.உங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக ------- Meesan Way ------- தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்

Saturday, August 6, 2022

அரசியல் கருத்தியல்கள் (அலகு 05)

அரசறிவியல் ஆய்வில் முக்கிய இடத்தினை வகிக்கின்ற ஒன்றாக அரசியல் கருத்தியல் எனும் எண்ணக்கரு காணப்படுகின்றது. இது அரசியல் ஆய்வுகளுக்காக பயன்படுத்தப்படுவதுடன்நடைமுறை அரசியலை ஒழுங்குபடுத்துவதிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்பினை வழங்கி வருகின்றது. அரசியலில் கருத்தியல்களின் பயன்பாடானது மிக நீண்டகால வரலாற்றினைக் கொண்டிருப்பினும் 20 ஆம் நூற்றாண்டிலேயே அவை மிக முக்கிய இடத்தினைப் பெற்றுக்கொண்டன. அத்துடன் அவை நடைமுறையில் எழுந்த பல்வேறு சமூகபொருளாதார மற்றும் அரசியல் பிரச்சினைகளுக்கு பதிலளிக்கக்கூடிய விதத்திலும் எழுச்சியடைந்தன.

கருத்தியல் எனும் சொல்லானது எப்போது தோன்றியது என்பது தொடர்பான தெளிவான ஆதாரங்கள் காணப்படாத போதும்பிரெஞ்சுப் புரட்சிக் காலப்பகுதியில் பயன்படுப்பட்டுபின்னர் பல்வகைப் பொருள்மாற்றங்களை அடைந்த ஒன்றாக அது காணப்படுகின்றது. இதன்படி 'அன்டொய்ன் டெஸ்டட் டீ ரேசிஎனும் பிரான்சியராலேயே கருத்தியல் என்ற பதம் முதன் முதலாகப் பயன்படுத்தப்பட்டது.

கருத்தியல் என்றால் என்ன என்பது பற்றி பொதுவான ஒரு வரைவிலக்கணம் காணப்படாத போதும்அது தொடர்பாக பின்வரும் அறிஞர்களின் கூற்றுக்கள் பிரபல்யமானதாகும்.

கருத்தியல் என்பது நிலவும் மெய்ந்நிலை நிலைமைகளினைச் சார்ந்த கற்பனை உணர்வாகும்” - L. அல்துஸர்

கருத்தியல் என்பது அரசியல் மற்றும் சமூக பெறுமதிகளை பங்கீடு செய்தல் தொடர்பாக கவனம் செலுத்தும் கருத்துக்களின் முறைமையாகும்” - S.P. ஹன்டிங்டன்

கருத்தியல் என்பது தனி ஒருவர் அல்லது ஒரு குழு அல்லது ஒரு சமூகம் பெற்றிருக்கும் வரன்முறை நம்பிக்கைகள்மன எண்ணக்கருக்கள் ஆகியவற்றின் நுண்ணிலைத் தொகுப்பாக காணப்படுவதுடன் அது உலகப் பார்வைகற்பனைஇருப்பியல் ஆகியவற்றை விட குறுகிய கருத்துப்படிமம் கொண்டதாகும். கருத்தியலின் முக்கியமான நோக்கம் நெறி சார்ந்த சிந்தனைகள் ஊடாக மாற்றங்களை உண்டாக்குவதாகும். இதனால் கருத்தியல்களை பொது விடயங்களில் பயன்படுத்தப்படும் நுண்ணிலைச் சிந்தனை முறைமைகள் எனவும் குறிப்பிடலாம்.

பல்வேறுபட்ட காலப்பகுதிகளிலும் உலகில் மதம்புவியியல்தத்துவம்சமூகம்அரசியல்பொருளாதாரம் என பல்வேறு துறைகளிலும் பல கருத்தியல்கள் தோற்றம்பெற்றன. அதில் சில வலுவிழந்துவிட்டதுடன்இன்னும் சில இன்றும் காணப்படுகின்றன. இந்தவகையில்அரசியலிலும் பல கருத்தியல்கள் தோற்றம் பெற்றது. அவற்றில் சில கருத்தியல்கள் பரவலாகவும்இன்னும் சில கருத்தியல்கள் சிறிய அளவிலும் மக்களால் பின்பற்றப்பட்டு வருகின்றன.

கருத்தியல் என்னும் கருத்துருவானது அரசியலில் சிறப்பிடம் பெறுகிறது. வெளிப்படையாகச் சொல்லப்பட்டாலும் அல்லது சொல்லப்படாவிட்டாலும் எல்லா அரசியல் போக்குகளும் உள்ளார்ந்த நிலையில் ஒரு கருத்தியல் நிலையைக் கொண்டே இருக்கின்றன.

அந்தவகையில்சமூகத்தின் அரசியல் அறிவிற்குதனி நபர்கள் மற்றும் சமூக குழுக்களின் அரசியல் செயற்பாட்டிற்கும்அரசியல் நிறுவனங்களின் தன்மை மற்றும் பணிகளையும் தீர்மானிப்பதில் செல்வாக்கு செலுத்துகின்ற ஒழுங்கமைந்த வகையில் காணப்படும் அரசியல் கருத்துக்களின் தொகுதியே அரசியல் கருத்தியல்களாகும். அரசியல் சித்தாந்தங்கள் மற்றும் அரசியல் சிந்தனைகள் என்பன இதற்காக பயன்படுத்தப்படுகின்ற இருவேறு பதங்களாகும். அரசறிவியலில் அரசியல் கருத்தியல்கள் என்ற எண்ணக்கருவானது முறையாக அமையப்பெற்றுள்ள அரசியல் சிந்தனைத் தொகுதிகள் மற்றும் கருத்துக்களின் தொகுதி என்ற அர்த்தத்திலேயே பயன்படுத்தப்படுகிறது.

ஒரு அரசியல் கருத்தியலானது பிரபலமான ஒரு சிந்தனையாளர் அல்லது பல சிந்தனையாளர்களின் கற்பிதங்கள் மற்றும் கருத்துக்களின் தொகுதியாக கட்டியெழுப்பப்பட்டிருக்கலாம். அல்லது பல சிந்தனையாளர்களினால் முன்வைக்கப்பட்ட கருத்துக்களின் வளர்ச்சியின் பெறுபேறாக கட்டியெழுப்பப்பட்டிருக்க முடியும். இந்தவகையில்மிக முக்கியமான அரசியல் கருத்தியல்களாக தாராண்மை வாதம்சமவுடமை வாதம்பாஸிச வாதம்குடியரசு வாதம்சமூக ஜனநாயக வாதம்தேசிய வாதம்மதசார்பின்மைவாதம்பெண்ணியல் வாதம் போன்றவற்றை அடையாளப்படுத்திக் காட்டலாம்.

 

அரசியலில் கருத்தியல்களின் முக்கியத்துவம்

தேசிய மற்றும் சர்வதேச அரசியலில் கருத்தியல்கள் மிகவும் முக்கியத்துவமிக்கவைகளாக காணப்படுகின்றன. அரசியலை கற்கவும்அது தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ளவும் இவை பெரிதும் உதவுகின்றன. குறிப்பாக தேசிய மற்றும் சர்வதேச அரசியலினை விளங்கிக் கொள்ள கருத்தியல்கள் மிகவும் அவசியமானவையாகக் காணப்படுகின்றன. ஒரு அரசில் வாழும் மக்களின் உரிமைகள்சுதந்திரம் எந்த அளவில் காணப்படுகின்றன. மக்கள் எவ்வகையான ஆட்சியினை எதிர்பார்க்கின்றனர். ஆட்சியாளர் மற்றும் மக்களுக்கிடையிலான தொடர்புகள் எவ்வாறு காணப்படுகின்றது. போன்ற பல அம்சங்களை விளங்கிக் கொள்ளவும்கால சூழ்நிலைகளுக்கேற்ப ஒரு அரசிற்கு பொருத்தமான கொள்கைகள் எவை என்பதை தீர்மானிக்கவும் இது உதவுகின்றது.

ஒரு அரசின் ஆட்சியானது பெரும்பாலும் அரசியல் கருத்தியல்களை மையப்படுத்தியே ஏற்படுகின்றது. அதாவதுமக்கள் தம்மை வழிநடாத்துகின்ற அரசாங்கத்தை அல்லது தமது ஆட்சியாளர்களை தெரிவு செய்கின்றபோதுகுறிப்பிட்ட கட்சிகள் அல்லது குழுக்கள் எந்த கருத்தியலை ஆதரிக்கின்றது. அல்லது கட்சிகள் மற்றும் குழுக்கள் கொண்டுள்ள கருத்தியல்களில் தமது அரசுக்கும் தமக்கும் எது பொருத்தமானது என்ற அடிப்படையை வைத்தே தெரிவு செய்கின்றனர். இந்தவகையில் அரசியல் கட்சிகளின் கொள்கை உருவாக்கத்திற்கு உதவக் கூடியதாகவும் கருத்தியல்கள் காணப்படுகின்றன.

இதேபோல்சர்வதேச அளவில் அரசுகளின் கூட்டிணிகள் மற்றும் அவற்றுக்கிடையிலான உறவுகள் என்பன பெரும்பாலும் அவைகளது அரசியல் கருத்தியல்களை மையப்படுத்திய வகையிலேயே காணப்படுகின்றன. உதாரணமாககம்யூனிஸ நாடுகளின் கூட்டனிமுதலாளித்துவ நாடுகளின் கூட்டனி போன்றவற்றை எடுத்துக்காட்டலாம். இவ்வாறு அரசுகள் தமது வேறுபட்ட தேசிய நலன்களை அடைந்து கொள்ள அரசியல் கருத்தியல்களை வழிகாட்டிகளாக பயன்படுத்துகின்றன. இந்தவகையில் தேசிய மற்றும் சர்வதேச அரசியலில் அரசியல் கருத்தியல்களின் வகிபாகமானது மிக முக்கியத்துவமிக்க ஒன்றாக காணப்படுவதை அவதானிக்க முடிகின்றது.

கீழே தரப்பட்டுள்ள ஒவ்வொரு தலைப்பையும் click செய்வதன் மூலம் அத்தலைப்பு தொடர்பான pdf ஆக்கத்தினை வாசிக்க முடியும்.

   5.0  கருத்தியல் அறிமுகம்  

   5.1. தாராண்மை வாதம் 

   5.2. சமவுடைமை வாதம் 

   5.3. குடியரசு வாதம் 

   5.4. சமூக ஜனநாயக வாதம் 

   5.5. பாசிசவாதம் 

   5.6. தேசிய வாதம்

   5.7. மதசார்பின்மை வாதம்

   5.8. பெண்ணியல் வாதம்

No comments:

Post a Comment