.உங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக ------- Meesan Way ------- தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்

Saturday, August 6, 2022

அரசாங்க மாதிரிகள் (அலகு 04)

இன்று உலகில் பல்வேறு வகையான அரசாங்க மாதிரிகள் காணப்படுகின்ற இவை பிரதான இரண்டு வகைப்படுத்தல்களின் கீழ் எட்டு மாதிரிகளாக வகைப்படுத்தப்படுகின்றது. இதன்படி, அதிகாரத்தைப் பகிரும் முறையினை அடிப்படையாக் கொண்டு ஒற்றையாட்சி முறை, சமஷ்டியாட்சி முறை, அர்த்த சமஷ்டி முறை மற்றும் கூட்டுச் சமஷ்டி முறை எனவும் அதேபோல், நிறைவேற்று அதிகாரம் ஒழுங்கமைந்துள்ள விதத்திற்கு ஏற்ப, பாராளுமன்ற முறை (மந்திரி சபை முறை), ஜனாதிபதித்துவ முறை, கலப்பு முறை மற்றும் அனைத்தாண்மை முறை எனவும் வகைப்படுத்தப்படுகின்றது.

இவ்வரசாங்க மாதிரிகள் தொடர்பாக கற்பதற்கு முன்னர் அரசியல் யாப்பு அல்லது அரசியலமைப்பு என்றால் என்ன என்பது தொடர்பாக அறிந்து கொண்டிருக்க வேண்டியது அவசியமாகும்.


அரசியலமைப்பு or அரசியல் யாப்பு என்றால் என்ன?

அரசியல் யாப்பு என்றால் என்ன என்பது தொடர்பாக ஏற்றுக் கொள்ளப்பட்ட பொதுவான ஒரு வரைவிலக்கணம் காணப்படவில்லை. இது தொடர்பாக பல்வேறு அறிஞர்களிடையேயும் பல்வேறு வகையான கருத்துக்க காணப்படுகின்றன. இதன்படி முக்கிய சில அறிஞர்களால் அரசியல் யாப்பு தொடர்பாக முன்வைக்கப்பட்ட சில வரைவிலக்கணங்கள் கீழே தரப்பட்டுள்ளது.

  • அரசியலமைப்பு என்பது அரசொன்று தமது அரசியல் வாழ்க்கை எவ்வாறு அமைய வேண்டும் என்பதை தீர்மானிக்கும் இயல்பாகும்” - அரிஸ்டோட்டில்.

  • அரசொன்றின் வாழ்க்கையினை முன்னோக்கிக் கொண்டு செல்லுதல் தொடர்பில் காணப்படும் சட்டங்களினதும் மரபுகளினதும் தொகுப்பே அரசியலமைப்பாகும்” - பிறைஸ் பிரபு (நூல் : நவீன ஜனநாயகவாதிகள்-1928)

  • நாடொன்றில் அரசாங்கமொன்றை உருவாக்கவும்அரசாங்கம் ஒன்றை இயக்கவும் தேவையான சட்டதிட்டங்களின் தொகுதியே அரசியலமைப்பாகும்” - பேராசிரியர்  கே.சி. வியர் (நூல் : நவீன அரசியலமைப்புகள்)

  • அரசியலமைப்பு என்பது அரசாங்கத்தின் அதிகாரம்ஆளப்படுவோரின் உரிமைகள் மற்றும் ஆள்வோர்ஆளப்படுவோருக்கிடையிலான தொடர்புகளைத் தீர்மானிக்கும் கொள்கைகளின் தொகுதியாகும்” - சி.எப். ஸ்ட்ரோங் (கட்டுரை : நவீன அரசின் அரசியலமைப்புகள்)

தொகுத்து நோக்குகின்றபோது ஒரு அரசின் அதிகாரம்அதன் அரசாங்கத்தின் அமைப்புஅரசு - மக்களுக்கிடையிலான தொடர்புகள்அங்கு வாழும் மக்களின் உரிமைகள்கடமைகள் மற்றும் யாப்பைத் திருத்தும் முறை போன்றவற்றை விளக்குகின்ற சட்டங்கள் மற்றும் விதிகளின் தொகுப்பே  யாப்பு எனலாம். இன்னொருவகையில் குறிப்பிடுவதாயின்அரசொன்றில் ஏற்றுக்கொள்ளப்பட்டதும் மற்றும் நடைமுறைப்படுத்தப்படுவதுமான உயரிய சட்டங்களின் தொகுதியே அரசியல் யாப்பு எனக் குறிப்பிடலாம்.


அரசியல் யாப்பின் முக்கியத்துவம்

  • ஒரு நாட்டின் அரசியல் உறுதிப்பாட்டிற்கு உதவுகின்றது.
  • தன்னிச்சையானதான்தோன்றித்தனமான மற்றும் பிழையான ஆட்சி முறை ஏற்படுவதை தடுக்கின்றது.
  • சட்டத்தின் அடிப்படையிலான ஆட்சியை ஏற்படுத்த அல்லது நடைமுறைப்படுத்த உதவுகின்றது.
  • மக்களின் உரிமைகளையும் சுதந்திரத்தினையும் உறுதி செய்கின்றது.
  • அரசாங்கத்திற்கான வழிகாட்டல்களை வழங்குகின்றது.


அரசியல் யாப்புகளின் வகைகள்

1)  வரைந்த - வரையாத யாப்புகள்

ஒரு அரசியல் யாப்பானது எழுத்து வடிவில் எழுதப்பட்டதாகக் காணப்படுமாயின் அது வரையப்பட்ட அல்லது எழுதப்பட்ட அரசியல் யாப்பு எனப்படும். இவ்வாறான யாப்புக்களில் அரசாங்கத்தின் அதிகாரங்கள்மக்களின் உரிமைகள் மற்றும் யாப்புத் திருத்தும் முறைகள் போன்ற பல்வேறு விடயங்கள் எழுத்து வடிவில் உள்ளடங்கியிருக்கும். உதாரணமாக இலங்கையின் 1978 ஆம் ஆண்டு 2 ஆம் குடியரசு அரசியலமைப்பைக் குறிப்பிடலாம்.

இதேவேளை ஒரு அரசியல் யாப்பானது எழுத்து வடிவில் காணப்படாமல்பாரம்பரியமாக பின்பற்றப்பட்டுவருகின்ற மரபுகள் மற்றும் வழக்காறுகளை அடிப்படையாகக் கொண்டு அமைந்திருக்குமாயின் அது வரையப்படாத அல்லது எழுதப்படாத அரசியல் யாப்பு எனப்படும். இதற்கு உதாரணமாக பிரித்தானியவின் அரசியல் யாப்பைக் குறிப்பிடலாம்.

எனினும் தற்காலத்தில் சில எழுதப்பட்ட அரசியல் யாப்பினைக் கொண்ட நாடுகளில் எழுதப்படாத சில அரசியல் மரபுகள் பின்பற்றப்படுவதையும் காண முடிகின்றது.  அமெரிக்காவில் ஜனாதிபதி அமைச்சரவையை அமைக்கின்றமையை இதற்கு உதாரணமாகக் குறிப்பிடலாம். அதேபோல் எழுதப்படாத அரசியல் யாப்பினைக் கொண்ட பிரித்தானியிவில் அரசியல் யாப்பின் பகுதிகளாகக் காணப்படுகின்ற வரலாற்று சட்ட ஆவணங்கள்பாராளுமன்ற சட்டங்கள் மற்றும் நீதிமன்ற தீர்ப்புக்கள் போன்றன எழுத்து வடிவில் காணப்படுவதையும் காண முடிகின்றது.

 

2)  நெகிழும் - நெகிழா யாப்புகள்

ஒரு நாட்டில் சாதாரண சட்டங்களை திருத்துவது அல்லது மாற்றுவது போன்றுஅரசியல் யாப்பினையும் திருத்தவோ அல்லது மாற்றவோ முடியுமாக இருக்குமாயின் அது நெகிழும் அரிசியல் யாப்பு எனப்படும். உதாரணமாக பிரித்தானியா மற்றும் இத்தாலியின் அரசியல் யாப்புக்களைக் குறிப்பிடலாம்.

இதேவேளை ஒரு நாட்டின் அரிசியல் யாப்பினை திருத்துவதற்கு அல்லது மாற்றுவதற்கு சாதாரண சட்டங்களை திருத்துவது அல்லது மாற்றுவது போலல்லாமல்அதற்கு விஷேடமான வழிமுறைகளை பின்பற்ற வேண்டியிருக்குமாயின் அது நெகிழா அரிசியல் யாப்பு எனப்படும். உதாரணமாக இலங்கை மற்றும் ஐக்கிய அமெரிக்காவின் தற்போதைய யாப்புக்களை குறிப்பிடலாம்.

 

3)  ஒற்றையாட்சி - சமஷ்டியாட்சி யாப்புகள்

ஒரு நாட்டின் அரசியல் யாப்பானது அவ்வரசின் இறைமை அதிகாரத்தை பிரயோகிக்கின்ற அல்லது நடைமுறைப்படுத்துகின்ற பொறுப்பை ஒரு தனி மத்திய அரசிடம் மாத்திரம் ஒப்படைக்கும் வகையில் காணப்படுமாயின் அது ஒற்றையாட்சி அரசியல் அமைப்பு எனப்படும். உதாரணமாக பிரான்ஸ் மற்றும் பிரித்தானியாவின் அரசியல் யாப்புக்களைக் குறிப்பிடலாம்.

இதேவேளை ஒரு நாட்டின் அரசியல் யாப்பானது அவ்வரசின் இறைமை அதிகாரத்தை பிரயோகிக்கின்ற அல்;லது நடைமுறைப்படுத்துகின்ற பொறுப்பை ஒரு தனி மத்திய அரசிடம் மாத்திரமல்லாமல்பிராந்திய அரசுகளுக்கும் பகிர்ந்தளிக்கும் வகையில் காணப்படுமாயின் அது சஷ்டியாட்சி அரசியல் அமைப்பு எனப்படும். உதாரணமாக அமெரிக்க மற்றும் சுவிற்சர்லாந்தின் அரசியல் யாப்புக்களைக் குறிப்பிடலாம்.


கீழே தரப்பட்டுள்ள  pdf ஆக்கத்தினை click செய்வதன் மூலம் இத்தலைப்பு தொடர்பான முழு உள்ளடக்கத்தையும் வாசிக்கவும், பதிவிறக்கம் செய்யவும் முடியும்.


உள்ளடக்கம்

4.0    அறிமுகம்

  4.1. அரச அதிகாரத்தைப் பகிரும் முறையினை அடிப்படையாகக் கொண்ட         அரசியலமைப்பு  மாதிரிகள் 

             4.1.1. ஒற்றையாட்சி 

             4.1.2. சமஷ்டியாட்சி (கூட்டாட்சி) 

             4.1.3. பாதி சமஷ்டி (அர்த்த சமஷ்டி) 

             4.1.4. கூட்டுச்சமஷ்டி (கூட்டாண்மை சமஷ்டி) 


 4.2. நிறைவேற்று அதிகாரம் ஒழுங்கமைந்துள்ள விதத்திற்கு ஏற்ப காணப்படும் அரசியலமைப்பு மாதிரிகள் 

             4.2.1. பாராளுமன்ற (மந்திரிசபை) முறை 

             4.2.2. ஜனாதிபதித்துவ முறை 

             4.2.3. கலப்பு முறை 

             4.2.4. அனைத்தாண்மை முறை



Pdf ஆக்கம்



 

அரச அதிகாரத்தைப் பகிரும் முறையினை அடிப்படையாகக் கொண்ட         அரசியலமைப்பு  மாதிரிகள்





நிறைவேற்று அதிகாரம் ஒழுங்கமைந்துள்ள விதத்திற்கு ஏற்ப காணப்படும் அரசியலமைப்பு மாதிரிகள் 










No comments:

Post a Comment