு குறிப்பிட் பிரதேச எல்லைக்குள் குடிமக்கள் மற்றும் அவர்களால் உருவாக்கப்பட்ட அரசாங்கம் என்வற்றைக் கொண்டு காணப்படும் இறைமை அதிகாரம் கொண்ட ஒரு உயர் நிறுவனமே அரசு எனக் குறிப்பிடலாம்'.
அரசானது எம் அனைவரினதும் வாழ்வில் நேரடியாக அல்லது மறைமுகமாக அழுத்தம் கொடுக்கும் ஒரு சமூக நிறுவனமாகக் காணப்படுகின்றது. பொதுவாக மனிதர்களுக்கு அரச அழுத்தங்களுக்கு உட்படாமல் வாழ்வது கடினமானதாகும். பிறப்பொன்றை பதிவு செய்தலானது மனிதர்கள் அரசொன்றுடன் முதன் முதலில் தொடர்புறும் சந்தர்ப்பமாக அமைவதுடன், இத்தொடர்பு அவர்களது மரணம் வரை தொடர்கின்றது. மனிதர்கள் அரசின் அங்கத்துவத்தை பெற்றுக் கொண்டதன் பின்னர் பிரஜைகள் என்ற அந்தஸ்தை அடைந்துகொள்கின்றனர். அதன்பின்னர் அரசொன்றில் உரிமைகளைப் பெற்றுக்கொள்ள உரித்துடையவர்களாக மாறுகின்றனர்.
பொதுவாக அரசொன்றின் முக்கிய பொறுப்புக்களாக, பிரஜைகளின் உரிமைகள் மற்றும் சுதந்திரங்களைப் பாதுகாத்தல், ஒற்றுமையானதும் விளைதிறன்மிக்கதுமான வாழ்க்கையினை வாழ்வதற்கு தேவையான சட்டம் மற்றும் ஒழுங்கினைப் பேணுதல், பொருளாதார அபிவிருத்தி மற்றும் சமூக நலன்புரிகளை உறுதிப்படுத்துதல் என்பன ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.
'அரசு என்பது வரலாற்று மற்றும் சமூக தோற்றப்பாடு' என்ற அம்சமானது, அரசை விளங்கிக் கொள்வதற்கான பிரதான மூலக்கொள்கையாக அமைகின்றது. இதன் கருத்து, அரசு என்பது நிச்சயிக்கப்பட்ட வரலாற்று நிலைகளில் வளர்ச்சியடைந்து, பல்வேறு அரசியல் தளங்களில் பரவலடைந்து, பல்வேறு இயல்புகளை பெற்ற சமூக நிறுவனம் என்பதாகும்.
சுருக்கமாக குறிப்பிடுவதாயின் அரசு என்பது, வரலாற்றுரீதியாக சமூகத்தின் விசேடத்துவமிக்க படைப்பொன்றாகும். இதன் விளக்கம் அரசின் இயல்பு, சமூக வரலாற்று வளர்ச்சிக்கு இணைவாக மாற்றமடைந்துள்ளது என்பதாகும். கோத்திர அரசு முதல் நவீன ஜனநாயக அரசுகள் வரை அரசில் ஏற்பட்ட வரலாற்று அபிவிருத்தி இதனையே காட்டுகின்றது.
உள்ளடக்கப்படும் தலைப்புகள்
3.1. அரசும் அதன் வகிபாகமும்
3.1.1. சமூகத்தில் நிலவும் அரசியல் அதிகாரத்தின் மையப்படுத்திய
வெளிப்பாடாக அரசு
3.1.2. நவீன ஆள்புல அரசு
3.1.3. நவீன தேசிய அரசு
3.1.4. உலக மயமாக்கமும் அரசும்
3.2. அரசின் மாதிரிகளும் அதன் வகைகளும்
3.2.1. கோத்திர அரசு
3.2.2. கிரேக்க நகர அரசு
3.2.3. முடியாட்சி
3.2.4. காலனித்துவ அரசு
3.2.5. தாராண்மை ஜனநாயகம்
3.2.6. சமவுடைமை
3.2.7. பாசிச வாதம்
3.2.8. பின் காலனித்துவம்
3.2.9. நவ தாராண்மை வாதம்
3.3. அரசு பற்றிய அரசறிவியல் எண்ணக்கருக்கள்
3.3.1. அரசும் இறைமையும்
3.3.2. அரசும் குடியுரிமையும்
3.3.3. அரசு, அரசாங்கம் மற்றும் ஆட்சிமுறை ஆகியவற்றுக்கிடையிலான
தொடர்புகளும் வேறுபாடுகளும்
3.4. அரசின் இயல்பு பற்றிய கோட்பாட்டு ரீதியான அணுகுமுறைகள்
3.4.1. சமூக ஒப்பந்தக் கோட்பாடு
3.4.2. மாக்சிய கோட்பாடு
3.4.3. தாராண்மை வாதம்
3.4.4. பெண்ணியல் வாதம்
No comments:
Post a Comment