.உங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக ------- Meesan Way ------- தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்

Sunday, August 7, 2022

இலங்கையும் உலகமும் (அலகு 15)

உலகமயமாக்கலின் தாக்கம், நவீன தொழிநுட்ப சாதனங்களின் வளர்ச்சி மற்றும் தொடர்பாடல் துறையின் வளர்ச்சி போன்ற பல காரணிகளின் விளைவாக அண்மைக்காலங்களில் மக்களின் வாழ்க்கை, எதிர்பார்ப்புகள் மற்றும் நடைமுறைகள் போன்றவற்றில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இதேவேளை அரசுகளின் அரசியல் செயற்பாடுகளை நோக்குகின்றபோதும், அவை தமது தேச எல்லைக்குள் மாத்திரம்  இயங்கும் செயற்பாட்டினைத் தாண்டி, சர்வதேச சூழல் முறைமைக்கு ஏற்பவும் செயற்படுகின்றமையை அவதாணிக்க முடிகின்றது. வரலாற்று ரீதியாக அரசுகள் மேற்கொண்டுவரும் இடைத்தொடர்புகளும் இதனை உறுதிப்படுத்துகின்றன. 

எந்தவொரு அரசும் தனியாக இயங்குவதற்கான இயலுமையானது சாத்தியமற்ற ஒன்றாகவே உள்ளது எனக் கூறும் அளவுக்கு, தற்கால நவீன உலகில் அரசுகளுக்கிடையிலான உறவுகள் முக்கியத்துவம் பெற்றுள்ளன. இதன்படி அரசுகளுக்கிடையிலான உறுவுகளைத் தீர்மாணிக்கின்ற மற்றும் அவற்றின் தேசிய நலன்களை முன்னேற்றுகின்ற செயற்பாட்டிற்காக தீர்மானிக்கப்படுகின்ற மிகவும் முக்கியமான அம்சமாக அவற்றின் வெளிநாட்டுக் கொள்கைகளே காணப்படுகின்றன. 

வெளிநாட்டுக் கொள்கைகள்; ஒரு அரசின் தேசிய நலனை அடிப்படையாகக் கொண்டிருப்பதுடன், ஏனைய அரசுகளுடனான அதனது உறவினை வலுப்படுத்துவதற்கும் உதவுகின்றன.  இதனால் ஒரு அரசினது தேசியக் கொள்கையின் ஒரு பகுதியாகவே அவை கருதப்படுகின்றன. இதன்படி இவ்வாறு முக்கியத்துவமிக்க வெளிநாட்டுக் கொள்கைகளை உருவாக்குவது தற்கால அரசுகளின் பிரதான ஒரு கடமையாகக் காணப்படுகின்றது.

வெளிநாட்டுக் கொள்கை என்றால் என்ன என்பது தொடர்பாக பல அறிஞர்களாலும் பல்வேறு விதமான வரைவிலக்கணங்கள் முன்வைக்கப்படுகின்றன. அவற்றில் சில அறிஞர்களால் முன்வைக்கப்பட்ட பிரபலமான வரைவிலக்கணங்களாக பின்வருவனவற்றை   

'போதிய அதிகாரத்தின் மூலம் தேசிய நலன்களுக்கு ஆதரவளிக்கும் நோக்கத்தைக் கொண்ட சொற்றொடரே வெளிநாட்டுக் கொள்கையாகும்' - மோகன்தோ

'வெளிநாட்டுக் கொள்கையின் உள்ளடக்கம், ஒரு அரசு தனது தேசிய நலனை முன்னேற்ற  தனது வளங்களைப் பயன்படுத்தி பொருளாதாரம், இராஜதந்திரம், பிரச்சாரம் போன்றவற்றினூடாக ஏனைய அரசுகளின் நடத்தைகளைத் தூண்டுவதாகும். - கொடிக்கார

'வெளிநாட்டுக் கொள்கை என்பது எந்தவொரு அரசும் ஏனைய அரசுகளுடன் தொடர்புகளை மேற்கொள்வதற்காகப் பின்பற்றக்கூடிய கொள்கைகளின் செயற்பாடுகளாகும்' - பேராசிரியர் கருணாதாச

தொகுத்து நோக்குகின்ற போது ஒரு நாடு வேறு நாடுகளுடன் பேணக்கூடிய கொள்கைகளே வெளிநாட்டுக் கொள்கை எனச் சுருக்கமாகக் குறிப்பிடலாம். இன்னொருவகையில் குறிப்பிடுவதாயின் அரசொன்றின் சர்வதேச நோக்கங்கள் மற்றும் அவற்றை அடைந்துகொள்ளும் உபாயங்கள் அல்லது நுட்ப முறைகளே வெளிநாட்டுக் கொள்கை எனலாம். 

மேலே குறிப்பிட்டவாறு வெளிநாட்டுக் கொள்கை தொடர்பாக பல்வேறு வகையான வரைவிலக்கணங்கள் முன்வைக்கப்படுகின்றபோதும், அவை பெரும்பாலும் அரசுகளின் தேசிய அபிலசைகள், அவற்றின் பாதுகாப்பு மற்றும் உலக ஒருங்கிணைப்பு ஆகியவற்றினையே மையப்படுத்தியதாகக் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

இதன்படி ஒரு அரசின் வெளிநாட்டுக் கொள்கையானது பொதுவாக அதனது அரசியல், பொருளாதாரம், சமூகம், கலாசாரம் மற்றும் பாதுகாப்புப் படைகள் போன்ற துறைகளை மைப்படுத்தியதாகவே வடிவமைக்கப்பட்டிருக்கும். சில சந்தர்ப்பங்களில் சுயாட்சியற்ற நாடுகள் மற்றும் பிராந்தியங்களுடனான தொடர்புகளும் கூட வெளிநாட்டுக் கொள்கையாகக் கொள்ளப்படுவதையும் காணமுடிகின்றது.

இவற்றின் அடிப்படையில் நோக்குகின்றபோது, அரசுகளின் தேசிய அதிகாரம் மற்றும் தேசிய அபிலாஷைகளை வெளிப்படுத்தும் ஒரு அம்சமாகவே வெளிநாட்டுக் கொள்கைகள் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

வெளிநாட்டுக் கொள்கைகள் பல்வேறு நோக்கங்களை அடிப்படையாக் கொண்டு அரசுகளால் உருவாக்கப்படக் கூடியவைகளாகக் காணப்படுகின்றன. அவற்றில் முக்கியமான சில நோக்கங்களாகப் பின்வருவனவற்றை குறிப்பிடலாம்.
  • நாட்டின் தேசிய நலன்களை அடைந்து கொள்ளல்.
  • நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்துதல் அல்லது உறுதிப்படுத்திக் கொள்ளல்.
  • தேசிய அதிகாரம் மற்றும் அந்தஸ்தினை உயர்த்திக் கொள்ளுதல்.
  • பொருளாதார ரீதியான அபிவிருத்திகளை ஏற்படுத்துதல்.
  • வர்த்தகம் மற்றும் வெளிநாட்டுச் சந்தையை விரிவுப்படுத்தல்.
  • வெளிநாட்டு உதவிகளைப் பெற்றுக்கொள்ளல்.
  • நாட்டின் சமூக நலன்களை உயர்வடையச் செய்தல்.
  • சர்வதேச ரீதியில் நாட்டின் கௌரவத்தை வளர்த்தல்.
  • அரசின் ஒருமைப்பாட்டினை பேணுதல்.
  • உலக ஒழுங்கினைப் பேணுதல்.

தொடர்ந்து படிக்க கீழே தரப்பட்டுள்ள Pdf அட்டவணையை பார்க்கவும்

  


 15.1. இலங்கையின் வெளியுறவுக் கொள்கை 

   15.2. இலங்கையின் வெளியுறவுக் கொள்கையில் செல்வாக்குச் செலுத்தும் 

            காரணிகள் 

   15.3. இலங்கையின் வெளியுறவுக் கொள்கையின் பண்புகள் 

   15.4. சுதந்திரத்தின் பின் இலங்கையின் வெளியுறவுக் கொள்கையின் 

            சமகாலப் போக்குகள் 

            15.4.1. ஐக்கிய நாடுகள் சபையும் இலங்கையும் 

            15.4.2. பொது நலவாயமும் இலங்கையும் 

            15.4.3. அணிசேரா இயக்கமும் இலங்கையும் 

            15.4.4. தெற்காசிய பிராந்தியத்திற்கான ஒத்துழைப்பு அமைப்பும் (சார்க்) 

                        இலங்கையும் 

            15.4.5. சர்வதேச பொருளாதார நிதி நிறுவனங்களும் இலங்கையும் 

            15.4.6. சர்வதேச அரசசார்பற்ற நிறுவனங்களும் இலங்கையும் 

  15.5. தற்கால வெளியுறவு கொள்கையின் சவால்களும் பிரச்சினைகளும் 


No comments:

Post a Comment