.உங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக ------- Meesan Way ------- தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்

Tuesday, July 22, 2014

ஆரோக்கியத்துக்கு உதவும் இயற்கை மருந்து “மிளகு”


எம்மில் அதிகம் பேர் மிளகை அறிந்திருக்கின்றோம். ஆனால், அதில் காணப்படும் மருத்துவ குணங்கள் பற்றி நாம் எந்த அளவு அறிந்திருக்கின்றோம் என்பது கேள்விக்குறியே? இயற்கை வைத்தியத்தில் ஒன்றான மிளகு எமது சமூகத்தில் காணப்படும் அதிக நோய்களுக்கு நிவாரணம் தரும் ஒரு மருந்தாக காணப்படுகிறது. அந்தவகையில், மிளகில் காணப்படும் மருத்துவ குணங்கள் பற்றி இங்கு நோக்குவோம்.

Sunday, July 20, 2014

இளைஞர்களுக்கு ஓர் Role Model

மக்காவிலே புகழ் பூத்த ஒரு இளைஞன். குறைஷிய இளைஞர்களில் மிகவும் விவேகமானவர், அழகிய முகம், அடர்ந்த முடி, சிவப்பு கலந்த நிறம், விசாலமான, சதைப்பிடிப்பான உடம்பு, நடுநிலையான உயரம் போன்ற உடற்கட்டமைப்பைக் கொண்டவர். இவர் போர்களில் அச்சமின்றி துணிவோடும், ஆர்வத்தோடும் குதித்து ஆக்ரோசமாக போராடுவதன் மூலம் அங்கு பிரபல்யம் அடைந்திருந்தார். இவர் போர்க்கலத்தில் பாய்ந்தோடுகின்ற வெள்ளத்தைப் போன்று உந்திச் செல்பவராக காணப்பட்டார். மேலும் அல்லாஹ் இவருக்கு வியாபாரத்திலும் நல்ல திறமையைக் கொடுத்திருந்ததால் வியாபாரக்கலத்தில் அவரைவிட அணுபவத்திலும், வயதிலும் பெரியவர்களுடன் போட்டியிட்டு முன்னேறிருந்தார்.

Saturday, July 19, 2014

பின் கீழைத்தேயவாதிகளின் தாக்கங்கள் (தொடர்-2)


1.இஸ்லாமிய வட்டத்தினை குறுகியதாக காட்ட முயற்சித்தல்
இஸ்லாத்தையும், அதன் சட்டதிட்டங்களையும் வெறும் இபாதத்துடன் சுருக்கிக் காட்டி பித்அத், ஷிர்க்கான விடயங்களையும் மிகைப்படுத்தி, சூபித்துவ கருத்துக்களை பரப்பிவிடும் கைகரியத்தையும் இன்று மேற்கு முனைப்புடன் செய்து வருகின்றது. இதன் மூலம் இஸ்லாமிய ஆட்சியினை வியாபிக்க விடாது உட்பூசல்களை அதிகப்படுத்துவதே இதன் உள்நோக்கமாகும்.

Thursday, July 17, 2014

பலஸ்தீனின் உரிமைக் குரல் “ஹமாஸின்” தோற்றமும் வளர்ச்சியும்



"இஸ்லாமிய எதிர்ப்பு இயக்கம்- Ḥarakat al-Muqawama al-Islamiyya" என்ற பெயரே ஹமாஸ் என சுருக்கமாக அழைக்கப்படுகின்றது. இது அமெரிக்கா மற்றும் மேற்குநாடுகளின் உதவியுடன் பலஸ்தீனில் இஸ்ரேல் மேற்கொண்டுவரும் நில ஆக்கிரமிப்பு மற்றும் தாக்குதல்களுக்கு எதிராக போராடி வரும் இயக்கமும், பாலஸ்தீனத்தில் அதிகூடிய இடங்களைக் கைப்பற்றியுள்ள அரசியல் கட்சியும் ஆகும்.

Monday, July 14, 2014

பின் கீழைத்தேயவாதிகளும் இஸ்லாத்திற்கு எதிரான சதி முயற்சிகளும்.


நபி ஆதம் அலை அவர்கள் தொடக்கம் தோற்றம் பெற்ற இஸ்லாம் இன்று வரைக்கும் நிலைத்துக் கொண்டு வருகையில் அதனை வேரோடு பிடிங்கி எடுப்பதற்கான முயற்சிகளும் காலா காலம் இடம் பெற்ற வண்ணமே உள்ளன. குறிப்பாக சிலுவை யுத்தத்தில் தோல்வியடைந்த கிறிஸ்தவர்கள் இன்றைக்கும் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் பூண்டோடு அளிக்கவே முயற்சி செய்த வண்ணமே இருக்கிறார்கள். இந்த சதிமுயற்சியில் அதிகம் ஈடுபடுபவர்களாக கிறிஸ்வர்களும், யூதர்களுமே காணப்படுகிறார்கள். இவர்களில் சிலரே கீழைத்தேயவாதிகள் என அழைக்கப்படுகிறார்கள்.

Saturday, July 12, 2014

பலஸ்தீன் போராட்டமும் அதன் வரலாற்றுப் பின்னனியும்


முழு உலகமும் அறிந்த ஓரு உண்மைதான் பலஸ்தீன் மீதான யூத-ஸியோனிச இஸ்ரேலின் நில ஆக்கிரமிப்பும், கொலை வெறியாட்டமும். இந்த பலஸ்தீன் பிரச்சினை என்பது பல வருடங்களாக தொடர்ந்து கொண்டிருக்கும் ஒரு பிரச்சினையாகும். தற்போது கூட ஆக்கிரமிப்பு இஸ்ரேலினால் அப்பாவி பலஸ்தீனர்கள் தாக்கப்பட்டு கொள்ளப்பட்டுக் கொண்டிருப்பதை ஊடகங்கள் மூலம் கண்டு கொள்ளலாம். எனவேதான் இந்தப் பிரச்சினை பின்னனி பற்றி அறிந்திருக்க வேண்டியது அவசியமாகும்.

Friday, July 11, 2014

ஆரோக்கிய வாழ்வுக்கு உதவும் சிறந்த உணவுப் பழக்கம்



மனித வாழ்க்கையில் மரணம் என்பது தடுத்து நிறுத்த முடியாத ஒன்று, எனினும் நாம் உடல் நலத்துடன் வாழ முயற்சித்தல் வேண்டும். 'நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்' என்பது பழமொழி. உடல் ஆரோக்கியம்தான் மற்ற எல்லாச் செல்வங்களைவிடவும் சிறந்தது.

Wednesday, July 9, 2014

இஸ்லாத்தின் கண்ணோட்டத்தில் விலங்கியல்


நாம் வாழும் இந்த பூமியில் இறைவன் பல கோடி உயிரினங்களைப் படைத்திருக்கிறான். அந்தவகையில் அவனால் படைக்கப்பட்ட அதிசயமிக்க படைப்பே விலங்குகளாகும். இந்த விலங்குகளை மனிதனின் தேவைக்காகவும்,  இறைவனின் அத்தாட்சிக்காகவும் படைத்திருக்கிருக்கிறான். இந்த விலங்கியல் பற்றிய இஸ்லாமியக் கண்ணோட்டத்தை அல்குர்ஆன் மற்றும் அல்ஹதீஸின் நிழலில் ஆராய்வதையிட்டு பெரும் மகிழ்சியடைகின்றேன். அல்ஹம்துலில்லாஹ்!

Tuesday, July 8, 2014

மருத்துவக் குனம் நிறைந்த பேரீச்சம் பழம்



பொதுவாக பழங்கள் விட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவையாகக் காணப்படுவதால் அவை எல்லோருக்கும் பயனுள்ளதாக இருப்பதுடன் எல்லோரும் அதை விரும்பி உண்னக்கூடிய ஒன்றாகவும் காணப்படுகிறது. அவற்றில் அதிக பிரயோசனம் தரக்கூடிய முக்கியமான ஒன்றுதான் பேரிச்சம்பழமாகும். இது அதிக நோய்களுக்கான நிவாரணியாகவும், பழங்களிலேயே தனிச்சுவை கொண்டதாகவும் காணப்படுகின்றது. எனினும் எம்மில் அதிகம் பேர் பேரிச்சம் பழத்தில் காணப்படும் எண்ணற்ற மருத்துவக் குனங்கள் பற்றி அறியாமலேயே இருக்கின்றோம். எனவே இந்த பேரிச்சம் பழத்தில் அடங்கியிருக்கும் பலவகையான மருத்துவக் குனங்களில் முக்கிய சிலதை இங்கு நோக்குவோம்.

Sunday, July 6, 2014

இஸ்லாமிய விழுமியங்கள் திருட்டுப்போன பொக்கிசம் காணுமிடத்தில் கைப்பற்றிடு

தத்திப்பிடித்து வரலாறு கண்ட
பண்பாட்டுப்பாசறை
பட்டைத்தீட்டிய  இரத்தினங்கள்
சீர்கெட்ட மேற்கின்
சாக்கடைக்குள்
கூழாங்கற்களாய்
மங்கிக்கிடக்கின்றன!!!!

அன்று ஆன்மாக்கள்
ஒளியூட்டப்பட்டு
உணர்வுகளையெல்லாம்
தட்டிவிடப்பட்டு
நிரந்தர இலட்சிய வேட்கையை
துளிர் விடச்செய்த
இஸ்லாமிய கலாச்சார விழுமியங்களை
அவை விழுங்கி
ஒப்பமிட்டு கொண்டிருக்கும்
அவல நிலைக்குள்!!!!

ஐரோப்பிய நாடுகளில் வளர்ந்து வரும் முஸ்லிம் சிறுபான்மையும் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளும்

                                    
இறைவனால் இறக்கிவைக்கப்பட்ட இயற்கை மார்க்கமான இஸ்லாம் இன்று உலகில் பல்வேறு பகுதிகளிலும் துரிதமாக வளர்ந்து வருகின்றது. இஸ்லாம் ஐரோப்பாவில் இருந்து வெளியேற்றப்பட்டதும் அங்கு முஸ்லிம்களின் தொகை  குறைந்து விட்டது. ஆனால் இன்று ஐரோப்பாவில் பெரும்பாலான நாடுகளில் இஸ்லாத்தில் நுழைவோர் தொகை கூடிக்கொண்டே வருகின்றது.

Friday, July 4, 2014

ஐ.ஸ்.ஐ.ஸ்(I.S.I.S) அறியப்பட வேண்டிய பிரபலம்

 அன்மைக்காலமாக ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும், அனைவரினதும் பார்iயிலும் ஓரு முக்கிய செய்தியாகக் கானப்பட்டுக் கொண்டிருப்பது I.S.I.S என்ற இந்த போராட்ட இயக்கம் பற்றிய செய்தியே. அந்தவகையில் யார் இந்த I.S.I.S போராளிகள் அமெரிக்காவினால் வழிநடத்தப்படும் கைக்கூலிகளா? அல்லது சவூதி அரேபியாவின் பின் புலத்தில் இயங்குபவர்களா? அல்லது அமெரிக்கா மற்றும் சவூதி அரேபியாவின் கூட்டனியில் வழிநடத்தப்படுபவர்களா

Monday, June 30, 2014

மால்கம் X (மாலிக் அல்-ஷபாஸ்) இஸ்லாமிய கருப்பின போராளி


இஸ்லாமிய நெறிமுறைகளால் கவரப்பட்டு அதன் வளர்ச்சிக்காகவும், அமெரிக்கா, ஆபிரிக்காவில் இன ஒடுக்குதல்களுக்கு உள்ளாக்கப்பட்டு, அடிமைப்படுத்தப்பட்டிருந்த கருப்பினத்தவர்களின் உரிமைகளுக்காகவும் போராடி படுகொலை செய்யப்பட்ட மாவீரன் தான் இந்த மால்கம் X.

Sunday, June 22, 2014

முக்கியத்துவமிக்க ஊடகங்களும் அதன்பாலான முஸ்லிம்களுக்குள்ள தேவைகளும்


மனித சிந்தனையைச் செம்மைப் படுத்துவதிலும், நாகரீகத்தைக் கட்டியெலுப்புவதிலும் இன்று ஊடகங்கள் மிக முக்கியதொரு இடத்தை மக்கள் மத்தியில் பெற்றுள்ளன. மனிதர்களை சீரான-தவறான வழிகளின் பால் இட்டுச் செல்லக் கூடியதாகவும், பொய்யை உண்மையாகவும்-உண்மையை பெய்யாகவும் மாற்றக் கூடிய கருவியாகவும், ஒரு நாட்டின் ஆட்சியாளர்களையே மாற்றக்கூடிய சக்தியாகவும் ஊடகங்கள் இன்று மாறியுள்ளதை எங்களால் கண்டுகொள்ள முடியும். சுருக்கமாக கூறுவதாயின், தற்காலத்தின் மாபெரும் தீர்மானிக்கும் சக்தியாக இந்த தகவல் ஊடகங்கள் மாறியிருக்கின்றன.

Wednesday, June 18, 2014

அழுத்கம சம்பவத்திலிருந்து முஸ்லிம்கள் பெறவேண்டிய படிப்பினை என்ன?

பல்வேறுபட்ட காலப்பகுதிகளிலும் எமது முஸ்லிம் சமூகம் பல்வேறு வகையான அடக்குமுறைகளுக்கும், இனவெறித்தாக்குதல்களுக்கும், இனவாத செயற்பாடுகளுக்கும் உட்பட்டுவருவதை நாம் அவதானிக்கின்றோம். குறிப்பாக எமது இலங்கை தாய்நாட்டில் அன்மைக்காலமாக இவ்வாறான நிகழ்வுகள் அதிகரித்திருப்பதை கண்டுகொள்ளமுடியும். இதற்கு உதாரணமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை பேரினவாதிகளால் பேருவல,அழுத்கம பகுதிகளில் நடத்தப்பட்ட இனவெறித்தாக்குதல்களை எடுத்துக்காட்டலாம்.

Tuesday, June 10, 2014

இலங்கை தேசத்தை கட்டியெழுப்புவதில் முஸ்லிம்களின் பங்கு

அறிமுகம் :
இலங்கை தென் ஆசியாப் பிராந்தியத்தில் அமைந்துள்ள பன்மைத்துவ சமூக அமைப்பைக் (plural communities status) கொண்ட ஒரு நாடாகும். இங்கு சிங்களவர், இந்துக்கள், முஸ்லிம்கள், கிரிஸ்தவர்கள் போன்ற இனக் குழுமங்கள் வாழ்ந்து வருகின்றன. ஒவ்வொரு இனமும் இந்நாட்டில் தொன்மை வரலாற்றினைக் கொண்டு காணப்படுவது அடையாளமிட்டுக் கூறப்படவேண்டிய சிறப்பம்சமாகும். முஸ்லிம்கள் இந்நாட்டில் பூர்வீக வரலாற்றைக் கொண்ட சமூகம் என்பதையும் இத்தேசத்தை சகல விதத்திலும் கட்டியெழுப்புவதில் தொன்மைக் காலம் முதல் இற்றை வரை பாரிய பங்களிப்புக்களை ஆற்றி வருகின்றனர் என்பதும் வரலாற்று சான்றாதாரங்களின் பின்னணியில் நிரூபனமான ஒன்றாகும்.

Monday, June 2, 2014

பல்கலைக்கழக வாழ்வும் நெருக்கீடுகளும் - Crisis and University life



சாதாரணமாக எமது நாளாந்த வாழ்வில் நெருக்கடி நிலைகள் தோன்றுவது இயல்பு. நெருக்கடி நிலைகள் எம்மை இயங்க வைக்கின்றது. நெருக்கடி நிலைகளில் வாழப் பழகுவதே மனிதனிடமுள்ள இயல்பாகும்.நெருக்கடி நிலைகளே இல்லாத வாழ்வினை ஒருவரால் கற்பனை பண்ணிக் கூடப் பார்க்க முடியாது. மனிதன் சமூகப் பிராணி என்பதன் அடிப்படைத் தத்துவத்தின் பிரகாரம் அமைகின்ற சமூகஞ்சார் வாழ்வில் நெருக்கடிகளும் இயல்பானதே.

Sunday, June 1, 2014

மறைக்கப்பட்டிருக்கிருக்கும் பைபில் பர்ணாபா




   

இங்கு கிறிஸ்தவ திருச்சபை அறிந்திராத ஒரு பைபிலும் உண்டு. அதுதான் ஐந்தாவது பைபிலாகிய பைபில் பர்ணாபா.

இந்த பைபிளைத் தொகுத்த பர்ணாபா என்பவர் கிறிஸ்தவ பெரியார்களில் ஒருவராவார். மேலும் ஆரம்ப கட்டங்களில் கிறிஸ்தவ மதத்தை பிரச்சாரம் செய்தவர்களில் இவரும் ஒருவர் என்பதற்கான உடன்படான ஆதாரங்களும் கிறிஸ்தவ அறிஞர்களிடமுண்டு. இவருடன் இணைக்கப்படும் இத்தொகுப்பில் இவர் மஸீஹின் 12 சீடர்களில் ஒருவரென்றும், திருச்சபையின் கருத்துப்படி இவர் ஒரு தூதர் என்றும் அறியப்படுகின்றது.

மேற்கினதும், இஸ்லாத்தினதும் பார்வையில் கருத்துச் சுதந்திரம்

இன்று அநேக இடங்களில் எல்லோரும் கேள்விப்படும் ஒரு வார்த்தைதான் 'கருத்துச் சுதந்திரம்' என்ற பதமாகும். இது பின்வருமாறு வரைவிலக்கனப் படுத்தப்படுகிறது. 'குறித்த சமுதாயமொன்றில் ஒரு தனி மனிதனோ அல்லது ஒரு குழுவோ அல்லது ஒரு சமூகமோ பேச்சின் மூலம் அல்லது எழுத்தின் மூலம் தமது கருத்தை, உணர்வை வெளிப்படுத்தும் உரிமையாகும்.' சுருங்கச் சொன்னால், பேச்சுச் சுதந்திரம், எழுத்துச் சுதந்திரம், நம்பிக்கைச் சுதந்திரம் ஆகியவற்றை உள்ளடக்கிய எண்ணக்கருவே  கருத்துச் சுதந்திரமாகும்.

Saturday, May 31, 2014

கேள்விகள் நிறைந்த பைபிலும் மறைக்கப்பட்டிருக்கிருக்கும் பைபில் பர்ணாபாவும்


அல்லாஹ் நேர்வழியைக் காட்ட பல நபிமார்களையும் அவர்களுக்கு அவர்களின் வழியை இலகுபடுத்தவும், அத்தாட்சியாகவும் வேதங்களையும் காலத்துக்கு காலம் கொடுத்தான். இந்தப் பணியானது நபி (ஸல்) அவர்களதும்இ அல் குர்ஆனின் வரவோடும் முற்றுப் பெற்றுவிட்டது. அந்த வகையில் அல்லாவின் தீனை இவ்வுலகில் பரப்பி மக்களையும் வழிகேட்டிலிருந் பாதுகாக்க பல தூதர்கள் அனுப்பப்பட்டதுடன் அவர்களுக்கான வேதங்களும் அருளப்பட்டிருந்நன. குர்ஆனைத் தவிர மற்றெல்லா வேதங்களும் ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு இடத்துக்கு சமூகத்துக்கு பொருந்தும் விதத்திலேயே அருலப்பட்டன. இவ்வாறான பல வேதங்கள் அருளளப்பட்டிருந்த போதும் குறிப்பிட்ட நான்கு வேதங்களைத் தவிர மற்ற வேதங்கள் பற்றிய தெளிவான விளக்கங்கள் எதுவும் காணப்படவில்லை.

இஸ்லாமிய கண்ணோட்டத்தில் ஆய்வும் அதன் முக்கியத்துவமும்

அறிமுகம் :

ஆய்வு என்பது இன்றைய சமகால உலகில் மிகுந்த செல்வாக்கு பெற்ற ஒன்றாகவும் வளர்ச்சி மற்றும் நாகரீகமடைந்த நாடுகளின் அபிவருத்தி பொறிமுறைகளில் அதிகம் பயன்படுத்தப்படக்கூடிய ஒன்றாகவும் விளங்குகிறது எனலாம். மேற்கு நாடுகள் அபிவிருத்தியில் சிகரத்தை தொட்டிருப்பதற்கு முறையான ஆய்வு முறையியல் பயன்பாடும் தொடர்ச்சியான செயற்பாடுகளும் அடிப்படையாக அமைந்துள்ளது என்பதைத் துணிந்து கூறலாம். 'மனிதனது தேடல் உண்மையைக் கண்டறிவதாகவே உள்ளது. ஆயினும் உண்மையைக் கண்டறிவதற்கான சிறந்த வழி ஆய்வாகும். இதனை பீ. ஏம். குக் பின்வருமாறு வரையரை செய்கின்றார்.

Saturday, February 1, 2014

இஸ்லாத்தில் அரசியல் கொள்கை



இன்று உலகலாவியரீதியில் இஸ்லாத்திற்கும்,முஸ்லீம்களுக்கும் எதிராக பல வகையான அடக்குமுறைகளும், போலிவாதங்களும் பரப்பப்பட்டு வருகின்றன. இவ்வாறு இஸ்லாத்தின் மீது முன்வைக்கப்படுகின்ற போலிவாதங்களில் முக்கியமான ஒன்றுதான் இஸ்லாத்தின் உண்மையான அரசியல் கொள்கைகளை அறியாமல் அதனைப்பற்றிய போலியான விமர்சனங்களையும் குற்றச்சாட்டுகளையும் பரப்புகின்ற செயலாகும்.