.உங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக ------- Meesan Way ------- தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்

Sunday, August 7, 2022

இலங்கையின் அரசியல் கட்சி முறை (அலகு 13)

அரசியல் கட்சி என்பது 18 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் தோற்றம் பெற்று, பிற்காலத்தில் பரவலடைந்தவையாகும். இப்பரவலுக்கு ஐரோப்பாவில் ஆரம்பமாகிய பிரதிநித்துவ ஜனநாயமானது பிரதான பின்னணிக் காரணியாக அமைந்தது. அரசியல் கட்சிகள் நவீன பண்புகளுடன் 19 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் பரிணாமம் பெற்றன. பின்னர் 19 ஆம் மற்றும் 20 ஆம்  நூற்றாண்டுகளில் அரசியல் கட்சிகளின் நவீன அரசியல் மாதிரிகள் உலகம் முழுவதும் பரவின.

அரசியல் கட்சி ஜனநாயகத்தின் அடிப்படையான நிறுவன அலகாகக் காணப்படுகின்றன. ஜனநாயகத்தில் மாத்திரம் காணப்படும் அரசியல் போட்டியின் ஊடாக அரசியல் கட்சிகள் நவீன பிரதிநிதித்துவ ஜனநாயக செயன்முறைக்குப் பங்களிப்புச் செய்கின்றன. அரசியல் கட்சிகள் பிரஜைகளுக்கு அரசியல் கல்வியை வழங்கல், பொதுமக்களின் தேவைகள், நலன்கள் மற்றும் அபிலாசைகளை பொதுவில் வெளிப்படுத்தல், அரசாங்கத்தை அமைத்தல், அரச கொள்கைளைத் தயாரித்தல், அரசியல் கருத்தியல் விவாதங்களை உயிரோட்டமாக முன்னெடுத்துச் செல்லுதல், பிரஜைகளினதும் குழுக்களினதும் வேறுப்பட்ட மற்றும் விசேட தேவைகளை அரசாங்கத்தின் கவனத்திற்குக் கொண்டுவருவதல் போன்ற முக்கிய பணிகளை ஆற்றுகின்றன. இந்தவகையில் அரசாங்கத்தையும் பிரஜைகளையும் ஒன்றிணைக்கும் மிக முக்கியமான நிறுவன அலகாக அரசியல் கட்சிகள் காணப்படுகின்றன.



கீழே தரப்பட்டுள்ள ஒவ்வொரு தலைப்பையும் click செய்வதன் மூலம் அத்தலைப்பு தொடர்பான pdf ஆக்கத்தினை வாசிக்க முடியும்.   


13.1. கட்சிமுறையின் தோற்றமும் போக்குகளும் 

           13.1.1. ஆதிக்கமுள்ள இரு கட்சி முறை 

           13.1.2. இடதுசாரி மற்றும் சிறிய கட்சிகள் 

           13.1.3. இனத்துவக் கட்சிகள் 

           13.1.4. அரசியல் கட்சிகளும் கூட்டுகளும் 

           13.1.5. அரசியல் கட்சி முறைகளும், அரசியல் தலைமைத்துவமும் 

No comments:

Post a Comment