.உங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக ------- Meesan Way ------- தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்

Sunday, August 7, 2022

சர்வதேச அரசியல் (அலகு 14)

சர்வதேச அரசியல் என்பது இரண்டாம் உலகப்போரின் பின்னர் அரசறிவியல் கற்கைத்துறையில் இணைந்துகொண்ட ஒரு முக்கிய பாடப்பரப்பாகக் காணப்படுகின்றது. சர்வதேச அரசியல் என்றால் என்ன என்பது தொடர்பாக பல்வேறு அறிஞர்களாலும் பலவகையான வரைவிலக்கணங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. 


  • 'தேசங்களுக்கிடையில் இடம்பெறும் அதிகாரத்திற்கான போராட்டமும் மற்றும் அதிகாரப் பிரயோகமுமே சர்வதேச அரசியலாகும்' - மோகன்தோ

  • 'அரசுகள் தமது தேசிய நலன்களை ஏனைய அரசுகளின் நலன்களுக்கேற்ப இசைவாக்கம் செய்கின்ற செயன்முறை பற்றிய கற்கையே சர்வதேச அரசியலாகும்' - ஹார்ட்மன்

  • 'சர்வதேச அரசியல் என்பது தேசங்களுக்கிடையிலான போட்டி மற்றும் அவற்றுக்கிடையிலான தொடர்புகளைச் சீராக்கி மேம்படுத்தும் நிலைகள் மற்றும் நிறுவனங்கள் பற்றிய ஒரு கற்கையாகும் - தொம்ஸன்

தொகுத்து நோக்குகின்றபோது தேசிய நலன்களை அடைந்துகொள்வதற்காக இறைமை பொருந்திய அரசுகளுக்கிடையில் மேற்கொள்ளப்படும் தொடர்புகளை சர்வதேச அரசியல் எனலாம். இன்னொருவகையில் சர்வதேச அரசியல் என்பதை தேசங்களுக்கிடையிலான அரசியல் என எளிமையாக குறிப்பிடலாம். இங்கு தேசம் என்பதன் மூலம் ஆட்புல இறைமை மற்றும் சுதந்திர தேசிய அரசுகளே கருத்தில் கொள்ளப்படுகின்றன.

சர்வதேச அரசியலில் அரசுகள் ஒவ்வொன்றும் தமது நலன்களை அடையும் நோக்கில் ஒன்றுக்கொன்று மோதிக்கொள்வதோடு அதற்காக அதிகாரத்தையும் பயன்படுத்துகின்றன. இதன்படி சர்வதேச சமூகத்தில் அரசுகளுக்கிடையில் இடம்பெறும் அரசியல் போராட்டமே சர்வதேச அரசியல் எனக் குறிப்பிடலாம். 

இங்கு அரசுகளின் செயற்பாடானது முழுமையாகத் தேசிய அரசியல் சமூகத்தில் இடம்பெறும் மனிதர்களின் பௌதீக மற்றும் சமூக செயற்பாடுகளை ஒத்தவையாகும்.

சர்வதேச அரசியலின் இயல்புகள்
  • நலன்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு செயற்பாடாக காணப்படல்.
  • அதிகாரத்தை பெறுதல், அதனைப் பாதுகாத்தல் மற்றும் அதனைப் பிரயோகித்தல் ஆகியவற்றை நோக்காகக் கொண்ட ஒரு செயற்பாடாகக் காணப்படல்.
  • கபடம், நாசகாரம், ஏமாற்றுதல் மற்றும் நம்பிக்கைத் துரோகம் போன்ற அம்சங்களை பண்புகளாகக் கொண்டிருத்தல்.
  • தமது நலன்களை அடைவதற்கான இறுதி ஆயுதமாக போரைப் பயன்படுத்ததல்.
  • போர் மற்றும் சமாதானம் மிக்க ஒரு கற்கையாகக் காணப்படல்.
  • அரசுகள் சர்வதேச சட்டங்களினால் ஆளப்படுதல். எனினும் சர்வதேச சட்டங்கள் பலவீனமாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

இவ்வாக்கத்தை தொடர்ந்து படிக்க கீழுள்ள Pdf இணைப்பை பார்க்கவும்


உள்ளடக்கம்

 14.1. தேசிய மற்றும் சர்வதேச அரசியலின் வேறுபாடுகள் 

   14.2. சர்வதேச அரசியலில் அரசு மற்றும் அரசு சாரா செயற்பாட்டாளர்கள் 

           14.2.1. தேசிய அரசு 

           14.2.2. சர்வதேச அரசசார் அமைப்புகள் 

           14.2.3. சர்வதேச அரசசார்பற்ற அமைப்புகள் 

           14.2.4. பல்தேசியக் கம்பனிகள் 

           14.2.5. பிரபலம்மிக்க நபர்கள் 

           14.2.6. பயங்கரவாதக் குழுக்களும் அமைப்புக்களும் 

   14.3. தேசிய அதிகாரம் மற்றும் தேசிய அபிலாசைகள் 

   14.4. சமகால உலக அரசியலின் முக்கியமான போக்குகள் 

           14.4.1. பல்துருவ உலக ஒழுங்கு 

           14.4.2. மாற்றுச் சர்வதேச தொடர்பு வலையமைப்புகள் 

           14.4.3. நவீன சமூக இயக்கங்கள் 

           14.4.4 உலக முறைக்கு எதிரான கிளர்ச்சி இயக்கங்கள் 

   14.5. நவீன உலக அரசியல் போக்குகள் இலங்கை மீது ஏற்படுத்தும் 

            தாக்கங்கள் 


  





No comments:

Post a Comment