1) இதற்கு முன்னர் நடைமுறையிலிருந்த 1972 ஆம் ஆண்டின் முதலாம் குடியரசு யாப்பானது பல்வேறு குறைபாடுகளைக் கொண்டிருந்தமை. அவை,
- முதலாம் குடியரசு அரசியலமைப்பானது சோல்பரி யாப்பைத் தழுவிய ஒன்றாகவே காணப்பட்டமை.
- எளிய பெரும்பான்மைத் தேர்தல் முறையானது குறைபாடுகளைக் கொண்டிருந்தமை. உதாரணமாக பொரும்பான்மையான வாக்காளர்கள் விரும்பாத ஒருவர் கூட பிரதிநிதியாக தெரிவுசெய்யப்படும் நிலை காணப்பட்டமை, தேசிய ரீதியில் கட்சிகள் பெற்ற வாக்குகளின் விகிதத்திற்கும், அவை பெற்ற ஆசனங்களுக்குமிடையில் முரண்படட்ட நிலை காணப்பட்டமை.
- முத்துறை அதிகாரங்களும் தேசிய அரசுப் பேரவை என அழைக்கப்பட்ட சட்டமன்றத்திடம் குவிக்கப்பட்டிருந்தமையால், அது தன்னாதிக்க நிறுவனமாகச் செயற்பட்டமை.
- நீதித்துறையில் ஆட்சியாளர்கள் தலையிடுவதற்கான வாய்ப்புக்கள் காணப்பட்டமையால் அதனால் சுதந்திரமாகச் செயற்பட முடியாமலிருந்தமை.
- அடிப்படை உரிமைகள் மற்றும் சுதந்திரங்கள் வழங்கப்பட்டாலும் அவை உத்தரவாதப்படுத்தப்பட்டிருக்காமை.
- அரச கொள்கை வழிகாட்டல் தொடர்பான விடயங்கள் குறிப்பிடப்பட்டும் அவற்றுக்கான சட்டப் பெறுமதி காணப்படாமை.
- பொதுச்சேவை மற்றும் நீதிச்சேவை துறைகள் அரசியல் செல்வாக்கிற்கு உட்பட்ட அதிகாரமற்ற அமைப்புக்களாகக் காணப்பட்டமை.
- பௌத்த மதம் மற்றும் சிங்கள மொழி என்பவற்றுக்குச் சலுகைகளும் முன்னுரிமையும் வழங்கப்பட்டதன் மூலம் ஏனைய மதங்கள் மற்றும் மொழிகள் புறக்கணிக்கப்பட்டமை.
- அரசியலமைப்பு நீதிமன்றத்தால் அரசியல் யாப்பினைப் பாதுகாக்க முடியாமை.
- நீதித்துறையானது நீதிப்புணராய்வு அதிகாரத்தைக் கொண்டிருக்காமை.
2) நீண்டகால அரசியல் மற்றும் பொருளாதார இலக்குகளை அடைந்து கொள்ளும் வகையில் புதிய அரசியலமைப்பு ஒன்றை உருவாக்க வேண்டிய தேவை ஐக்கிய தேசியக் கட்சிக்கு காணப்பட்டமை. அதாவது இலங்கையில் திறந்த பொருளாதாரக் கொள்கை முறை மற்றும் சட்டத்துறையின் கட்டுப்பாடுகளற்ற சுதந்திரமான நிர்வாக முறை போன்றவற்றை அறிமுகப்படுத்தி, அவற்றை நீண்டகாலம் நிலை பெறச் செய்வதற்கு நிலையான ஒரு அரசியலமைப்பு அதற்கு அவசியமாக இருந்தது.
3) இதேவேளை கடந்தகால தேர்தல் முடிவுகளின் அடிப்படையில், விகிதாசார தேர்தல் முறையானது ஐக்கிய தேசியக் கட்சி தொடர்ந்தும் ஆட்சியில் இருக்க உதவக் கூடிய ஒன்றாக இனங்காணப்பட்டமை. எனவே இதனை தொகுதிவாரி தேர்தல் முறையை மாற்றி விகிதாசார தேர்தல் முறையை அறிமுகப்படுத்தவும் புதிய அரசியலமைப்பு ஒன்றின் தேவை அவர்களுக்கு காணப்பட்டமை.
4) 1977 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் புதிய யாப்பொன்றை வரைவதற்கான அங்கீகாரத்தைக் கோரி, அதனை தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் முன்வைத்து தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்ட ஐக்கிய தேசியக் கட்சியானது, 168 மொத்த ஆசனங்களில் 140 ஆசனங்களைக் கைப்பற்றி (சிசேட பெரும்பான்மையுடன்) வெற்றி பெற்றிருந்தமை.
இவ்வாறான பின்னனியில் 1977 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று அரசாங்கத்தை அமைத்த ஐக்கிய தேசியக் கட்சியானது, நடைமுறையிலிருந்த முதலாம் குடியரசு யாப்பை நீக்கி புதிய அரசியல் யாப்பு ஒன்றினை அறிமுகப்படுத்த முன்வந்தது. இதன்படி, ஐக்கிய தேசியக் கட்சியின் அப்போதைய தலைவராக இருந்த ஜே.ஆர் ஜயவர்த்தன தலைமையில் ஒரு யாப்பு நிர்ணயசபை அமைக்கப்பட்டு, உருவாக்கப்பட்ட குறித்த யாப்பானது 1978 ஆம் ஆண்டு முதல் இரண்டாம் குடியரசு அரசியலமைப்பு எனும் பெயரில் நடைமுறைக்கு வந்தது.
1978 ஆம் ஆண்டு அரசியலமைப்பின் அடிப்படைக் கட்டமைப்புசார் பண்புகள்
1978 ஆம் ஆண்டு இரண்டாம் குடியரசு அரசியலமைப்பின் அடிப்படைக் கட்டமைப்புப் பண்புகளாக பின்வரும் அம்சங்கள் காணப்படுகின்றன.
v நிறைவேற்றுத்துறை
v சட்டவாக்கத்துறை
v சட்டத்துறைக்கும் நிறைவேற்றுத்துறைக்கும் இடையிலான தொடர்புகள்
v நீதித்துறைச் சுதந்திரம் தொடர்பான கோட்பாடுகளும் நடைமுறையும்.
v நிறைவேற்றுத்துறையும் பொதுச் சேவையும்
v நிறைவேற்றுத்துறையும் அதிகாரக் குவிவும்
v அடிப்படை உரிமைகள்
v குறைகேள் அதிகாரி
v தேர்தல் முறைமை
v மக்கள் அபிப்பிராய வாக்கெடுப்பு (மக்கள் தீர்ப்பு)
கீழே தரப்பட்டுள்ள ஒவ்வொரு தலைப்பையும் click செய்வதன் மூலம் அத்தலைப்பு தொடர்பான pdf ஆக்கத்தினை வாசிக்க முடியும்.
No comments:
Post a Comment